wp-image–772668570. கின்னஸுக்கு ஒரு கடைசிக் கடிதம். (21-ம் நூற்றாண்டின் மிகப் பெரிய பொருளாதாரக் குற்றவியல் நிகழ்வு எதுவாய் இருக்கக் கூடும் ?!!!- ஒரு பார்வை )

உள்ளே…… பக்கம்

1) இதைப் படிக்கும் எவர் ஒருவருக்குமான சில அறிமுக வார்த்தைகள்…
2) ஜு.வி.யின் கற்றது கடலளவு தொடர் ஆசிரியர் து.கணேசன்
அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் நகல்………………………….……………… ………………… .1-5
3) திட்டத்தின் மூல நகலும் அதன் பிறப்பிடமும் (மாத்ருபூதம்)………………………..
4) கின்னஸுக்கு ஒரு கடைசிக் கடிதம் (27.04.2005 தேதியிட்டது) ………………… 83
5) இது நடக்கக் கூடியதா, நடை முறைச் சாத்தியம் கொண்டது தானா?..…………..84-89
6) கலைக்கதிர்ப் பெட்டிச் செய்திகள் (2) news about constant gene…………………………….90
7) ஊயிரூட்டக்கூடியவை அல்லது சமாதி கட்டுபவை………………………… ……………………. 91-106
8) டோபமைன் துறவிகள், சிற்றின்பவாதியா? பேரின்பவாதியா?…………………..107-111
9) 140 வருட சந்தேகத்தைத் தெளிவு படுத்திய தடய அறிவியல்
பரிசோதனைமுறை (நெப்போலியன் மரண சர்ச்சை)………………………………………..112-121
10) நெப்போலியன் வீழ்ச்சியும் பங்குச்சந்தையில் அதன் எதிரொலியும்…………….122-126
11) 13.08.2000 தேதியிட்ட வார மலர்-அனுராதா ரமணனின் “அன்புடன்
அந்தரங்கம்” தொடர் மீதான விமர்சனம்…………………………………………………………………………. 127
12) (ஒரு அர்த்தத்தில் இது சுவாமி விவேகானந்தர்விட்டுச் சென்ற ஒரு
பணியின் தொடர்ச்சி போலத் தான்) …………………………………..56
(உணர்ச்சி என்பதும் ஒரு வகையில் ஆற்றல் பிழம்பே)
13) திட்டத்தின் ஆஸ்திக, நாஸ்திக இரட்டை முகம். (அர்த்தநாரிக் கடிதம்)…
14) ஏன் மறுத்தது கின்னஸ்?………………………………………… ………………………………………….
15) இலண்டன் பி.பி.சி.தமிழோசை ஆனந்தி சூர்யப்பிரகாசம், மற்றும்
மகாதேவன் இவர்களுக்கு எழுதிய கடித நகல் (………தேதியிட்டது.)………..
16) இந்தக் கின்னஸ் ப்ரொப்போசலின் பழைய (ஆங்கில, தமிழ் ) வடிவம் மற்றும்
இது குறித்த இன் கம்மிங் லெட்டர்ஸ் …………………………………………………….
அ). இப் ப்ரொப்போசல் குறித்த நெதர்லாந்த் சைக்காலஜிஸ்டு
ஒருவரின் முதல் கடிதம்…………………………………………………………………………………… 60-62
ஆ). இது விஸயம் குறித்த கின்னஸின் முதல் பதில் கடிதம்.(03.06.1998) ……….. 63
இ). இது விஸயம் குறித்த கின்னஸின் இரண்டாவது பதில் கடிதம்.
(18.08.1998 தேதியிட்டது.)…………………………………………………………………………………………………………….. 64
ஈ). 14.05.2003 தேதியிட்ட கின்னஸின் தெட்டத் தெளிவான 3-வது இறுதி
மறுதலிப்புக் கடிதம்…………………………………………………………………………………………………………………… 65
உ). பி.பி.சி வேர்ல்டு-ன் கடிதம்……………………………………………………………………………………….. …. 66
ஊ). விகடனின் கடிதங்கள்…..……………………………………………………………………………………………………. …. 67
17) நிலுவையில் உள்ள மற்ற ஸ்கேனிங் உள்ளடக்கங்கள். …………………..
அ). கேஸ்ட்டேரஸன் குறித்த ஒளிப்படம்……………………………………
ஆ). டெஸ்டிஸ் அனடாமி விளக்கப்படம்……………………………………
இ). அன்புடன் அந்தரங்கம்(………தேதியிட்ட வார மலர்)………………….
ஈ). ஏன் வேண்டாம் இன்பத் திராவிடம்?. சு.செந்தில் குமரனின் தேவி…….
தொடரிலிருந்து. ……………………….
18) ஆர்ட்டிஃபிஸியல் இன்செமினேஸன் வீடியோ ஒளிப்படம் ()……………………
19) சுவாமி மலைப் பதிப்பகத்தின் கேட்ஸ் பற்றிய பகுதிகள்…………………

askbill@microsoft.com
askbill@microsoft.com

“எல்லாவற்றையும் விஞ்ச விரும்பும் ஒன்று, எல்லாவற்றாலும் தடுக்கப்பட்டு மறித்து இழுத்துப் பார்க்கப்படும்” என்ற பிரபஞ்ச நியதிக்கு கேட்ஸ் மட்டும் என்ன, விதி விலக்கா என்ன என்பதே எனது கேள்வி!? அதுவும் சதுர அடிக்கு 4000 அறிவாளிகள் உள்ள மேற்கு அரைக் கோளத்திலா இது நடந்திருப்பதற்கு ஒரு வாய்ப்பு இருந்திருக்காது?

இதைப் படிக்கும் எவர் ஒருவருக்குமான சில அறிமுக வார்த்தைகள்……

தலைப்புக்கும் இங்கு சொல்லப்பட்டுக் கொண்டிருப்பவைகளுக்கும் சம்பந்தமேயில்லையே, “தாம் முழுவதும் ஏமாற்றப்பட்டு விட்டோமோ?!” எனச் சந்தேகிக்கும் வாசகர்கள், முழுவதையும் அத்தியாயம் வாரியாகப் படிக்கப் பொறுமையில்லாத வாசகர்கள் நேரடியாக அத்தியாயம் எண் 3, 12, 13, க்கே சென்றுவிடலாம். தலைப்பு சம்பந்தமாக என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை மட்டும் தெரிந்து கொள்ள விரும்புபவர்களை வீணில் இங்கு காத்திருக்க வைப்பதில் எனக்கும் உடன்பாடில்லை தான். ஒரு கவன ஈர்ப்புக்கான உத்தியாகவே தலைப்பு அவ்விதம் இடப்பட்டதே அன்றி இந்தப் புத்தகம், புத்தக விஷயம் பெருமளவு, (ஏன் முழுக்க, முழுக்க) மனித குலத்தின் சமூகக் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கவியல் சம்பந்தப்பட்ட கருத்துருக்களை புதிய அறிவியல் வெளிச்சத்திற்குட்படுத்தி ஆய்வு செய்யும் நோக்கம் கொண்டது. (அதற்காக தலைப்புக்கும் புத்தகத்திற்கும் முற்றிலும் சம்பந்தமே இல்லை என்றும் ஆகிவிடாது.) தலைப்பைக் காட்டிலும் குறிப்பாக ஹிந்து மத ஆன்மீகத்தோடும், அதன் தார்மீக அறநெறி அளவு கோல்களோடும் நிறைய சம்பந்தப்பட்டது. பெருமளவு சிக்கலான சமூகவியல் பிரச்னை ஒன்றோடும் சம்பந்தப்பட்டது.

சிக்கலான அப்புதிய சமூகவியல் பிரச்னையோடு சம்பந்தப்பட்டதாலேயே பகுதியளவு சமூக அரசியலோடும் தொடர்புடையது. தீர்வோ முற்ற முழுதாக அறிவியல் உலகத்தோடு சம்பந்தப்பட்டது. இன்னும் பகுதியளவு தனது விஷயாதாரங்களைப் புரிந்து கொள்ளவும், புரிந்து கொண்டதை செயற்படுத்தவும் தனி ஒரு மனிதனாகக் கடந்த 18 ஆண்டுகளாக தமிழ் சமூக வெளியிலும், அதற்கு அப்பால் உள்ள இவ்வுலகப் பொது வெளியிலும் ஒரு பெரும் தனிப்பட்டக் கடித யுத்தம் நிகழ்த்தித் தேய்ந்து ஓய்ந்து போன மனிதன் சம்பந்தப்பட்டது. ஆக இதற்கு அறிவியல், அரசியல், ஆன்மீகம், சமூகவியல், என ஒரு பன்முகப் பரிமாணமே உண்டென்றால் அது மிகையல்ல.

(முழு) ஏடறியா வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே நிலவி வருகிற, யாருக்கும் தெரியாத, மிகவும் புராதான காலத்திலிருந்தே மனித குலத்தைத் தொடருகின்ற ஒரு விஷயம் குறித்து, அது குறித்த வெறும் வார்த்தை அளப்புகளுக்குப் பதிலாக முதன் முதலாக ஒரு நிரூபணம் தேடும், (சத்தியம் தேடும்) ஒரு சத்தியமான அசாத்திய சத்திய முயற்சி இது. கற்பு, பிரம்மச்சாரியம், நைஷ்டிகப்பிரம்மச்சரியம், (நிர்பந்தப் பிரம்மச்சாரியம்?!) என்ற மனித குலத்தின் ஒழுக்கப் படிநிலைகளைப் புதிய அறிவியல் வெளிச்சத்திற்கு உட்படுத்தி அவ்வறிவியலின் அடிப்படையில் அமைந்த ஒரு அளவீட்டு முறையால் அதை அளக்க முடியுமா? என்று தேடிப்பார்க்க நினைத்த, நினைக்கிற ஒரு ஆர்வத்தேடல் முயற்சி. ஆக என்னடா இது அனுமார் வால் இராமாயணம் போல் படிக்கப் படிக்க இது நீண்டு….. நீண்டு…. நீண்டு கொண்டே…… போகிறதே என அங்கலாய்க்கிற, சோர்வடைகிற, சராசரி வாசகர்கள் மனிதர்கள் நேரே பக்கம்- , க்கே சென்று விடுங்கள்.

மற்றபடி கீழே உள்ளவை அனைத்தும் சில தனிமனிதர்களுக்கோ அல்லது சில தனி நிறுவனங்கள், அமைப்பு, இயக்கங்களுக்கோ, அல்லது புகழ் பெற்ற உள்ளுர், அயல்தேச, முக்கிய பிரமுகர்களுக்கோ, பத்திரிக்கைகளுக்கோ, நிறுவனங்களுக்கோ எழுதப்பட்ட கடிதச் சுருக்கங்களின் விரிவான சாராம்சங்களே. அந்த வகையில் திட்டமான ஒரு தலைப்புடன் ஒரு புத்தகமாக வெளியிடப்பட வேண்டிய சாராம்சங்களை அன்புடன்……..க்கு என ஒரு கடித நடையில் தொடங்குவதால் இது “யாரோ ஒருவர் யாருக்கோ எழுதிய கடிதங்கள் போல” என தயவு செய்து ******விட்டோத்தியாக மட்டும் இதை விட்டகன்று விடாதீர்கள்.

தான் ஒரு அநீதியான, மோசமான சமுதாயத்தில், உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இதிலிருந்து தப்பிப்பது எப்படி? எனத் தேடலோடு இருக்கின்ற ஒவ்வொருவருக்குமானக் கடிதம் இது. அந்த வகையில் இது இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உலகக் குடிமகனுக்குமான கடிதமும் கூட. பால், மொழி, இனம், மதம், நாடு கடந்த, சர்வ தேச அளவில் மானுடம் தழுவிய ஒரு பொது(வுடை)மைக் (பொதுப்படையான) கடிதம் என்று கூட, இதைக் கூறலாம். தான் ஒரு அநீதியான, மோசமான சமுதாயத்தில், உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் கெட்டிப்பட்டுவர்களுக்கு மட்டுமல்ல, மோசமான ஒரு சமுதாயத்தில், உலகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்ற சந்தேகத்தின் ஒரு துளி, ஒரே ஒரு துளி, அப்படிப் பட்ட ஒரு எண்ண விதை இப்போது தான் சற்று எட்டிப் பார்த்து துளிர்த்துக் கொண்டிருந்தாலும் சரி, அத்தகைய சந்தேக எண்ணம் மொட்டு விட்டுத் துளித்தவர்களுக்கும் சேர்த்தே இந்தக் கடிதங்கள்.

“எளியவர்களைக் காப்பாற்றுவதில் வலியவர்களைக் கண்டு அஞ்சி விடாத, செல்வத்தை இலஞ்சமாகப் பெற்று விலை போய்விடாத ஒரு நியாயவானை, தர்மவானை, அப்படிப்பட்ட ஒரு புண்ணியவானை மனிதர்களில் அல்லாது இந்து, கிறித்துவ, இஸ்லாமிய, புத்த, யூத மதங்களின் சிறு பெருந்தெய்வங்களில் அல்லது அம்மதங்களின் இறைத்தூதர்களில், தேடிக் கொண்டிருக்கிற ஒவ்வொருவருக்குமான, அனைவருக்குமான கடிதமும் கூட இது. இன்று, “நீதி, நியாயம் எல்லாம் எங்கு கிடைக்கக் கூடும்? ஆங்கில மொழியில் தேடினால் நியாயம் கிடைக்குமா?, அல்லது ஃபிரெஞ்சு, ஜெர்மானிய, ஸ்பானிய, லத்தீன் அமெரிக்க மொழிகளில் தேடினால் கிடைக்கக் கூடுமோ?, அல்லது ரஷ்ய, ஜப்பானிய, சீன, கொரிய மொழியில் தேடினால் அல்லது இஸ்லாமிய மொழிகளில் தேடினால் ஒருவேளைக் கிடைக்கக் கூடுமோ? என மொழி வாரியாக ஒரு மொழி வேட்டை நடத்தித் தேடினால் கூட இன்று நீதி நியாயம் என்பது மேலும், மேலும் கிடைத்தற்கரிய, ஒரு அரிய அபூர்வ விசயமாய் உருமாறி எவ்வளவோ நூற்றாண்டுகளாயிற்று.

மனித குலத்தின் தமிழ் சமூகத்தைப் போன்ற சில இனமொழிச் சமூகங்களுக்கோ, அது நூற்றாண்டுகளையும், தாண்டிய பல பல மில்லினியம் ஆண்டு வரலாற்றுத் தேடல்களுடனேயே சம்பந்தமுள்ள ஒன்று. ஆக இன்று நமது நீதி, நியாயத்துக்கான தேடல் வேட்கை என்பதெல்லாம், நாடு, கண்டம் மொழிகளைக் கடந்ததாய் இந்தக் கிரகம் தழுவிய அளவில் “எங்கு போய் தான் நியாயத்தைத் தேடுவது?” என்ற, இந்தக் கிரகம் முழுக்க வியாபித்து விட்ட ஒரு சர்வ தேசத் தேடலாய், சர்வ மொழி, இன, மதங்களிலும், நாடுகளிலும் தேடிப்பார்க்க வேண்டிய ஒரு பெரும் அடிப்படைத் தேடல் வேட்கையாயும் ஏற்கனவேயே ஒரு உருமாற்றமும் பெற்று விட்டது, இன்னமும் பெற்று வருகிறது.

இப்படிப்பட்டத் தேடல் வேட்கையுள்ள மனிதர்களுக்கு இந்தக் கிரகத்தில் இன்று எங்கு தான் எந்த நாட்டு, மொழி இன, மதத்தில் தான் பஞ்சம் என்கிறீர்களா? ஆம். ஓத்துக் கொள்கிறேன் இத்தகைய மனிதர்களுக்கு இந்தக் கிரகமெங்கும், எங்கும் பஞ்சமென்பதே கிடையாது தான். அதையும் ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். அதனால் தான் கூறுகிறேன், இது தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளதால் இது ஏதோ தமிழர்களோடு மட்டுமே சம்பந்தபட்ட ஒரு விஷயம் போல இது என்றும், அதிகம் ஹிந்து மதத்தோடு தொடர்புடைய சொற்களால் பேசுவதால், ஆராய்வதால் இது ஏதோ ஹிந்து மதத்தோடு மட்டுமே தொடர்புடைய ஒரு விஷயம் என்றும் நினைத்து விடத் தேவையில்லை. ஒரு வகையில், ஒரு அர்த்தத்தில் இது இந்தக் கிரகத்தின் அத்தனை மொழிகளுக்குமான, அத்தனை மதங்களுக்குமான, அல்லது அனைத்து நாத்திகர், ஆத்திகர்களுக்குமான ஒரு திறந்த, பகிரங்கப், பொதுவுடைமைக் கடிதம் இது என்று கூடக் கூறலாம்.

ஆக ஒரு வகையில் இது உங்களின் கதையும் கூட! அல்லது உங்களின் கதையையும் உள்ளடக்கிய ஒன்று போல என்றாவது கூற வருகிறேன். அப்படி ஒரு வேளை இது உங்களுக்கு முற்ற முழுக்கப் பொருந்திப் போகவில்லை என்றாலும் கூட ஒரு வகையில் அன்றாட வாழ்க்கையில் இது உங்களுக்குத் தெரிந்தவர்களின் (அவர்கள் உங்கள் நண்பர்களாகவோ அல்லது உறவினர்களாகவோ கூட இருக்கலாம், இருக்கக்கூடும்.) வாழ்க்கையோடாவது கொஞ்சமாவது பொருந்திப் போகக் கூடும் என்கிறேன். இப்போதைக்கு து.கணேசனுக்கு எழுதிய இந்தக் கடிதத்திலிருந்து தொடங்குவோம். யார் இந்த கணேசன்?

“கற்றது கடலளவு தொடர்” (ஜு.விகடனில் வெளி வந்த கடற் பயணம் பற்றிய ஒரு தொடர்) நூலாசிரியர் து.கணேசன். அவருக்கு கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்டு மறுதலித்த எனது பழையப் ப்ரொப்போசல் (திட்டம்) ஒன்று குறித்து உதவி கோரி எழுதிய கடிதம் இது. ஆரம்பத்தில் உண்மையாகவே நான் அவருக்கு அனுப்பிய முதல் மின்னஞ்சல் இந்தளவுக்கு விரிவானதொரு கடிதமாய் அமையவில்லை தான். என்ற போதிலும் பின்னாட்களில் இந்தக் கடித சாராம்சங்களை எல்லாம் ஒரு பொது வெளியில் வைக்கலாம் என்ற எண்ணம் தோன்றியவுடன், அதற்குப் பின்னரே இது குறித்த எனது கூடுதல் பார்வைகளையும், சிந்தனைகளையும், நீட்டிப்பு விஷயங்களையும், இணைத்துள்ளேன்.

ஆக இனி இது ஒருவகையில் அவருக்கு மட்டுமல்ல, கின்னஸ் மறுதலித்த இப் புரொப்போசல் சம்பந்தமாக விரிவாக அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ள எவர் ஒருவருக்குமான ஒரு திறந்த, பகிரங்கக் கடித மடல்களாய்க் கூட இவற்றை எல்லாம் பார்க்கலாம், அணுகலாம். அப்படி ஒரு பார்வை நோக்கோடு அணுகும் எவர் ஒருவருக்கும் நான் கூறிக் கொள்ள விரும்புவது எல்லாம் ஐயன்மீர், தயவு செய்து இதற்கு முந்தைய தங்களது வழக்கமான எல்லா பார்வை நோக்குகளிலிருந்தும் விடுபட்டுக், குறிப்பாக அதிகார வர்க்கச் சார்புள்ள பார்வையுடன் அணுகாமல், மாறாக அதையெல்லாம் கழற்றி விசிறித் தூர எறிந்து விட்டு, முழுக்க, முழுக்க, முற்றிலும் மாறுபட்ட, திறந்த விசாலமான ஒரு பார்வை நோக்கோடு, காலிக் கோப்பை மனநிலையுடன், சொந்த விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்ட நடுநிலையுடன் இதை அணுகுங்கள் என்பதே.

அப்படிப் பட்ட ஒரு நடுநிலை அணுகல் பார்வையில் உண்மையாகவே (கின்னஸ் மறுதலித்த) இப்புரொப்போசலோடு உங்களுக்கும் ஒரு உடன்பாட்டுக் கண்ணோட்டம் ஏற்படுமேயானால், அப்போது…., அப்போது முடிவு செய்யுங்கள். இந்தப் ப்ரொப்போசல் (கின்னஸ் மறுதலித்த இந்தத் திட்டம்) குறித்து, இது விஷயம் குறித்து என்ன நிலைபாடு எடுப்பது? என. அதற்குப் பின்….அதற்குப் பின் நான் என்ன சொல்லி, விளக்க…..? நீங்களே புரிந்து கொள்வீர்கள் இனி அடுத்து என்ன செய்ய வேண்டும், அதையும் எப்படிச் செய்ய வேண்டும்?, எப்படிச் செய்யக் கூடாது? என ஒரு ஆலோசனை கூறுமளவுக்கு, அவரவர் தம் புத்தி, சக்தி, யுக்திக் கேற்றவாறு இப் புரொப்போல் வெற்றியடைய தம்மால் இயன்ற தமது பங்களிப்பை வழங்கலாம். அல்லது “நமக்கெதற்கு வம்பு? இந்த ரிஸ்க்?!” என இந்த ஆட்டத்திலிருந்து ஒதுங்கிச் சென்றும் விடலாம்.

ஆனால் ஒன்று, தனி மனித முயற்சியாய் இதைச் செயல்படுத்துவது என்பது, அதிலும் ஒரு சராசரி சர்வைவலுக்கேப் பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ள என் போன்ற தனிமனிதனொருவனின் *****மார்க்(ர)ஸியப் பொருளாதாரத்திற்கு இது சற்றும் கட்டுபடியாகாத ஒரு விஷயம், என்பதாலேயே ஒரு குழுப் பணியாய் (டீம் வர்க்காய்- team work ஆக ) செயல்படுத்த முயற்சித்தால் என்ன? என ஒத்தக் கருத்துள்ளோரைத் தேடும் முயற்சியாய் இதை முதலில் தமிழ் உலகச் சமூகத்தின் முன், அதன் பொது வெளிப் பார்வைக்குக் கொண்டு வந்துள்ளேன். இனி இந்தக் கடிதக் கட்டுரைகளுக்குள் சென்று போய் பார்த்து நீங்களே ஒரு இறுதி முடிவு செய்து கொள்ளுங்கள்….

(கற்றது கையளவு தொடர் கணேசனுக்கான கடிதம் அது தனியான இன்னொரு பதிவிலுள்ளது. இணைப்புக்கு இங்கே சொடுக்கவும்) எனது அலைபேசித் தொடர்பு எணகள்; +918670244879, +918760304889, +919585025889)

I இந்த ஓட்டு மொத்த 200 பக்க சாராம்ஸத்தையும் சுருக்கிப் பிழிந்து சாராக ஒரே ஒரு வரியில் (one line knot-ஆக,) – ஒரு ஒன் லைன் முடிச்சாக, ஒரு வரித் திரைக்கதையாகச் சொல்ல வேண்டுமானால்
அது இது தான். “குழந்தையின்மை சிகிச்சைக்காக அதாவது ஆண் மலட்டுத் தன்மைக்காக அளிக்கப்படும் ஒரு புதிய மருத்துவ சிகிச்சையான இக்ஸி என்ற மருத்துவ சிகிச்சை முறைத் துஸ்ப்ரயோகம் செய்யப்பட்டால், (வீடியோ இணைப்பைப் பார்க்கவும்.) அதிலும் அந்தத் துஸ்ப்ரயோகம் உடைமை வர்க்கங்களில் செய்யப்பட்டால் ஏற்படும் சமூகவியல் பின்விளைவுகள் எத்தன்மையதாய் இருக்கும்? ஏற்கனவேயே அது (அதாவது இந்த இக்ஸித் துஸ்ப்ரயோகம்) இந்தக் கிரகத்தில் நடைபெற்றிருக்க வாய்ப்புகள் ஏதும் உள்ளதா? அதிலும் மிகக் குறிப்பாக, இன்னமும் குறிப்பாகக் கூற வேண்டுமானால், உலகின் தலைமைக் கோடீஸ்வரரான பில்கேட்ஸ் போன்றவர்களுக்கு நடந்திருக்கச் சாத்தியம் ஏதும் உண்டா? என்பதைப் பற்றிய மேலெழுந்த வாரியான ஒரு தேடல் தான் இந்த முழுத் தளத்தின் சாராம்ஸமும்.”

மேலெழுந்த வாரியான தேடல் என்பதற்குச் சற்று அழுத்தம் கொடுக்க விரும்புகிறேன். காரணம் இந்த வலைப்பூவில் இப்போது நான் விவாதித்திருக்கும் விஷயம் குறித்து தேவைப்படுமளவுக்கு ஆழமானதொரு தேடலை நிகழ்த்தும் அளவுக்கு அவ்வளவு புலமை மிக்க, இலக்கண சுத்தமான ஆங்கிலத்தில் நான் தேர்ச்சி பெற்றிருக்காததே. ஓட்டு மொத்த மானுட குலம் முழுவதற்குமே பொதுவான ஒரு பிரச்சனை குறித்து, அதே மானுட குலத்தின் ஓட்டு மொத்த கவன ஈர்ப்புக்கும் கொண்டு வருவது என்பதற்கு தடையாக, குறிப்பிட்ட ஒரு மொழியில் புலமை, பாண்டித்யம் இல்லை (ஆங்கில மொழிப் புலமை இன்மை) என்பது ஒரு தடைக் கல்லாக இருந்து விடக் கூடாது என்பதற்காக இதை முதலில் குறைந்த பட்சம் தமிழ் கூறும் நல்லுலகத்தின் தமிழ் இணையப் பொது வெளிக்காவது கொண்டு வருவோம் என்று தான் தமிழில் இதை முதலில் கொண்டு வந்துள்ளேன். மற்ற மொழிகளுக்கும் ஏதும் மொழி பெயர்ப்பாளர்கள் கிடைத்தால் மிகவும் சந்தோசமே. ஆனால் எப்படியும் எங்கு சுற்றியும் இது ஆங்கிலத்துக்கு மொழி மாற்றம் செய்யப்படாமல் இது விஷயத்தில் மேற்கொண்டும் எந்த விதமான ஒரு முன்னேற்றமும் ஏற்பட்டு விடப் போவதில்லை.

ஆனால், அதற்கு முன் இந்த ஒரு வரிச் சிந்தனைக்கு நான் எப்படி வந்தேன்?, (ஏன் எதற்கு, வந்தேன்?) இதனால் இந்தச் சமுதாயத்திற்கு ஏதும் நன்மையுண்டா? எனது இச்சிந்தனையால் தமிழ் சமூகத்திற்கு மட்டுமல்ல, ஓட்டு மொத்த மானுட குலச் சமுதாயத்திற்கே நன்மையா, தீமையா? எது அதிகம்? எது ஓங்கியுள்ளது? என்பதைப் பற்றியெல்லாம் படிக்கிற வாசகர்களான உங்களிடமும் ஒரு ஆழமான பொருள் விவாதம் ஏற்பட வேண்டும் என்றால் அதற்கு இந்த ஒரு வரிச் சுருக்கம் போதாது என்பது மட்டுமல்ல, அதில் படிக்கிற உங்களுக்கும் சரி, இல்லை சொல்கிற எனக்கும் தான் சரி, என்ன ஒரு ஸ்வாரஸ்யம், பயன் இருந்து விடப் போகிறது?

அதற்காக இதைப் பொழுது போகாத, வெறும் சுவாரஸ்யத்திற்காய், ஸ்வாரஸ்யம் ஒன்றை மட்டுமே மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பொழுது போக்கு இலக்கியமாக, ஒரு கற்பனைக் கதை, கட்டுரை, நாவலைப் போலவும் இதை நினைத்து விடத் தேவையில்லை.
சர்வதேச அளவில், மருத்துவத்துறையில் நிகழச் சாத்தியம் உள்ள, மருத்துவச் சிகிச்சை முறையொன்றின் துஸ்ப்ரயோக நிகழ்வு குறித்து, சர்வ தேச அளவில் வெளியாகக் கூடிய சர்வ தேசப் புலனாய்வுப் பத்திரிக்கைகள் செய்ய வேண்டிய ஒரு வேலையை, வெறும் தனியொரு மனிதனாக செயல்படுத்த நினைக்கும் எனது இந்த முன் கை முயற்சிக்கு எப்படியும் ஒரு பலன், சம காலத்தில் இல்லாது போனாலும் எதிர் காலத்திலாவது கிடைக்கக் கூடும் என்ற நம்பிக்கையினாலேயே இதை முதலில் தமிழ் கூறும் நல்லுலகின் முன் அதன் கவன ஈர்ப்புக்கு எடுத்து வந்துள்ளேன்.

வெறும் ஸ்வாரஸ்யத்துக்காக மட்டுமே எழுதுவது, படிப்பது, பாடுவது, ஆடுவது, நடிப்பது என்பது (அது கலை, இலக்கியம், சினிமா என) “நிகழ்த்து கலையின்” எந்த வடிவமாகவே இருந்த போதிலும் சரி, நிகழ்த்து கலையின் மிக உச்ச வடிவமான கூத்து, சினிமாவாகவே இருந்த போதிலும் கூட சரி, எனக்கு அதில் சிறிதும், சற்றும் உடன்பாடு கிடையாது. ஸ்வாரஸ்யத்தோடு, கூடவே ஒரு பயனும் இருந்தாக வேண்டும். பயன்பாடு இல்லாத எந்த ஒரு சமூகவியல் நடவடிக்கையும் வீணே. அது வெறும் ஆடம்பரம் மிக்க, மேல்தட்டு வர்க்கங்களுக்காக மட்டுமே நடத்தப்படும், ஒரு வெற்றுக் கேளிக்கை மட்டுமே. கேளிக்கையிலும் கூட ஓரு பயன்பாடு இருந்தாக வேண்டும். அதுவும் ஒரு இரு தரப்பு பயன்பாடு. சவ்வூடு பரவலைப் போன்ற, ஒரு பக்கச் சார்பில் மட்டுமே எழும், நிகழும், ஒற்றைப் பயன்பாடு அல்ல. நிகழ்த்துவோர், துய்ப்பிப்போர் என இரு பக்கங்களுக்கும், பயன் அளிக்கக் கூடிய ஒரு இருதரப்புப் பரிமாற்ற விசயமாய் அது இருக்க வேண்டும்.

ஆக இந்த ஒன் லைன் நாட் சாராம்ஸத்துக்கு எப்படி வந்தேன்? ஏன், எதற்கு, வந்தேன்? என்பதில் தான் உண்மையான ஸ்வாரஸ்யமே (நம் இரு தரப்புக்குமே) உள்ளது. என்னமோ நம்மூர் விக்கிரமாதித்யன் கதையின் தொடக்கத்தில் வரும் போஜ ராஜனிடம் விக்கிரமாதித்யனின் சிம்மாசனத்தைக் காவல் காத்து வரும் பதுமைகள், படிக்கு ஒரு பதுமையாக தினம் ஒரு கதை சொல்லி, போஜ ராஜனின் மனசாட்சியை, அவரது அந்தராத்மாவைத் தேடி கண்டுபிடிக்க, இனங்காண முயலுமே அந்த மாதிரி. விக்கிரமாதித்யனின் அருமை பெருமைகளைப் பற்றியெல்லாம். பொழுதெல்லாம் சொல்லி முடித்து, இப்படியெல்லாம் அருமை பெருமைகளைத் தாங்கிய அந்த மன்னன் அமர்ந்து பரிபாலனம் செய்த இந்த சிம்மாசனத்தில்…..”நீ அமர்ந்து ஆட்சி புரிவதற்குரிய தகுதி உண்மையிலேயே உனக்கு உள்ளதா? என, “நீயே உனது சொந்த மனசாட்சியை, உனது சொந்த அந்தராத்மாவைக் கேட்டுக் கொண்டு, அதற்குப் பின் இந்த சிம்மாசனத்தில் அமர முயற்சி செய்.” என அன்றையக் கதையை முடிக்கும்.

இதே கதையில், இந்த பதுமைகளைப் போலவே கதைக்குள் கதையாக வரும் வேதாளம் ஒன்றும், தன்னை அடக்க வரும் மன்னர்களிடம் தொடர்ந்து புதிர்க் கதைகளைப் போடும். அப்புதிர் கதைகளின் வழியே ஒரு தர்க்கவாதப் போரையும் தொடங்கும். கிட்டத்தட்ட இவையெல்லாமே கேட்கிற மனதுக்கும், சொல்கிற மனதுக்கும் இடையே ஒரு நல்ல தொடர்புப் பாலத்தை ஏற்படுத்த முயற்சிக்கும், ஒத்திசைவைத் தேடும், விடைகளைத், தீர்வுகளைத் தேடும் மனித மனங்களின் ஒரு வகை மாறுபட்ட, வித்தியாச அணுகு முறை முயற்சிகளே. உண்மையில் வேதாளம், பதுமைகள் என்பவை எல்லாம் ஒரு குறியீடு என்று தான் சொல்ல வேண்டும.

தனது பிரச்சனைகளைக் கேட்டு செவிமடுப்பதற்குக் கூட எதிரில் யாரும் ஒரு இரண்டாவது, மூன்றாவது மனிதர் இல்லாத நிலையில், மனித மனம் தனக்குத் தானே, தானே தனக்குள் நிகழ்த்திக் கொள்ளும் ஒரு வகை மோனோ டையலாக்குகளின் பண்படுத்தப்பட்டக் கதை வடிவம் என்று கூடக் கூறலாம். தனது ஒற்றை மனத்தையே இரண்டாய், மூன்றாய், நான்காய் அவரவர் சக்திக்கும், புத்திக்கும், யுக்திக்கும் ஏற்ப, (உளவியலில் இதை ஸ்ப்லிட்டெட் பெர்சனாலிட்டி(splited personality) என்பார்களா?!) பிளவு பட்ட மனமாய் தனக்குள் ஒரு வாதப் போரைத் துவக்கி, எப்படியாவது தனது பிரச்சனைகளுக்கொரு தீர்வு தேடும் முயற்சியே. “அடுத்த வினாடி”-(கிழக்குப் பதிப்பகம் வெளியீடு) புத்தக ஆசிரியர் ரூமி சொன்னது போலத் “தண்ணீர் கொதிப்பதற்குத் தான் நேரமாகிறது. ஆவியாதலுக்கல்ல.” என்பது தான் உண்மை.

(எழுத்தாளன், வாசகன் எனும்) இரண்டு தரப்பு மனங்களுக்கிடையேயான தொடர்பில் ஒரு ஒத்திசைவு (synchronize) ஏற்படும் வரை இந்தக் கொதித்தல், கொதிக்க வைத்தல் என்ற செயல்பாடு ஒரு நொதித்தலைப் போல தொடர்ந்தும் ஒரு வினையாற்றத் தான் செய்யும், வாசக மனங்களை உருக்கி நெகிழ்வூட்டுவதற்கு முன் முதலில் எந்த ஒரு எழுத்தாளனும், (அல்லது ஒரு எழுத்தாளன் தான் என்று இல்லை. ஆனால், எழுத்தின் வாயிலாகத்தான் வெகு ஜன மக்களுடன், அல்லது இந்தச் சமுதாயத்துடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது, அதிக பட்ச தொடர்பு வாய்ப்பு எழுத்தின் வாயிலாகத் தான் உள்ளது என்ற நிலையிலுள்ள எந்த ஒரு மனிதனுக்குமேயே கூட சரி) முதலில் அவர்களே சற்று உருகவும், நெகிழவும் வேண்டிய ஒரு கட்டாய நிலை மாற்றமும் உள்ளது.

பட்டாம் பூச்சி ஒன்று, கடந்து வரவேண்டிய முதல் லார்வாக் கூட்டுப் புழுப் பருவம் போன்ற ஒரு நிலையோடும் இதை ஒப்பிடலாம். வாசக மனங்களை உருக்கி நெகிழ்வூட்டிக் கொண்டிருக்கும், அல்லது எதிர் காலத்தில் உருக்கி நெகிழ்வூட்டக் காத்திருக்கும், உத்தேசித்திருக்கும் எந்த ஒரு எழுத்தாள மனமும் கூட முதலில் அதுவே ஒரு (உருகிய,) நெகிழ் நிலையில், அதே நேரம் எந்நேரமும் ஒரு தகிப்புடன், தனது வெப்பத்தை இழந்துவிடாத ஒரு தகிப்புடன் இருந்தாக வேண்டிய ஒரு கட்டாய நிலை சாத்தியப்பட வேண்டியுள்ளது.

இன்னமும் விளக்கமாக இதை ஒரு உவமான, உவமேய வழி, உதாரணம் கொண்டு விளக்க வேண்டுமானால், (மற்ற கலைஞர்களின் விஷயத்தில் கூட எப்படியோ, ஆனால் முதலில் சமூக நீதியின் பால் பற்றுள்ள ஒரு உண்மையான சமூகப் பிரக்ஞை உள்ள எழுத்தாளனுக்கு) தனிம அட்டவனையில் உள்ள (Gallium-Ga-atomic no-31) கேல்லியத்தின் பண்பு நிலையை ஒத்த ஒரு பண்பு, ஒரு சிறிதளவாவது வேண்டியுள்ளது. மற்றெல்லா உலோகத் தனிமங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்புப் பண்பு கேல்லியத்திற்கு உண்டு. உள்ளங்கைச் சூட்டிலேயே (30c) உருகிவிடக் கூடிய கேல்லியம் கொதித்து ஆவியாவதற்கு எடுத்துக் கொள்ளும் வெப்பம் மட்டும் மிக மிக அதிகம், கிட்டத் தட்ட – 2000C. (3670F)

, கேல்லியத்தின் இந்த சிறப்புப் பண்பு மற்ற வேறு எந்த உலோகத்துக்கும் இல்லாதது. தொட்டால் சிணுங்கியைப் போல, ஒரு நுண்ணிய சென்ஸாராக, ஒரு நுண் வெப்ப உணர்வுத் தூண்டலையும் உணரக் கூடியது. தொடர்ந்து அதிகரிக்கும் உயர் வெப்ப நிலைகளினாலும் அவ்வளவு எளிதில் தன் (திரவ) நிலை மாறாதது. (மாற்றம் அடையாதது.) மற்ற வேறு எந்த உலோகத்துக்கும் உருகு நிலைக்கும், கொதிநிலைக்கும் இடையே இவ்வளவு பரந்து விரிந்த தொலைவு கிடையாது. மற்றெந்த உலோகமும் இத்துணை விரிந்த எல்லைகளுடன் திரவ நிலையிலிருக்கவும் முடியாது. பாதரசமும் கூட திரவ நிலையிலுள்ள உலோகம் தான் என்றால் கூட, அதுவும் கேல்லியத்தோடு போட்டியிடக் கூடியது என்றாலும், கேல்லியத்தை விடக் குறைந்த, குளிர்ந்த வெப்ப நிலைகளை அளக்க மட்டுமே ஏற்றது. –39cல் உறைகிறபடியாலும், கொதித்து ஆவியாக 300c(572F) வெப்பத்தை மட்டுமே எடுத்துக் கொள்வதாலும், உயர் வெப்ப நிலைகளை அளக்க பாதரசத்தைக் காட்டிலும் கேல்லியமே சிறந்தது, ஏற்றது.

அரிசியை சோறாக்க வேண்டும் என்றால் அதை அப்படியே நெருப்பிலிட்டு வேக வைத்து விட முடியாது. கருகித் தீய்ந்து சாம்பல் தான் ஆகிவிடும். அதையே நீரிலிட்டுக் கொதிக்க வைப்பதன் மூலம் பக்குவமான ஒரு உணவாய் சமைக்க முடிகிறதல்லவா?. அரிசி பக்குவமான உணவாவதற்கு நீரும் ஒரு சிறிது, சிறிதல்ல, தனது கொதிநிலை வரையிலுமே கூட, தானும் அரிசியோடு அரிசியாக வெந்து புழுங்கிச் சாக வேண்டியுள்ளதல்லவா?. தனது கொதிநிலை வரை, தான் தாங்கக் கூடிய தனது உச்ச பட்ச வெப்பத்தைக் கொண்டு, ஒரு உச்ச பட்ச வெப்ப நிலையைக் கொண்டு தான் இந்த நிலை மாற்றத்தை, அரிசி சாதமாக மாறும் இந்த நிலை மாற்றத்தைத் தண்ணீர் சாதிக்கின்றது.

இங்கே தண்ணீர் வெப்பம் கடத்தும் ஒரு ஊடகமாக மட்டுமன்றி, தன்னில் ஒரு பெரும் பகுதியையே, ஏன் கிட்டத் தட்ட தன்னையே அர்ப்பணிக்க வேண்டியுமுள்ளது. வெந்த அரிசிக்குள் உள்ள மறை நீரைப் போல பண்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு வாசக மனங்களுக்குள்ளும் ஏதாவது ஒரு எழுத்தாளனின் அல்லது எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலர் கொண்ட ஒரு கலவை மனம்தான் வாழ்கிறது. வாசக மனங்களுக்குப் பொருந்துகிற இந்த இதே விதி ரசிக, தொண்டர் மனங்களுக்கும் அவர் தம் சார்பு உறவுகளுக்கும் கூடப் பொருந்தும் எனலாம்.

நீரால், நீராவியால் சமைக்கப்படுகிற பண்டங்களும் உள. எண்ணையில், எண்ணை கொண்டு பொறித்தால் தான் பொறிக்கப்படுவேன், வறுபடுவேன் என்று அழுது அடம் பிடிக்கிற கென்டக்கி சிக்கென் மனங்களும் உள. அரிசியோடு ஒப்பிடக்கூடிய சாதாரண தினத்தந்தி வாசக மனங்களும் உண்டு. துக்ளக், தினமணி, தினமலரோடு, குமுதம், விகடன், போன்ற பிராமணிய ஊடகங்களோடு ஒப்பிடக்கூடிய கோதுமையும், அரிசியும், சேர்ந்த கலவை வாசக மனங்களும் உண்டு. இன்னும் சில பண்டங்கள் உளன, அவற்றை எண்ணை கொண்டோ, நன்கு உருக்கி எடுக்கப்பட்ட, “கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் கொண்டோ கூட எங்களை பொறித்தெடுக்கவோ, வறுத்து, வார்த்தெடுக்கவோ முடியாது” எனக் கூறத் தக்க ஒரு வகை சூப்பர் ஈகோ (மைசூர் பாஹ் ரக), மனங்களும் மனித சமூகத்தில் உள. இதற்கும் மேலே இன்னும் கொஞ்சம் அதி காஸ்ட்லியான சில சுகியப் பண்டங்களும் உள்ளன.

அதென்ன சுகியப் பண்டம்? “வருஷ நாட்டு ஜமீன், வருஷ நாட்டு ஜமீன்” என ஒரு (உண்மை?!) சரித்திரக் கதைத் தொடர். முன்பொரு சமயம் நம்மூர் ஜூனியர் விகடனில் வந்த தொடர் தான். பின்னர் புத்தக வடிவமும் பெற்றது. அதில் (பக்-42-ல்) இந்த சுகியம் பற்றியச் செய்தி வரும். “தொட்டப்பநாயக்கனூர் ஜமீன் பங்களாவில் சுகியம் மாவுக்குள்ள குருவிய வச்சு எண்ணையில் போடுவாங்களாம், வெந்த சுகியத்தைச் சுடச் சுடச் சாப்பிட பிச்சு எடுத்தா உள்ளேயிருந்து குருவி பறந்து போகுமாம்.” யார் கண்ணால் கண்டது? எல்லாம் படித்தது தான்? (அது உண்மையில் நடந்த கதை என்ற சித்தரிப்புடன் தான் ஜூ.வி.யில் வெளியானது.) அது உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சிக்குள் எல்லாம் போகாமல் எனக்கு அந்த உதாரணம் ஏன், எதற்குத் தேவைப்படுகிறது, எப்படி அது நான் கூற வந்தக் கருத்துக்கு பயன்படுகிறது என்ற அளவில் மட்டும் பார்த்து, எனது கடைமையைச் சரிவர நான் செய்துள்ளேனா என்று பார்த்தால் போதும்.

இன்னும் கேட்கப் போனால் அந்தக் கதையில் வரும் கிறுக்குதுரை என அழைக்கப்பட்ட ஜமீன்தாருக்கும், இன்னொரு உண்மைக் கதாப்பாத்திரமான பளியஞ்சித்தனுக்கும் இடையே நடந்த உண்மைச் சம்பவத்தைக், கதை சொல்லியான (நூலாசிரியர்-பொன்.சந்திர மோகன்) வட வீர பொன்னையா தான் அப்படிக் கூறுவார். அவரும் கூட அவரது சொந்தக் குரல் வாயிலாய், தனது சொந்த அனுபவத்தில் அல்லாமல், தான் பெரியவர்கள் வாயிலாய், சுத்துப் பட்டுக் கிராமங்களில் உரைநடை, பாடல்கள் வாயிலாய் கேள்விப்பட்டதைக், “கேட்டதைக் கேட்டவாறே, அட்சர சுத்தம் மாறாமல், அந்த மதுரை தேனீ, ஆண்டிபட்டி, வட்டார வழக்கின் மொழியிலேயே, அவர் கொடுத்ததிலிருந்து தான் நானும் எனக்குத், தேவைப்பட்டதை இங்கு எடுத்துக் கையாண்டிருக்கிறேன். உண்மையில் அந்தக் கதை நடந்த காலக்கட்டம் 19-ம் நூற்றாண்டின் மத்தியக் காலக்கட்டம்..” ஜூ.வி.யின் புத்தகக் காப்பியின் படி தான் இங்கு கையாண்டுள்ளேன்.

“அந்த அது போன்ற சுகியம் தொட்டப்ப நாயக்கனூர் ஜமீன் பங்களாவிலே ரொம்ப நாட்களாக செய்து கொண்டிருந்தாங்களாம். கதையில் வரும் நம் பளியஞ்சித்தணும் அந்தக் (கிறுக்குதுரை என்றழைக்கப் பட்ட) ஜமீந்தாருக்கு இந்தச் சுகியத்தை ஒத்த இதே போன்ற ஒரு சிறு அதிசயம் ஒன்றைச செய்தும் காட்டுவார். “அதாவது கொதிநீரில் வேக வைக்கப்பட்ட ஒரு பச்சை சுரைக்காயை ஜமீந்தாரிடம் கொடுத்த சித்தர், “சுரைக்காயை நேர்வகிடுல அறுத்துப்பாருங்க சாமின்னு” ஆவி பறக்க, பறக்க, ஒரு சுரைக்காயைக் கொதிநீரிலிருந்து எடுத்துக் கொடுப்பார். பின் ஜமீன்ர்தார் அதை நீளவாக்கில் கத்தியால் வகுந்ததும் உள்ளுக்குளிருந்து ஒரு அழகிய பச்சைக் கிளி உயிருடன் பறந்து வெளியே வந்து ஜமீன்தார் தோள்மேல் உட்காருமாம்” என்பதாய் முடித்துத் தொடர்வார். அது உண்மையா பொய்யா என்ற அமானுஷ்ய ஆராய்ச்சிப் பக்கமெல்லாம் போகாமல், சுகியத்திலிருந்து இன்று கிரையோஜெனிக் இஞ்ஜின் வரை முகிழ்த்துள்ள அதன் தத்துவார்த்த, தர்க்க அடிப்படை, அறிவியல் பரிணாமம் பற்றி மட்டும் அறிவியலோடு இணைந்த ஒரு சமூக, இலக்கிய, அறிவியல் பார்வை கொண்டு பார்ப்போம்.

என்ன இருந்தாலும் சுகியம் ஒரு ராஜ பண்டமல்லவா? அப்படிபட்ட ஒரு ராஜபண்டத்துக்குள் போற்றிப் பாதுகாக்கப்பட்ட ஒரு சுகியப் பறவையைப் போல, சுகமாக, சொகுசாக வாழ்வதற்கு என்றே பிறந்த ராஜா ராணி போகிகளும் இம்ம(மா)க்களாட்சியிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லையா? ஒரு சமூகம் என்ன கொதிநிலையில் இருந்தாலும் சரி, இந்தக் கிரகமே குளோபல் வார்மிங்கில் கொதித்துக் கொண்டிக்க நேர்ந்திருந்தாலும் சரி, அதைப் பற்றி எல்லாம் சிறிதும் கவலைப்படத் தேவையில்லாத, புறச் சமூகத்தின் அக்கொதிநிலையினாலும் பாதிக்கப்படாத, ஒரு முதலாளித்துவக் சுகியக் கவசகுண்டல வரம் வாங்கியவர்களும் இம்மக்களாட்சியிலும் உண்டல்லவா?. (புறச் சமூகம் ஒரு கொதிக்கும் எண்ணைக் கொப்பரையாய்க் கொதித்துக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் பாதுகாக்கப்பட்ட ஒரு சுகியப் பண்டம் போன்ற வாசம் புரியும் (வாழ்க்கை நடத்தும்) ஒரு சுக போகச் சுகியப் பிரகிருதிகள் அவர்கள்.

இத்தகைய சுக போகச் சுகியப் பிரஜைகள் சமூகத்தின் எல்லா அடுக்குகளிலுமேக் கூட இருப்பார்கள், அவர்களை அரசியலில் மட்டுமே எதிர்பார்ப்பது வெறும் பாமரப் பார்வையாய் மட்டுமே இருக்க முடியும். முன்பு கூறினேனே தனிம அட்டவனையில் உள்ள கேல்லியம் அதற்குச் சரியான உதாரணம் கூற வேண்டுமானால், மேற்குக் கோளத்தில் காரல் மார்க்ஸைக் குறிப்பிடலாம். கிழக்குக் கோளத்திலும் நம் தமிழகத்திலும் அப்படி ஏராளமாகக் கூறலாம் என்றாலும் அவர்களின் பெயரெல்லாம் அதிகாரச் சார்ப்புள்ள வர்க்கங்களால் முழு மனதுடன் ஏற்று அங்கீகரிக்கப்படுமா என்பது தான் சந்தேகம். கார்ல் மார்க்ஸின் கேல்லிய வாழ்நிலையுடன் ஒப்பிட்டால் அவர் கால முதலாளித்துவத்தை, அதற்கு ஆதரவான அதிகார வர்க்கங்களை சுகியப் பறவைகளுடன் தான் ஒப்பிடத் தோன்றுகிறது,

ஆனால் இன்றைய 21-ம் நூற்றாண்டிலோ கற்பனை செய்யவே அச்சமாய் உள்ளது. தண்ணீரோ கேல்லியமோ அவையெல்லாமே தாங்கள் சமைக்க வேண்டியப் பண்டங்களோடு பண்டமாய் கொதித்து உருக வேண்டிய, அல்லது ஆவியாக வேண்டிய ஒரு முன்நிபந்தனை, கட்டாயம் உள்ளது. அல்லது சமூகச் சமையலில் குறைந்த பட்சம் தங்களது உஷ்ணமானிப் பங்கையாவது நேரடியாகவே ஆற்ற வேண்டிய ஒரு தேவையுமுள்ளது. ஆனால் உள்ளே சுகமாக ஒரு சுகிய வாசம் செய்யும் சுகியப் பறவை போன்ற உயர் அதிகாரப் பீடத்தில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு சுகியத் தோலைப் போன்ற ஒரு கேல்லிய வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் கிடையாதே. அல்லது ஆனால் அவர்களையும் அத்தகைய சுகியவாசிகளையும் இயற்கை அவ்வப்போது தலையில் ஒரு தட்டு தட்டிக் ஒரு கொட்டும் கொட்டி வைப்பது உண்டு.

உண்மையிலேயே நீங்கள் ஒன்றும் இயற்கையின் பிரத்தியோக பிரகிருதிகள் அல்லர், நீங்களும் சாதாரண மானுட விதிகளுக்குக் கட்டுப்பட்ட ஒரு சாமானிய, சராசரி, சகஜப் பிரஜைகள் தான் என்பதை நிரூபிப்பதைப் போன்று, சமயத்தில், இயற்கையும் அவர்களின் சுகியத் தோலை அவ்வப்போதுக் கிழித்துப் பஞ்சர் ஆக்குவது உண்டு. அதன்மூலம், ஓட்டு மொத்த மனித குலத்தின் வெம்மையையும் அவ்வப்போது சற்று உணர்த்துவதுண்டு, ரஷ்ய ஜாரும், பிரான்சின் 14-ம் லூயியும் அது போன்ற ஒரு அரிய உதாரண பிரஜைகளே. சரித்திரத்தில் எப்போதேனும் நூற்றாண்டுகளுக்கு ஒரு முறைப் பூக்கும் நூற்றாண்டுக்குறிஞ்சி மலர்பூப் போன்ற அத்தகைய குறிஞ்சி மலர்ச் சமூகப்புரட்சியில் மட்டுமே, அரிதினும் அரிதாக இந்த சுகியப் பிரஜைகளின் சுகியத் தோலுரிக்கப்படுகிறது. மற்ற காலங்களில் சுகிய இழை கொண்டு அவர்களின் சுகந்த வாழ்வு பாதுகாக்கப் படுகின்றது. அரிசி, கொதிநீர், குக்கர் உதாரணங்கள் எல்லாம் இங்கே பயன்படாதென்பதால் தான் இந்தச் சுகியக் கிரையோஜெனிக் உதாரணங்களைப் பயன்படுத்தினேன்.

இந்தச் சுகிய உதாரணத்தில் ஒரு தின்பண்ட உதாரணத்தையும் பார்க்கலாம், தேசங்களின் தொழில்நுட்ப எழுச்சி, வீழ்ச்சியையும் கூடப் பார்க்கலாம். அது பார்ப்பவரின் பார்வைக் கோணம், தீட்சண்யத்தைப் பொறுத்தது. சுகிய உதாரணம் மனித குலத்துக்கு ஒரு வகையில் ஒரு ஆரம்பப் பாட, அரிச்சுவடி மட்டுமே. நாம் நம் சுகிய லேகியங்களோடு மட்டும் நின்று விட, அல்லது அத்தகைய சுகியப் பிரஜைகளுக்குச் சேவை புரிவதோடு மட்டுமே நீட்சியுற்றிருக்க, ஆனால் மேலை நாடுகளோ கிரையோஜெனிக் தாண்டி அதன் பரிணாம நீட்சியை ஒரு உச்ச பட்ச விஸ்வரூபத்துக்கே விஸ்தரித்து விட்டன, அந்தத் தொழில்நுட்ப விஸ்தரிப்பு, நம் முகத்தில் காரி உமிழ்ந்ததை போன்ற ஒரு உமிழ்வு முகிழ்வை நிகழ்த்திய பின்னரே, இன்று நாமும் கூட, “அட ஆமா இல்ல” என அதை ஆமோதிப்பதைப் போல மூச்சிறைக்கப் பின்தொடரும், ஒரு தொழில்நுட்பத் தொடரோட்டம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம்.

ஆட்சியாளர்கள் தங்கள் எல்லையை, வரம்பை மீறினால், இயற்கையும் அவ்வப்போது அவர்களுக்கு புறச் சமூகத்தின், வெம்மையை உணர்த்துவதற்காகவாவது, சமூக வெப்பமானிகளாகிய இத்தகைய கேல்லிய ரக மனிதர்களை அனுப்பி முதலில் அவர்களை சற்று நல்ல மரியாதை உடனேயே கூட எச்சரிக்கிறது. அதற்கும் அவர்கள் அசைந்து கொடுக்காத நிலையிலேயே அடுத்தடுத்த சமூகப் புரட்சிகளாய் அவர்களின் அகந்தையைப் போர்த்தியிருக்கும் சுகந்த உறை கிழிக்கப் பட ஒரு காரணமாய் விளங்குகிறது. உள்ளூர் அளவிலும் உலக அளவிலும் இதற்கான நல் உதாரணங்களை நாமும் அனுதினம் பார்த்துக் கொண்டு தான் உள்ளோம்.

நம் சம காலத்தில் தமிழக அளவில் கோவனின் பாடல் பிரச்சனையைக் குறிப்பிடலாம் என்றால், உலக அளவில் விக்கி லீக்ஸின் ஜூலியன் அசாஞ்சேவைக் குறிப்பிடலாம்.

இப்போது கடைசி முயற்சியாக எனது இந்த இக்ஸித் துஸ்ப்ரயோகச் சந்தேகத்தையும் அந்த விக்கிலீக்ஸின் ஜூலியன் அசாஞ்சேவுக்குத்தான் ஒரு முறை அனுப்பிப் பார்க்கலாமா என்றால் அதற்கும் எத்தனையோ நடைமுறை இடர்பாடுகள். (இந்த மொழி பெயர்ப்புச் சிக்கலே முதனமை இடர்ப்பாடு) அப்படியே மொழி பெயர்த்து விட்டாலும் இதை அவரின் கவன ஈர்ப்புக்குக் கொண்டு போவது எப்படி என்பது அடுத்த சிக்கல்? அவரது அதிகாரப் பூர்வ இணைய தளம், மின்னஞ்சல் முகவரிகள், அமெரிக்காவால் முடக்கித் தடை செய்யப் பட்ட பின், முகநூல், ட்விட்டர் வாயிலாகவாவது அவரைத் தொடர்பு கொண்டு பார்க்கலாம் என்றால் முகநூல் ட்விட்டரில் அவரை நமக்கும் முன் பின்தொடர்பவர்கள் மட்டுமே சற்றேறக் குறைய 3 மில்லியன் பேர். இந்த 3 மில்லியன் பேர்களில் எனது ஒற்றைக் குரலை எங்ஙனம் அவரின் காதில் தனித்துப் பிரத்தியோகமாக ஒலிக்கச் செய்வது என்பது, அது தான் இப்போதுள்ளப் பெரும் பிரச்சனை.

நேரடியாகச் செல்லலாம் என்றால் அதற்கான பயணச் செலவுக்குக் கூட இடம் கொடாத எனது மார்க்சியப் பொருளாதாரம் ஒரு புறம் என்றால் மறுபுறம் அப்படியே போனாலும் கூட அவ்வளவு எளிதில் சந்திக்கக் கூடிய இடத்தில் உள்ள ஒரு நபரா அவர் என்றால் அதிலும் பலப் பிரச்சனைகள். நான் ஒருபுறம் உலகிலேயே பெரிய, உலகின் தலைமைக் கோடீஸ்வரர்கள், சிலரைப் பற்றி, அவர்களின் அந்தரங்க வாழ்க்கைப் பற்றி, எனக்கே உரித்தான சில அந்தரங்க ஹேஷ்யங்களைக் கொண்டிருந்தால், மறுபுறம் அவர் உலகிலேயே வலிமையான அந்த உலகக் கோடீஸ்வரர்களின் அரசாங்கத்தையே, அந்த அரசாங்கத்தின் எதிர்ப்பையேச் சம்பாதித்துக் கொண்டு ஈகுவடார் தூதரகத்திற்குள் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளார்.

ஒரு வகையில் நான் எனக்குப் பொருத்தமான ஒரு நபரைத் தான் தேர்ந்தெடுத்துள்ள போதிலும், நான் தேர்ந்தெடுத்துள்ள விஷயம், நான் தேர்ந்தெடுத்துள்ள அந்த மனிதருக்குப் (அஸ்ஸாஞ்செவுக்கு) பொருத்தமாய் பொருந்திப் போகுமா, அப்படிப் பொருந்திப் போகுமானால் அது எந்தளவுக்குப் பொருந்திப் போகும்? அல்லது பொருந்திப் போகாதென்றால் அது எந்தளவுக்கு? என்பது பற்றியெல்லாம் கணிப்பதற்கு (ஏதேனும் ஒரு மானசீகக் கணிப்புக்காவது) முதலில் அவரோடு எனக்கு ஒரு தொடர்பு ஏற்பட்டாக வேண்டும். ஆனால் அவரோ தொடர்பு கொள்ள இயலாத ஒரு இடத்தில், “எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரோ? கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரோ?” என்றத் தமிழ்த் திரை இசைப் பாடலொன்றைப் போலப் புலம்ப வைக்கும் ஒரு பொருளாதார உயரத்திலும், கிறுகிறுக்க வைக்கும் ஒரு அரசியல் முகட்டிலும் ஜாகை கொண்டுள்ளார்.

இப்போது எனக்கிருக்கும், என்முன்பிருக்கும் ஒரே ஒரு எளிய வழியெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகில், இந்த உலகம் முழுவதும் ஒரு மில்லியன் தமிழ் இணைய வாசிகளாவது தேறமாட்டார்களா என்பது தான்? அந்த ஒரு மில்லியன் தமிழ் இணைய வாசிகளில் ஒரு சில லட்சம் பேரின் ஆதரவையாவது, (ஒரு தார்மீக ஆதரவை) பெறமுடியாதா? என்ற அல்ப ஆசை தான் கடைசியில் எனக்கிருக்கும், (என்முன் உள்ள) ஒரு கடைசி வாய்ப்பு. ஒரு மில்லியன் தமிழ் இணைய வாசிகள் என்ற சொற்றொடரைக் கேட்டாலே, உச்சரித்தாலே, டைப் செய்யும் போதே, சமீபத்தில் ஈழத் தமிழர்களுக்காக இணையத்தில் நடத்தப்பட்ட, ஐ.நா. சபையில் நமது குரல் ஒலிப்பதற்கான ஆதரவு வாக்கெடுப்புத் தான் நினைவுக்கு வருகிறது, உங்களில் அனேகருக்கும் இந்நேரம் வந்திருக்கும்.

ஒரு இனம் என்ற அளவில் இந்த உலகத்திலேயே வெட்கித் தலை குனிய வேண்டிய ஒரு இழிஇனம் எது? என அதற்கு ஏதும் ஒரு போட்டி வைத்தால், அப்படி வெட்கித் தலை குனிய வேண்டிய இனங்களில், (அப்படிப் பட்ட இனங்களின் ஒரு ஓட்டு மொத்த (லிஸ்ட்) பட்டியல் எடுக்கப் பட்டால்,) அந்தப் பட்டியலில் முதல் தலைமை ஸ்தானத்துக்கே நாம் தான் (எந்த ஒரு போட்டியும் இல்லாமலேயே) ஏகமானதாகத் தேர்ந்தெடுக்கப்படுவோமோ என்னவோ?!. “தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!” என்ற நிலை போய், “ தமிழன் என்று சொல்லடா! தலை குனிந்து நில்லடா!” என்ற நிலைக்கு இறங்கியாயிற்று. இத்தகைய ஒரு இழிநிலைச் சிறப்பு வாய்ந்த இனத்தின் மீது மீண்டும் இத்தனை பெரும் நம்பிக்கையா? என உங்களில் பலர் (வாயால் கூட அல்ல, வவ்வால் வாய் கொண்டு) நகைப்பது எனக்கும் கேட்காமல் இல்லை தான்.

ஆனாலும் அடி மனதின் அடி ஆழத்தில் மீண்டும் வெட்கம் கெட்ட ஒரு நப்பாசை. மெல்ல, மெல்ல இந்த இழிநிலையிலிருந்து நம் (உலகத்) தமிழினம் மீண்டும் மீண்டெழாதா, இவ்விழி நிலை மாறாதா? என்ற ஒரு நப்பாசை தான். ஒரு விதை அழுகுவது கூட முளைப்பதற்கே. கட்டாயம் இன்றைய நம் நிலை ஒரு இழிநிலை தான் என்பதில் எந்த ஒரு சந்தேகமும், மாற்றுக் கருத்தும் கொள்ளத் தேவையில்லை தான். எனினும் இது மாறும், கட்டாயம் மாறும், “மாற்றம் என்பதே உலக நியதி” “இதுவும் கடந்து போகும்.” என்ற அமர வாக்கியங்களுக்கிணங்க இவ்விருள் நிலை மாறும், அப்படியெல்லாம் மாற வேண்டும் என்பதற்கான ஒரு முன்முயற்சி தானே இந்தக் கின்னஸ் மறுதலிப்புத் திட்டமும் கூட? இப்படி ஒரு முன் கை முயற்சி எடுத்த நாமே துவண்டு நின்று விட்டால் பின் வேறு யார் தான் இப்பணியைச் செய்வது என்ற ஒரு முற்போக்கு நம்பிக்கையிலேயே மீண்டும் இணையத் தமிழர்களின் மீது ஒரு பெரும் நம்பிக்கை கொண்டு இப்போதைய எனது ஒரு திட்டத்தையும் முன் வைக்க விரும்புகிறேன்.

உலகின் வலிமையான நாட்டைச் சேர்ந்த, ஒரு வலிமையான பணக்காரரைப் பற்றி, அதுவும் உலகின் தலைமைக் கோடீஸ்வர ஸ்தானத்தில் இருக்கும் ஒருவரின் அந்தரங்க வாழ்க்கை பற்றி, அவரது நிறுவனப் பங்கு மதிப்புகளோடு (கொஞ்சம் விட்டால்) ஒரு சடு குடு கூட ஆடிப்பார்த்து விடும் எனக் கூறத் தக்க அளவுள்ள ஒரு விஷயம் பற்றி, இவ்வளவு துணிவாக பொது வெளிக்குக் கொண்டு வந்து, அதையும் பகிரங்கமான ஒரு பொது வெளி விவாதத்துக்கு உள்ளாக்கி, அதன் மூலம் ஒரு பொது ஆதரவைப் பெற்று, அந்தப் பொது ஆதரவின் வலிமையான தட்டல் மூலம் ஈகுவடார் தூதரகத்தின், விக்கி லீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேவின் பார்வை கடாட்சம் உங்களது அந்தக் கின்னஸ் மறுதலிப்புத் திட்டத்தின் மீது படவைப்பது என்ற உங்களின் இந்தப் பேராசைக் கனவு பலிப்பது, நிறைவேறுவது என்பது அவ்வளவு எளிதா என்ன?

உங்களின் இந்த அதீதப் பேராசைக்கு சேர்த்து மற்றவர்களையும் ஒரு பலிகடா ஆக்கப் பார்க்கிறீர்களே இது நியாயம் தானா? முறை தானா? இதுவெல்லாம் நடைமுறைச் சாத்தியம் கொண்டது தானா? லட்சம் வோல்ட் மின்சாரத்தோடு விளையாடுவதற்குச் சமமான விளையாட்டு அல்லவா இது? இந்த விளையாட்டுக்கு இந்த லட்சணத்தில் இன்னும் உலகம் முழுவதிலும் உள்ள மற்றத் தமிழர்களின் ஆதரவையும் கோரி வலியுறுத்துகிறீர்களே உங்களுக்கு மூளை கீளை ஏதும் கொஞ்சம் மரை கழன்று விட்டதா என்ன? ” என்று கூட இதைப் படிப்பவர்களில் பலருக்கும், 99.99999% பேருக்கு இந்நேரம் இப்படிப் பட்டதொரு எண்ணம் தான் எழுந்திருக்கும்.

இன்னமும் சிலர் இதை இப்படிப் பகிரங்கமாக பொது வெளிக்குக் கொண்டு வந்து தெரிந்து கொள்வதற்குப் பதில், அதற்குப் பில்கேட்ஸுக்கே நேரடியாகப் பெர்சன்னெலாக அவரது மின்னஞ்சல் முகவரிக்கே உங்களின் அந்த 18 ஆண்டு கால சந்தேகத்தை ஒரு மின்னஞ்சல் வாயிலாக எழுதிக் கேட்கலாம், கேட்டிருக்கலாம் அல்லவா? எங்களை ஏன் வீணில் தொந்தரவு செய்ய வேண்டும்? என்ற ஒரு கூடுதல் எண்ணமும் கூட இந்நேரம் எழுந்திருக்கும். இந்த மின்னஞ்சல் முயற்சிகளையெல்லாம் (ட்விட்டர் முதல், மின்னஞ்சல் வரை, ஏன் ஒரு நேரடி தொலை பேசி வழி அணுகுமுறை வரை அனைத்தையுமே, ஒரு சம்பிரதாய ரீதியிலேனும் கடந்த ……தேதி முதல் …….. தேதி வரை ஏற்கனவேயே முயற்சி செய்து பார்த்து விட்டுத் தான் கடைசியாக இந்தப் பொது வெளி முயற்சிக்கு முயன்றுள்ளேன் என்பது உங்களில் யாருக்கும் (எனது நெருக்கமான நண்பர்களுக்குக் கூட முதலில் தெரியாது என்பது தான் உண்மை.) தெரிந்திருக்க நியாயமில்லை என்பதால் தான் வேறு என்ன தான் செய்வது என்று புரியாத நிலையிலேயே இதைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளேன்.

பொது வெளியில் கட்டாயம் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஒரு எல்லையில்லாத அளவுக்கு உண்டு. என்ன பொது வெளியில் அப்படி ஒரு தீர்வை, தீர்வு முயற்சியை நோக்கி முதலில் ஒரு கவன ஈர்ப்பை ஒருங்கு படுத்தி, (ஒரு முனைப் படுத்திக்) குவிப்பது தான் முதலில் சற்றுக் கடினம். ஒன்ஸ், ஒரு முறை இது தமிழ் உலகப் பொது வெளியில் ஒரு கவன ஈர்ப்பைப் பெற்று விட்டதென்றால், அதற்குப் பின் முழு உலகப் பொது வெளியின் கவன ஈர்ப்பையும் சேர்த்துப் பெறுவது என்பதில் அதற்குப் பின் பெரியதாக எந்த ஒரு சிரமமும் எழ வாய்பில்லை என்றே எண்ணுகிறேன்.

100 கோடி மக்களின் ஒரு அரசியல் பிரதிநிதி, ராணுவ அமைச்சர் (ஜார்ஜ் பெர்னாண்டஸ்) என்ற ஸ்தானத்திலிருந்தவரையே சட்டை செய்யாத நாடு, உள்ளாடைகளையெல்லாம் அவிழ்த்து சோதனை செய்த ஒரு நாடு, கேவலம் இந்த ஒரு மில்லியன் இணையத் தமிழ் சமூகத்தின் ஆர்வப் பரிசோதனை முயற்சிக்காப் பயந்து விடப் போகிறது என்றால், பயந்து தான் தீர வேண்டும் என்பேன். துணிவு, பயம் என்பவையெல்லாம், எண்ணிக்கை பலத்தினால் மட்டுமல்ல, தரத்தினாலும் வருவது. அப்படியில்லாமலா ஜூலியன் அசாஞ்சே என்ற ஒற்றை மனிதனுக்கு இந்த பயம் கொள்கிறது, எப்பொழுது வெளியே வருவார், எப்படி லபக்கென கொத்திக் கொண்டு போகலாம் என ஒரு சாட்டிலைட்க் கண் கொண்டுக் காத்திருக்கிறது? அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்பது உலக வல்லரசாக இருந்தாலும், அதற்கும் பொருந்தக் கூடிய ஒரு குறள் தான்.

மேலும் அஞ்சாமல் இருப்பதற்கு இது ஒன்றும் எனது தனிப்பட்ட அந்தரங்க விஷயம் மட்டுமல்ல, யூக வணிகம் எனப்படும் உலகப் பங்குச் சந்தையையேக் கூட ஒரு சில நாட்கள், வாரங்களுக்கு, அல்லது ஒரு சில மாதங்களுக்கேக் கூட ஆட்டிப் படைத்தாலும் படைக்கக் கூடுமோ என அஞ்சத் தக்க ஒரு விஷயம். அப்படிப் பட்ட ஒரு யூகச் (ப்பங்கு சந்தைச் சுழலுக்குள்,) சிக்கலுக்குள் தனது மணிமகுடத்திலுள்ள எந்த ஒரு ரத்தினக்கல்லும் கூட, (மைக்ரோ சாஃப்ட் என்ற ரத்தினக் கல்லுக்கும் சேர்ந்தே இது பொருந்தும்) கூடவே சேர்ந்து சிக்கிக் கொள்வதை எந்த ஒரு முதலாளித்துவ அரசாங்கமும் அனுமதிக்காது என்றே கருதுகிறேன். சரி சில பல லட்சம் இணையத் தமிழர் ஒன்றாய் உருத் திரளும் வரை அமெரிக்க அரசாங்கமும், கூகுளின் சர்வர்களும் அதுவரைக் காதில் என்ன பூ வைத்துக் கொண்டா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்? கேள்விகள் மனதிலே இந்நேரம் எழுந்திருக்கலாம், எழுந்திருக்க வேண்டும். (அப்போது தான் நீங்கள் சரியான வாசகர்கள்) நல்ல கேள்வி தான்,

எத்தனை தான் கழுகுக் கண்கள் கொண்டு கூகுளின் சர்வர்கள் அதிக நெரிசல் (டிராபிக்) உள்ள தளங்களைக் கண்காணித்தாலும், அவையெல்லாமே இயந்திரக் கண்களே என்பது தான் இப்போது நமக்குக் கிடைத்த ஒரு வரம்.! அமெரிக்க சாட்டிலைட்டுகளின் கண்களில் மிளகாய்ப் பொடித் தூவி விட்டு, இந்தியா பொக்ரானில் வெடித்த அணுகுண்டுகளைப் பெரிய சாதனை என்றன நம் இந்திய ஊடகங்கள். உண்மையில் அதுவெல்லாம் ஒரு சாதனையே அல்ல, என்றாகி விடும், இப்போது நான் கூறும் ஒரு திட்டத்தை மட்டும் இதைப் படிப்பவர்கள் கேட்பார்களேயானால்! ஏசுவை 3 வெள்ளிக்கோ, 30 வெள்ளிக்கோக் காட்டிக் கொடுத்த யூதாஸைப் போன்றக் காட்டிக் கொடுக்கும் துரோகிகள் இருந்தால் ஒழிய, எனது திட்டம் தோல்வியடைய சாத்தியமே இல்லை என்று தான் தோன்றுகிறது.

இந்த யூதாஸைப் பற்றி எழுதும் போது மறைந்த (ஓஷோ என்றழைக்கப்பட்ட) ரஜினீஸ் தான் இப்படி எழுதுவார். உண்மையில் யாரேனும் 3 வெள்ளிக் காசுகளுக்காக, அதுவும் அவருக்கு நெருக்கமான சீடர்களாய் விளங்கியவர்களில் ஒருவரே அப்படிக் காட்டிக் கொடுப்பார்களா? உண்மையில், ஏசுவே தாம் காட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என்று தான் விரும்பினார். தன்னை சிலுவையில் அறைந்து கொல்லப்பட அனுமதிப்பதன் மூலம் தன்னுடைய போதனைகளுக்கு ஒரு அமரத்துவம் அளிக்க விரும்பினார்” என்பதாக இப்படி ஏதோ எழுதுவார் ரஜினீஸ். வார்த்தைகள், வாக்கியக் கட்டமைப்பில் துல்லியமான நினைவு இல்லை என்றாலும் அந்த அர்த்தம், தொனிக் கிட்டத்தட்ட இதுவே.

சாக்ரடீஸ் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திலும், இதே போன்ற ஒரு சூழ்நிலை ஏற்படுகிறது. விஷம் குடித்து மரண தண்டனைக்கு ஆளாவதைக் காட்டிலும், அவர் தப்பித்துச் செல்லலாமே என அவரது நெருங்கிய நண்பர்களோ, அல்லது சீடர்களோ, அவரை மிகவும் நேசிக்கும் சிலர் சாக்ரடீஸ் தப்பித்துச் செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும், செய்து விட்டு, தப்பித்துச் செல்லுமாறு கோருவார்கள். அப்போது சாக்ரடீஸ் கூறுவார். “ நீங்கள் என்னைத் தப்பித்துச் செல்ல வைப்பதின் மூலம் என்னுடைய கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைக்க எண்ணுகிறீர்களா? அல்லது என்னைச் சாக அனுமதிப்பதின் மூலம் எனது போதனைகள் அழியாது என்றும் சாசுவதமாக வாழ்வதை விரும்புகிறீர்களா? என.

எனது இந்தக் கின்னஸ் மறுதலிப்புத் திட்டமும் கூட, மேற்கூறிய இருவரின் உதாரணத்தைப் போலத் தான், எனது அழிவின் மூலம் தான் அதற்கொரு புனர் ஜென்மம் அளிக்க முடியுமென்றால், அதற்கும் கூட நான் தயாரே. தேவை ஏற்பட்டால் எனது இந்தக் கின்னஸ் மறுதலிப்புத் திட்டத்திற்காக எனதின்னுயிரையும் அளிக்க நான் தயாரே, அதற்காக நீங்களும் அதே அளவு அவ்வளவு அர்ப்பணிப்புணர்வுடன் இதற்காக ஒரு பணியாற்ற வேண்டும் என்று கூட நான் வற்புறுத்த வரவில்லை. எனது ஒரே கோரிக்கை எல்லாம் இதை எப்படியாவது விக்கி லீக்ஸின் ஜூலியன் அசாஞ்சேவின் பார்வைக்கோ அல்லது மைக்ரோசாப்டின் பில் கேட்ஸ் பார்வைக்கோ எடுத்துச் செல்ல வேண்டும், என்பது தான். பில் கேட்ஸின் பார்வைக்கு நேரடியாக இயலவில்லை என்றால், அல்லது சுந்தர் பிச்சை போன்றவர்கள் மூலமாகவாவது கேட்ஸின் கவனத்துக்கோ, அல்லது அசாஞ்சேவின் கவனத்துக்கோ கொண்டு செல்ல வேண்டும். இந்த முயற்சியில், அசாஞ்செவுக்கு ஏன் அதிக முன்னுரிமை கொடுக்க விரும்புகிறேன் என்பதற்கு, அதற்கே உரிய காரண முகாந்திரங்கள் இல்லாமல் இல்லை.

முதற் கண் அவரது விடுதலையை விரும்புகிற அவரது லட்சோப லட்ச விசிறிகளில் நானும் ஒருவன், இரண்டாவது அவர் அப்படி என்னக் குற்றம் செய்து விட்டார்? “ஒரு தேசம், இந்த உலகையே உளவு பார்க்கலாம், இந்த உலகத்தையே உளவு பார்க்கிற அந்த தேசத்தை உளவு பார்ப்பது மட்டும் அப்படி என்ன பெரியத் தவறாகி விட முடியும்?” மூன்றாவது அவரைப் போன்றவர்கள் ஒரு சிலராவது இந்த உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள். உலக நன்மையை முன்னிறுத்தியாவது அவர்கள் காப்பாற்றப்பட வேண்டும். இந்த உலகின் சக்திச் சமன் நிலைக் காப்பாற்றப் படுவதற்காகவும், ஒரே ஒரு தேசத்திடமே அது எவ்வளவு முற்போக்கு முன்னோடி நாடாகயிருந்தாலும் சரி சர்வாதிகாரத்தனமாக அனைத்து விதச் சக்திகளும், அதற்கேச் சென்று குவிந்து விடக் கூடாது என்பதற்காகவும், இந்த இரண்டு காரணங்களுக்காகவாவது அசாஞ்செவும் காப்பாற்றப் பட வேண்டும். அதே நேரம் அசாஞ்செவை விட்டால், வேறு யார் இது போன்ற விஷயங்களில், உண்மை நிலையை வெளிக்கொணர முடியும்.? பில் கேட்ஸிடம் நேரடியாகவே கேட்டாலும், அவர் இந்த இது போன்ற ஒரு விஷயத்தில் எப்படி ஒரு முழு உண்மை பேசுவார் என்று எதிர்பார்க்க முடியும். அப்படி ஒரு முழு உண்மையை அவர் பேசித் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் எதேனும் உள்ளதா என்ன?

ஒருவேளை 750 கோடியில் ஒரு வாய்ப்பைப் போன்ற அந்த இக்ஸித் துஸ்ப்ரயோகம் அவர் வாழ்வில் உண்மையிலேயே நிகழ்ந்திருந்தால்……,?!அதை உண்மையிலேயே வெளிப்படுத்தி விடுவாரா? தனக்குத் தானே யாராவது ஒரு ஆப்பைத் தானே வைத்துக் கொள்வார்களா? இதோ நீங்கள் உள்ளீர்களே என உடனே என்னையேக் கைகாட்டக் கூடாது. இந்த விதிக்கு நான் விதி விலக்கு, இதற்காக மரணத்தையும் சந்திக்க நான் தயார். ஆனால் தனது நிறுவனத்தின் அழிவைத் தானே நிகழ்த்திக் கொள்ள பில் கேட்ஸுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கப் போகிறது?.

ஒருபுறம் இக்ஸித் துஸ்ப்ரயோகச் சிக்கல் சம்பந்தப்பட்ட யூகத்திற்கான உண்மைப் பதிலை அசாஞ்சேவினால் மட்டும் தான் ஊர்ஜிதம் செய்ய முடியும் என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் இது அசாஞ்ஜேவுக்கான ஒரு உண்மை விடுதலைச் சாவியாகவும் விளங்க முடியும். அசாஞ்ஜேவைத் தவிர்த்து, வேறு யார் குரல் கொடுத்தாலும், என்ன தான் கரடியாய் கத்தினாலும், அது அந்தக் கத்தல் உலக அரங்கில், அமெரிக்காவின் பணபலத்துக்கு முன், அரசியல், பொருளியல், ராணுவ செல்வ பலத்துக்கு முன் அவர்களின் ஒற்றைக் குரல் எடுபடாமலே போவதற்குத் தான் வாய்ப்புகள் அதிகம். ஆனால் அசாஞ்ஜேவைப் பொருத்தவரையோ, நிலைமையே தலை கீழ். அசாஞ்சே இப்போது இந்தக் கிரகத்திற்கேக் கிடைத்த ஒரு நவீன தருமரைப் போன்றவர். அவர் வாயிலிருந்து வரும் பொய்க்கும் கூட உண்மை என்ற தோற்றப் பொலிவு கிடைக்க வாய்ப்புள்ளது. இன்னமும் கேட்கப் போனால் இந்தக் கிரகத்திலேயே அவர் சொன்னால் மட்டுமே பொய்யைக் கூட உண்மை என்று நம்ப யாரும் முன் வருவர்.

குருசேத்ர யுத்தத்தில், வெற்றியின் பொருட்டு, எப்படி கிருஷ்ணர் தர்மரை ஒரு பொய்க்கு, ஒரே ஒரு அற்பப் பொய்க்குத் தூண்டி வெற்றிக் கணியினைப் பறித்தாரோ, அதே போல இந்த ஆட்டத்தில், அசாஞ்ஜேவையும் நாம் உலக நன்மையின் பொருட்டும், அவரது சொந்த நன்மையின் பொருட்டும் ஒரே ஒரு பொய்க்குத் தூண்டுவதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிக்க முடியும். ஒன்று அசாஞ்சேவின் விடுதலை. மற்றொன்று கின்னஸ் மறுதலித்த, 18 ஆண்டு கால, எனது சந்தேகம் ஒன்று நிவர்த்தியாவது. அசாஞ்சேவின் விடுதலை… சரி! ஏற்றுக் கொள்ளவாவது ஒரு காரண முகாந்திரம் உள்ளது. என்னமோ “தனியொரு மனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழிப்போம்” என்ற பாரதியின் வாக்கைப் போல, உங்களின் தனியொரு மனிதனின், சந்தேக நிவர்த்திக்காக நாங்கள் லட்சக்கணக்கானவர்கள் ஒரு ரிஸ்க் எடுக்க முடியுமா? என ஒரு கேள்வி எழலாம் உங்களில் அனேகருக்கு? ஏன் அனைவருக்குமே கூட? இதற்கு எனது பதில் முழுவதையும், எனது இந்த வலைப்பூவின் முழுச் சாராம்ஸத்தையும் படித்து விட்டு, அதற்குப் பின், ஒரு முடிவெடுக்கவும் என்பதே .

“குணம் நாடிக் குற்றமும் நாடி, அவற்றில்
மிகைநாடி மிக்கக் கொளல்”

என்பது நமது வான் புகழ் கொண்ட வள்ளுவனின் வாக்கு. ஆக எனது வலைப்பூவின் இந்த முழுச் சாரம்ஸத்தையும் முழுவதும் படிக்காமலே முன்னமே ஒரு முன்கூட்டியத் தீமானத்திற்கு வர வேண்டாம் என்பதே உங்களிடம் நான் வைக்கும் கோரிக்கை.

“எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு.”

இதுவும் நம் அதே முப்பாட்டனார் (வள்ளுவர்) வாக்கே!

மகா பாரதத்தைப் போலவே, இன்றைய குருசேத்ரத்திலும் இன்றைய நவீன தருமராம் அசாஞ்சே போன்றவர்கள் அன்றைய தருமரைப் போலவே தனது உண்மை பேசும் விரதத்திற்கு ஒரு பங்கம் வராமலே, எனது தமிழ் அசலின், ஆங்கில நகல் வடிவத்தை, இந்தியாவிலிருந்து எனக்கு இப்படியொரு (பில் கேட்ஸ் பற்றியும் அவரிடம் இக்ஸித் துஸ்ப்ரயோகம் செய்யப்பட்டிருந்தாலும் செய்யப்பட்டிருக்கக் கூடுமோ? என்ற எனது ஐயம் தாங்கிய) மின்னஞ்சல் வந்தது. அதன் உள்ளது உள்ளது படியான ஆங்கில வடிவத்தை விரைவில் வெளியிட உள்ளேன். என ஒரே ஒரு தகவல் குறிப்பு வெளியிட்டால் போதாது? அவரது விடுதலைக்கு?

இப்படியொரு அறிவிப்பை வெளியிடும் முன் அமெரிக்க அரசாங்கத்துக்கு முறைப்படி எனது மின்னஞ்சல், வலைப்பூ சாராம்ஸத்தை அறிவித்து விட்டே கூட இதைச் செய்யலாம். 10 லட்சம் டாகுமெண்ட் ஏற்படுத்திய சிறைவாசத்தை எனது 10 (mb)எம்பி பெருமானமுள்ள டாகுமெண்ட் ஏன் விடுவிக்காது? என்று கூடக் கேட்க வரவில்லை. ஏன் முயற்சித்துப் பார்க்கக் கூடாது? என்று தான் கேட்கிறேன். அமெரிக்கத் தேர்தலுக்கு இன்னமும் சரியாக (நவம்பர் 8 2016) ஒரு முழு வருடம் மட்டுமே உள்ளது. கிளிண்டனின் மனைவி ஹிலாரிக் கிளிண்டனும் போட்டியில், களத்தில் உள்ள நிலையில், எனது வலைப்பூச் சாராம்சம் இன்னமும் முக்கியத்துவம் பெறுகிறது.

2). கின்னஸுக்கு ஒரு கடைசிக் கடிதம்.
(அனுப்புனர் தொடர்பு எண் ஏர் செல்-+918760244879)

பல்லடம்.
(தொடங்கிய நாள்) 27.04.2005.

பெறுதல்

கின்னஸ் எடிட்டோரியல் டிபார்ட்மெண்ட்,
லண்டன்.

பெருமதிப்புக்கும் பேரன்புக்கும் உரியீர்,

வணக்கம், தென்னிந்தியாவின் தமிழகத்திலிருந்து …………. மீண்டும் எழுதிக் கொள்வது. மீண்டும் என்றால் இந்த மீண்டும் என்பதற்கான கால இடைவெளி என்பது ஏதோ ஓரிரு நாட்களோ வாரங்களோ மாதங்களோ கூட அல்ல. 12 வருடங்கள். 12 வருட கால இடைவெளி என்பது கொஞ்சம் பெரிய இடைவெளி தான். சாதாரண ஒரு தனி மனித வாழ்வில் நிச்சயம் இது ஒரு நீண்ட கால பெரிய… இடைவெளி தான். இன்னும் தெளிவாக, மிகத் துல்லியமாகக் குறிப்பிட வேண்டுமானால் 17 வருடத்துக்கு முந்தைய, முற்றிலும் மறுதலிக்கப்பட்ட எனது பழைய ப்ரொப்போசல் ஒன்று சம்பந்தமான ஒரு நினைவூட்டலுக்குக் கூட மூத்தப் பணியாளர்கள் யாரும் இனிமேல் அங்கே இருப்பார்களா?! என்பது கூட சந்தேகமே!. ஒருவேளை கின்னஸ் நிறுவன கணிணிகளின் பழைய டேட்டா பேஸில் இருந்தால் சாத்தியமுண்டு. இல்லையெனில் மீண்டும் முதலிலிருந்து நினைவூட்டித் தான் ஆரம்பிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில் 17 வருடங்களுக்கு முன்பே நீங்கள் கை கழுவி மறுத்து விட்ட ஒரு ப்ரொப்போசல் பக்கம், அதுவும் தெள்ளத் தெளிவாக, முற்றிலும் திட்டவட்டமாக மறுத்துவிட்ட ஒரு ப்ரொப்போசல் பக்கம் தங்களது பார்வையைக், கவனத்தை மீண்டும் கொஞ்சம் திருப்புங்களேன் என்று வற்புறுத்துவது என்பது எந்த விதத்திலும் நியயாமில்லாததும் நாகரீகமற்றதும் கூடத் தான். ஆனாலும் என்ன செய்ய? மனிதர்களுக்கு சில நேரங்களில் “நாகரீகம் அநாகரீகம் பார்த்தால், இது ஒன்றும் வேலைக்கு ஆகாது! எனும்படிக்கான சூழல்*****” அரிதினும் அரிதாக வாழ்வில் எப்போதேனும் ஒரு முறையாவது ஏற்படக் கூடுமே.

*****”சூழ்நிலையைக் குற்றம் சாட்டும் ஏழை மனிதனைக் கண்டு ஆத்மா பரிகசிக்குமாம்” என ஒரு இந்தியப் பழமொழி ஏற்கனவேயே உண்டு தான், என்ன செய்ய இந்த மாதிரி பழைய பழமொழியை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலும் வேலைக்காகாது போலுள்ளதே.

அப்படிபட்ட எனது இந்த பலவீன சூழல் நெருக்கடியைப் பொறுத்துக் கொண்டு, இதற்கு மேலும் அப்படி என்னதான் சொல்ல வருகிறான் இந்த மனிதன் என்றளவிலாவது ஓரு சில நிமிடத் துளிகளை அல்லது சில மணித் துளிகளை இந்தக் கடிதத்திற்கும் (இல்லையில்லை கடிதம், கட்டுரை என்பதற்கான இலக்கண வரம்புகளை எல்லாம் உடைத்துக் கொண்டு ஒரு புத்தக அந்தஸ்த்தையே கோரும் இந்தக் கடித வடிவப் புத்தகக் கருத்துருவிற்கு, அதுவும் வரைவு நிலையிலுள்ள இந்தப் புத்தகக் கருத்துருவிற்கு) கட்டாயம் தவணை முறையிலாவது அவ்வப்போது நேரம் ஒதுக்கி படித்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறேன்.

கடந்த 03.06.1998, 18.08.1998 மற்றும் 14.05.2003 ஆகிய தேதிகளில் நீங்கள் மறுதலித்த எனது 12.05.1998 தேதியிட்ட கடித சாராம்சம் குறித்து முற்றிலும் புதியதொரு கோணத்தில் கடந்த 12.07.2003 (அல்லது 21.07.2003,)***** மற்றும் 04.03.2004 ஆகிய தேதிகளில் முறையே 2 தடவைகள் 2 மின்னஞ்சல்களை நேச்சர் பத்திரிக்கைககும் கூட அனுப்பியிருந்தேன். ஆனால் வழக்கம்போல் இது விஷயத்தில் எப்போதும் கிடைக்கப்பெறும் சலனமற்ற மௌனத்தையே அப்போதும் பதிலாக கிடைக்கப் பெற்றேன் என்பது, அது வேறு விஷயம். முதலில் எனது மின்னஞ்சல்களே சரியானபடி நேச்சர் பத்திரிக்கையை அடைந்ததோ என்னவோ? அடைந்தேயிருந்தாலும் அதையும் ஒரு பொருட்டாக மதித்துத் திறந்து படித்தார்களோ (இல்லை ஸ்பெர்ம் (sperm theft) தெஃப்ட் பற்றிய எனது அந்தக்கடிதங்களை எல்லாம் ஸ்பேம் மெய்ல்கள் (spam mails) பட்டியலில் சேர்த்து டஸ்ட் பின்னில் தள்ளி விட்டார்களோ) என்னவோ? யார் கண்டது? எதையும் ஊர்ஜிதம் செய்து கொள்ள இயலாத கையறு நிலையிலுள்ளேனே. (இதை எல்லாம் ஊர்ஜிதம் செய்து கொள்வதற்கும் ஏதோ ஒரு ஸ்பைவேர் (உளவு மென்பொருள்) உள்ளதாமே

முதலில் என்னிடம், அப்போததெல்லாம் (1998-2008 வாக்கில்) சொந்தக் கணினியேக் கிடையாது. கணினி இயக்கம் பற்றிய அறிவனுபவமும் கிடையாது. மொழி பெயர்ப்பிலிருந்து அதை மின்னஞ்சலில் அனுப்புவது வரை இவை அனைத்திற்கும் யாரேனும் ஒரு (உரிய தகுதி வாய்ந்த) 3-வது நபரையே எபபோதும் சார்ந்திருக்க வேண்டியிருந்தது, இப்போதும் இந்நிலையில் மாற்றம் ஒன்றும் பெரிதாக இல்லை என்ற போதிலும் கையெழுத்துப் பிரதிகளுக்குப் பதிலாக கணினி வழித் தட்டச்சுப் பிரதியாய் அனுப்ப இயலுகிறது. எனினும் மொழி பெயர்ப்புக்கான அந்த சார்பு நிலை மட்டும் இந்தப் பிறவி, ஜென்மம் முழுக்க மாறப் போவதில்லை அது ஒன்று தான் இத்தனைக் காலமும் எனைப் பாடாய் படுத்தி வைத்து அலைக்கழித்துக் கொண்டிருக்கும் பிரதானத் தடைக் கல் விஷயமாய் இருந்து வந்தது, வருகிறது. இதோ இப்போது (முழ திருப்தி இல்லாத அதிருப்தி நிலையுடனேயே கூட) எப்படியோ ஒரு வழியாக உங்கள் கையை நோக்கி ஒரு வழியாக உந்தித் தள்ளியும் ஆயிற்று.

தற்போது விஷயம் இது போன்ற மொழிபெயர்ப்பு இடர்பாடுகள் மட்டுமல்ல. 21.07.2003 மற்றும் 04.03.2004 தேதிகளில் நேச்சருக்கு அனுப்பினேனே 2 மின்னஞ்சல்கள். அதன் சாராம்சத்தையே சற்று விரிவான பொருளில், அர்த்தத்தில், மீண்டும் தங்களின் கவனத்துக்கும் கொண்டு வர விரும்புகிறேன் பாருங்கள் அது தான் முக்கியமான பிரதானமான விஷயம். தற்போது எனது Proposal-ன் பழைய கர்ண கடூரமான வடிவத்தை (எனது சிற்றறிவுக்கெட்டியவரை) நாகரீகமான ஒரு வடிவத்தில், உருவத்திலும், உள்ளடக்கத்திலும் முற்றிலும் மேம்படுத்தியுள்ளதாகவே எண்ணுகிறேன்.

ஆக மேம்படுத்தப்பட்டுள்ள இப்புதிய (சிக்கலான சமூகவியல்) வடிவத்தை மீணடும் அவசியம், நீங்களும் ஒரு முறை பார்வையிட வேணடும் என்ற எனது விருப்பம் ஒருபுறத்திலிருந்தும், இப்புதிய வடிவம் சந்தேகிக்கும் ஒரு முக்கியக் குற்றவியல் நிகழ்வு ஒரு வேளை மேற்கு அரைக் கோளத்தில் இந்நேரம் ஏற்கனவேயே நிகழ்ந்திருந்தாலும் நிகழ்ந்திருக்கக் கூடுமோ என்ற ஒரு புதிய ஐயப்பாடு காரணமாக எழுந்த ஆர்வத் தீ இன்னொரு புறத்திலிருந்தும், எனைத் தினமும் (தினமும் என்றால் கடந்த 18 வருடங்களாகவே) எனை நிம்மதியாக உண்ண, உறங்கக் கூட விடாமல், எனது வாழ்வின் சராசரி Survival போரரட்டங்களைக் கூட நிகழ்த்த விடாமல், தொடர்ந்தும் எனைப் பாடாய்படுத்தும் ஒரு பாஸ்பரஸ் சிந்தனையாய் சுட்டெரித்துக் கொண்டிருப்பதாலுமேயே, உங்களை நோக்கி மீணடும் மீண்டும் இப்படி ஒரு கடித சுனாமியாய் எனைச் சுண்டி உந்தித் தள்ளிக் கொண்டுள்ளது என்றால் ஒரு வேளை இதையும் நம்புவீர்களோ என்னவோ? ஆனால், சற்றும் கலப்படமில்லாத அக்மார்க் ரக, ISO தர உண்மைகள் தான் இவையும் என்றால் இதுவும் சற்றும் மிகையல்ல.

ஒரு வேளை எனது சந்தேகம், யூகம் உண்மையாகி உறுதிப்படுமேயானால் அநேகமாக (சிவில் குற்றவியல் நிகழ்வுகளில்) அது தான் நமது சமகால உலகின் மிகப்பெரும் முக்கியமான ஒரு பொருளாதாரக் குற்றவியல் நிகழ்வாக இருக்கக் கூட வாய்ப்புள்ளது. 20-ம் நூற்றாண்டு எதிர் கொண்ட (சிவில்) பொருளாதாரக் குற்றவியல் நிகழ்வுகளிலேயே ஆகப்பெரும் (சிவில்) பொருளாதாரக் குற்றவியல் நடவடிக்கையாகவோ அல்லது 21-ம் நூற்றாண்டு எதிர்கொள்ளக் காத்துக்கொண்டிருக்கிற ஒரு பெரும் (சிவில்) பொருளாதாரக் குற்றவியல் நடவடிக்கையாகவோ கூட அமைய அதற்கு ஒரு வாய்ப்புள்ளது என்றால் இதுவும் எனது அந்த மிகையல்லாதவற்றின் பட்டியலில் சேர்ந்து கொள்ள ஒரு வாய்ப்புள்ளது.

அது மட்டுமல்ல அவ்வளவு எளிதில் இதற்கு “ஒரு தீர்வு****** காண முடியும்” எனவும் சொல்லி விட முடியாத படிக்கு அந்தளவுக்கு இது ஒரு சர்ச்சைக்குரிய புது ரகக் குற்றமாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

******நீதித் துறைத் தனித்து தான் மட்டுமே தீர்த்து விட இயலாதபடிக்குத் தடய அறிவியல் பரிசோதனைத் துறையின் இன்றியமையாக் கூடுதல் உதவியையும் கோருவதாய் அமைந்துள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமானால் தடய அறிவியல் துறையும் கூட இதற்கானதொரு பதிலை ஒரு ஆயத்த (முன் தயாரிக்கப்பட்ட-ready made ) விடையைப் போல ஏற்கனவேயேக் கண்டுபிடித்து தயார் நிலையில் வைத்திருக்கக் கூடும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை. இருந்தால் சந்தோஷமே. (அது அப்படி என்ன வகை விடை, எந்த விதமாக, என்ன அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட விடை என்பதை அறிந்து கொள்ள நானும் கூட கொஞ்சம் ஆவலாகவே காத்துக் கொண்டிருக்கிறேன். இல்லை எனில் அப்போதும் சந்தோஷமே. பரம சந்தோஷம். இனிமேலாவது அதற்கொரு விமோசனம் கிடைக்கக் கூடுமல்லவா?)

அநேகமாக கடந்த நூற்றாண்டின் விளிம்புகளில் (இறுதிப் பத்தாண்டுகளுக்குள்) ஒரு வேளை அது ஏற்கனவேயே “நிகழ்ந்திருந்தாலும் நிகழ்ந்திருக்கலாம்..! நிகழந்திருக்கக்கூடும்.! நிகழ்ந்து முடிந்திருக்கக் கூடும்.!” என்று கூட கொஞ்சம் அறுதியிட்டே கூறுவேன். அப்படி நிகழ்ந்திருந்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை. நிகழாமல் இருந்திருந்தால் தான் அது ஒரு ஆச்சரிய அதிசயம்.

பீடிகை பலூனை இதற்கு மேலும் ஊதிப் பெருக்க விரும்பவில்லை ஐயா! விஷயம் இது தானய்யா! ஒரு மனிதனின் விந்தணுக்களை அவனுக்குத் தெரியாமலேயே அவனது சம்மதத்துக்கும், சட்டத்துக்கும் புறம்பாகவே கூட திருடலாம். திருட முடியும் என்பது தானய்யா! என்ன இதற்கான ஒத்துழைப்பு நல்கக்கூடிய சம்பந்தப்பட்ட துறை சார்ந்த மருத்துவர் குழாம் ஒன்றின் துணை, உதவி கிட்ட வேண்டும். அவ்வளவு தான்.

“சரி மனித விந்தணுக்களை (அப்படியே) திருட முடியும் என்றே வைத்துக் கொண்டாலும் அதற்கும் கின்னஸ் புத்தக நிறுவனத்துக்கும் என்னப்பா சம்பந்தம்? முகவரி மாறி வந்து எங்களை ஏன் இப்படி ஒரு நீண்ட கழுத்தறுப்புக்கு உள்ளாக்க வேண்டும்? எங்களின் 03.06.1998 தேதியிட்ட கடிதத்திலேயே We can’t more positive எனத் தெளிவாகத் தெரிவித்திருந்தும் 18.08.1998 மற்றும் 14.05.2003 தேதியிட்ட கடிதங்களில் கூட மீண்டும் மீண்டும் அடுத்தடுத்து எங்களது திட்டவட்டமான மறுப்பு பற்றியும், நிலைபாடு பற்றியும் தெளிவாகத் தெரிவித்திருந்தும் கூட ஏனப்பா, “இப்படி மீண்டும் மீண்டும் எரிச்சலூட்டும் போக்கில்…..?!” 17 வருடங்கள் கடந்தும், “முதலையும் மூர்க்கணும் கொண்டது விடா” பழமொழிக் கணக்காக, பிடிவாதமாக ஏன் எங்களை இப்படி ஒரு தொந்தரவுக்குள்ளாக்குகிறீர்கள், வற்புறுத்துகிறீர்கள்? எங்கேயோ பேச வேண்டிய ஒரு சப்ஜெக்ட்டை இப்படி முகவரிமாறி வந்து எங்களை ஏன் ஒரு கழுத்தறுப்புக்கு உள்ளாக்குகிறீர்கள்?!”, எழும் உங்களின் (இப்படிப்பட்ட) எரிச்சல் மன எண்ண ஓட்டங்கள் கூட புரியாமலில்லை.

உண்மை தான் ஐயா ஒத்துக் கொள்கிறேன். இது போன்ற விஷயங்களுக்கும் (அதாவது மனித விந்தணுக்கள் திருடப்பட முடியும் என்பதற்கும் கின்னஸ் புத்தக நிறுவனத்தாராகிய) உங்களுக்கும் இடையே எந்த விதமான சம்பந்தமும் நேரடியாகக் கிடையாது தான். அதாவது தற்போதைக்கு நிகழ் காலத்தில்…….. !.

ஆனால் எதிர் காலத்தில்…….? குறைந்த பட்சம் தூர எதிர்காலத்திலாவது இப்போது நான் குறிப்பிட்டிருக்கும் இவ்விஷயத்திற்கும் (அதாவது மனித விந்தணுக்களைத் திருட முடியும் என்பதற்கும் கின்னஸ் சாதனை புத்தக நிறுவனத்தாராகிய) உங்களுக்கும் இடையே ஒரு மறைமுகத் தொடர்பாவது, ஒரு மறைமுக பந்தமாவது ஏற்படக்கூடும் ஏற்படப்போவது உறுதி என்கிறேன்.

ஆக உங்களோடு எதிர் காலத்தில் மறைமுகமாகவாவது ஒரு பந்தம், தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள காத்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கியப் புதிய விஷயம் என்பதாலும், அது எப்படி உங்களோடு ஒரு மறைமுக பந்தம், தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள காத்துக் கொண்டிருக்கிறது என்பது பற்றி அறிந்து கொள்ள ஒரு சிறிதளவாவது ஆர்வம் காட்டுவீர்கள், நேரம் ஒதுக்குவீர்கள், என்ற நம்பிக்கையோடும் கடிதத்தின் நீண்ட மீதிப் பகுதிக்கு நகர்ந்து செல்ல தங்களின் அனுமதி இன்றியே ஒரு முன் அனுமதி எடுத்துக் கொள்கிறேன்.

ஐயா, 1978-ல் உங்கள் நாட்டில் தான் உலகிலேயே முதன் முறையாக “சோதனைச் சாலை வழிக் குழந்தை” சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டது என்பதுவும். அது மகப்பேறு மருத்துவத்தில் ஒரு புதிய மைல் கல்லாக விளங்கியது என்பதுவும் நாம் அனைவரும் ஏற்கெனவேயே நன்கு அறிந்த ஒன்று தான். ஆனால் அது பெண் மலடுகளுக்கு மட்டுமே பெருமளவில் பயன் அளித்து வந்தது. விந்தணு எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளவர்களுக்கும். விந்தணுக்கள் வரும் பாதையில் அடைப்பு காரணமாக வெளி வர முடியாமல் உள்ளவர் களுக்கும், (அப்படி உள்ளவர்களில் சிலருக்கு) அறுவை சிகிச்சையினாலும் பலன் இல்லை என்ற நிலை உள்ளவர்களுக்கும் ஆக இப்படிப்பட்ட மலட்டுத் தன்மையுடைய ஆண்களுக்காக எல்லாம் சேர்த்தேக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய சிகிச்சை முறை தான் 1992-ல் கண்டுபிடிக்கப்பட்ட சிகிச்சை முறை. ஐ.சி.எஸ்.ஐ. (Intra cyto plasmic sperm injection method) அல்லது சுருக்கமாக இக்சி என அழைக்கப்படும் அப்புதிய சிகிச்சை முறையை அநேகமாக முதன் முதலில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த டாக்டர் வான் ஸ்டெய்ர்டெஜெம் என்பவர் தலைமையிலான நிபுணர் குழு தான் உலகுக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது என்று கூடக் குறிப்பிடலாம்.

சோதனைக் குழாய் மூலம் குழந்தை பிறக்க வேண்டுமானால் ஆணின் விந்தணுக்கள் எண்ணிக்கையில் ஏராளமாகவும், உயிரோட்டம் மிக்கவையாகவும் இருக்க வேண்டும். ஆனால், இக்சி எனப்படும் இப்புதிய ஐ.சி.எஸ்.ஐ முறையில் மிகக் குறைந்த, எண்ணிக்கையில் (ஒற்றை இலக்க எணணிக்கையில்) விந்தணுக்கள் உடையவர்களும் கூட தங்களது மனைவியரைக் கருத்தரிக்க வைக்க ஒரு வழி வகை பிறந்துள்ளது. ஒரே ஒரு ஆண் விந்தணுவைப் பெண்ணின் சினை முட்டைக்குள் ஊசி போன்ற கருவியின் மூலம் செலுத்துகின்றனர். கரு உண்டானதும் அதனை மறுபடியும் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி குழந்தையாக வளரச் செய்கின்றனர். நம்மோடு சம்பந்தப்படும் முக்கிய விஷயங்கள் இவையல்ல. இவை அச்சிகிச்சை முறை பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகமே.

அச்சிகிச்சை முறையில் உள்ள நம் விஷயத்தோடு சம்பந்தப்படக்கூடிய ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் மேற்குறிப்பிட்ட மாதிரியான வகை மலட்டுத் தன்மை கொண்ட ஆண்களுக்கு சிகிச்சை அளிக்கையில், இந்த இக்சி முறையில் அவர்களின் விதைகளிலிருந்தே நேரடியாக ஊசி மூலம் விந்தணுக்களை வெளியே எடுத்து பின் அவற்றை செயற்கை முறை கரு உற்பத்திக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பது தான். (பார்க்க வீடியோ ஒளிநகல்)

இது காறும் இந்த, இக்சி எனப்படும் ஐ.சி.எஸ்.ஐ பற்றி நான் கூறியதெல்லாம் இங்கு எங்களூரில் இருந்து வரும் சில ஸ்தல அறிவியல் பத்திரிக்கைகளிலிருந்து படித்துத் திரட்டிய விபரமே. அதில் எங்குமே ஒரு வரி கூட நேரடியாக விந்தணுத் திருட்டு என்பது பற்றி குறிப்பிடப்படவில்லை என்ற போதிலும் அந்தக் கட்டுரைகளின் சாராம்சங்கள் தங்களையுமறியாமல் மறைமுகமாக வெளிப்படுத்தியது அதைத் தான். இதை அக்கட்டுரைகளை நேரடியாகப் படிக்க நேரும் எவர் ஒருவரும் பிரத்தியட்சமாக உணரலாம். (பார்க்க இக் கருத்துருவுக்கு வலு சேர்ப்பதைப் போன்ற இணைய இணைப்பு வீடியோ ஒன்றை)

காரணம் ஒரு ஆணின் விதைகளிலிருந்தே நேரடியாகவே ஊசி மூலமே விந்தணுக்களை வெளியே எடுக்க முடியும் என்றால் அது எதைக் குறிக்கிறது? ஒரு விந்தணு சேகரிப்பு முயற்சிக்கு இயற்கையாகத் தேவைப்படும் (கலவி வழியாகவோ செயற்கையான மைதுனம் வாயிலாகவோ தேவைப்படும்) எந்தவொரு ஸ்கலித நிகழ்வும் தேவையில்லை என்பதைத் தானே?

ஆக ஸ்கலித நிகழ்வே தேவையில்லை எனும் பட்சத்தில் உணர்வற்ற மயக்க நிலையிலும் கூட உறிஞ்சு குழல் ஊசி மூலமே கூட எடுத்துக் கொள்ளலாம் என்றும் தானே அர்த்தம் ஆகிறது? உணர்வற்ற மயக்க நிலையில் உறிஞ்சு குழல் ஊசி மூலமும் கூட எடுக்கலாம் என்பது மறைமுகமாக எதைக் குறிக்கிறது? எச் செய்தியை சூசகமாக உணர்த்துகிறது? ஒரு வேளை இச்சிகிச்சை முறை துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் உலகின் எந்த ஒரு ஆணிடம் இருந்தும் அவனுக்குத் தெரியாமலே (அவனது மயக்க நிலையிலேயே கூட) விந்தணுக்களை திருடி எடுக்க முடியும் என்றும் தானே ஆகிறது.

உடைமை வர்க்கங்களில் அப்படி ஒரு விந்தணு திருட்டு நடைபெற்று அது ஒரு வாடகைத் தாய் எவர் மூலமாகவாவது ஒரு குழந்தையாகவும் உருப்பெறுமேயானால் அதன் சமூகவியல், சட்டவியல் விளைவுகள் எத்தன்மையதாய் இருக்கும்? இதுவே இப்போது எனது பிரதானக் கேள்வி. மட்டுமல்ல, சொத்துடமை வர்க்கங்களுக்கு மட்டும் தான் இதன் துஷ்பிரயோகம் ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பதல்ல. இதைத் துஷ்பிரயோகம் செய்யாமலே இச்சிகிச்சை முறை துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்ற போர்வையை மாட்டிக் கொண்டு பண பலம், அதிகார பலம் கொண்டவர்கள் சமுதாயத்தில் தங்களுக்குக்கு கீழுள்ள ஏழை, எளிய பெண்களை பாலியல் வன் கொடுமைகளுக்கும், சுரண்டலுக்கும் ஆளாக்கவும் ஆன வாய்ப்புகளை இன்னமும் அதிகரிக்கச் செய்கிறதே? உடைமை வர்க்கங்களின் உடைமைக்கு ஆபத்தேற்படுத்துகிற அதே வேளையில், மறுபுறம் ஒழுக்கம் (கற்பொழுக்கம் மட்டுமே தங்களின் ஒரே உடைமையாகக் கொண்டுள்ள) வேறு உடைமைகள் பெரிதாக ஏதுமில்லாதவர்களின் கற்பொழுக்கத்திற்கும் இது ஒரு ஆபத்தேற்படுத்தக் காத்துக் கொண்டுள்ளதே?

இருபுறமும் கூர்மையுள்ள கத்தி போல இது இரு வர்க்கத்தார்களுக்குமே (சமுதாயத்தின் மிக உயர்ந்த உடைமை வர்க்கங்களுக்கும் சரி, நடுத்தர, அடித்தட்டு வர்க்கங்களாகட்டும் சரி ஆக அனைத்து வர்க்கங்களுக்கும்) சேர்த்தே ஆபத்தேற்படுத்தக் காத்துக் கொண்டுள்ளது என்றால் அது எப்படி மிகையாக முடியும்?! வழக்கமான மரபணுச் சோதனை முறைகளும் இது விஷயத்தில் பயன்பட முடியாது திருடப்பட்ட விந்தணுக்களுக்குப் பிறந்தது என்பதாலேயே நவீன மரபணுச் சோதனை முறைகளும் (டி.என்.ஏ.டெஸ்ட்) அதன் உண்மைத் தகப்பனாரை (மரபு வழித் தந்தையை) அடையாளம் காட்டாமல் போய் விடாது. ஒரு குழந்தை யாருக்குப் பிறந்தது? என்பது பற்றியல்ல இங்கு பிரச்சினை. எம்முறையில் கருத்தரித்து பிறந்தது? (mode of fertilization happened by which method?) என்பது பற்றியே இங்கு பிரச்சினை.

இயற்கையான கலவி வழிக் கருத்தரிப்பிலா? அல்லது செயற்கையான ஆய்வுக் கூடச் சோதனைக்குழாய் (டெஸ்ட் டியூப் மெத்தடா?-test tube method-) கருத்தரிப்பு முறையிலா? எம்முறையில் கருத்தரிப்பு நிகழ்ந்தது? இக்கேள்விக்கு பதில் தெரியாது இது போன்ற பிரச்சினகளுக்கு வழக்கு மன்றங்களாலும் ஒரு தீர்வு காண இயலாது. இக்கேள்விக்குப் பதில் சொல்லத்தக்க ஒரு புதிய தடய அறிவியல் பரிசோதனையே இதற்குச் சரியான ஒரு தீர்ப்புக் கூற முடியும். அநேகமாக மனித குலத்திற்கே இப்படிப்பட்ட ஒரு தடய அறிவியல் பரிசோதனை முறையின் தேவையே கூட தற்போது தான் எழுந்திருக்கக் கூடுமோ என்னவோ?!.

ஆனால் இதற்கு முதலில் இந்நிகழ்வு இந்த உலகில் எங்கேனும் ஒரு இடத்தில் ஏதேனும் ஒரு நபருக்காவது நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். அந்த எதேனும் ஒரு நபரும் அற்ப சொற்ப ஆளாய் இருந்து விடக்கூடாது, முடியாது. ஒரு சக்தி வாய்ந்த செல்வாக்கான நபராயும் இருந்திட வேண்டும் சுருக்கமான வேறு நேரடி வார்த்தைகளிலேயே கூற வேண்டுமானால் ஒரு(பெரும்)உலகக் கோடீஸ்வரருக்கு, அல்லது உலகக்கோடீஸ்வரர்களில் எவருக்காவது ஒருத்தருக்காவது அல்லது உலகப் புகழ் மிக்க சக்தி வாய்ந்த ஒரே ஒரு வி.வி.ஐ.பி-க்காவது நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். (பின்னே சாதாரண குப்பன் சுப்பன்களுக்கு நிகழ்த்தப்பட்டு என்ன ஆகப் போகிறது?) அப்படி நிகழ்ந்தால் ஒழிய இக்சி எனப்படும் இந்த ஐ.சி.எஸ்.ஐ துஷ்பிரயோகத்துக்கான, தீர்வு பற்றியும் அறிவியல் உலகம் சிந்திக்காது.

சரி முதலில் அப்படியொரு நிகழ்வு இந்நேரத்திற்குள் ஏற்கனவேயே எங்காவது நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதா?, அத்தகைய கல்யாண குணங்கள் கொண்ட சுந்தர புருஷன்கள் இந்தக் கிரகத்தில் எங்காவது தென்படுகின்றனரா எனத் தேடிப் பார்த்தால் ஐயா, (ஒரு வேற்று கிரக வாசியின் சாதாரணத் தேடல் புலத்திலும் கூட எளிதில் தென்படக் கூடிய இரண்டு நபர்கள் தான் எனது கண்களுக்கும் புத்திக்கும் கூடப் பளிச்சென தென்படுகிறார்கள்.) அது அமெரிக்காவின் இரண்டு பில்கள் தான். ஆம் அது முன்னாள் அமொக்க ஐனாதிபதி பில் கிளிண்டனும், மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸூம் தான்.***1

***1 இறைச்சி வாடையால் ஈர்க்கப்பட்ட திருட்டு மோப்ப நாய் போல்தான் உள்ளது என் நிலை. எப்போது விரட்டப்படுவோமோ என்று தெரியாத திருட்டு மோப்ப நாய் கணக்காகத்தான், விஷய சாரத்தைப் பம்பிப் பதும்பிக் கொண்டுத்தான் வெளியிட வேண்டியுள்ளது. அடுத்தவர் அந்தரங்கம் என்பது (அதிலும் உலகின் சக்தி வாய்ந்த விஐபி பிரமுகர்களோடு சம்பந்தப்பட்ட அந்தரங்கம் என்பது) ஒரு திறந்தவெளி முற்றமா என்ன? மே ஐ கம் இன்? என்ற ஒற்றை வாக்கிய அனுமதி கூடயின்றி நுழைய? இது ஒரு அநாகரிகமான கட்டம், இடம் செயல்தான். ஆனாலும் எனக்கு வேறு வழியில்லை. மீண்டும் இங்கு வலியுறுத்திக் கொள்ள விரும்புகிறேன் நாகரிகம், அநாகரிகம் பார்க்க இயலாத சூழல் நிர்பந்தங்கள் மனிதர்களுக்கு வாழ்வில் எப்போதேனும் ஒரு முறையாவது நேருவது உண்டு. இப்போது எனக்கும் ஏற்பட்டுள்ள அப்படிப்பட்ட எனது இந்த சூழல் நிர்பந்தத்தைப் பொறுத்துக் கொண்டு மேற்கொண்டும் என்னைத் தொடர அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் மேலும் தொடர்கிறேன்.

ஐயா, முதலாமவர் (கிளிண்டன்) பகிரங்கமாகவே மோனிகாவுடனான செக்ஸ் புகார் வழக்கில் உலகமறியச் செய்தி ஊடகங்களில் ஒரு பரபரப்புச் செய்தியானார் என்றால் இரண்டாமவர் (கேட்ஸ்) பற்றி அப்படி ஏதும் (பாலியல்புகார் என) வழக்குகள் ஏதும் வராவிட்டாலும் அவர் மீதும் பெரும் வழக்குத் தொடுக்கப்பட்டது என்பதையும் கடைசியில் அது புஸ்வானமாய் என்னானது? என்பதையும் இந்த உலகம் ஏற்கனவே நன்கறியும், இரண்டு வழக்குகளுமே உலகைக் கலக்கி, உலுக்கிய வழக்குகள் தான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள (முதலில் கிளிண்டன் விஷயத்தை எடுத்துக் கொள்வோம்.) கிளிண்டன் மோனிகா சர்ச்சை வழக்கில், மோனிகா கிளிண்டனின் விந்தணுக் கறை படிந்த தடயத்தை வெறுமனே ஆடைகளில் (மட்டுமே) சுமப்பவராய் இல்லாமல் வயிற்றில் ஒரு குழந்தையாகவே ஒரு கருவாகவே சுமந்திருக்கலாமே?! அப்படிச் சுமந்திருப்பாரேயானால், அது இன்னமும் பல விதங்களில். (இமேஜ், குழந்தையைப் பராமரிக்க ஜீவனாம்சம் என்ற வகையில்) அவருக்குச் சாதகமான அனுகூலமான ஒரு விஷயமாய்த் தானே இருந்திருக்க முடியும்?!

ஆனால் அவர் அப்படியெல்லாம் கிளிண்டனின் விந்தணுக்களை ஒரு கருவாகவெல்லாம் வயிற்றில் சுமந்திருக்கவில்லையே ஏன்…? இது எங்கோ ஒரு சிறிது நெருடலை ஏற்படுத்தவில்லை…?
கிளிண்டனின் விந்தணுக்களை ஒரு குழந்தையாக சுமக்க அவரே (மோனிகாவே) விரும்பியிருந்தாலும் கூட அப்படி சுமக்க இயலாதபடிக்கு அவரைத் தடுத்து நிர்ப்பந்தப்படுத்திய காரணம் எதுவோ ஒன்று இருந்திருக்க கூடும் என்றே நினைக்கத் தூண்டுவதாயில்லை இது?

அது இருவரில் யாரேனும் ஒருவராவது கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டவராய் இருந்திருக்க வேண்டும் அல்லது யாரேனும் ஒருவர் சிறிதளவாவது மலட்டுத் தன்மை கொண்ட ஒரு நபராய் இருந்திருக்க வேண்டும் என்பதைத் தானே இது சுட்டுவதாய் உள்ளது? பார்வையாளர் கேலரியில் உள்ள நமக்கு இன்று, இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பின், அந்த வழக்கின் அமளி துமளி எல்லாம் அடங்கி ஒடுங்கிய நிலையில் இன்று இது நமக்கு எளிதாகப் புலப்படுவது போல் அன்று, சம்பவம் நடந்த அன்றைய (1993-2000) நாட்களில் (அன்றையப் பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல) முதலில் இக்ஸியைத் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தவர்களுக்கே இது அவ்வளவு எளிதாய் யூகிக்கத் தக்கதாய் இருந்திருக்காது.

என்ன சொல்ல வருகிறீர்கள்? சற்று, விளக்கமாக விபரமாக புரியும் படி கூறுங்கள் என்கிறீர்களா? ஐயா கிளிண்டன் மோனிகா வழக்கை செக்ஸ் கிரைம் என்ற ஒற்றைப் பரிமாணம் கொண்ட ஒரு வழக்காக மட்டுமேப் பார்க்காமல் இக்சியைத் துஷ்பிரயோகம் செய்ய முயற்சிக்கப்பட்ட ஒரு பிரத்தியோக வழக்காகவும் பார்த்தால் இப்பொழுது நமது காட்சியின் பரிமாணமே வேறு ஒரு தளத்திலும் கூடச் சேர்ந்தே அமையும் என்கிறேன். கிளிண்டனிடம் இக்சியைத் துஷ்பிரயோகம் செய்வதற்கான காரண முகாந்திரம் முதலில் என்ன என்று கேட்பீர்களானால் (அல்லது அப்படி என்ன பெரிதாய் ஒரு காரண முகாந்திரம் இருந்திருக்கப் போகிறது என்று நினைப்பீர்களானால்) வெரி சிம்புள், அவர் வகிக்கும் அந்த பதவி மகத்துவம் ஒன்றே கூடப் போதும் என்கிறேன். அதற்காக உடனே ஏதேனும் ஒரு அரசியல் ஆதாயம் கருதித்தான் இது நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசர முடிவுக்கும் வந்து விடத் தேவையில்லை. இது முதலாளித்துவத்தின் சொந்த உள்முரண்பாடு சம்பந்தப்பட்டப் பிரச்சனை என்கிறேன். அந்த முதலாளித்துவத்தின் சொந்த உள்முரண்பாட்டுப் பிரச்சனைக்கு கிளிண்டன் போன்றவர்களின் சொந்த தனி வாழ்க்கையும் கூட ஒரு பலி ஆடாகப் பலிபோடப்பட்டதோ என்னவோ? என்பது தான் நான் உங்கள் முன் வைக்கும் ஒரு அய்யப்பாடு.

முதலாம் பனிப்போர் 1992-களில் ரஷ்யச் சிதறலுடன் முடிவடைந்து விட்ட நிலையில், மத்தியக் கிழக்கில் சதாம் உசேன் போன்ற முரட்டு ஆட்சியாளர்களையும் அப்போதைக்கு ஒரு தட்டு, தட்டி வைத்து விட்ட நிலையில், வளரும் நாடுகளில் தனக்கு ஒத்து வருவார் எனத் திருப்தித் தோற்றம் அளிக்காத ராஜீவ் காந்தி போன்ற இந்தியத் தலைவர்களும் அரசியல் அரங்கத்திலிருந்தே அகற்றப்பட்டுவிட்ட ஒரு நிலையில், ரஷியக் கம்யூனிச எதிர்ப்பு என்ற ஒற்றை அஜெண்டாவை வைத்துக் கொண்டே இன்னும் எவ்வளவு நாள் தான் அரசியல் நிகழ்த்த முடியும்? புதியதாக ஏதும் விஷயம் தேவைப்படுகின்றதில்லையா? அந்த அது போன்ற ஒரு நிலையிலிருந்து இதைப் பார்வையிடுங்கள் என்கிறேன். (ஏதேனும் ஒரு அரசியல் ஆதாயம் அது உள்ளூரிலிருந்து கிடைத்தால் என்ன? வெளியிலிருந்து கிடைத்தால் என்ன?

“கலங்கியக் குட்டை வழங்கிய மீனைப்” போல அரசியல் சாணக்கியத்தனம் நிறைந்தவர்கள் நினைத்தால், இந்த இது போன்ற உள்ளூர் பிரச்சினைகளை வைத்து மட்டுமல்ல, எந்த எது போன்ற பிரச்சினைகளை வைத்துத் தான் இவர்கள் அரசியல் செய்யாமல் இருப்பார்கள்? எனுமளவுக்கு அரசியல் வாதிகள் மேல் பொது மக்களுக்கே சமயங்களில் ஒரு சலிப்பு, வெறுப்பு, விரக்தி கூடத் தோன்றி விடுவதில்லையா என்ன? ரஷ்யாவையே இன்னும் எவ்வளவு நாட்களுக்குத் தான் வைத்துக் கொண்டு ஓட்ட முடியும்? ஆக வெளியில் அது போன்ற பிரச்னைகள் கிடைக்காத நேரங்களில், “ஒரு இடைவேளை போல” உள்ளூர் பிரச்சனைகள் பக்கமும் அவ்வப்போது தமது பார்வையை திருப்புவதில்லையா என்ன (நமது அரசியல் வாதிகள்)?

தெற்காசியப் பிராந்தியத்தில், இந்தியா பாகிஸ்தான் ஆட்சித் தலைவர்கள் தங்களுக்குள் அறிக்கைப் போர், ஆயுதப் போர் நடத்தி, அது போராடித்து விட்ட நிலையில் அவ்வப்போது கொஞ்சம் உள்ளூர் பிரச்சனைகளையும் கவனிப்பதில்லையா? அது போல. மேலும் இக்ஸி துஸ்ப்ரயோகச் சிக்கல் போன்ற ஒரு சிக்கலான முயற்சியிலெல்லாம் ஒரு சர்வ தேச அரசியல் புகாமல் அது எப்படி அவ்வளவு எளிதில் ஒரு அறிவியல் தீர்வையும் எட்டி விட முடியும்? இக்ஸி துஸ்ப்ரயோக முயற்சியும் கூட அரசியல் ஆதாயம் அடையத் தக்க ஒரு விசயமாய் கூட ஒரு உருமாற்றம் பெறாதா என்ன? ஆக இதில் ஏதும் அரசியல் சூழ்ச்சிகள், ஆதாயம் உள்ளதா என்ன? என்பதற்குள் எல்லாம் ஆழமாகச் செல்வதற்கு முன் (மேலும் அது உங்கள் கோலத்தின் அரசியல் அது குறித்து நீங்கள் தான் ஆழமாகப் பேச வேண்டும் இரவல் மொழி பெயர்ப்பில் உங்களூர் அரசியல் நிலவரம் தெரிந்து கொள்ளும் என் போன்றவர்கள் அல்ல.) முதலில் கிளிண்டனின் விஷயத்தை இயன்றவரை நன்கு அலசி ஆராய்ந்து பார்ப்போம்.

கிளிண்டனிடம் இக்ஸித் துஷ்பிரயோகத் திட்டத்தை அமல்படுத்த எண்ணியவர்கள் எடுத்த எடுப்பில், முதலில் ஆரம்பத்திலேயே, ஏதோ குருட்டுப் பூனை இருட்டு விட்டத்தில் பாய்ந்த கதையாகக் குருட்டுத் தனமாகவெல்லாம் இதைத் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்திருக்க முடியாது. அவர்களின் உண்மையான நோக்கம் முதலில் (திட்டம்-அ) கிளிண்டனை திருமண பந்தத்துக்கு வெளியில் ஒரு கர்ப்ப கர்த்தா ஆக்குவதாய் தான் இருந்திருக்க முடியும். அதன் மூலம் கிளிண்டனை ஒரு அவமானச் சேற்றில் புரட்டிக் குளிப்பாட்டிப் பின், அதை வெளிப்படுத்தி விடுவோம் என மிரட்டுவது. வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றால் எங்களது நிபந்தனை ஓன்றுக்குக் கட்டுப்பட வேண்டும் என மிரட்டுவது. அம்மிரட்டலின் மூலம் ஏதேனும் ஒரு (அரசியல், பொருளாதார) ஆதாயத்தை அடைந்து கொள்வது, இது தான் அத் துஷ்பிரயோகத் தரப்பினரின் துஸ்ப்ரயோகத்துக்கான உண்மையான அடி ஆழ நோக்கமாய், காரணமாய் கூட இருந்திருக்க முடியும்.

இதற்குத் தோதான முதல் தேவையெல்லாம், முதலில் கிளிண்டனும் அப்படி அதற்கேற்றது போன்ற ஒரு சபலக் கேஸாய் இருந்து விட்டால் சரி! போதும். மற்றதை இக்ஸி பார்த்துக் கொள்ளும்! ஏற்கனவேயே அவரும் (கிளிண்டனும்) அப்படித் தான், அதற்கேற்றவராய், தோதானவராய்தான் இருந்துள்ளர். மோனிகாவிற்கு முன்னரே 1.ஜெனிஃபர் ஃப்ளோவர்ஸ், 2.கேத்லின் வில்லி, 3.பவுலா ஜோன்ஸ் எனப் பலரிடம் புகுந்து விளையாடியவர் தான். அதை (கிளிண்டனின் இந்தக் கடந்த காலக் கறுப்புப் பக்கங்களை) அவர்களும் முன்பே நன்கு தெரிந்து கொண்டே கூட இத்தகைய ஒரு திட்டத்துடன் அணுகியிருக்கலாம், (என்பது, அது கூட வேறு விஷயம்.)

பவுலா ஜோன்ஸ்

ஜெனிஃபர் ஃப்ளோவர்ஸ் கேத்லின் வில்லி,

ஆனால் அப்போதைய அவரின் கடந்த கால மன்மத விளையாட்டை இப்போதும் (அதாவது மோனிக்காவுடன் அவர் சர்ச்சையில் அடிபட்ட, அந்த சற்று வயதான, மத்திம வயதுக் காலக் கட்டங்களிலும்) அந்த 49 வயதினிலும், அமெரிக்க அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட பின்னரும் 1993-களிலும் கூடத் தொடர வேண்டும் என்பது ஒன்றும் கட்டாயமில்லையே. வயது ஆக ஆக இளமையில் ஆடியதைப் போலவே முதுமையின் நுழை வாயிலிலும் அதே ஆட்டத்தை, இளமைத் திமிருடன் போட்டு விட முடியுமா என்ன? மேலும் (இன்னமும் ஆட்டம் போடுமளவுக்கு உடற் தசைத் திமிர் இருந்தாலும் கூட) வயது, வகிக்கும் பதவியின் கண்ணியம் கருதிக் கூட அடக்கி வாசிக்கலாமல்லவா? ஆதலால் தான், அதற்குத் தான் இந்தத் திட்டம் (ஆ) (plan-B) அதாவது இக்சித் துஷ்பிரயோகம்.

ஆக இந்தத் திட்டம் (அ), அதாவது சபலப் புத்திக் கொண்ட கிளிண்டனைத் திருமண பந்தத்திற்கு வெளியில் ஒரு குழந்தைப் பேற்றுக்கு ஆளாக்குவது, அதற்கு அவரது சபல புத்தியையே தூண்டில் இரையாகப் பயன்படுத்துவது. அது பலிக்காத பட்சத்தில், தான் இருக்கவே இருக்கிறது திட்டம் (ஆ) இக்ஸித்துஸ்ப்ரயோகம்.

இந்த இரண்டு திட்டத்திற்குமேக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளாத, திருமண பந்தத்தில் இன்னமும் விழுந்து விடாத (அல்லது திட்டத்தை அமலாக்கும் அமலாக்க நேரத்தில் திருமண பந்தத்தில் இல்லாத) ஒரு இளம் பெண்ணைத் தேடிப் பிடித்து அமலாக்குவது அடுத்தது. இதற்கு பொருத்தமானவராகத் தான் மோனிகாவும் இருந்துள்ளதால், ஒரு வகையில் அதுவும் சரியான தேர்வு தான். ஆனாலும் திட்டம் (அ) (plan-A) திருமண உறவுக்கு வெளியே ஒரு கர்ப்ப கர்த்தா ஆக்குவது. மற்றும் திட்டம்-ஆ (plan-B). அதாவது இக்ஸித் துஷ்பிரயோகம். இந்த இரண்டுமே பலித்ததாகத் தெரியவில்லையே ஏன்? ஒவ்வான்றாகப் பார்ப்போம்.

முன்பே கூறியது போல திட்டம் (அ) அதாவது திருமண உறவுக்கு வெளியே ஒரு கர்ப்ப கர்த்தா ஆக்குவது பலிக்காததற்கு இருவரில் ஒருவர் அதாவது கிளிண்டன் ஏற்கனவேயேக் கருத்தடை அ.சி.செய்தவராய் அல்லது மலட்டுத்தன்மை உள்ளவராய் கூட இருந்திருக்கலாம். திட்டம் அ பலிக்காததால் இயல்பாகவே திட்டம் ஆ நோக்கித் திரும்பினாலும் அதுவும் அவ்வளவு எளிதாய் இருந்திருக்கவில்லை. மோனிகா வாயிலாக இக்சி- துஷ்பிரயோகத்தை கிளிண்டனிடம் பிரயோகிக்க வேண்டுமானால் அதற்கு முதலில் கிளிண்டன் ஏற்கனவேயே கருத்தடை அ.சி செய்து கொண்ட ஒரு நபர் தானா இல்லையா என்பதையும் அல்லது க.அ.சி. செய்து கொள்ளாத நபராய் இருந்தாலும் மலட்டுத் தனம் ஏதும் உள்ளவரா என்பதையும் ஊர்ஜிதம் செய்து கொண்டே ஆக வேண்டிய ஒரு கட்டாயம் உள்ளது. ஆக மோனிகாவின் வெள்ளை மாளிகைப் பிரவேசம் என்பதே கூட அப்படித் தெரிந்து கொள்வதற்காக, உண்மை நிலையை அறிய, அறிந்து ஊர்ஜிதம் செய்து கொள்வதற்காக நிகழ்த்தப்பட்ட ஒரு மறைமுக டிராமாவாகக் கூட இருக்க வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒரு டிராமாவை,

“உங்களுடன் ஒரு கலவி நிகழ்த்தி, அக்கலவியின் வழிப் பெறப்பட்ட உங்களது விந்தணுக்களின் வாயிலாய் ஒரு இயற்கையான கலவி வழி கருத்தரிப்பையும், அதன் வாயிலாய் ஒரு குழந்தையையும் பெற்றுக் கொள்ள விழைகிறேன் அதற்காக என்னோடு சில முறை அல்லது எவ்வளவு முறை உங்களால் முடியுமோ அவ்வளவு முறை என்னோடு கலவி புரியுங்கள் என்று ஸ்பஷ்டமான அப்பட்டமான ஒரு டயலாக்குடனா ஒரு பெண் ஆரம்பிக்க முடியும்?! அதுவும் எப்பேர்பட்ட ஒரு நபரிடம்? எப்பேர்பட்ட ஒரு விஷயத்திற்கு? அதற்கு இதை விட நீங்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டவரா? இல்லையா? என்றே, வெளிப்படையாகவே கேட்டுவிடலாம் வெளிப்படையான, நாசூக்கான இக் கேள்விகளின் வழியாகவே கேட்க இயலாது எனும் பட்சத்தில் இது விஷயத்தில் வேறு எப்படித்தான் வழி ஏற்படுத்திக்கொள்வது ?

ஐயா ஆண், பெண் உறவு, புணர்ச்சி என்பது வேறு, குழந்தைப் பேறு என்பது வேறு. ஆண், பெண் உறவு, புணர்ச்சி என்பது தனிப்பட்ட அந்த இரு நபர்களின் அந்தரங்க நடவடிக்கை. அதை சட்டத்துக்குட்பட்டோ சட்டத்துக்குட்படாமலோ (சட்டத்துக்கு புறம்பாகவே) கூட ஒருவர் அதை அந்தரங்கமாக, ரகசியமாகவே கூட (எதிர் தரப்பிலும் ஒரு ஒத்துழைப்பு இருக்கும் பட்சத்தில்) வைத்துக் கொள்ள முடியும். ஆனால் குழந்தைப்பேறு …? குழந்தைப்பேறு என வரும் போது அது இனிமேலும் அந்தரங்கத்தில் வைத்துக் கொள்ள முடியாத ஒரு சமூகவியல் நடவடிக்கையாக உருமாற்றம் பெற்று விடுகிறது.

புணர்ச்சி சட்டபூர்வமானதா இல்லையா என்பது மட்டும் அல்ல கேள்வி. பரஸ்பரச் சம்மதத்துடன், காதலுடன் நடந்ததா இல்லையா? (காதலுடன், நடந்ததா? அல்லது ஒரு கட்டாயத்துடன், வற்புறுத்தலுடன், ஒரு வன்புணர்ச்சியைப் போல் நடந்ததா?) என்ற எங்கல்சின் புகழ்ப்பெற்ற, “குடும்பம், தனிச்சொத்து, அரசு இவற்றின் தோற்றம்” (பார்க்க பக்-176) நூலின் புகழ் மிக்க கேள்வி ஒன்றை போலவே முக்கியத்துவம் பெற்றதாய் ஆகி விடுகிறது. ஒரு கருத்தரிப்பு நிகழ்வு நிகழ்ந்த நிகழ்வு முறை சட்டப்பூர்வமானதா இல்லையா? என்ற ஒரு புத்தம் புதிய கேள்வியையும் மனித குலம் இங்கே முதன் முதலாக எதிரிட நேரிடுகிறது.

கலவி இன்பத்திற்காகத் தனக்குப் பிடித்த ஒரு பெண்ணால் தானும் விரும்பப்டுகிறோம் என்பதை விட ஒரு பெரும் கிளர்ச்சியை இந்த உலகில் ஒரு ஆணுக்கு (ஒரு சராசரி மனநிலையில் உள்ள ஆணுக்கு) வேறு எது ஏற்படுத்தி விட முடியும்? ஜனாதிபதியே ஆனாலும் அதுவும் அமெரிக்க ஜனாதிபதியே ஆனாலும் அவரும் மனிதர் தானே? அவரும் உள்ளுக்குள் இரத்தமும் சதையும் கொண்ட சரீரத்தாலும் உணர்ச்சிகளாலும் தானே ஆளப்படுகிறார்? இதற்குள் முற்றும் துறந்து விட்ட மாமுனிவராய்***** ஆகிவிட்டாரா?….. என்ன?!

இந்த உலகில் கலவி நுகர்வுக்காய் மட்டுமே விரும்பப்படுகிறோமா அல்லது கலவியினூடே இணைந்தக் கருத்தரிப்பு நிகழவுக்கும்மாய் சேர்த்தே விரும்பப்படுகிறோமா என்பது எல்லாம் நீரடி பனிக்கட்டிப் போல அவ்வளவு எளிதிலே வெளிப்படையாய் தன்னை இனங்காட்டிக் கொள்வதில்லை. அது ஜனாதிபதியே ஆனாலும், “அதுவும் அமெரிக்க ஜனாதிபதியே ஆனாலும்”. கலவி ஈர்ப்பு “நீர் மேல் பனிக்கட்டியாய்” கண்சிமிட்டி அழைக்க, கருத்தரிப்பு அபாயம் “நீரடி பனிக்கட்டியாய்” காத்துக் கொண்டுள்ளது. ****(மரபணுப் பரிசோதனை முறைகள் என்றைக்குக் கண்டுபிடிக்கப்பட்டனவோ அன்றைக்கேக் கருத்தரிப்பு அபாயம் என்பது இனிமேலும் பெண்பாலுக்காக மட்டுமே உருவான ஒரு அபாயமாக அல்லாமல் இரு பாலுக்கும் சேர்த்தே பொதுவான ஒரு அபாயமாயும் உருமாறி விட்டது.) செயலும் நோக்கமும் எப்போதுமே ஒன்றாய் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாதே. நோக்கம் கருத்தரிப்புக்கான ஒன்றாய் இருக்க வெளியில் காட்டப்படுவதோ புணர்ச்சி விருப்பத்திற்கான ஒன்றாய் கூட உருத்திரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

ஒரு முறை வீழ்ந்தால் கூட போதும். ஒரே ஒரு முறை போதும் அந்த முதல் முயற்சியிலேயே கூட கண்டுப்பிடித்துவிடலாம், சம்பந்தப்பட்ட நபர் (நமது விஷயத்தில் கிளிண்டன்) உண்மையிலேயே கருத்தடை அ.சி செய்து கொண்ட ஒரு நபர் தானா? இல்லையா? என்பதையும் அவரது ஸ்பெர்ம் கவுண்ட் பற்றிய மதிப்பீட்டையும், அதன் மூலம், ஒரு இயற்கையான கலவி வழிக் கருத்தரிப்புக்கு அது போதுமான திறனைக் கொண்டுள்ளதா? என்பது பற்றியும் அவை காட்டிக் கொடுத்துவிடும்

அதாவது கலவி நடவடிக்கையை அவர் பாதுகாப்புடன் (கருத்தடை மாத்திரைகள், ஆணுறை பயன்பாட்டுடன்) மேற்கொள்கிறாரா? இல்லையா என்பதை கண்காணிப்பதன் மூலமேயே தெரிந்து கொள்ளலாம், இவர் கர்ப்ப நிகழ்வுகளுக்கு அஞ்சி இவற்றை பயன்படுத்கின்றாரா? அல்லது எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களுக்கு அஞ்சி அவற்றைப் பயன்படுத்துகிறாரா என.

கர்ப்ப நிகழ்வுகளுக்கு மட்டுமே அஞ்சுபவராய் இருக்கும் பட்சத்தில் கருத்தடை மாத்திரைகளே கூட போதுமானது, பரஸ்பரம் இருவருமே எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களுக்கஞ்சுபவராய் இருக்கும் பட்சத்தில் ஆணுறை மட்டுமே அவர்களது பாதுகாப்பை ஓரளவு உறுதி செய்ய முடியும். அதை பரஸ்பரம் இருவருமே அனுமதிப்பது போல் ஆமோதிப்பது போல் அதாவது அந்த சந்தேக பயத்தை மதிப்பது போலக் காட்டிக் கொண்டு அதை அப்படியே ஒரு பரிசோதனைச் சாம்பிளாகப் பயனபடுத்திக் கொள்ளவும் முடியும்.

ஒரு பெண் நினைத்தால் அதுவும் கலவி மயக்கத்தில் உள்ள ஒரு ஆணிடம் அந்த சந்தேக பயத்தை மதிப்பது போல நடித்து ஒரு ஆணுறைப் பயன்பாட்டுக்குத் தூண்டவும் முடியும் அல்லது அந்த சந்தேக பயமும் கூட அவசியம் அற்றது, எனவே ஆணுறை தேவையில்லை என ஒரு ஆணுறை அணிந்த கலவி முயற்சியை நாசுக்காக அகற்றி அப்புறப்படுத்திவிடவும் கூட முடியும்.

அப்படி ஆணுறை அப்புறப்படுத்தப்படாத ஒரு கலவி நடவடிக்கையில் அம் முதல் முயற்சியிலேயே தெரிந்து விடும் அவரது நிலை பற்றி. அவரது ஸ்பெர்ம் கவுண்ட்*** பற்றிய ஒரு தோராயமான மதிப்பீடே காட்டிக்கொடுத்துவிடும். மேலும் பக்காவான ஆய்வுக்கூட மதிப்பீடுகளின் மூலம் அதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் முடியும். அதற்குப் பின் மீண்டும் ஒரு கலவியைக் கூட நிகழ்த்தத் தேவை இல்லை. அதான் விஷயம், எந்த விஷயம், தகவல் தேவையோ அந்த விஷயம் தகவல் (அவர் இக்ஸி துஷபிரயோகத்திற்கான ஏற்ற ஒரு நபர் தானா இல்லையா? என்ற தகவல்.) நேரடியாகவே அவர் வாயால் பெறாமலேயே அவரது செயலின் மூலமேயே கூட ஒரு பதிலாய் பெற முடிந்து விட்டதே.

ஆனால் அப்படியெல்லாம் மேஜிக்காக எதுவும் நிகழவில்லை என்பதிலிருந்தே ஒன்று தெரிகிறது, இக்ஸி துஷ்பிரயோக முயற்சி என்ற பிரம்மாஸ்திரம் தனது இலக்கை எட்டாமலேயே பாலியல் புகார் என்ற மட்டத்துக்குள்ளேயே விழுமாறு கிளிண்டனின் பூர்வ ஜென்ம புண்ணியமோ அல்லது இந்த ஜென்ம புண்ணியமோ (எதுவோ ஒன்று) கருத்தடை அ.சி என்ற வடிவத்திலோ அல்லது மலட்டுத் தன்மை என்ற வடிவத்திலோ வந்து ஒரு வேளை அவரை இன்னும் அதிக அபாயங்களிலிருந்து (மிகப் பெரும் ஒரு தொகையை ஜீவனாம்சம், நஷட ஈடு என்ற வடிவத்தில் இழப்பதிலிருந்து,) காப்பாற்றிவிட்டதோ என்னவோ?! அப்படியும் அவர் இந்தப் பாலியல் புகார் வழக்குகளில் பண இழப்பீடு வழங்குவதிலிருந்து தப்ப முடியாது போனாலும், இன்னும் அதிக நஷ்டமடைவதிலிருந்து மேற்கூறிய காரணிகள் தான் அவரை அதிகம் காப்பாற்றியிருக்கக் கூடும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்ற பழமொழிக்கேற்ற மாதிரி.?

சரி இந்த அற்ப விஷயத்திற்காகவா இவ்வளவு (Risk) அசாதாரண முயற்சிகள் நடந்திருக்கும்? ஏரணப் பொருத்தம் ((Logic-தர்க்கப் பொருத்தம்) இடிக்கிறதே எனலாம். அவரது மருத்துவக் குறிப்புகள் பற்றிய ஆவணங்களைப் பெற எத்தனையோ வழிமுறைகள் இருக்க, அவரது எதிராளிகள் கேவலம் இந்த இது போன்ற ஒரு மட்டமான அல்ப்ப (அற்ப) வழிமுறையையா தேர்ந்தெடுத்திருப்பர்? கேள்விகள் எழுலாம். ஆனால் எனக்கென்னவோ அவரைப் பற்றிய வேறு எந்த ஒரு மருத்துவக் குறிப்புப் பற்றிய விவரத்தையும் கூட அவரிடமிருந்தோ, அல்லது அவர் சம்பந்தப்பட்ட நெருக்கமானவர்களிடம் இருந்தோ மறைமுகமாகக் கூட அல்ல நேரடியாகவே கூடக் கேட்டே கூடப் பெற்று விட முடியும்.

ஆனால் குறிப்பிட்ட இந்த இது போன்ற விவரங்களை எல்லாம் அப்படி அவ்வளவு எளிதில் சுலபமான ஒரு நேரடியான அணுகுமுறையின் மூலமே அணுகிப் பெருமளவுக்கு உகந்ததான ஒரு அணுகுமுறையாய், வழிமுறையாய் தோன்றியிருக்காது அவரது எதிராளிகளுக்கு. இதிலுள்ள (Risk) அபாயம் அப்படி. சந்தேகத்தின் நிழல் ஒரு சிறிதும் இச்சதித் திட்டத்தின் மீது நாளை வீழ்ந்துவிடக் கூடாது என நினைத்து அவரது எதிராளிகள் செயல்பட்டு இருக்கும் பட்சத்தில், அவர்கள் முன் தேர்ந்தெடுக்கச் சாத்தியமாய் இருந்த ஒரே ஒரு வாய்ப்பு, உகந்த வழிமுறை மோனிகா போன்ற ஒரு பெண்ணின் மூலம் (மோனிகாவின் கலவி நடவடிக்கையின் மூலம்) அவரைப் பற்றிய அவரது ஸ்பெர்ம் கவுண்ட் பற்றிய *** கருத்தடை அ.சி ஏதும் ஏற்கனவேயே செய்து கொண்டவரா என்பது பற்றிய இந்த இது போன்ற தகவல்களை ஒரு உளவு பார்ப்பதே? ரகசியக் களவு புரிவதே.

ஆனால் கருத்தடை அறுவை சிகிச்சையே மேற்கொண்டிருந்த போதிலும் ஒரு வேளை இவ் ஐ.சி.எஸ்.ஐ முறையில் முயன்றிருந்தால் அக்கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட அந்த ஆணின் குறைந்த அளவு விந்தணுக்களுக்கும் கூட (அதாவது போதுமான அளவு எண்ணிக்கை பலம் இல்லாமலேயே அதற்கு அவசியமில்லாமலேயே) ஒரு கருத்தரிப்பை நிகழ்த்த முடியும். அதற்கான ஒரு குறைந்த பட்ச வாய்ப்பாவது உள்ளது என்பதை எந்தவொரு ஐ.சி.எஸ்.ஐ. (இக்ஸி) ஸ்பெசலிஸ்டும் மறுக்க மாட்டார் என்றே நம்புகிறேன். இப்படியும் இயலும் என்ற பட்சத்தில் ஏன் இதை மோனிகா தரப்பு மேற்கொள்ளவில்லை? இனிக் கேள்வியை ஒரு மூடனும் கேட்கமாட்டான். விஷயம் (காரணம்) வெளிப்படை.

அப்படி மீறி ஒரு வேளை மோனிகா ஐ.சி.எஸ்.ஐ. முறையில் ஒரு குழந்தைக்கு முயன்றிருந்தால் நாளை பின்னால் ஒரு நாள் அதை கலவி வழிக் கருத்தரிப்பில் பிறந்த ஒரு குழந்தை தான் இது என்று நிரூபிக்க வேண்டிய ஒரு தேவையும் எழும். கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒரு ஆணால் ஒரு இயற்கையான கலவியை மேற்கொள்ள முடியுமே ஒழிய இயற்கையான ஒரு கலவி வழிக் கருத்தரிப்பை அல்ல. இந்த ஒரே ஒரு காரண விசேஷத்தால் தான் வழக்கும் ஒரு எல்லைக்கு மேல் அதாவது பாலியல் புகார் என்ற எல்லைக்கு மேல் தன் வரம்பை மீற முடியாது போனதோ என்னவோ?

****** பரிசோதனை வேட்கை என்ற பெயரில் (தான் பாலுணர்வை வென்றுவிட்டோமோ இல்லையா? என்ற தனது பாலியல் சோதனைக்கு(?) தனது கொள்ளுப் பேத்தி வயதிலிருந்த இளம் பெண்களோடு நிர்வாணமாகப் படுத்துறங்கிப் பரிசோதித்தக் காந்தியின் வயதைக் காட்டிலும் (77வயதிலும் இந்த சோதனையைக் காந்தியால் நிறுத்தி விட இயலவில்லை.) இது ஒன்றும் பெரிய வயதில்லை என்ற போதிலும், அமெரிக்கக் கோர்ட்டுகளின் குட்டிலிருந்தும், செய்தி ஊடகங்களின் விமர்சனக் கணைகளிலிருந்தும் கிளிண்டனால் முற்றிலும் தப்பி விட இயலவில்லை.

. அதனால் தான் நாடகத்தையே உங்களோடு கலவி புரிய எனக்கும் ஒரு விருப்பமுள்ளது தான். ஆனால்…..

(இந்த இடத்தில் என் மனக் கண்ணுக்குத் தெரிந்த ஒரு ஓரங்க நாடகக் காட்சியையே படிப்பவர் முன் வைத்துள்ளேன். தர்க்கப் பொருத்தபாடு உள்ளதா என்பதை படிப்பவர்களே தீர்மானம் செய்து கொள்ளட்டும்.)

என்ன ஆனால்…..

இன்று வேண்டாம். இன்னொரு நாள் பார்த்துக் கொள்வோம்.

இதைத் தான் கேட்டுக் கேட்டுச் சலித்துப் புளித்துப் போய் விட்டதே!

இங்க பார். உனக்கே ஏற்கனவேயே நன்கு தெரியும் நாம் பரஸ்பரம் திருமணமெல்லாம் செய்து கொள்ள இயலாது என்று. வேண்டுமானால் ப்ரியப்பட்டால் நமக்குள் ஏற்பட உள்ள இந்த தொடர்பை, பந்தத்தை திருமண உறவிற்கு வெளியே ஒரு அந்தரங்கப் பந்தமாக, தொடர்பாக வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். அதுவும் கூட ஒரு குறுகிய காலத்திற்குத் தான். இதுதான் இந்தச் சமூகம் நமக்களித்துள்ள அதிகபட்ச உச்ச வரம்பு. படித்த புத்திக் கூர்மையுள்ள பெண்ணான உனக்கு இதுவெல்லாம் நான் சொல்லித்தான் புரிய வேண்டுமென்பதில்லை. உனக்கே நன்கு புரியும்.

ஆனால் இதற்கு மேலும் நீ தயங்குவதைப் பார்த்தால்…….

ம்…..

அது எனது ஒழுக்கத்தின் மேல் உனக்குள்ள சந்தேகத்தைத் தான் சுட்டுவதாய் கருத இடமுள்ளது.

பெரிய மனிதர்! எத்தனையோ பல இடங்களில் தொடர்பு இருக்கக்கூடும். அந்த எத்தனையோ இடங்களின் எத்தனையோ தொடர்புகளில் நமக்கும் முன் எத்தனை பேரோ?***** ஆக அந்த எத்தனையோ தொடர்புகளில் எங்கோ ஒரு இடத்தில் சறுக்கியிருந்தாலும் கூடப் போதுமே. ஹெச்.ஐ.வி பல்கிப் பெருத்து அச்சுறுத்தும் இன்றைய நாட்களில் யாரை நம்புவது? யாரைத் தான் நம்பாமல் விலக்குவது? ஹெச்.ஐ.விக்குத் தெரியுமா இவர் அமெரிக்க ஜனாதிபதி என்றும் இவரின் மகத்துவம் எவ்வளவு என்றும்? ஹெச்.ஐ.வி அளவுக்குப் போக வேண்டாம். குறைந்த பட்சம் பால்வினை நோய்களாவது பீடித்திருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

அப்படி பால்வினை நோய்கள் ஏதும் பீடித்திருந்து தாற்காலிகமாக மருத்துவ சிகிச்சைகளினால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தால்…….? இவையெல்லாம் தானே உன் பயம் மோனிகா?

வெளிப்படையாய் வெகுளித்தனமாய் கேட்டு விடக் கூடிய ஒரு கேள்வியா இது? அதுவும் யாரிடம் எங்கே எப்பேர்பட்ட ஒரு மனிதரிடம்? என்ற தயக்க பயம் தானே (உனது மௌன இறுக்கத்திற்கான) காரணம்?

“ச்சீசீ” அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இன்று வேண்டாம் இன்னொரு நாள் பார்த்துக் கொள்வோமே?

ஏன் வீட்டுக்கு ஏதும் தூரமா? (மாத விலக்கைக் குறிப்பிடுகிறார்)

இல்லை இல்லை. ஆமாம். ஆமாம்

இப்போது அவரின் எரிச்சல் சற்று எல்லை மீறுகிறது.
“மோனிகா! என்னாயிற்று உனக்கு? ஏனிந்தக் குழப்பம், தடுமாற்றம்!? ஒருவேளை விருப்பமில்லையோ?! விருப்பமில்லையேல் சொல்லி விடு. வெளிப்படையாகவே!.. தனிமனித சுதந்திரத்தின் சாஸ்திரியக் களமான அமெரிக்காவில் வாழும் பெண் நீ. அரபு, ஆசிய அடிமைப் பெண்ணல்ல நீ. வெளிச் சொல்லக் கூட இயலாமல் வெந்து புழுங்க! இணங்கவில்லையேல் எங்கே அதிகாரத் துஷ்ப்பிரயோகத்திற்கு ஆளாக வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தின் பாற்பட்டு, ஒரு நிர்பந்தத்தின் பேரில் விருப்பமுள்ளதைப் போல் நடிக்க வேண்டிய அவசியமுமில்லை, தேவையுமில்லை.

இப்போது கிளிண்டன் யோசிக்கிறார் இல்லை, யோசிப்பது போல் ஒரு நடிப்பை வெளிப்படுத்துகிறார். சற்று நீண்ட ஒரு மௌன நடிப்புக் கிளிண்டனிமிருந்தும். சற்றுப் பெருமூச்சுடன ஆயாசப்பட்டுக் கொண்டே
ம்,….
வேண்டுமானால் உனக்காக ஒன்று செய்யலாம்.

எனது மருத்துவர் மூலம் ஹெச்.ஐ.வி, பால்வினை நோய்களுக்கான ப்ரூஃப் (மருத்துவச் சான்றிதழ் ஒன்றை)**** அளித்தால் ஒருவேளை உனது பயம் நீங்கக் கூடுமோ என்னவோ…..? என்ன…. இதனால் என் இமேஜ் தான் சற்றுக் குறையக் கூடும். குடும்பத்திலும் சிறிது குழப்பம் ஏற்படக் கூடக் கூடும்.…… அதனால் என்ன பரவாயில்லை உனது சந்தேகமும் நியாயமானது தானே

******மோனிகாவைப் பொறுத்த வரை என்ன தான் தெரிந்தே இந்த டிராமாவுக்காக வந்தாலும் நாளை ஹெச்.ஐ.வி, பால்வினை நோய்கள் என வந்தால் யார்பாதிப்பது? எவ்வளவு தான் பணம் கிடைக்கிறது என்றாலும் இந்த ஒரு ரிஸ்க் மட்டும் எடுக்க எல்லோராலும் இயலுமா? முடியுமா?. இது வெறும் ஒழுக்க மீறல் மட்டுமல்ல, சதித் திட்டம் மட்டுமல்ல, உயிர்பயம் (ஹெட்ச்.ஐ.வி, மற்றும் அதிகாரத் தரப்பு என இரண்டு தரப்பிலிருந்தும் உயிர் பயம்) ஏற்படுத்தும் ஆபத்தும் கூட. ஆக மோனிகா தரப்பின் பயமும் சரி, கிளிண்டனின் தன்னிலை விளக்கமும் சரி ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தர்க்கப் பொருத்தப்பாடே. (இப்படியொரு ஓரங்க நாடக ஒத்திகைகள் நிகழ்ந்திருக்கும் பட்சத்தில்…நிகழாமல் என்ன? கண்டிப்பாக இப்படி ஒரு நிகழ்வைக் கடந்து தான் மோனிகாவுடனான டேட்டிங்கே ஒரு முடிவுக்கு வந்திருக்கக் கூடும்.) மேலும் அதிக விபரங்கள் தேவைப் படுவோர் அணுகவும் விக்கிப் பீடியா மற்றும் இணையத்திலுள்ள இது சம்பந்தமாக கதைக்கும் ஏராளமான இணைய தள முகவரிகளை.)

ஐயோ மண்ணாங்கட்டி. பெண்களின் தர்ம சங்கடம் இந்த ஆண்களுக்கு என்று தான் புரியப் போகிறதோ?. இந்த ஆண்கள் உலகமே இப்படித் தான் போலும். அரசன் முதல் ஆண்டி வரை அது யாராக, எந்த நாட்டு ஆண்களாக இருந்தாலும் காலங்காலமாக இது தான் வழக்கம் போலுள்ளது. என் போன்ற இளம் பெண்ணொருத்தியின் அதுவும் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரிடமே நேரடியாக பணிபுரியும் என் போன்ற இளம் பெண்ணொருத்தியின் தர்ம சங்கடம் உலகையாலும் உங்களுக்கு எங்கே புரியப் போகிறது?

புரியவில்லையே மோனிகா உன் பூடகப் பேச்சு.

போடா வெண்ணெய் இதுகூடப் புரியாத உன்னை நம்பி ஓட்டுப் போட்டு இந்தத் தேசத்தையே ஏன் இந்த உலகையே உன் விரல் நுனியில் ஒப்படைத்துள்ள இந்த அமெரிக்க வாக்காளப் பெருங்குடி மக்களச் சொல்லனும். (சிரிக்கவும் இது மோனிகாவின் மைனட் வாய்ஸ்)

(ஒப்பன் வாய்ஸ்) ப்ளீஸ் புரிஞ்சுக்குங்க கைவசம் தற்போது ஏதும் கருத்தடை மாத்திரையோ, உறையோ கூட இல்லை. இன்னொரு சமயம் பார்த்துக் கொள்வோமே. வெளிப்படையாகக் கடைகளில் கேட்கக் கூச்சம். தானியங்கி இயந்திரமும் ஒன்று பிஸி அல்லது அக்கம் பக்கம் யாரேனும் உள்ள நிலை. மீடியாக்களின் கழுகுக் கண்கள் ஒரு புறம். அதையும் விஞ்சும் உங்கள் மனைவியின் கண்கள் வேறு இன்னொரு புறம். ஏற்கனவேயே அவருக்கு என் மீது ஒரு சந்தேகம் உண்டோ என்ற பயம் வேறு எனக்கெப்போதும் உண்டு.

உங்களுக்கென்ன? ஆண்கள் உலகமே வேறு. என் நிலை அப்படியா?

அடப் பூ! இவ்வளவு தானா? நான் கூட என்னவோ ஏதோ என்று பயந்தே போய் விட்டேன். இதற்குப் போய் ஒத்தி வைப்பானேன்!?. என்னைக் கேட்டால் கூற மாட்டேனா கண்ணே நானே நேரடியாய், அதற்கு அவசியமே…. இல்லை என்று?

கர்ப்ப நிகழ்வை எண்ணித் தானே நீ அஞ்சுகிறாய்;? தேவையே இல்லை அந்தப் பயம். நான் ஏற்கனவேயே கருத்தடை அ.சி செய்து கொண்டவன் தான். *****

ஜயோ போதும்! என்னைக் கொல்லாதீஙக, வாங்க உங்களை நம்புகிறேன். (நம்புகிறேன் நான் உன்னை பாடல் கிளிப்பிங்)

ஒரு நைச்சிய நாடகம் இப்படித் தான் அரங்கேற்றப்பட்டிருக்கும்.

***** இந்த இது போன்ற பதில்களை எதிர்பார்த்துத் தான், அந்த நாடகமே அரங்கேற்றம் செய்யப்பட்டிருக்கக் கூடும் என்பது அது வேறு விடயம். ஆனால் நாம் எதிர் பார்ப்பது போல் இதுமாதிரியான பதில்கள் அந்த நேரம் கிளின்டனிடம் இருந்து வந்திருக்குமா? என்றால் வந்திருக்காது என்பதே எனைப் பொறுத்தவரை எனது யூகம்.

ஏனெனில் ஏற்கனவேயே கிளின்டன் கருத்தடை அ.சி செய்திருக்க வாய்ப்புள்ளது என்ற போதிலும், அந்த வாய்ப்பை மங்க வைக்கும், மழுங்கடிக்கும் காரணிகளும் இல்லாமல் இல்லை.

இந்தக் கேள்விகளுக்கான பதிலை ஓரளவு ஹிலாரி, கிளிண்டன் தம்பதிகளின் நீண்ட மண வாழ்க்கையே, அம் மண வாழ்க்கையின் ஒரே அடையாளமான செல்சியா விக்டோரியாவே தனது பிறப்பின் வழியாகவே ஏற்கனவேயே ஒரு விடையாக அளித்து விட்டார் என்ற போதிலும் அவரே அதை தெள்ளத் தெளிவாகப் பார்க்க இயலாதவாறு பார்வையை மறைக்கும் மெல்லியக் குழப்பத் திரையாகவும் விளங்குகிறார். முதலில் கிளிண்டன் ஒரு மலட்டு ஆணல்ல என்பதற்கு செல்சியாவே ஒரு வாழும் அத்தாட்சி. (அப்படியே ஓரளவு மலடாக இருந்தாலும், இக்ஸி வழியாகத் தான் இன்னொரு குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் எனுமளவுக்கு மலட்டுத் தன்மையின் தீவிரம் மிக அதிகரித்த நிலையிலிருந்த ஒரு நபராய் கிளிண்டன் இருந்திருக்க முடியாது.

இரண்டாவது ஹிலாரி, கிளிண்டன் தம்பதியினருக்கு பிறந்த முதல் குழந்தையான செல்சியா முதலில் ஒரு பெண் குழந்தை. 1980-ல் பிறந்த செல்சியா விக்டோரியாவுக்குப் பின் (மோனிகாவின் பிரவேசம் வரை 1992 வரை) எந்த ஒருக் குழந்தைப் பேறும் குறிப்பாக எந்த ஒரு ஆண் குழந்தையும் கிடையாது என்பதுவே அது. செல்சியாவுக்குப் பதில் அந்த ஒரே ஒரு குழந்தை ஒரு ஆண் குழந்தையாய் பிறந்து வளர்ந்திருந்தால் கூட இந்நேரம் நமக்கு இத்தனை சந்தேகம் வந்திருக்காதோ என்னவோ? ஆனால் செல்சியா தான் நமது சந்தேகத் தீக்கு வசதியாய் ஏற்கனவேயே அவரே ஒரு பெண் குழந்தையாய் தான் பிறந்து விட்டாரே.

ஆசைக்கு ஒன்று. ஆஸ்திக்கு ஒன்று என்பர்கள் இங்கே இந்தியாவில். அதாவது பெண் குழந்தையை ஆசையின் குறியீடாகவும், ஆண் குழந்தையை ஆஸ்தியின் குறியீடாகவும் பார்ப்பது வழக்கமான ஒரு கீழை நாட்டுப் பழக்கம். ஏன், இது இந்தியா, சீனாவில் மட்டுமல்ல கடந்த 5000 ஆண்டுகளாகவே உலகமெங்கும், இந்தக் கிரகமெங்கும் வேர் விட்டுப் போன ஒரு சாஸ்திரியப் பாரம்பரியமான ஒரு சம்பிரதாயப் பழக்கம் தான். அதிலும் ஒரு ஆண் தனது ஆஸ்திக்கு வாரிசாய் ஒரே ஒரு ஆண் குழந்தையையாவது எதிர்பார்ப்பதென்பது இந்தக் கிரகமெங்கிலும் கடந்த 4,5 ஆயிரம் ஆண்டுகளாகவே நன்கு வேர் விட்டுப் போன, நிலை பெற்று விட்ட ஒரு ஆணாதிக்க, தந்தையுடைமைச் சமூக வழக்கம் தான்.

என்ன தான் முற்போக்கு, நாகரீகம், கல்வியறிவு என வெளியில் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் இந்த ஐயாயிரம் ஆண்டுப் பாரம்பரியச் சிந்தனையின், ஆசையின் ஒரு சிறு எச்சம் கூடவா கிளிண்டனிடமும் அவரது மனைவியிடமும் இல்லாது (போனது?) போயிருக்கும்? புழுத்துப் போன ஜனத்தொகையின் முன் சிறுத்துப் போன இயற்கை வளங்களாய்க் காட்சியளிக்கும் ஆசிய, ஆப்ரிக்க, ஐரோப்பியக் கண்டத்து வற்றிப் போன, (மேலும் மேலும் வற்றிப் போய்க் கொண்டுள்ள) கிழட்டு, மலட்டு இயற்கை வளமல்ல அமெரிக்காக் கொண்டிருப்பது. கிழடு தட்டாத கன்னிவளம் கொண்ட தேசம்.

உலக மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதத்திற்குமே குறைவாக இருந்தாலும் உலக வளங்களின் 80 சதவீதத்தை நுகர்ந்தனுபவிப்பதற்குச் சற்றும், ஒரு சிறிதும் வெட்கப்படாத, குற்றவுணர்வுக்கு ஆளாகத ஒரு போக பூமித் தேசத்தில் பிறந்தவர்கள். (இதற்காக வெட்கப்படவில்லை. வேதனைப்படவில்லை எனறாலும் பரவாயில்லை. பெருமிதத்துடன் அதை நியாயப்படுத்தவும் செய்பவர்கள். இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் இதையும் நியாயப்படுத்துவார்களோ! அது வேறு கதை. (இந்தியர்கள் வெட்கப் படவும் ஓராயிரம், ஒரு லட்சம் விஷயங்கள் உள்ளன என்பது அது வேறு விஷயம்.)

விற்கிற விலைவாசிக்கு அளவோடு ஒன்றிரண்டு பெற்றுக் கொண்டாலே அதை ஒழுங்காகக் கரையேற்றிக் கல்வி கொடுக்க முடியுமா அல்லது கள்ளிப்பால் தான் கொடுக்க முடியுமா? எனத் தயங்கிக் தயங்கிப் பெற்றுக் கொள்ள(ல்ல) அமெரிக்கா ஒன்றும் இந்திய தேசமுமல்ல. அரசதிகாரத்தின் நிர்பந்தத்தால் ஒன்றுக்கு மேல் பெற்றுக் கொள்ள வழியில்லாத முரட்டுக் கம்யூனிச சீன தேசமும் அல்ல. வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள, போக்கிடமேயில்லாத ஒரு ஆப்பிரிக்க அடிமைக் கண்டமும் அல்ல.

யோக பூமி என்ற பெயரால் தன் சோகத்தை அல்லது இயலாமையை மறைக்கின்ற ஒரு தேசமல்ல. போக பூமி எனப்படுகின்ற ஒரு போக தேசம். அதை ஓரளவு வெளிப்படையாய் ஒத்துக் கொள்ளவும் செய்கிற தேசமும் கூட.

அப்படிப்பட்ட ஒரு தேசத்தில் இப்படியொரு தம்பதிகள் என்பது எங்கோ சற்று நெருடவில்லை.? அதுவும் அமெரிக்காவுக்கே முதன்மைக் குடிமகன் என்ற அந்தஸ்த்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஒருவருக்கு இப்படிப் பட்ட ஒரு ஆசை, “ஆண் குழந்தையும் ஒன்று இருந்தால் தான் என்ன? என்ன மோசம் போய்விடப் போகிறது?” என்ற ஆசை அதுவரை ஒரு முறை கூடவா அவர்கள் வாழ்வில் வந்திருக்காது? அப்படிப்பட்டதொரு ஆசை ஒரு முறையேனும் அவர்கள் வாழ்வில் வந்தே தீர்ந்திருக்க வேண்டும் என்பது அப்படி ஒன்றும் கட்டாயமில்லை என்ற போதிலும், அப்படி எண்ணுவது ஒரு வாதத்திற்காகவாவது அப்படி எண்ணுவது என்பது தவறாகாது என்றே எண்ணுகிறேன். அப்படி ஒரு எண்ணமே அவர்களுக்கு வந்திருக்கவே வந்திருக்காது, வந்திருக்க ஒரு சிறு துளியும் வாய்ப்பும் இல்லை என அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் கூட எப்படி வெளிப்படையாக ஒரு 100 சதவீத கேரண்டியுடன் கூறி விட முடியாதோ அப்படித் தான் வந்திருந்தாலும் அதைப் போக்கிக் கொள்வதற்கு எந்த ஒரு குறைந்தபட்ச நடவடிக்கையையும் கூட அதுகாறும் அந்த நிமிடம் வரை அவர்கள் எடுத்திருக்கக் கூட மாட்டார்கள் என நம்புவதும்.

இயல்பாகவே இன்னொரு குழந்தை இல்லையா?. அல்லது தம்பதிகள் இருவரும் மனம் ஒத்து விரும்பியே, அதுவும் பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை “ஒன்றே ஒன்றுடன் போதும்” என தடுப்பு முறைகள் மூலம் வாசக்டமி அல்லது ட்யூபெக்டமி அல்லது காப்பர்-டி என இப்படி ஏதேனும் ஒரு கருத்தடை முறையை செய்து கொண்டனரா? அல்லது மருத்துவத் தகுதியின்மையாலோ, பொருளாதாரக் காரணங்களினாலோ இன்னொரு குழந்தைக்கு முயற்சிக்கவில்லையா? எதனால், முதலில் அப்புகழ்மிகு தம்பதிகள் ஒரே ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொண்டார்கள்? எதனால் அவர்கள் இரண்டாம் குழந்தையாய் இன்னொரு குழந்தையைப் (அது ஆணாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.) பெற்றுக் கொள்ளவில்லை.? இதற்கான உண்மையான காரணம் தான் என்ன?

நமக்கு வேண்டுமானால் அவர்கள் எதனால் இரண்டாம் குழந்தையாய் இன்னொரு குழந்தையை (அது ஆணோ பெண்ணோ) பெற்றுக் கொள்ளவில்லை என்பதற்கான காரணம், நமக்கு வேண்டுமானால், நமக்குத் தேவையில்லாத ஒன்றாய், அல்லது அது எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். நமக்கெதற்கு அந்த வேண்டாத வேலை? ஆராய்ச்சி? என இருந்து விட்டுப் போகலாம்.

ஆனால் இக்சியைத் துஷ்பிரயோகம் செய்வதற்கு எந்த இளிச்சவாய் வி.ஐ.பி-யாவது கிடைக்க மாட்டார்களா என வாய் பிளந்து காத்துக் கொண்டுள்ள ஒரு சர்வ தேச சதிகாரக் கும்பலுக்கு…..? இது போன்றதொரு சதித் திட்டத்தை “அரங்கேற்றலாமா? வேண்டாமா? அரங்கேற்றலாம் என்றால் அதற்கான ஏற்ற, உகந்த, நபர் இவர் தானா அல்லது வேறு யாரேனுமா? உகந்த வேளை, அந்த உகந்த வேளை என்பதுவும் இதுதானா அல்லது வேறு ஏதாவது ஒரு சமயமா?” என்றெல்லாம் ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டுள்ள துஷ்பிரயோகிப்பாளர்களுக்கு…..? இவை எல்லாம் உடனடியாக விடை காணப்பட வேண்டிய டிரில்லியன் டாலர் கேள்விப் பட்டியலில்லையா?.

அரசியலிலும், பொது வாழ்க்கையிலும் வெற்றிகரமாக நடை போட்டுக் கொண்டு வந்த அந்தப் புகழ் மிகு தம்பதிகளுக்கு, ஒன்றுக்கு மேல் பெற்றுக் கொண்டால் அது இருவருக்குமே தங்களது வளமான எதிர்காலக் கனவுகளை அடைவதற்கு அது ஒரு பெருத்த சுமையாய், தடையாய் கூடத் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது. அவர்களது கோணத்திலிருந்து இதைப் பார்த்தால், அது ஏற்புடைய ஒரு தர்க்கப் பொருத்தப்பாடு கொண்டதாகவும் உள்ளது. ஆக இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்வதற்கான மருத்துவப், பொருளாதாரத் தகுதியும், திறனும் இருந்தும் கூட, தங்கள் இலட்சிய வாழ்க்கைக்கு அது ஒரு கூடுதல் சுமை எனக் கருதிப் பெற்றுக் கொள்ளாமல் இருந்தார்களா? அல்லது உண்மையிலேயே இருவருக்குமேவோ அல்லது இருவரில் யாரேனும் ஒருவருக்கோ மருத்துவத் தகுதியின்மை இருந்து (அதாவது மலட்டுத் தன்மை இருந்து) அதன் காரணமாக பெற்றுக் கொள்ளவில்லையா?

அல்லது மாடி வீட்டு ஏழை என்பார்களே அது போல் வெளியிலுள்ளவர் களுக்கு வேண்டுமானால் அமெரிக்கா பெரிய பணக்கார நாடாயிருக்கலாம். ஆனால் அமெரிக்காவிலேயே பிறந்து வாழ்ந்து அதிபர் கனவு கண்டு கொண்டிருந்த அந்தப் புகழ்மிக்கத் தம்பதிகளுக்கு அவர்களின் சொந்த அளவு கோலின் படி மனதளவில் இன்னொரு குழந்தைக்கான தங்களுடைய பொருளாதார அந்தஸ்து அதாவது “இப்போதைய இந்தப் பொருளாதார் அந்தஸ்து போதாது, பின்னால் பொருளாதாரம் இன்னமும் பலப்பட்ட பின், தேவையானால் “ஒருவேளை, அப்போது பார்த்துக் கொள்ளலாம்” என நினைத்துத் தற்காலிகமாகத் தள்ளிப் போட்டிருந்தனரா?

கிளிண்டன் மேல் அவரது அரசியல் வாழ்க்கையில், பாலியல் குற்றச்சாற்று மட்டுமல்ல, ஊழல் குற்றச் சாற்றும் இருந்து எப்படியோ அதிலிருந்து மீண்டு வந்தவர் தான் என்பதையும் இங்கு ஒரு சிறிது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு வேளை அப்படி மலட்டுத் தன்மை காரணமாகத் தான் இரண்டாவது குழந்தைக்கு வாய்ப்பில்லை என்றால் இப்போது தெளிவாகவே இன்னொரு கேள்வி எழுகிறது.

1.அந்த மலட்டு நபர் யார்? கிளிண்டனா? ஹிலாரியா? துஷ்பிரயோகிப்பாளர்களைப் பொறுத்தவரையிலான அந்த ஹு ஈஸ் த ப்ளாக் ஷீப் அது யார்? யார்? கிளிண்டனா? ஹிலாரியா?
அடுத்து அம் மலட்டுத் தன்மையின் வீரிய சதவீதம் என்ன?
3. அது (அந்த மலட்டுத் தன்மையின் வீரிய சதவீதம்) அப்போது வழக்கத்திலிருந்த சாதாரண, இக்ஸி அல்லாத வேறு சாதாரண, அல்லது சிறப்பு சிகிச்சை முறைகளினாலேயே நிவர்த்திக்கக் கூடியது தானா?
4. நிவர்த்திக்கக் கூடியதெனில் அப்படி நிவாரணத்திற்காக ஏதும் சிறப்பு சிகிச்சை முறைகள் எதையும் மேற்கொண்டிருந்தனரா?
5 குறை ஹிலாரி பக்கமிருந்தால் இறுதித் தேர்வாக சோதனைக் குழாய் குழந்தை பக்கம் அவர்கள் கவனம் திரும்பியிருக்கவும் வாய்ப்புள்ளது.
6. குறை கிளிண்டன் தரப்பில் இருந்திருந்தாலோ கட்டாயம் அவர்கள் வரக் கூடிய இறுதி (டெர்மினல்) சிகிச்சை முறை இக்சி-யாக இருந்திருக்கத் தான் அதிக பட்ச வாய்ப்புள்ளது.
7. அப்படி கிளிண்டன் தரப்புக் குறை என்றால் ஸ்பெர்ம் கவுண்ட் ரிசல்ட் வெறும் சிங்கிள் டிஜிட்டில் இருந்தால் கூடப் பரவாயில்லை. அப்படிப் பட்ட ஒரு மலட்டு ஆணையும் கூடத் தகப்பனாக்கியேத் தீர்வது என்றதொரு தீர்மானத்துடன், கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒரு மருத்துவத் துறைப் பிரகடனமாகவே அப்போது வந்திருந்த இந்த இக்சி சிகிச்சை முறை போன்ற அதி நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் பற்றி எல்லாம் அப்போதேனும் (அவர் அமெரிக்காவுக்கு அதிபரான அந்த 1993-ம் ஆண்டுகளிலாவது இக்சி சிகிச்சை முறை பற்றிய மருத்துவ உலகின் அதிகாரப்பூர்வப் பிரகடனத்திற்குப் பிறகேனும்) ஏதேனும் பராபரியாகவாவது, அது பற்றிய விழிப்புணர்வுத் தகவல்களையாவதுப் பெற்றிருந்தனரா ஹிலாரி, கிளிண்டன் தம்பதிகள்?

என்ற இப்படிப்பட்ட அடுக்கடுக்கான கேள்விகள் முளைத்தெழுந்திருக்கும் இல்லையா? ட்ரில்லியன் டாலர் நெருடல் கேள்விகளல்லவா இவை?

கிளிண்டன் தான் என்றில்லை. துஷ்பிரயோக இலக்கு இவர் தான், இன்னார் தான், என இலக்கு நிணயம் செய்யப்பட்டுவிட்ட எந்த ஒரு இலக்கு நபர் சம்பந்தமாகவும் இது போன்ற தகவல்கள் எல்லாம் இல்லாமல் களத்தில் இறங்குவது என்பது சுத்த வடிகட்டிய முட்டாள் தனங்களுள் ஒன்றாய் தான் இருக்க முடியும். நேரடியான அல்ல, சற்று மறைமுகமான வழிகளெல்லாம்; கூட இந்த விஷயத்தில் நாம் நினைப்பது போல் அவ்வளவு உகந்ததாய் இருக்காது, உதவாது. மறைமுக வழிமுறைகளின் மிக ஆழமானதொரு மட்டத்திலிருந்து கொண்டு செயற்படுத்தினால் ஒழிய மாட்டிக் கொள்வது நிச்சயம் எனுமளவுக்குக் கடினமானதொரு காரியம்.

என்னதான் துஷ்பிரயோகத்திற்கான தீர்வு என இப்போதைக்கு ஏதொன்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை என்ற போதும், வருங்காலத்தில் கண்டுபிடிக்கப்படுவதற்கான சாத்தியங்களையும் வாய்ப்புகளையும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அந்த வருங்காலம் என்பது நீண்ட நெடுங்காலங்களாய், தலைமுறைகள் சில பல தாண்டிய ஒன்றாய் இருந்து விட்டால் சரி. ஒருவேளை வழக்கு நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே சதிகாரர்களின் ஆயட்காலத்திற்குள்ளேயே அறிவியல் உலகத்தின் தீர்வும் கிட்டி விட்டால்….? ஒரே ஆறுதல் என்ன என்றால் உடனடியாக அப்போதே மாட்டிக் கொள்வதற்கான சாத்தியங்களும் வாய்ப்புகளும் அப்போதைக்குக் கிடையாது. இதையும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

சிறிது எழுதப் படிக்கவும், தினந்தோறும் மாறிவரும் நாட்டு நடப்புகளை, உலகச் சமுதாய நடப்புகளைச், செய்தி ஊடகங்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அக்கறையும் உள்ள இந்தக் கிரகத்தின் எவர் ஒருவருக்கும் புலப்படக் கூடிய ஒரு அப்பட்டமான அம்மண உண்மை தான் மேற் கூறிய அனைத்துச் சாத்தியங்களும். நமது நாகரீக உலகின் சட்ட அமைப்பு, நடைமுறைகளில் உள்ள “ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்க நேர்ந்தாலும் ஒரு நிரபராதித் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது” என்ற இந்த இது போன்ற ஓட்டைகள் வழியாகத் தப்பிக்க நேர்ந்தால் உண்டு. இல்லையெனில் தப்பிக்க அல்ல, தண்டிக்கப்பட தான் அதிகம் வாய்ப்புண்டு.

குற்ற முகாந்திரங்களை சரி வர நிரூபிக்க முடியாத வழக்குகளில் எப்படி நீதி மன்றம் சந்தேகத்தின் பலனை ஒரு குற்றவாளிக்குச் சாதகமாகத் திருப்பித் தீர்ப்பளிக்கிறதோ அப்படித் தான் இந்த இது போன்ற வழக்குளிலும். இருக்கின்ற, கிட்டுகின்ற மொத்த வாய்ப்புமே 50 சதவீதம் தான். அதாவது இந்தச் சிக்கலுக்கான ஒரு தீர்வு ஏற்கனவேயேக் கண்டுபிடிக்கப்பட்டு, நிகழ் நிலையில் கைவசம் தயாராய் இருந்தால் ஆயிற்று. இல்லையேல் அதுவரை துஸ்ப்ரயோகத் தரப்பினருக்கும் சரி எதிர் தரப்பினருக்கும் சரி, சம பங்கு தான். (தான் நிரபராதி என வாதிடுவதற்கும், தனது தரப்பை நியாப்படுத்திக் கொள்ளவும் ஆன அந்த வாய்ப்பு சதவீதம் இருதரப்புக்குமே சரி பாதியாக 50:50 கிட்டுகிறது.

ஆக 50:50 வழக்கான இந்த இது போன்ற வழக்குகளில் எல்லாம் துஷ்பிரயோகிப்பாளர்கள் குழு எவ்வளவு கவனத்துடன் திட்டமிட வேண்டியிருக்கும் என்பது பற்றி எல்லாம் மேலும் மேலும் ஆழமாக விவரிக்கத் தேவையில்லை. ஏற்கனவேயே அது உள்ளங்கை நெல்லிக் கனி. வழக்கு என வரும் போது எப்படிப்பட்டக் கடுமையான, கூர்மையான, துல்லியமான (ஒருவேளை அறிவியல் உலகம் அதற்குள் இதற்கொரு தீர்வைக் கண்டுபிடித்துவிட நேர்ந்தால்….. சொல்லவே வேண்டியதில்லை.) புலன் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை எல்லாம் துஷ்பிரயோகிப்பாளர்கள் குழுவும் நன்குணர்ந்தே செயல்பட்டிருப்பர்.

ஆக சந்தேகத்தின் நிழல் நாளை ஒரு சிறிதும் துஷ்பிரயோகிப்பாளர்கள் தரப்பின் மீது விழுந்து விடக் கூடாது எனக் கவனக் கூர்மையுடன் இத் துஷ்பிரயோகத்தை அரங்கேற்றம் செய்திருப்பார்களேயானால், எனக்குத் தெரிந்து, எனைப் பொறுத்த வரை, எனது சிற்றறிவுக்கெட்டியவரை அத்தகைய துஷ்பிரயோகிப்பாளர்கள் முன் (துஷ்பிரயோகத்தைச் செயல்படுத்துவதற்கு முந்தைய கணம் வரை) தேர்ந்தெடுக்கச் சாத்தியமாயிருந்த, ஒரே வழி “மோனிகாவின் அந்தரங்கப் பிரவேசம்” போன்ற ஒரு திட்டமே. (அதாவது இக்சித் துஷ்பிரயோகத்துக்கானத் தீர்வு இன்னமும் அந்த நிமிடம் வரை அதாவது துஷ்பிரயோகத்தைச் செயல்படுத்துவதற்கு முந்தைய அந்தக் கடைசிக் கணம் வரை கண்டுபிடிக்கப் பட்டிருக்கவில்லை எனும் பட்சத்திலேயே.)

அது ஏன் இப்படித் துஸ்ப்ரயோகத்திற்குக் கடைசிக் கணம், வினாடி வரை என வினாடி சுத்தமாய் குறிப்பிடுகிறேன் என்பதற்கும், தகுந்த காரணங்கள் இல்லாமல் இல்லை. முன்பொரு சமயம், இதே அமெரிக்கத் திரு நாட்டில் அதிபர் நிக்ஸன் காலத்தில் எழுந்த வாட்டர் கேட் (ஊழல்) பிரச்சனை பற்றி இந்த உலகம் ஏற்கனவேயே நன்கு

அதிபர் நிக்ஸன்

அறியும், எதிர்க் கட்சிகளின் தொலை பேசியை ஒட்டுக் கேட்பதற்காக நிக்சன் தனது பதவி அதிகாரத்தைத் தவறாக, துஸ்ப்ரயோகம் செய்தார் என்பதன் அடிப்படையில் எழுந்தக் குற்றச் சாட்டு அது. அது கடைசியில் அவரது பதவியையே பலிவாங்கியது. அந்தப் பிரச்சனை எழுந்த காலகட்டங்களில், அது நீதி மன்றத்தின் பார்வைக்கும் சென்று விட்ட நிலையில், நீதி விசாரணையின் போது ஒட்டுக் கேட்பதற்குப் பயன்படுத்திய ஒலி நாடாக்களை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி நிக்சனுக்கு உத்தரவிட, நிக்சனோ அந்த ஒலிநாடாக்களில் உள்ள பதிவுகளை (ரொம்பப் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வதாய் எண்ணி) அழித்து விட்டு பின்னர் நீதி மன்றத்தில் ஒப்படைப்பார்.

ஆனால் அழிக்கப்பட்ட ஒலி நாடக்களிலிருந்தும் அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீட்டெடுப்பதற்கான ஒரு தொழில் நுட்பம் மூலம் அந்த ஒலிப்பதிவுகளை மீட்டெடுத்ததன் மூலம் நிக்சனின் குட்டு உடைந்து நீதி மன்றத்தில் அம்பலமானதன் மூலம், இறுதியில் தனது அதிபர் பதவியையே இழந்தார். அழிக்கப் பட்ட ஒலி நாடாக்களிலிருந்தும் கூட அழிக்கப் பட்ட ஒலிப்பதிவுகளை மீட்டெடுக்க முடியும், அதற்கான ஒரு தொழிநுட்பம் உள்ளது என்ற விஷயம் இறுதி வரை நீதி மன்றத்தில் நிரூபிக்கப்படுவதற்கு இறுதிக் கணம் முன்பு வரை நிக்சனுக்குத் தெரிந்திருக்கவில்லை. பின்னர் நமது கிளிண்டனும் இதே அமெரிக்க நீதிமன்றத்தில் மோனிகா விஷயத்தில் பொய் சொன்ன குற்றத்திற்காக நீதி மன்றத்தில் வெட்கித் தலை குனிய நேர்ந்தது அடுத்த வரலாறு. இதை எல்லாம் எதற்கு இங்கே இவ்வளவு வலிந்து கூற விரும்புகிறேன் என்பது இந்நேரம் சொல்லாமலே புரிய நேர்ந்திருக்கும்.

எந்த ஒரு குற்றத்தையும் தடயச் சுவடின்றி செய்து முடிக்க முடியுமென்றால் தான் மனித மனம் அதில் துணிந்து ஈடுபடும். அல்லது இதை அம்பலப்படுத்த எந்த ஒரு தடய அறிவியல் பரிசோதனை முறைகளும் இன்னமும், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதாய் தெரியவில்லை எனும் பட்சத்திலும் ஒரு (குற்றவியல்) பரிசோதனை முயற்சியாய் அதைச் செய்து பார்க்கத் துணிந்து விடும், ஆண்டி முதல் அரசன் வரை இது தான் பொது விதி. எங்களூரில் (நம்மூரில்) எழுத்தாளர் சுஜாதா என்பவர் தான் அவரது ஒரு குறுநாவலில் (என நினைவு,) ஒரு கதாப் பாத்திரத்தைக் குறிப்பிடுவார். கதைத் தலைப்பு, “எதையும் ஒரு முறை” அரசியல் செல்வாக்குள்ள ஒரு பெரிய பணக்காரன், துல்லியமாகத் திட்டமிட்டு சட்டத்தின் பிடியில் மாட்டாமல் ஒரு கொலையைச் செய்ய முடியுமா என ஒரு ஆர்வப் பரிசோதனை முயற்சி காரணமாக ஒரு கொலையையே செய்து விடுவான். கொலையையும் செய்து விட்டு, திட்டமிட்ட படி, சட்டத்தின் கண்களிலும் மிளகாய் பொடித் தூவி தப்பித்து விடுவார்,

பின் அதை நாசூக்காய் கதை நாயகர்களான துப்பறிவாளர்களும் வழக்கறிஞர்களுமான கணேஷ் வசந்த் என்ற கதாபாத்திரங்களுக்கும் அந்தக் கொலையைக் கண்டுபிடித்து உணரும் படிக்கும் செய்து விட்டு, எங்கே முடிந்தால் என்னை சட்டத்தின் முன் நிறுத்துப் பார்க்கலாம்…? என அந்தக் கோடீஸ்வரக் கதாப் பாத்திரம் ஒரு சவால் விடாமல் விடும்? சாதாரண எளிய வழக்கறிஞர்களான அவ்விருக் கதாபாத்திரங்களையும் அதில் ஒரு இண்டலெக்ச்சுவல் சவாலுக்கு உசுப்பி சதுரங்க ஆட்டம் போல ஒரு நிஜ ஆட்டத்துக்கு அந்தப் பணக்காரக் கதாப் பாத்திரம் ஒரு தூண்டலை, சவாலை ஏற்படுத்தும். ஆனால் கடைசியில் கதை நாயகர்(வழக்கறிஞர் கணேஷ் அந்த சவாலை ஏற்க மறுத்து அந்த பணக்காரனைத் தப்ப வைத்து விடுவார்.

அவருடைய உதவியாளர் (வசந்த் கதாப்பாத்திரம்,) “பாஸ், என்ன பாஸ்? என்ன தான் பணக்காரானா இருந்தாலும் இவ்வளவு தெனாவெட்டாக ஒரு கொலையையேச் செய்து விட்டு அசால்ட்டாக அதை வெளியிலே தம்பட்டம் அடிப்பதைப் போல வழக்கறிஞர்களான நம்மிடமே அதை அதை அசால்ட்டாக வெளிப்படுத்தி, தெனாவெட்டு காட்டுகிறான் என்றால் அதை, அப்படியேச் சும்மா விட்டு விட்டுப் போவதா? என உணர்ச்சி வசப்பட்டுக் கோபத்தில் கொந்தளிப்பார், அதற்கு சுஜாதாவின் கணேஷ் கதாப்பாத்திரம், விடு வசந்த், இப்படிப் பட்ட சைக்கோப் பணக்காரனுக்கெல்லாம் ஆர்வத் தூண்டுதல் என்ற ஒன்று ஏற்பட்டு விட்டால் மரணத்தைக் கூட விட்டு வைக்க மாட்டார்கள். மரணம் என்றால் என்ன என்பதை அறிய விரும்பினால் இத்தகையவர்களால் அந்த மரணமே கூட இயல்பாக வரும் வரை, அது வரை கூடப் பொறுமையாய்க் காத்திருக்க முடியாது.

எத்தனை கோடிப் பணம் இருந்தாலும் அத்தனைக் கோடிப் பணத்தைக்காட்டிலும் இத்தகையவர்களிடம் உள்ள ஆர்வ உணர்ச்சியின் முன் அத்தனை கோடிப் பணமும் அவர்களுக்கு ஒரு துச்சமாய்த் தான் தெரியும். அத்தகைய ஒரு ஆர்வ உணர்ச்சிப் பீறிட்டு விட்டால் இத்தகைய மனம் கொண்டவர்களால் ஒரு வினாடியும் மரணத்திற்காகவும் கூடக் காத்திருக்க இயலாது. “எதையும் ஒரு முறை” செய்து பார்த்து விட வேண்டும் என உயிர்க் கொலையைத் தேர்ந்தெடுத்த இந்த மனம் கடைசியில் அதன் அல்டிமேட் நிலையாக தன்னுடைய சொந்த மரணம் என்றால் என்ன என அறிந்து கொள்ள ஆர்வப்பட்டு விட்டால் அதையும் கூட விட்டு வைக்காது,

எதற்காகவும் பொறுமையாக காத்திருக்கவும் விரும்பாத இந்த இது போன்ற பணக்கார சைக்கோ மனங்கள், தமது இயல்பான மரணத்திற்கும் கூட அது வருகிற போது வரட்டும், இப்போது ஆக வேண்டியதைப் பார்ப்போம் எனப் பொறுமையுடன் ஒரு இயல்பு மரணத்திற்காகக் கூடக் காத்துக் கொண்டிருக்காது, தனது மரணத்தைத் தேடி தானே சென்று கொள்ளும். அதை நாம் செய்யத் தேவையில்லை என்பதாகக் கதையை முடிப்பார். வார்த்தை, வாக்கியங்கள் இதுவே இல்லையென்றாலும் அந்தக் கதையின் அடிநாதம் மைய இழை இது தான்.

நான் இந்தக் கதையை பற்றி இங்கு நினைவு கூர்வதற்கு காரணம், மனிதனின் குற்றவியல் மனோபாவம் பற்றிய ஒரு புரிதலுக்கே. கூட்டு முயற்சியாய் செய்யப்பட வேண்டிய ஒரு குற்றவியல் நிகழ்வுக்கு, அதிலும் சம்பந்தப்பட்ட அந்தத் துறை சார்ந்த வல்லுனர்களே அதற்கொரு ஊக்கமும் ஒத்துழைப்பும் கொடுக்கிறார்கள் என்றால் குற்றத் தரப்பு இன்னமும் ஊக்கம் கொள்ள நேரிடும். இக்ஸி-ஐத் துஸ்ப்ரயோகம் செய்ய ஒரு இக்ஸி ஸ்பெசலிஸ்டே நேரடியாகக் களம் இறங்க வேண்டும் என்ற அவசியம் கூடக் கிடையாது, நன்கு பயிற்சி பெற்ற ஒரு செவிலியரே (ஆண் செவிலியரோ பெண் செவிலியரோ) கூடப் போதும்.

இன்னமும் கேட்கப் போனால் செவிலியரேக் கூட நேரடியாக இதில் களமிறங்க வேண்டும் என்பதில்லை. இதற்கெனவே நன்கு பயற்சி பெற்ற சிறிது புத்திக் கூர்மையுள்ள எவர் ஒருவரும் இதைச் செய்ய முடியும் என்பது போல் தான் தெரிகிறது. இன்ஸெப்சன்**** என்ற ஆங்கிலத் திரைப்படத்தை இந்த இடத்தில் சற்றே சற்று நினைவுக்குக் கொண்டு வர முடிந்தாலே கூடப் போதும். இந்தப் பின்புலங்களோடு இக்ஸித் துஸ்ப்ரயோக முயற்சியை நாம் அணுகினால், அப்போது கேட்டுக் கொள்ள நேரிடும் நமக்குள்ளாகவே நாம் “ஆமாம் இல்லே” என. (****** குளோனிங் முதல், ரோபோ, வேற்றுக் கிரக ஜீவராசிகள் வரை, மனித எண்ணங்களைக், கனவுகளை எல்லாம் திருடுவது போல, எந்த எந்தக் கருத்துக்களையோ மையமாய் வைத்து படம் எடுக்கும் அமெரிக்க ஹாலிவுட்டும் கூட இந்த ஒரு கருத்தோட்டத்தை வைத்து மட்டும் தப்பித் தவறியும் இது வரையிலும் ஒரே ஒரு படம் கூட எடுக்காததும் உண்மையிலேயே ஒரு பெரும் நெருடலான விஷயம் இல்லையா?. அது ஏதோ தற்செயலானதா? அல்லது இதற்குப் பின் உண்மையிலேயே இக்ஸித் துஸ்ப்ரயோகச் சிக்கல் ஏதும் உள்ளதா என்பதும் சற்று ஆய்வுக்கு உரியதே.

ஆக இன்னொரு குழந்தை ஆசை ஏதும் இருந்து, ஆனால் அதை நிறை வேற்றிக் கொள்வதற்கான உடல் தகுதியின்மை யாரேனும் ஒருவருக்காவதோ அல்லது இரண்டு பேருக்குமாகவே (சேர்ந்தே) இருந்திருந்திருந்தது என்றாலோ கூட, கண்டிப்பாகக் கட்டாயம் அதற்குரிய சிகிச்சை முறையை நோக்கி அந்நேரம் நகர்ந்திருப்பர். அப்படி நகர்ந்திருக்கும் பட்சத்தில் குறை ஹிலாரியிடமிருந்தால் சோதனைச் சாலை வழிக் குழந்தை முயற்சியை நோக்கியோ, (அதான் 1978 லேயே சோதனைச் சாலைக் குழந்தை வசதி வந்து விட்டதே.) அல்லது குறை கிளிண்டனிடம் இருந்திருந்தால் இந்நேரத்திற்கு அட்லீஸ்ட் அவர் அமெரிக்காவிற்கு அதிபரான 1993-க்குப் பிறகாவது, (அவர் அமெரிக்க அதிபர் பதவியில் அமர்வதற்கு சற்றுச் சில மாதங்களுக்கு முன் தான் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இக்சி சிகிச்சை முறை பற்றிய அறிவியல் உலகின் அதிகாரப்பூர்வ பிரகடனத்திற்குப் பிறகாவது) இக்சி சிகிச்சை முறை நோக்கிய ஒரு சிறு நகர்வையோயாவது மேற் கொண்டிருக்கக் கூடும். அல்லது கடைசிக்கும் கடைசியாக இக்சி பற்றி ஏதோ பராபரியாகத் தெரிந்து வைத்திருக்கவாவது கூடும், அதற்கான சாத்தியப்பாடும் ஒரு அற்ப அளவுக்கேனும் உள்ளது.

அப்படிப் பராபரியாகவேனும் அது பற்றித் தெரிந்து வைத்திருக்கச் சாத்தியமுள்ள ஒரு நபரிடம், அதுவும் எப்படிப்பட்ட ஒரு நபரிடம்? எப்படிப்பட்ட ஒரு நாட்டில்? (அவர் வெறும் அமெரிக்கா என்ற ஒரு நாட்டுக்கு மட்டும் அதிபரல்ல, உலகிலேயே சக்தி வாய்ந்த ஒரு நாட்டின் அதிபரும் கூட.) அப்படிப்பட்டவரிடம் போய், அவரைப் பற்றிய அவரது அந்தரங்கத் தகவல்கள் பற்றிய முழு விபரங்களும் தெரியும் முன்னரே இக்சியைத் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தல் என்பது “முன்யோசனையை முற்றும் துறந்தவன் கூடச் செய்யத் துணிய முடியாத, அல்லது “செய்யத் துணியக் கூடாத ஒரு செயல்”. “தூங்குகிறவன் தொடையிலே கயிறு திரிப்பது” என இங்கே நாட்டுப் புறத்தில் கூறுவார்களே ஒரு பழமொழி, அப்படிக் கிட்டத் தட்ட அதை ஒத்த ஒரு செயல், வேலை இது. யாரிடத்தில்….. எங்கே……எப்பேர்பட்ட மனிதரிடத்தில்? என்ற இடம், பொருள், காலம், ஏவல் பார்க்கத் தக்க ஒரு செயல்.

அட யாராய் இருந்தால் தான் என்ன? எங்கே எப்படிப்பட்ட மனிதராய் இருந்தால் தான் என்ன? இதை நிறைவேற்றியே தீர்வேன் என்ன விலை கொடுத்தாவது எனுமளவுக்கு ஒரு துணிச்சல் உள்ள மனிதனும் கூட ஒரு முறை ஒரே ஒரு முறையாவது அவனும் சற்று யோசித்துப் பார்க்க மாட்டானா? எதற்கு வம்பு? கூடிய மட்டும் நைச்சியமான வழிகளிலேயே முயற்சித்துப் பார்ப்போம், அதற்கும் மேல் ஒன்றும் வேலைக்காகவில்லை என்றால் அப்புறம்…. அப்புறம் யோசிப்போம் அப்படிப்பட்ட ஒரு விளிம்பு நிலை முயற்சி நோக்கி என, “பாதுகாப்பான ஒரு வழி முறை பற்றித் தான், பாதுகாப்பான முறையில் நமக்கு வேண்டிய தகவல்களைப் பெறுவது எப்படி?” என்று தான் எவரும் யோசித்திருப்பரே ஒழிய “அப்பட்டமான, திறந்தவெளி, வெளிப்படை முயற்சிகளையல்ல”.

இதற்குமே கூட இலக்கு மனிதர் உண்மையிலேயே தூங்கிக் கொண்டு இருந்தால் ஆயிற்று. தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்தால்….? நடிக்கக் கூட வேண்டாம். (நடிப்பு என்பது கூட எப்போது வரும்? சந்தேகம் வரும்போது, அப்படி ஒரு சந்தேகம் ஏற்கனவேயே தோன்றியிருந்து, அதன்படி முன்கூட்டியே ஒரு எதிர்பார்ப்பும் இருந்து, கையும் களவுமாகப் பிடிக்க வேண்டும் என்ற காத்திருப்புத் திட்டமும் இருந்தால் தானே? ஆக அந்தக் கோணத்திற்கு இப்போது நாம் போகவே வேண்டாம்.) ஒருவேளை வெறுமனே தூக்கம் வராதவன் கண்களை மூடியபடியே படுக்கையில் புரண்டு புரண்டு படுப்பதைப் போல தூங்கிக் கொண்டிருந்தால்?…… இலக்கு மனிதரின் உறக்கம் உண்மைத் தூக்கமா? அல்லது போலி வறட்டு உறக்கமின்மையா? என்பதை யெல்லாம் எப்படித் தான் .தெரிந்து கொள்வது?

கணக்கிலடங்காது யூக வேட்டையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டே செல்லலாம் தான். ஆனால் எப்படி ஊர்ஜிதப்படுத்திக் கொள்வது? (படிக்கும் உங்களுக்கும் அது போராடித்து விடும்.) இந்த அனைத்துக் கேள்விகளுக்கும் யூகங்களுக்கும் பதில் சொல்லத் தக்க, அதே நேரம் இந்த விஷயம் இலக்கு மனிதரும் சற்றும் உணரமுடியாத வண்ணம், தன்னையுமறியாமல், அவரிடமிருந்தே, அவர் வாயைக் கொண்டே வரவழைப்பதைப் போன்றோ, அல்லது அவரது செயல் ஒன்றின் வாயிலாகவே பதிலாகப் பெறத்தக்க வகையிலோ அமைந்த ஒரு அரூப சூழ்ச்சிப் பொறி ஒன்றை முதலில் ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அரூப சூழ்ச்சிப் பொறியொன்றில் முதலில் அவர் சிக்குகிறாரா அல்லது தவிர்த்து ஒதுங்கிக் கொள்கிறாரா எனச் சோதிப்பதன் மூலம் தான் அனைத்தையும் உறுதிப் படுத்திக் கொள்ள முடியும்.

மனிதர் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் நரசிம்மராவ் டைப் கல்லுளி மங்கராயிருந்து, சிரிக்கக் கூட எதற்கும் ஒருமுறைக்கு லட்சம் முறை யோசித்து தான் சிரிப்பார் போலும், எனுமளவுக்கு ஒரு கல்லுளி மங்கராய் இருந்து விட்டால்…? (ம்ஹும்…. நரசிம்மராவ் எங்கே சிரித்திருக்கிறார். வாழ்க்கையில் மனிதர் ஒருமுறையேனும் சிரித்திருப்பாரா? “சிரிப்பு என ஒரு விஷயத்தை இயற்கை படைத்திருப்பதை வாழ்வில் ஒருமுறையேனும் உணர்ந்திருப்பாரா? என ஒட்டு மொத்த இந்தியச் செய்தி ஊடகங்களுக்கே வந்த ஒரு சந்தேகம்” போன்று அந்தளவுக்கு ஒரு கல்லுளி மங்கராய் இல்லாது போனாலும் முக்கியமான தருணங்களில் “நரசிம்மராவ் ரக கல்லுளி மங்க மௌனம்” கடைபிடித்து விட்டால்…..?

ஆக இப்படி உதடுகளுக்குக் கூடக் கடிவாளம் இட்டுவிடக் கூடும். ஆனால் உள்ளத்து உணர்ச்சிகளுக்கு….? அதிலும் இயற்கையின் படைப்பிலேயே வலிமையானதொரு உணர்ச்சிக்கு…..? அவ்வளவு எளிதில் கடிவாளம் இட்டுவிட முடியுமா என்ன?

*****இதோ மிக சமீப உதாரணம். ஓபாமா. மீண்டும் அதே அமெரிக்காவிலேயே, அதிபர் வரிசையிலேயே. ஏதோ ஒரு இந்திய வம்சாவளிப் பெண்ணிடம் வழிந்து விட்டு (நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் எனும் தொனியில் எதோ கூறி விட்டு) அப்புறம் ஊடகங்களில் நல்லாச் சரியா, செமத்தியா வாங்கிக் கட்டிக்கொண்டு விடுவோம் என்பது போல் தோன்றியதும் மன்னிப்புக் கூடக் கேட்க வில்லையா? கண்களுக்கு அடுத்து உதடு தானே உள்ளத்து உணர்ச்சிகளின் ஒரு நேரடி வாசல்? அந்த உதடுகளையே, உதட்டு உச்சரிப்பிலிருந்து வரும் வார்த்தைகளையேக் கட்டுப்படுத்தத் தெரியாதவர்கள் எங்கே உள்ளத்து உணர்ச்சிகளை கட்டுப்படுத்தப் போகிறார்கள்?

அனைத்தும் நெருடலான கேள்வி பதில்கள். நமக்கு நெருடுகிறதோ இல்லையோ. மோனிகாவின் பின்னணியிலிருந்தவர்களுக்குக் கட்டாயம் நெருடியிருக்க வேண்டும். தம்பதிகளின் தனிப்பட்ட மருத்துவத் தகவல்களை மோப்பம் பிடிப்பது, திருடுவது, கையூட்டு உதவியுடன் பெற முயற்சிப்பது இத்யாதி இத்யாதி என்பது போன்ற இன்ன பிற வழக்கமான பாரம்பரிய முயற்சி முறைகள் எல்லாம் அவ்வளவு உகந்ததாய் பட்டிருக்காது துஷ்பிரயோகிப்பாளர்களுக்கு. காரணம் மேற்கண்ட அத்தனை வழக்கமான பாரம்பரிய வழிகளிலும், வழிமுறைகளிலும் நிழல் அளவாவது திட்டம், அதாவது இச்சதித் திட்டம் கசிய ஒரு வாய்ப்புள்ளது.

ஆக சந்தேகத்தின் நிழல் நாளை ஒரு சிறிதும், அற்ப அளவு, புறக்கணிக்கத் தக்கது என்ற அளவுக்குக் கூடத் துஷ்பிரயோகிப்பாளர்கள் தரப்பின் மீது விழுந்து விடக் கூடாது எனக் கவனக் கூர்மையுடன் இத் துஷ்பிரயோகத் திட்டத்தை அரங்கேற்றம் செய்திருப்பார்களேயானால், இங்கே மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எனக்குத் தெரிந்து, எனைப் பொறுத்த வரை, எனது சிற்றறிவுக்கெட்டியவரை அத்தகைய சதிகாரர்கள் முன் தேர்ந்தெடுக்கச் சாத்தியமாயிருந்த, இன்னமும் இனிமேலும் (அதாவது துஷ்பிரயோகத்தைச் செயற்படுத்தக் காத்திருந்த அந்த நிமிடம் வரை) சாத்தியமாயிருந்த ஒரே வழி “மோனிகாவின் அந்தரங்கப் பிரவேசம் போன்ற ஒரு திட்டமே”. (அதாவது இக்சித் துஷ்பிரயோகத்துக்கானத் தீர்வு இன்னமும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கவில்லை எனும்பட்சத்தில், அதாவது சதியை நிகழ்த்தத் துடித்துக் காத்துக் கொண்டிருக்கும் அந்தக் கடைசி நிமிடம் வரை தீர்வென ஏதும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கவில்லை எனும் பட்சத்திலேயே.)

ஒரே ஒருவருக்குத் தெரியும் வரை தான் ரகசியம். இரண்டாவதாக ஒரு நபருக்குத் தெரிந்து விட்டாலே அதற்குப் பெயர் ரகசியம் கிடையாது என்பர். இந்த அடிப்படையில் பார்த்தால் எந்த ஒரு சதித்திட்டத்தின் வெற்றியும் அல்லது அதன் தோல்வியும் அதன் கூட்டுப் பங்காளிகள் எத்தனை பேர் என்பதைப் பொறுத்து தான் அதன் வெற்றி சதவீதமும், அல்லது தோல்வி சதவீதமும். ஆக இரண்டாவது மனிதர் என ஒருவரை சேர்த்துக் கொள்ளாத வரை எந்த ஒரு ரகசியமும் ரகசியமே. 100 சதவீதப் பத்திரத் தன்மையுடையது தான். ஆனால் இரண்டாவது நபர் என ஒரே ஒரு நபரைச் சேர்த்தாலே போதும் அப்போதே அந்தக் கணமே அதன் ரகசியத் தன்மை என்பதும் அதன் காரணமாகவே போய்விடுகிறது. அதன் வெற்றி தோல்விச் சாத்தியம் என்பதுவும் கேள்விக்குரியதாகி விடுகிறது.

அதாவது ஒரு ரகசியத் தன்மையின் பத்திரத் தன்மை என்பது, அதைப் பற்றித் தெரிந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர்? என்பதைப் பொறுத்தது. நிகழ்தகவு அடிப்படையில் கூற வேண்டுமானால், ஒரு நாணயம் சுண்டுதலில் உள்ள பூவா தலையா? நிகழ் தகவு போலத் தான். 2 பேர் என்றால் அதன் நிகழ் தகவு மதிப்பு, வெறும் 0.5 மட்டுமே. அதாவது ஒரு ரகசியம் காப்பாற்றப்படுவதன் நிகழ்தகவு மதிப்பு என்பதெல்லாம் ஒரு 50:50 சாத்தியம் மட்டுமே. ஆனால் அதுவே ரகசியம் பற்றித் தெரிந்தவர்கள் எண்ணிக்கை, ஒரு ஏறுவரிசையில் தொடர்ந்து அதிகரிக்க, அதிகரிக்க, அதன் பத்திரத் தன்மை என்பது, தொடர்ந்து முறையே இறங்கு விகிதத்தில் சரிகிறது. கணிதவியல் அடிப்படையில், முற்றிலும் 100 சதவீத வாய்ப்புள்ள நிகழ்தகவுகளுக்கு மட்டுமே ஒரு மதிப்பெண் வழங்கப்படும். மற்ற படி இந்த இது போன்ற கூட்டுச் சதி பற்றிய சாத்தியமான நிகழ்வு தகவு மதிப்பெல்லாம், சதியில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கை பலத்தைப் பொறுத்து, அதன் பின்ன மதிப்பு, 0.50-ல் தொடங்கி தொடர்ந்து தேய்ந்து, சரிந்து கொண்டே போய் அதன் மதிப்பு அற்பத்திலும் அற்பமாக தேய ஆரம்பித்து விடும். நிகழ் தாகவுச் சாத்தியம் பற்றிய பகுதியில் பார்த்த அத்தனை விசயங்களும், இந்த ரகசியம் காக்கும் பண்புக்கும் பொருந்தும். விரிவான விளக்கத்திற்கு தனியே பக்- ..க்குச் செல்லவும்.

ஆக ஒரு கூட்டுச் சதி என வரும் போது முடிந்த வரை அந்தச் சதி அரங்கேற்றத்துக்கு அவசியமான அவர்களின் நேரடிப் பங்களிப்பு இல்லையென்றால் அச்சதியரங்கேற்றத்தையே கூட அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன் நகர்த்திச் செல்ல முடியாது எனுமளவுக்குத் தேவைப்பட்ட, இன்றியமையாத மனிதர்களையன்றி, மற்றவர்களைச் சேர்த்துக் கொள்வதென்பது அதன் வெற்றிச் சாத்தியங்களைக் குறைக்கக் கூடிய ஒரு விஷயமே. எத்தனை தான் நம்பிக்கைக்குரியவர்களாய் காட்சியளித்த போதிலும் ஒரு சிறு கருத்து வேறுபாடு போதும், மொத்த ரகசியமும் சிதற. “கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது” என்பர். ஆகக் கூட்டணியைக் குறைக்கத் தான் முடிந்தளவு முயன்றிருப்பரே தவிர, அதற்குப் பதிலாக கூட்டணியை விஸ்தீரித்துக் கொண்டே செல்வதற்கு இது என்ன நேரடி அரசியல், இராணுவ நடவடிக்கையா என்ன? (இதிலும் நுண்அரசியல் இல்லாமல் இருந்திருக்காது என்ற போதிலும்,)

அந்த நேரடி நுண் அரசியல் தலையீடும் கூடத் தேர்ந்தெடுக்கச் சாத்தியமாயிருந்த ஒரே வழியும், இறுதிக் கடைசி வழியும் கூட, “இந்த இது போன்ற மோனிகா டைப் நாடகத்தை அரங்கேற்றுவது” மட்டுமே. சாதாரண பாமரன் முதல் படித்த பண்டிதன் வரை, ஒற்றாடலின் சாஸ்திரிய இலக்கணம் தெரிந்தவர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்பவர்கள் வரை தேர்ந்தெடுக்கச் சாத்தியமானதும், எளிதானதுமான வழி கூடுமானவரை மனித அடிப்படைப் பலகீனங்களை பயன்படுத்திக் கொள்வது என்ற இந்த இது போன்ற வழிமுறைகள் மட்டுமே.

*****(கிட்டத்தட்ட பவுலா ஜோன்ஸுடனான வழக்குக்கு மட்டும் அவருக்கும் அவரது வழக்கறிஞருக்குமாகச் சேர்த்து நஷ்ட ஈடாக சற்றேறக் குறைய 9,40,00 டாலர் அபராம் கட்டியிருக்கிறார். பவுலா ஜோன்ஸுடனான தனது உறவைக் கடைசி வரைக் கிளிண்டன் மறுத்த வந்த போதும், பவுலா ஜோன்ஸின் வழக்குக் கீழ் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டிருந்த போதிலும், மீண்டும் பவுலா தரப்பு ஒரு அப்பீல் மனுவை ஜுலை 31 1998-ல் யு.எஸ்.கோர்ட் ஆஃப் அப்பீலின் 8-வது சுற்றுக்கு தாக்கல் செய்கிறது. இந்த நேரம் பார்த்து மோனிகாவின் வழக்கில் கிளிண்டனுக்கு எதிரான இம்ப்பீச்மென்ட்டில் (பொய்யான வாக்கு மூலம் தந்ததற்காக) அபராதம் கட்ட வேண்டி தீர்ப்பு வருகிறது. இதனால் இந்தத் தீர்ப்பின் விளைவாக கடைசியில் பவுலா ஜோன்ஸ் வழக்கும் எங்கே அதுவும் தனக்கு எதிராக முடிந்து விடுமோ என்ற பயத்தில் கோர்ட்டுக்கு வெளியே ஒரு செட்டில்மெண்ட் ஏற்பாடு செய்து வழக்கை முடித்துக் கொள்கிறார்.

மேலும், என்னதான் கருத்தடை அறுவை சிகிச்சையின் போது ஒரு ஆணின் விந்தணு குழாய்கள் (செமினல் வெசல்ஸ்) துண்டிக்கப்பட்டு முடிச்சிடப்பட்டாலும் அம் முடிச்சுகளையும் மீறி ஊடுருவிக் கொண்டு கொஞ்சம் விந்தணுக்கள் விந்தணு திரவத்தில் (ஒரு கசிவு போலும்) கலக்காமல் இருப்பதில்லை. கலக்கவே செய்கின்றன, என்ன ஆனால்?! பொதுவாகவே அவை இயற்கையானதொரு கருத்தரிப்பு நிகழ்வுக்குப் போதுமான அளவுக்கு ஒரு எண்ணிக்கை பலத்தில் இருப்பதில்லை. ஒரு இயற்கையான கலவி வழிக்கருத்தரிப்புக்கு இலட்சக்கணக்கில் கூட அல்ல. கோடிக்கணக்கில் அதாவது 4கோடியிலிருந்து 10 கோடி வரை (சற்றேறக்குறைய 40 மில்லியனிலிருந்து 100 மில்லியன் வரை) விந்தணுக்கள் தேவைப்படுகிறது.

கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட ஒரு ஆணின் விந்தணு திரவத்திலோ அல்லது மலட்டுத் தன்மை கொண்ட ஒரு ஆணின் விந்தணு திரவத்திலோ இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் விந்தணுக்கள் காணப்பட சாத்தியமே இல்லை. கிளிண்டன் மட்டும் கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்து கொள்ளாதவராக, அதே நேரம் ஒரு கருத்தடை அறுவை செய்து கொண்ட ஒரு ஆணின் விந்தணு திரவத்தில் (இயல்பாக ஏற்படும் கசிவு காரணமாக) எவ்வளவு (கசிவு) விந்தணுக்கள் காணப்படுமோ அவ்வளவு விந்தணுக்கள் மட்டுமே காணப்பட்டிருக்குமாயின் துஸ்ப்ரயோகிப்பாளர் குழுவும் மிகவும் மண்டை குழம்பிப் போய்த் தான் இருப்பர்.

கிளிண்டன் வேறு ஏற்கனவேயே ஒரு பெண் குழந்தைக்கும் தகப்பனாய் இருந்ததால், ஆகக் கிளிண்டனின் எதிராளிகளும் உண்மையில் மிகவும் குழம்பிப் போய்த் தான் இருப்பர். எதனால் அவரது விந்தணு திரவத்தில் ஸ்பெர்ம் கவுண்ட் குறைந்துள்ளது? க.அ.சி செய்து கொண்டதாலா? அல்லது இயல்பாகவே ஒரு வேளை அவரின் ஸ்பெர்ம் கவுண்ட் இந்தக் குறைந்த அளவு ஸ்பெர்ம்கள் கொண்ட ஒரு இயல்பு ஸ்பெர்ம் கவுண்ட் தானா? எனக் கணிப்பதில் பெரிதும் குழப்பியிருக்கக் கூடக் கூடும்.

ஒரு வேளை ஸ்பெர்ம் கவுண்ட் ரிசல்ட் பற்றிய விபரம் மட்டும் அவர்கள் எதிர்பார்த்தது போல் மிகவும் வீரியமாக இருந்திருந்தால் எப்படியும் இக்சி துஷ்பிரயோகத்தைக் கண்டிப்பாக அவரிடம் எதிர்பார்த்திருக்கலாம் தான். மிகவும் வீரியமாகக் கூட வேண்டியதில்லை. ஓரளவு ஒரு இயற்கையான கலவி வழிக் கருத்தரிப்பை நிகழ்த்துவதற்குத் தேவையான அளவிற்கு ஓரு குறைந்த பட்ச எண்ணிக்கைச் சாத்தியத்தைக் கொண்டிருந்தாலும் கூட துஷ்பிரயோகிப்பாளர்கள் இதைத் துஷ்பிரயோகம் செய்தே பார்த்திருப்பர்.

ஏனெனில் சிலக் கருத்தடை அறுவை சிகிச்சைகள், 10,000-ல் ஒன்று அல்லது லட்சத்தில் ஒன்று தோல்வியடைவதும் உண்டு. நாமும் இந்த இது போன்ற செய்திகளை பத்திரிக்கைகளிலும் படிப்பதுமுண்டு. இந்த இது போன்ற விசித்திர வழக்குகளில் கசிவு விந்தணுக்களே கூட மிகவும் வீர்யமாக இருந்தால் இப்படி நடக்கச் சில சமயங்களில் சாத்தியக் கூறுகள் உள்ளது என மருத்துவத் துறையும் ஒத்துக் கொள்கிறது. அதனால் துஸ்ப்ரயோகக் குழுவினரும் தங்கள் தரப்புக்கு வாதிட ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அதை மருத்துவ அறிவியலும் ஒத்துக் கொள்ளவே செய்கிறது. கிளிண்டன் ஏற்கனவேயே கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டவராகவே இருந்த போதிலும், ஏன் இதை அந்த அது போன்ற ஒரு 10,000-ல் ஒன்று, அல்லது லட்சத்தில் ஒன்று கேசாக இதை ஏன் நீதி மன்றம் பார்க்கக் கூடாது? என்ற கோணமும் மறுக்கத் தக்கதல்ல. இக்ஸித் துஸ்ப்ரயோகக் கண்ணோட்டதிலேயே இதைப் பார்க்கத் தேவையில்லை. மேற்கூறியதைப் போன்ற கண்ணோட்டதிலும் இதைப் பார்க்கலாம், அணுகலாம்.

ஆனால் அதற்ககெல்லாம் மிகவும், அற்பச் சாத்தியக் கூறுகள் தான் உள்ளன என்றாலும், வழக்கு என வந்து விட்டால் அந்த அற்பத்திலும் அற்பமான, மிக அற்பச் சாத்தியக் கூறுகளுக்கான நிகழ் தகவுச் சாத்தியக் கூறுகள் எவ்வளவு என்று தான் நீதி மன்றம் பார்க்குமே ஒழிய, இந்த அற்பச் சாத்தியக் கூறுகள் நிகழ்வதற்கான வாய்ப்புகளே சுத்தமாக அறுதியாகக் கிடையாது, அல்லது அப்படியே இருந்தாலும், அந்த அற்பச் சாத்தியக் கூறுகளுக்கு எல்லாம் வழக்கிலே எந்தவித அர்த்த முக்கியத்துவத்தையும் கொடுத்து விட முடியாது என்றெல்லாம் ஒரு நியாமான நீதி மன்றம் முகத்தை அப்பால் திருப்பி வைத்துக் கொள்ள முடியாது.

10,15 ஆண்டு கால தாம்பத்ய வாழ்க்கையில் கட்டிய, சொந்த, மனைவியையே இயற்கையான கலவி வழிக் கருத்தரிப்பில் மேற்கொண்டும் கருத்தரிக்கச் செய்ய இயலாத ஒரு ஆண் மகனால் திருமண உறவுக்கு வெளியிலான ஒரு கள்ள உறவில் மட்டும் எப்படி மீண்டும் இயற்கையான கலவி வழிக் கருத்தரிப்பு ஒன்றுக்கு ஆளாக்க முடியும்? அது என்ன தான் 10,000-ல், ஒன்று, அல்லது லட்சத்தில் ஒன்று அப்படி கருத்தடை அறுவை சிகிச்சை விதிமுறைகளை மீறிய ஒரு விதி விலக்கு கர்ப்பமாகவே இருந்த போதிலும், அந்த விதி விலக்கு கர்ப்பம் என்பது குறிப்பாக, மிகக் குறிப்பாக ஒரு மனைவி அல்லாத ஒரு வெளிப் பெண்ணிடம் மட்டும் எப்படி ஏற்பட்டது? அப்படிப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கருத்தரிப்பு நிகழ்வுக்கு எப்படி ஒரு சட்ட அங்கீகாரமும், சட்டப் பாதுகாப்பும் கூடக் கேட்க முடியும்? தர்க்கப் பொருத்தங்கள் இடிக்கிறதல்லவா?

அது இக்ஸியின் துணை கொண்டு நிகழ்த்தப்பட்டதாக ஒரு சந்தேகத்துக்கு ஆளான துஸ்ப்ரயோகக் கருத்தரிப்பாக இருந்தாலும் சரி, துஸ்ப்ரயோகத்துக்கு ஆளாகாத உண்மையான இப்படிப்பட்ட ஒரு விதிவலக்குக் கருத்தரிப்பாகவே இருந்தாலும் சரி. வழக்கு மன்றத்தில் இது துஸ்ப்ரயோகக் கருத்தரிப்பு தான் என வாதிடும் எதிர் தரப்பிலிருந்தும், பார்வையாளர் தரப்பிலிருந்தும் எழும் இப்படிப் பட்டக் கேள்விக் கணைகளையும், விமர்சனப் பார்வைகளையும் கூட ஒரு நியாயமான நீதி மன்றம் புறக்கணித்துத் தவிர்த்து விட முடியாது. இரண்டு தரப்புத் தர்க்கங்களுக்கும் அவையவற்றுக்கே உரிய வலிமையான தர்க்கப் பொருத்தங்களுடன் மோத ஒரு களம் எழுகிறது இங்கே. ஸீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாய் இருக்க வேண்டும் எனும் போது இக்சி துஷ்பிரயோகத்திற்கான சூழுலும் நபரும் கூட சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராய் இருக்க வேண்டும் என எதிர் பார்ப்பதில் தவறொன்றும் இல்லையே?

எது எப்படியோ மோனிகா விஷயத்தில், ஒரு சிறிதாவது, கிளிண்டனுக்கும் பங்கிருந்தது. ஆனால் ஒரு சிறிதும், ஒரு அற்பப் பங்களிப்பும் கூட இல்லாமலேயே நாளை இதே போல் இன்னொரு மோனிகா இன்னொரு அமெரிக்க ஜனாதிபதியிடம் (ஒரு வேளை அவர் இன்னமும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளாத, மலட்டுத் தனமில்லாத ஒரு வீர்ய இளம் வயது ஜனாதிபதியாய் அவர் இருக்கும் பட்சத்தில்) இக்ஸி எனப்படும் ஐ.சி.எஸ்.ஐத் துஷ்பிரயோகம் மூலம் கள்ளத் தனமாக ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்டு அவர் மேலேயே போலியான ஒரு பாலியல் புகார் வழக்கும் கூடத் தொடுக்கலாமே? அப்படி ஒரு பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்படுமேயானால் அவரை (அது தவறே செய்யாத அமெரிக்க ஜனாதிபதியாகவே அவர் இருந்த போதிலும்) வேறு எது காப்பாற்றக்கூடும்?! இந்த திசையிலும் சற்று சிந்தித்ததாலேயே இப்போது தங்களுக்கு இவ்வளவு நீண்ட கடிதம்!.)
.

****2 அதே போல, இந்த இடத்தில இன்னொரு விஷயமும் எனக்கு இதுநாள் வரை இந்த நிமிடம் வரை இப்போதும் ஒன்று பற்றிப் புரியவே இல்லை. அது எப்படி வெறுமனே மோனிகாவின் உள்ளாடைகளில் இருந்த கிளிண்டனின் விந்தணு கறைகளை மட்டுமே ஒரு வலுவான தடயமாகக் கொண்டு கிளிண்டன் மோனிகாவுடன் பாலியல் உறவு கொண்டிருந்தார் என கோர்ட் முடிவு கட்டியது? சர்வ சாதாரணமாக ஆம், இவை எனது விந்தணு கறை படிந்த உள்ளாடையாக கூட இருக்கலாம் தான். ஏற்றுக் கொள்கிறேன். டி.என்.ஏ. டெஸ்ட்டும் ஒரு போதும் பொய் சொல்லாதுதான். ஆனால் அவை மோனிகாவுடன் வைத்துக் கொண்ட செக்ஸ் உறவு மூலம் வெளிப்படுத்தப்பட்ட விந்தணு கறைகள் தான் அவை என்று எப்படி, எதைக் கொண்டு திட்டவட்டமாக கூறுகிறீர்கள்?

இவை ஒருவேளை திருடப்பட்ட எனது விந்தணுக்களினால் ஏற்படுத்தப்பட்ட கறையாகக் கூட இருக்கலாம் அல்லவா? சர்வ சாதாரணமாக கிளிண்டன் இப்படி ஒரு அந்தர்பல்டி அடித்திருப்பாரேயானால், கிளிண்டனை நீதிமன்றம் என்ன செய்து இருக்க முடியும்? இக்சி துஷ்பிரயோக சாத்தியம் பற்றிய அறிவியல் செய்தி, அப்போது அந்த வழக்கு நடந்த சமயம் இன்னமும் அந்த அரசியல்வாதியை (கிளிண்டனை) ஒருவேளை அடைந்திருக்கவில்லையோ என்னவோ? சரி, அவருக்குத்தான் தெரியாது போயிற்று, அவரது வழக்கறிஞர்களுக்கும் கூடவா தெரியச் சாத்தியமில்லாது போயிற்று? இல்லை, தெரிந்திருக்கவே வேண்டும். ஆனால் அப்படியும் கிளிண்டனை காப்பாற்ற முடியாத படிக்கு வேறு தடயங்களும் அவருக்கு எதிராக கிளம்பி இருக்க வேண்டும்.

அவரது விந்தணு கறைகளோடு கூடவே, அவரது வியர்வை, எச்சில், நுண்ணிய சருமத்துணுக்குகள், முடி போன்றவையும் கூட அவருக்கு எதிரான தடயப்பொருளாய் செயல்பட்டிருக்க சாத்தியம் உண்டு. ஆனால் எனக்கென்னவோ இது விஷயத்திலும், கிளிண்டன் தரப்பு வாதம் ஒரு விதண்டாவாதமாய் வலுவுடன் வாதாடியிருந்திருக்கும் பட்சத்தில், இதையும் கூட எதிர்கொண்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. உடல் உள்ளுறுப்பில் சுரக்கக் கூடிய விந்தணுக்களையே திருட முடிந்தவர்களுக்கு, அவரது வியர்வை, எச்சில், நுண்ணிய சருமத்துணுக்குகள், முடி போன்ற இவற்றையும் சேர்த்துத் திருடவா, இயலாமல் போகும்?!

ஆனால் கிளிண்டனின் இடத்தில், ஒரு இந்திய அரசியல்வாதி இருந்திருந்தால், சர்வ சாதாரணமாக இப்படி பல்டி அடிப்பதின் மூலம் எளிதில் சமாளித்திருப்பார், “ஆம், அவை எனது விந்தணு கறைகளாகக் கூட இருக்கலாம்தான், ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அவை திருடப்பட்ட எனது மனைவியின் உள்ளாடைகளில் இருந்தவை” என சர்வ சாதாரணமாக ஒரு அந்தர் பல்டி அடித்திருப்பார். இதற்கு இந்த துணைக் கண்டத்திற்கே உரிய ஆடைக் கலாச்சாரமும் துணை புரிகிறது. (மேற்கத்திய ஆடையின் வடிவமைப்பு போன்றதல்ல, பண்டைய பாரம்பரிய இந்திய ஆடை வடிவமைப்பு. மேற்கத்திய மிடி, கவுன் போன்ற வடிவமைப்பிலிருந்து தனக்கே தனக்குரித்தான மாறுபட்ட வடிவமைப்பை உடைய உள்ளாடை பயன்பாடு இங்கு. ஒரு நாடா பாவாடையை மாறுபட்ட இடுப்புச் சுற்றளவும், பருமனும் உள்ள எவர் வேண்டுமானாலும், பயன்படுத்திக் கொள்ள இயலும், நவீன மேற்கத்திய பாணியிலான உள்ளாடைகள் விஷயத்தில் இது அவ்வளவாக பொருந்தாது என்ற போதிலும், இதிலும் கூட நுணுக்கமான. திட்டமிடலும், வாதத்திறமையும் இருந்திருப்பின், ஒருவேளை கிளிண்டனை காப்பாற்றி இருக்கலாமோ? என்னவோ? எளிதாக காப்பாற்றி இருக்கலாம் என்றே தோன்றுகிறது)

2. அடுத்ததாக கேட்ஸ்.

1981 ஆகஸ்டு 12 -ல் ஐ.பி.எம் நிறுவனம் தனது முதல் பி.ஸி-ஐ சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. மைக்ரோ சாஃப்ட் தயாரித்தளித்த MS-DOS version-1.0 பயன்படுத்தப்படுகிறது. இங்கிருந்தே பிரச்னைகளும் தொடங்குகின்றன. உண்மையில் இந்த MS-DOS-ஏ scp-(seattle computer products) கம்பெனியிடமிருந்து அடிமாட்டு ரேட்டுக்கு வாங்கப்பட்ட ஒன்று. இதைத் தயாரித்ததும் அதே கம்பெனியைச் சேர்ந்த டிம் பேட்டர்ஸன் என்ற கணினிப் பொறியாளர் தான். இன்டெல் கம்பெனி 8086 என்ற ஒரு புதிய சில்லு ஒன்றை வெளியிடப் போவதாக அறிவிக்க, அதற்கு ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் தயாரித்து வெளியிடப் போவதாக டிஜிட்டல் ரிசர்ச் என்ற நிறுவனம் அறிவிக்கிறது. ஆனால் டிஜிட்டல் ரிசர்ச் நிறுவனம் ஏனோ தாமதித்துக் கொண்டே போக. அதற்காகப் பொறுத்துப், பொறுத்து, வெறுத்துப் போன டிம் பேட்டர்ஸன் கடைசியில் தானே அதற்கு ஒரு சாப்ட்வேர் தயாரித்து அதற்கு Qs- Dos (quick dirty dos- என்பதன் சுருக்கம்.) எனவும் ஒரு பெயர் இடுகிறார்

ஆனால் அந்த சாஃப்ட் வேரருக்கான முழு உரிமையையும் மைக்ரோ சாஃப்ட் 75,000 -டாலர்விலை கொடுத்து வாங்கிவிட்டாலும், அதை ஐ.பி.எம்-ன் பி.ஸி-யில் செயல்படுத்துவது அத்துனை எளிதானதாக இருக்கவில்லை. குறித்த காலக் கெடுவுக்குள் வேறு ஐ.பி.எம்-முக்கு இதை தயாரித்தளித்தாக வேண்டும். ஆகக் கடைசியில் (அன்றைய நிலையில் அவர்களுக்கிருந்த அந்த அதிஅவசர சூழ்நிலையில்) அதைத் தயாரித்த அதன் பொறியாளர் டிம் பேட்டர்ஸனே வந்தால் தான் காரியம் ஆகும் என்ற நிலை, மைக்ரோ சாஃப்ட் அதற்கும் தயங்கவில்லை.

அவரையும் தனது நிறுவனத்துக்கு அப்படியே அள்ளிக் கொண்டு வந்துவிட்டது. குப்புறத் தள்ளிய குதிரை குழியையும் பறித்த கதையாக. ரெடியான பின்னரோ ஐ.பி.எம்-முடனான ஒப்பந்த வரிகளிலும் ஒரு தகிடுத்தம். இதை மிகுந்த பிரயாசைப்பட்டு தயாரித்துள்ளதால் எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் சில திருத்தங்களுடன் மற்ற நிறுவனங்களுக்கு விற்றுக் கொள்ளவும் தங்களுக்கு உரிமையுண்டு எனும் ஒரு ஷரத்தையும் நைஸாக ஒப்பந்த ஷரத்துகளில் ஒரு வழியாய் சேர்த்து விட்டு விடுகிறது. இந்த இடத்தில் தான் ஐ.பி.எம்-மும் ஒரு பெரிய வரலாற்றுக் காவியப் பிழையையே செய்கிறது.

நேற்று பெய்த சிலிக்கன் மழையில், இன்று முளைத்தக் காளான் கம்பெனிகளெல்லாம் கணினிச் சந்தையில் கரன்சி மழையை அறுவடை செய்து கொண்டிருக்கும் போது, கணினி உலகின் மிகப் பெரியச் ஜாம்பவான் கம்பனியான ஐபிஎம்-ஆல் மட்டும் சும்மா இருக்க இயலுமா? பிசித் தயாரிப்பில் குதிக்கிறது, குதித்ததுவும் கூட சரி தான். ஆனால், பிசித் தயாரிப்பில் காலம் கடந்து விடுவதற்கு முன் தனக்குரிய சந்தைப் பங்கையும் கைப்பற்ற விரைகிறது. விரைந்ததிலும் தவறில்லை தான் என்ற போதிலும் அது ஏற்கனவேயே காலம் கடந்திருந்த ஒரு நேரம். இப்போது அதன் முன்பிருந்த கால அவகாசமோ மிகவும் குறுகியதாய்த் தான் இருந்தது. இதை அதனுடைய துரதிஷ்டம் என்று சொல்வதா அல்லது கேட்ஸின் அதிஷ்டம் என்பதா என்றால் இரண்டும் தான் என்று தான் கூற வேண்டும்.

அது (பில் கேட்ஸ் போன்ற இளைய தலைமுறைகள் மென்பொருள் துறைக்குள் நுழைந்த அந்தக் காலக்கட்டம் என்பது) கணினித் தொழில் நுட்ப உலகில் முற்றிலும் புதிய ஒரு தொழில் நுட்ப வளர்ச்சி ஒரு புத்தம் புதிய பாய்ச்சல் வேகத்தோடு முகிழ்த்தெழுந்து வந்து கொண்டிருந்த சமயம். புதிய அந்த தொழில் நுட்ப முகிழ்வை முதலில், கண்டு இனம் காண்பவர்களே மேற்கொண்டும் அதன் வளர்ச்சிப் போக்கை (முற்றிலும் முடியாது போனாலும் மேலும் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்காவது) கணிக்க முடியும் என்பதைப் போன்ற ஒரு முகிழ் விடு நிலை சமயம் அது. ஒரு விதை செடியாகி, மரமாகப் பரிணமிப்பதற்கு முன் பல்வேறு கிளைகளுக்காக ஒரு ஆரம்ப முகிழ் விடுமே, அந்த அது போன்ற ஒரு நிலை.

அந்தப் புதிய நிலையை ஏற்கனவேயே மனக் கண்ணில் பார்த்துணரத் தவறியதோடு அல்லாமல், அதற்கேற்ற முன் தயாரிப்புகளும், அனுபவங்களும் இல்லாத ஒரு நிலையிலேயே, ஐ.பி.எம் பி.ஸி வகைக் கணினிக்கான களத்தையும், காலத்தையும் சந்திக்கிறது. அது இன்னமும் மெயின் பிரேம் கணினித் தயாரிப்புப் பக்கமே தனது முழு கவனத்தையும் குவித்து வைத்திருந்த சமயம் அது. மைக்ரோ பிராசசர்களின் எழுச்சியும் திறனும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் கூடிக் கொண்டே வந்ததை நன்கு உற்று நோக்கி கவனிக்கத் தவறிவிட்டது என்று தான் அர்த்தம், பொருள். இன்னும் கேட்கப் போனால் அந்த மைக்ரோ பிராசசர்களைத் தயாரித்துக் கொண்டிருந்த இன்டெல் போன்ற கம்பனிகளுக்கேத் தங்களது தயாரிப்பின் மூலம் என்னென்ன வெல்லாம் செய்யலாம், சாதிக்கலாம் என்பதைப் பற்றிய ஒரு தெளிவுச் சித்திரம் இல்லாத ஒரு ஆரம்பக் காலம் அது என்றும் கூடக் கூறலாம்.

உதாரணத்திற்கு, பில் கேட்ஸ் மிகவும் மதித்து சிலாகித்த, அவரின் ஆதர்ச மானசீகக் குரு ஸ்தானத்தில் இருந்தவர் எனக் கருதப்பட்டவரான டிஜிட்டல் எக்யூப்மெண்ட் நிறுவனத்தின் தலைவரான கென் ஆல்சென் என்பவர் 1960-களிலேயே சிறிய கணினிகளை உருவாக்கி ஒரு புதிய அலையை ஏற்படுத்தியவர். அவரது முதல் கணிப்பொறி DDP-1, அடுத்து வந்தது PDP-8. இந்த PDP-8 தான் பில் கேட்ஸ் படித்த பள்ளியில் வாங்கப்பட்டது. PDP-8 வகையைச் சேர்ந்த அந்தக் கணிப்பொறியே 2 அடி அகலத்துடனும், 6 அடி உயரத்தோடும் 250 பவுண்ட் எடையுடனும் பிரமாண்டமாக இருந்தது. அந்நாட்களில் அது தான் மினியேச்சர் சைஸ். PDP-1-ன் விலையோ 1,20,000 டாலர்கள். பிடிபி-8 ன் விலை 18,000 டாலர். கென் ஆல்செனின் டிஜிட்டல் எக்யூப்மெண்ட் நிறுவனம் 7 பில்லியன் டாலர் நிறுவனமாக வளர்ந்த போதிலும் 20 வருடங்களுக்குப் பிறகு வரப் போகிற டெஸ்க் டாப் யுகத்தை அவராலும் உணர முடியவில்லை. பி.சி என்பது வெறும் கனவு, அது வெற்றி பெறாது என்றே நினைத்தார்.
O

இந்தத் துறையில் உள்ள பெரிய பெரிய (வியாபாரச்) ஜாம்பவான்கள் எவருமே இந்தச் சிறிய சிலிக்கன் சிப்புகளைக் கொண்டு அளவில் சிறிய, ஆனால் ஆற்றலில் பெரியத், திறன் வாய்ந்த நிஜக் கணினிகளையேக் கூட உருவாக்க முடியும், அவை மெயின் ஃபிரேம் கணினிகளுக்கேக் கூட ஒரு விதத்தில் சவால் விடுபவையாய் உருவெடுக்கும், என்பதைப் பற்றி எல்லாம் அப்போது யாரும் கனவிலும் நினைத்துப் பார்த்திராத நேரம். அப்படியே நினைத்துப் பார்த்திருந்தாலும் அவையெல்லாம் ஆங்காங்கு முயற்சித்த ஒரு சிலத் தனி மனித, ஆரம்பக் கட்ட, ஆர்வப் பரிசோதனை முயற்சிகளைப் போலத் தான். அப்படி உருவாக்கப்பட்ட கணினிகளும் கூட யாரும் எண்ணி, நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு பொருளாதார உயரத்தில், விலையில். ஆக அதை சாதாரண பொது ஜனங்கள் காசு கொடுத்தல்ல, வாடகைக்கு வாங்கிப் பயன்படுத்தக் கூட, முடியவே முடியாத ஒரு வான் மேகமண்டலப் பொருளாதார உயரத்தில் தான் இருந்தது.

பூமிக்கு நெருப்பைக் கொண்டு வராமல் திரும்பி வர மாட்டேன் எனச் சூழுரைத்துப் புறப்பட்டுச் சென்ற (கிரேக்க புராணக் கதாப் பாத்திரம்) ப்ரோத்தியசைப் போல, வான் மண்டலத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த விலை மேகத்தைப் பூமியை நோக்கி இழுக்க கூட மட்டுமல்ல, பூமிக்கேக் கட்டி இழுத்து வரக் கூட முடியும் என ஓட்டு மொத்த கணினி உலகத்துக்கும், முதன் முதலில், ஒரு ஆரம்பக் கட்ட, நம்பிக்கை விதையை, ஒரு பிள்ளையார் சுழியாய் போட்டவர்கள் தான் பில்கேட்ஸ் போன்ற சில இளைய தலைமுறையினர். பில்லுக்கும் முன்னோடிகள் இத்துறையில் எத்தனையோ பேர்கள் இருந்தாலும் பில் கேட்ஸ் மட்டுமே அனைத்து வகையிலும் ஒரு அதிஷ்டசாலியாகவும் மாறமுடிந்தது. அதற்காக கேட்ஸும் இரவு பகல் பார்க்காத மிகக் கடினமான உழைப்பை வழங்கியதுடன், சிலப் பல தார்மீக அறநெறி பிறழ்வுகளையும், மீறல்களையும் செய்து தான் (உலகின் முதன்மைக் கோடீஸ்வரன் என்ற) இந்த ஒரு ஸ்தானத்தையும் அடைய முடிந்தது.

அந்தத் தார்மீக அறநெறிப் பிறழ்வுகள் ஐபிஎம்-டனான தொழிற் கூட்டு காலங்களிலிருந்து தான் மிக வலிமையுடன் தொடங்குகிறது. என்ன தான் உதற, உயரப் பறந்தாலும் “ஊர்க்குருவிப் பருந்தாகாது” என்பது எப்படி உண்மையோ, அதே போலத் தான், ஐபிஎம்-டனான தொழிற் கூட்டுக்கு முன்னரே, என்ன தான் மைக்ரோ சாஃப்ட்டின் பில் கேட்ஸ் என்ற ஊர்க்குருவி, தனது மென்பொருள் நிறுவனத் திறன் மூலம் மென்பொருள் உலகில் ஒரு பெரிய சலசலப்பையே ஏற்படுத்தியிருந்தாலும் அவையெல்லாமே ஒரு ஊர்க்குருவியின் சிறு சலன இறகசைப்பு முயற்சியைப் போலத் தான். பறந்த பொருளாதார உயர மட்டமும் அப்படியே. ஐபிஎம் என்ற அலுமினியப் பறவை மட்டும் கிடைத்திருக்காவிட்டால் மைக்ரோசாப்ட் என்ற ஊர்க்குருவி, எந்நாளும் ஒரு ராஜாளி சாட்டிலைட் ஸ்தானத்தை எட்டியிருக்கவே கூட முடியாதோ என்னவோ?

ஆனால், காலம் கடப்பதற்கு முன் தனக்குரிய சந்தையைப் பிடிக்க வேண்டும், இல்லையில்லை, “சந்தையைக் கைப்பற்றி விட வேண்டும்” என்ற ஒற்றை வெறியில் “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற சந்தைப் போட்டியின் உன்மத்த வெறியில் ஒரு மாபெரும் தவறைச் செய்கிறது ஐபிஎம். தவறென்றால் (எனைப் பொறுத்த வரையில்), அது ஒரு “காவியச் சிறப்பு வாய்ந்த ஒரு வரலாற்றுப் பிழை, அப்படிப்பட்ட ஒரு தவறைச் செய்கிறது.” ஐபிஎம்-க்கு இருந்த அதே சந்தை அவசரம், சந்தை அவசரத்தின் உன்மத்த நிலை மைக்ரோ சாஃப்ட்டுக்கும் இருக்கவே செய்தது என்றாலும் அது அந்த அவசரம், உன்மத்த நிலை அதன் சொந்தக் கண்களையே மறைத்து விடுமளவுக்கு மைக்ரோ சாஃப்ட்டும் கூட அதை ஒரு போதும் அந்த அளவுக்கு அனுமதித்து விடவில்லை. மாறாக சந்தையைப் பற்றிய, ஒருத் தெள்ளத் தெளிவுடன் இருந்திருக்கிறது.

அதனால் தான் அது ஐபிஎம் போன்ற கம்பனிகளின் கடைக்கண் நம்மீது படாதா என உள்ளூர ஒரு ஏக்கத்துடன் இருந்த அதே சமயத்தில் கூடவே ஒரு விழிப்புணர்வுத் தன்னுணர்வுடனும் இருந்திருக்கிறது. எந்த ஒரு அறிமுக நடிகையும், நடிப்புத் தொழிக்கென்று வந்து விட்ட பின் ஓரளவுக்கு ஒரு அறிமுகப் புகழும் கிட்டிய பின், அதற்குப் பின்னும், துண்டு, துக்கடா கதாபாத்திரங்களிலும், சிறிய நடிகர்களுடனுமேவா தொடர்ந்தும் நடிக்க விரும்புவார்? எப்போதடா ஒரு பிரபல சூப்பர் ஸ்டாருடன் நடிக்க ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடிப்பதற்கான ஒரு வாய்ப்புக்காகக் காத்திருப்பாரா? அல்லது இன்னமும் துண்டு துக்கடா கேரக்டர்களுடனும், உப்புமா கம்பனி, நடிகர்களுடனுமேயே தொடர விரும்புவாரா? ஆக கேட்ஸ்-க்கு ஐபிஎம்-டமிருந்து கிடைத்த அந்த முதல் தொழிற்கூட்டு வாய்ப்பு என்பது ஏற்கனவே உப்புமா கம்பெனிகள் வாயிலாகவே ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, ஆனால் இன்னமும் ஒரு மேகா பேனரில் மெகா வெற்றியைப் பெறாத, வளர்ந்து வரும் ஒரு பிரபல்ய நடிகனுக்கு, இயக்குனருக்கு, இசையமைப்பாளரருக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பைப் போன்றது.

ஒரு பிரபல பேனரில் பிரபலக் குழுவினரோடு அவர்களுக்குச் சமதையான ஒரு ஸ்தானத்திலிருந்து பணியாற்றக் கிடைத்த ஒரு வாய்ப்பு போல. அப்படிபட்ட வாய்ப்புகள் என்பதும் வாழ்க்கையில் அடிக்கடி வரக்கூடியதல்ல. வந்தாலும் அதை எல்லோராலும் எப்போதும் இனம் காணக் கூடியதும் அல்ல. இனம் கண்டாலும் அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு திறன், ஞானம் என்பதும் எளிதில் எல்லோருக்கும் வாய்த்து விடும் ஒன்றுமல்ல. சரித்திரத்தில் அது போன்ற உதாரணங்களுக்கும் பஞ்சமில்லை. உதாரணமாக டி.சி. கரண்டைக் கண்டுபிடித்த டெஸ்ஸோ-வைக் குறிப்பிடலாம். தனது கண்டுபிடிப்பினால் தான் பெற வேண்டிய புகழையும், பொருளையும் எடிசனிடம் கோட்டை விட்ட டெஸ்ஸோ-வை விடச் சிறந்த உதாரணத்தை காட்ட முடிந்தால் அவருக்கு ஒரு அறிவியல் சரித்திரப்புலி என்ற ஒரு பட்டத்தையேக் கூடக் கொடுத்துவிடலாம். எப்போதேனும் ஒரு முறை தான் கிடைக்கும், ஆனால் நிச்சயப் பரிசை உத்தரவாதம் செய்யக் கூடிய ஒரு அரிய லாட்டரி போல. அப்படிப் பட்ட ஒரு லாட்டரி வாய்ப்பை அதன் அருமையை ஏற்கனவேயே நன்குணர்ந்த ஒரு மனிதனோ, நிறுவனமோ அதை எந்த வகையிலேனும் பெற விரும்புவார்களா?, அல்லது இழக்க விரும்புவார்களா?

எந்த ஒரு வியாபார ஒப்பந்தத்திலும் இருதரப்புக்கும் ஏற்ற விதத்தில் ஒரு லாபமிருந்தால் தான் அந்த ஒப்பந்தம் வெற்றியடையும். ஒரு தரப்புக்கு லாபமும், ஒரு தரப்புக்கு முழுக்க முழுக்க நஷ்டமுமாய் எந்த ஒரு ஒப்பந்தமும் அமைந்து விட முடியாது. அப்படி அமைகிற தென்றால் ஒன்று எதிர்த் தரப்பில் அவர்கள் பூரண முட்டாள்களாய் இருக்க வேண்டும், அல்லது பூரண அடிமைகளுக்குச் சொந்தக்காரர்களாய்ப் இருக்க வேண்டும், சுருக்கமாக இந்தியத் துணைக் கண்டத்தின் பெருவாரியான அடிமை முட்டாள் மக்கள் திரளினரைப் போல இருக்க வேண்டும், அல்லது இன்னமும் குறிப்பான, புரியும் வார்த்தைகளில் கூற வேண்டுமானால் நம் தமிழ் சமுதாயத்தைப் போன்ற ஒரு சமுதாயத்தில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களாய் இருக்க வேண்டும்.

ஆனால், சதுர அடிக்கு 400 அறிவாளிச் சுரண்டல் முதலாளிகள் நிறைந்த அமெரிக்கக் கண்டத்தில், உலக முதலாளித்துவத்தின், சாஸ்த்திரியக் களன் எனப்படும் அமெரிக்கக் கண்டத்தில் எடுபடுமோ? குறைந்த பட்சம் ஒரு தரப்புக்கு குறைந்த லாபமும், மறு தரப்புக்குக் கொஞ்சம் அதிக லாபமும் ஏற்படுவது போன்ற ஒரு ஒப்பந்தம் வேண்டுமானால் ஏற்பட முடியும். அது தான் அங்கேயும், நடந்திருக்கவும் வேண்டும். வழக்கமாக எது நடக்க வேண்டுமோ அது தான் நடப்பதும் கூட, அதாவது சிறு நிறுவனங்கள் சிறு லாபத்தையும், பெரு நிறுவனங்கள் பெரும் லாபத்தையும் அறுவடை செய்வது போன்ற ஒப்பந்தங்கள் ஏற்படுவது தான் பெரும்பாலும் நடைமுறை வாழ்க்கையின் நிதர்சனம். ஆனால் அந்த நடைமுறை வாழ்க்கையின், நிர்பந்த நிதர்சனங்கள் பெரும்பாலும் இந்த இது போன்ற இன்வென்சன், இன்னாவேசன், எனப்படும் புதியனக் கண்டுபிடிப்புத் துறையில் எடுபடுவதில்லை என்பதும் மற்றொரு நடைமுறை நிதர்சனமே.

பெரிதாக ஏதும் பாதகமில்லாத, அதே நேரத்தில் ஏதேனும் ஒரு சிறு காம்ப்ரமைசையாவது செய்து கொண்டால் தான் இந்த ஒப்பந்ததத்தையே பெறமுடியும் போலுள்ளது எனும் நிலை எழுந்தால் கூட, அப்போதும் அந்தக் காம்ப்ரமைசை செய்து கொண்டாவது அந்த ஒப்பந்தத்தைப் பெற முயல்வார்களா? அல்லது இழக்க விரும்புவார்களா? எல்லாத் துறைகளிலும், அது சினிமாத் துறை தான் என்றில்லை, மென்பொருள் தொழில் தான் என்றில்லை, கலை, இலக்கியம், அறிவியல், அரசியல், தத்துவம் என எந்தத் துறையிலும், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற விஷயம் காலங்காலமாக இடையறாது நடந்து கொண்டிருப்பது தான். ஆனால் அந்தப் பழையன கழிதலுக்கான நேரம் எது?, புதியன புகுவதற்கான நேரம் எது என்பது பற்றியத் தெளிவும் ஒருவருக்கு எப்போதும் வேண்டும், அது எல்லோருக்கும் வந்து விடுவதில்லை. வந்தாலும், அதுவும் எல்லா நேரங்களிலும் தகைந்துவிடுவதும் இல்லை. பழையன எப்போது கழியும்? புதியன எப்போது புக முடியும்?

முதலில் பழையது பழையது என எல்லோராலும், உணரத் தலைப்படத் தக்க ஒரு விசயமாய், இனிமேலும் இதை வைத்துக் கொண்டு குப்பை கொட்ட முடியாது எனுமளவுக்கு, ஒரு அரதப் பழையதாய் மாற வேண்டும், உதாரணத்திற்கு, இந்த ஸ்மார்ட் ஃபோன் யுகத்தில், (இன்றைய இந்த 2010-2015 ஆண்டுகளிலும் கூட) நாளும் கூடி வரும் ஸ்மார்ட் போன்களின் திறனுக்கு முன் அதன் பேட்டரித் திறன் என்பது இன்னமும் கற்காலத்தில் இருப்பதைப் போன்ற அதன் ஆரம்ப நிலையைக் குறிப்பிடலாம். எலக்டிரானிக்ஸ், வன்பொருள், மென்பொருள் வளர்ச்சி, குறிப்பாக கணினி யுகம் கடந்து போன ஒன்றாய் மாறி, ஸ்மார்ட் போனே இப்போது ஒரு கணினியாக பரிணாமம் பெற்றுள்ள இத்துறையின் வளர்ச்சியோடு, பேட்டரித் துறையின் வளர்ச்சியை ஒப்பிட்டால், கலப்பை யுகத்துக்கும் கணினியுகத்துக்கும் இடையே உள்ள ஒரு இடைவெளி போல அவ்வளவு அதல பாதாள இடைவெளி உள்ளது.

கணினி முதற்கொண்டு, கார், ஸ்மார்ட் ஃபோன் வரை இன்று ஒவ்வொன்றுக்கும் தேவைப்படும் ஆற்றல் பசியின் தேவை அசுரத் தனமாக வளர்ச்சி கண்டு ஒரு பெரும் விஸ்வரூபமே எடுத்துள்ளது. இப்படி அனைத்தும் ஒரே நேரத்தில், ஏகக் காலத்தில், ஒன்று திரளும், அதனால் அதற்கொரு பெரிய சந்தையும் உருவாகும் என்பதை யாரும் முன்கூட்டியேக் கணிக்கக் கூடத் தவறி விட்டனர். திறன் பேசியின் திறன் கூடக், கூட அதே வேகத்துக்குக் கூட முடியாத பேட்டரியின் திறன் பயன்பாட்டாளர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு எரிச்சலையும், காலதாமதத்தையும், நடைமுறை இடர் பாடுகளையும் ஏற்படுத்துகின்றன என்பதைக் காலம் கடந்த நிலையில் உணர்ந்த பின்னரும் கூட, உலகம் முழுவதும் இதற்கான ஆராய்ச்சிகள் முழு வேகத்துடன் முடுக்கி விடப்பட்டுள்ளன என்ற போதிலும், உடனடியாக இதற்குத் தீர்வென ஏதொரு திறன் வாய்ந்த பேட்டரியையும் உடனே இன்னமும் அறிமுகப்படுத்தி விட முடியவில்லை என்றால் அதற்கும் காரணமில்லாமல் இல்லை. மேற்கத்திய அறிவாளி உலகமும் இத்தகைய, இவ்வளவு அசுர வளர்ச்சியை இத்துறையில் முன்னமே கணிக்கத் தவறிவிட்டது என்றுதான் அர்த்தம்.

முதலில் 2015-2016 வரை நாம் காத்திருக்க வேண்டியிருக்கும் எனக் கூறிய இணையதளச் செய்திகள் இப்போது, எப்படியும் நாம் 2017 வரையாவது காத்திருக்க வேண்டியிருக்கும் எனத் தள்ளிப் போட்டுக் கொண்டே செல்கின்றன. ஆனால் இதே இந்தக் கண்டுபிடிப்பில் ஏற்பட்ட தேக்கம் என்பது ஸ்மார்ட் போனுக்குத் தேவைப்படக்கூடிய அதியவசியமான, அத்தியாவசியமான இன்னொரு பொருளான, (அது மட்டும் இல்லை என்றால் ஸ்மார்ட் போனின் எழுச்சியே கூட, இன்னும் கொஞ்ச வருடங்களுக்குப் பின் தான் தோன்றியிருக்கும் எனக் கூறத் தக்க விதத்திலமைந்த,) கார்னிங்க் கொரில்லா கிளாஸ் விஷயத்தில் மட்டும் ஏற்படவேயில்லை. 30, 40 வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடிக்கப் பட்டும், இதன் பயன் என்ன? என்ற இதன் அருமை தெரியாமல் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு மூலையில் ஆழ்ந்த சமாதிப் பேரூறக்கத்தில் தான் இருந்தது.

ராமனின் கால் படக் காத்திருந்த அகலிகையைப் போல ஆப்பிளின் ஸ்டீவ் ஜோப்ஸ் மட்டும் வராமல் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் காலம் கூட சமாதிப் பேரூறக்கத்தில் தான் இருந்திருக்குமோ என்னவோ?. நல்லவேளை ஸ்டீவ் வந்தாரோ இல்லையோ இதற்கொரு சாப விமோசனமும் கிடைத்தது. ஆனால் ஸ்டீவ் வந்தும் இது மட்டும் இன்னமும் கண்டுபிடிக்கப் பட்டிருந்திருக்க வில்லையெனில், திறன்பேசி யுகமேக் கூட இன்னமும் சற்றுத் தள்ளிப் போயிருக்கக் கூட நேர்ந்திருக்கலாமோ என்னவோ?. ஸ்டீவின் தேடல் தான் அதன் சமாதிப் பேருறக்கத்தைக் கலைத்தழித்து, இன்று அதை ஒரு பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் முன்னேமே கண்டுபிடிக்கப் பட்டிருந்தாலும், அதை முதலில் தேடியவர், அதை முதலில் முன்னுணர்ந்தவர் ஆப்பிளின் ஸ்டீவ் என்பதால் தான் இன்று இந்தத் துறையிலேயே மற்ற நிறுவனங்களுக்கு ஒரு முன்னோடியாக, ஒரு ட்ரெண்ட் செட்டெராகவும் அதுவும் ஒரு முன்னணி நாயகனாகவும் விளங்க முடிந்தது, இன்னமும் முடிகிறது. ஸ்மார்ட் போனுக்கான எல்லா விசயங்களும் அதி விரைவில் உருத்திரண்டு வர முடிந்திருந்தாலும், பேட்டரித் துறை மட்டும் அப்படி வராததால், வளராததால் இன்று அந்த இடத்தில் மட்டும் ஒரு பெரும் தேக்கமே நிலவுகிறது. ஸ்மார்ட் போனுக்கு மட்டுமல்ல, மடிக் கணினி, நோட் புக், பேப்லெட், டேப்லெட் என அனைத்து வகையான கையடக்கச் சாதனுங்களுக்கும் தேவைப்படும் ஒரு பொருளாய் மட்டுமல்ல, பெட்ரோலியத் தட்டுப்பாடு, மற்றும் சூழல் மாசுபடலின் அச்சுறுத்தல், நிர்பந்தம் காரணமாக இன்றைய நவீன பேட்டரி கார்களுக்கும், மோட்டார் வாகனுங்களுக்கும் கூடப் பெரும் திறன் வாய்ந்த பேட்டரித் தேவை எழுந்து விட்டது.

இப்படி நாளா திசைகளிலிருந்தும், திறன் மிக்கப் பேட்டரித் தேவைகள் எழ, எழத் தான் இப்போது உலகம் முழுவதும் அந்தத் துறையில் பெரும் ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டு, 2016, 2017 களில் இத்துறையில் ஒரு பெரும் அசுர மாற்றமே எழக் காத்துள்ளது என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தில் கொண்டு வந்து விட்டுள்ளது. சங்கிலித் தொடர் மாற்றம் போல இதன் எதிர் விளைவாய் பேட்டரித் துறையில் உற்பத்தியிலும், ஆராய்ச்சியிலும் உள்ள நிறுவனப் பங்குககளின் விலை பங்குச் சந்தையிலும் உயரக் கூட ஒரு வழி வகையை ஏற்பட்டுள்ளது. இப்படி எல்லாக் காலக்கட்டத்திலுமேயே எல்லாத் தொழிற் துறையிலுமேயே மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணமே உள்ளது.

தொழிற் துறை மட்டுமன்று, கலை, இலக்கியம், தத்துவம், அரசியல், அறிவியல், பொருளாதாரம் என மாற்றம் ஏற்படாதத் துறை என எதுவும் இந்த உலகில் கிடையாது. மேலும் ஒன்றில், ஒரு துறையில் ஏற்படும் மாற்றம் மற்றொரு துறையில் மாற்றம், தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு இன்று மாற்றங்களின் வலிமையான எண்ணிக்கைப் பெருக்கத்தால் எது ஒன்றையும் இன்றுப் புறக்கணிக்க முடியாத ஒரு நிலையும் தோன்றி எழுந்துள்ளது. என்ன?! மாற்றத்தின், அல்லது மாற்றங்களின் அளவில், அது ஏற்படக்கூடிய காலகட்டத்தின் இடைவெளியில் (ஒரு மாற்றத்திற்கும் இன்னொரு மாற்றத்திற்கும் இடையே ஏற்படும் கால இடைவெளிகளில்) வேண்டுமானால் ஒரு மாற்றம் இருக்கலாம்.

சாதாரண சராசரி மனிதர்கள் கண்டுபிடிக்க முடியாத அந்த நுண் மாற்றங்களின் அளவும், அம்மாற்றங்கள் ஏற்பட ஆகும் கால அளவுகளையும், அந்தந்தத் துறையில் உள்ளவர்களால் ஆவது, ஓரளவாவது முன்னுணர்ந்து, யூகிக்கப் படுகிறது. சில நேரங்களில் ஒரு பெரும் அடிப்படை மாற்றங்களும் நியூ ட்ரெண்ட் செட் போல ஏற்படுகிறது, அந்தப் பெரும், பெரும் அடிப்படை மாற்றங்களுக்கேக் கூடக் காரண கர்த்தாவாக சமயங்களில் சில சிறு, சின்னஞ்சிறு மனிதர்களும், சின்னஞ்சிறு நிகழ்வுகளும் கூடக் காரண கர்த்தாக்களாய் அமைய நேரிடுகிறது. ஆக கூரிய நுண்ணுணர்வுடன் இம்மாற்றங்களை ஸ்வீகரித்து உள்வாங்க முடியாதவவர்கள் அவர்கள் எத்தனை தான் பெரிய நிறுவனமாய் இருக்கட்டும், அல்லது பெரிய தனி மனித ஜாம்பவான்களாய்த் தான் இருக்கட்டும் வீழ்ச்சியுற்றுத் தான் போவார்கள், போகிறார்கள். ஐபிஎம்-க்கும் அது தான் நிகழ்ந்தது.

பில் கேட்ஸ் யுகத்தை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் சார்லெஸ் பாபேஜ், மைக்கேல் ஃபாரடே காலத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். 1830-களில் வாழ்ந்த அந்தக் கணித மேதை தான் முதன் முதலில் கணிப்பொறி பற்றிச் சிந்தித்தவர். ஆனால் அவர் வாழ்ந்த காலம் அது இயந்திரப் புரட்சி மட்டுமே நடைபெற்றிருந்த ஒரு எந்திர யுகம் என்பதால் எந்திரங்களை உபயோகித்துக் கணக்குப் போடுவதைப் பற்றி முதன் முதலில் அவர் தான் தெரிவித்தார். படங்கள், எழுத்துக்கள் கூட எண்களாக மாற்றி உபயோகிக்கப் படலாம் என்று முதன் முதலில் தெரிவித்தவர் அவரே. அவர் கனவு கண்ட அந்தக் கனவு எந்திரத்தில் ஒரு தொழிற் சாலையைப் போலவே பற்சக்கரங்களும், உருளைகளும், தண்டுகளும் கொண்டு அது நீராவியால் இயங்கியது.

ஒரு பஞ்சு மில்லில் பஞ்சு நூலாகி, பின் ஆடையாவதைப் போல தகவல்கள், புதிய தகவல்களாக மாறும் என்றார். அவரது “அனலிட்டிகள் இஞ்ஜின்” பல்வேறு கட்டளைகளை ஏற்றுச் செயல்படும். அந்த இயந்திரத்தை இயக்க முற்றிலும் வேறுபட்ட எண்களாலும், எழுத்துக்களாலும், குறியீடுகளாலும், ஆன ஒரு மொழி தேவை, என்றதோடு அதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகள் சிலவற்றையும் செய்து வைத்தார். அவரது கற்பனைக்குச் செயல் வடிவம் கொடுக்க பல அறிஞர்கள் 100 வருடங்கள் பெரும்பாடு பட வேண்டியிருந்தது. 1940-களில் தான் அவரது “அனலிட்டிகள் இஞ்ஜின்”-ஐப் போன்ற ஒரு எலெக்ட்ரானிக் கணிப் பொறி உருவாக்கப்பட்டது.

உலகப் போர் மூண்ட சமயமாதலால் கணிப்பொறி பற்றிய ஆராய்ச்சிகள் அணுகுண்டு ஆராய்ச்சியைப் போலவே பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் ஒரு ரகசிய மூடுதிரைக்குள் போய் ஒளிந்து கொண்டது. எப்படியும், ஆலன் டூரிங், கிளாட்ஷெனான், ஜான் வான் நியூமேன் போன்றோர் இது உருவாக காரணமாயினர். 1930-களில் ஆலன் டூரிங், டூரிங் மெஷின் என்ற எந்திரத்தை பிரிட்டனில் வெளியிட்டார். அவருக்குப் பிறகு கல்லூரி மாணவரான கிளாட்ஷெனான் ஒரு கணிப் பொறி சர்க்யூட் எப்படி வேலை செய்யும் என்பதை விளக்கினார். உண்மை என்றால் மூடியிருக்கும், பொய் என்றால் திறந்திருக்கும். அதாவது பைனரி (இரட்டைப்படை) எண்களை உபயோகிப்பதைப் பற்றி முதன் முதலில் முழுமையாக விளக்கினார்.

மேலும் அவர் தான் கணிப்பொறிகள் புரிந்து கொள்ளக் கூடிய மொழி இரட்டைப்படை எண்களாகத் தான் இருக்க முடியும் என்றார். முதல் ஆரம்பகால கணிப்பொறியை ஒரு கணினி என்றே சொல்ல முடியாது. ஜஸ்ட் ஒரு கால்குலேட்டர் என்று தான் சொல்ல வேண்டும். இரண்டாம் உலகப் போரின் போது பிரஸ்ஸர் எக்கர்ட், மற்றும் ஜான் மௌக்லியின் தலைமையில், கணித மேதைகள் பலர் ஒன்று கூடி “எலெக்ட்ரானிக் நியூமெரிக்கல் இண்டெக்ரேட்டர் அண்ட் கால்குலேட்டர்” (ENIAC- electronic numerical integrator and calculator என்பதன் சுருக்கம் ENIAC-ஏனியாக்) என்ற ஒரு எந்திரத்தை உருவாக்கினார்கள். இரண்டாம் உலகப் போர் சமயம் உருவாக்கப்பட்ட அந்த ஏனியாக் கில் விஸேஷம் என்னவென்றால் ஏனியாக்கில் பற்சக்கரங்களுக்குப் பதில் முதன் முதலில் வேக்குவம் ட்யூப் பயன்படுத்தப்பட்டது தான். இவ்வியந்திரத்தை இயக்க ராணுவச் சிப்பாய்கள் பயன்படுத்தப் பட்டனர்.

30 டன் எடை கொண்ட அந்த இயந்திரம் ஐம்பதுக்கு முப்பது அடி கொண்ட இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான டியூப்கள் எரிந்து கொண்டிருக்கும். அதில் ஒன்று பழுதடைந்து விட்டாலும், இந்த இயந்திரத்தை முற்றிலும் நிறுத்திவிட்டுத் தான் எந்த டியூபிள் கோளாறு என்று கண்டு பிடித்து அதைச் சரி செய்ய வேண்டும்.

மொத்தம் 18,000 வேக்குவம் டியூப்ஸ்கள் இருந்தன. ஒன்றரை லட்சம் வாட்ஸ் மின்சாரத்தைக் குடித்து, 80 கேரக்டர்களைத் தான் நினைவில் வைத்துக் கொண்டது.

இந்த எந்திரம் அடிக்கடி பழுதானதற்குக் காரணமே வெளிச்சத்தால் கவரப்பட்ட விட்டில் பூச்சிகள் மின்சாரம் தாக்கி இறந்து, அடைத்துக் கொண்டதால் தான். போர் வீரர்கள் பூச்சிகளைச் சுத்தம் செய்து, பழுதான விளக்குகளை கழற்றி அப்புறப்படுத்திவிட்டு புதிய டியூப் விளக்குகளை மாற்றிய பின்னர் தான் கணிப்பொறி இயங்க ஆரம்பிக்கும். மென்பொருளில் ஏற்படும் பிழைகளைப் பக்ஸ்-(பூச்சிகள்) எனக் கூறும் வழக்கம் இதனால் தான் ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஒவ்வொரு விடையையும் கண்டுபிடிக்க டெலிஃபோன் ஆபரேட்டர்கள் ஒயர்களை மாற்றுவதைப் போல ஒயர்களை மாற்றி மாற்றி இணைக்க வேண்டும். வெவ்வேறு கணக்குகளுக்கு வெவ்வேறு ஒயர்களை ஓயாமல் மறுபடியும் மறுபடியும் கையால் கழற்றி, மாற்றி, கழற்றி மாற்றி. சலித்துப் புளித்துப் போய்விடுகிற ஒரு வேலை தான். மொத்தம் 6000 கேபிள்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவின் அணு ஆயதத் திட்டங்களில் பெரும் பங்களிப்பு செய்த வான் நியூமேன் தான் பின்னர் கேபிள்களைக் கையால் கழற்றி மாட்டும் இந்த சலிப்பூட்டும் வேலைக்குப் பதிலாக, கட்டளைகளை மெமரியில் பதிந்து வைக்கலாம் என்று கூறினார். இவரது இந்த யோசனையின் பேரில் தான் இன்றைய நவீனக் கணினிகள் செயல்படுகின்றன என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?

ஆனால் 1960-களில் சிறிய சிலிக்கன் சிப்புகள், ஏனியாக்கை விடச் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று பெல் லேப்ஸ் கண்டறிந்த பிறகு, வேக்குவம் டியூப்ஸ்களுக்கும் பதிலாக ட்ரான்சிஸ்டர்கள் பயன்பட ஆரம்பித்தனவோ இல்லையோ. ட்ரான்சிஸ்டர் யுகம் பிறந்தது. ட்ரான்சிஸ்டர்கள் அளவிலும் சிறியவை, மின்சாரமும் குறைவாகப் பயன்படுத்துபவை. பல டிரான்சிஸ்டர்களை ஒன்றிணைத்துச் சிறிய சிப்புகளாக மாற்றப்பட்ட சிலிக்கன் சிப்புகள் பிறந்தன. இந்த இது போன்ற சிலிக்கன் சிப்புகளில், ஒரு மில்லி மீட்டர் பரப்பளவில், பல லட்சம் டிரான்சிஸ்டர்களை அடுக்கிவிட முடியும். 1977-ல் சைன்டிஃபிக் அமெரிக்கன் இதழில் பாப்நாய்ஸ் (இன்டெலின் நிறுவனர்களில் ஒருவர்) எழுதியக் குறிப்புகளின் அடிப்படையில் இந்த சிலிக்கன் சிப்புகளை, அதாவது மைக்ரோ பிராசசர்களை ஏனியாக்குடன் ஒப்பிட்டால், 20 மடங்கு வேகம், பல மடங்கு மெமரி, ஆயிரக்கணக்கான மடங்கு பாதுகாப்பானது. ஒரு லைட் பல்பை எரிய வைக்கும் அளவு மின்சாரம் தான் செலவாகும். 30,000-ல் ஒரு பங்கு இடத்தையே அடைத்துக் கொள்ளும். 10000,-ல் ஒரு பங்கு தான் செலவாகும்.

இப்படிப் பட்ட மைக்ரோ பிராசசர்களின் எழுச்சியைப் இந்தத் துறையிலேயே இருந்தும், இதைப் புரிந்து கொள்வதில் ஐபிஎம்-மே சற்றுக் கோட்டை விட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும். 1930-களில் வரவு செலவு கணக்குப் போடும் எந்திரங்களை வெற்றிகரமாக வியாபாரம் செய்து வந்த ஐபிஎம் தான் 1950-களில் கணிப்பொறிப் பக்கம் திரும்புகிறது. IBM-ன் நிறுவனர் வாட்சனின் மகனான இளைஞர் டாமின் தலைமையில் அது ஒரு 5 பில்லியன் டாலர் நிறுவனமாக மாறுகிறது. டாம் ஸ்கேலபுல் ஆர்கிடெக்சர் என்ற ஒரு முறையைப் புகுத்துகிறார். System/360-குடும்பத்தில் இருந்த சிறிய, பெரிய, நடுத்தர வகைக் கணிப்பொறிகள் எல்லாவற்றிற்கும் ஒரே விதமான மென்பொருள், ஒரே விதமான கட்டளைகள் போதும் என்ற வசதியை அளித்ததால் அவர் வெற்றி பெறுகிறார்.

இதனால் மக்களால் ஒரு கணிப் பொறியின் மென்பொருள், சேமிப்பு டிஸ்க், டேப் ட்ரைவ், பிரின்டர் போன்றவற்றை அடுத்த வகைக் கணிபொறியில் இலவசமாக பயன்படுத்த முடிந்தது. மெயின் ஃபிரேம் துறையில், IBM-ஐ விட்டால் வேறு ஆளில்லை என்பதைப் போல ஒரு வெற்றி பெற்றது. 1970-களில் ஜூன் ஆம்தால் என்பவர் ஐபிஎம்-மை விட்டு விலகி, தானே ஒரு புதிய போட்டி நிறுவனத்தை ஆரம்பித்தார். அவர் தயாரித்த கணிப்பொறிகள் ஐபிஎம்-360 மென்பொருளுடன் ஒத்துப் போனதாலும், விலைக் குறைவானதாலும், வெற்றி பெற்றன.

ஐபிஎம்-300 க்கு முன்னர் வந்த கணிப்பொறிகள் மற்ற போட்டியாளர்களின் கணிப்பொறியுடன் ஒத்துப் போகாத வண்ணம் தயாரிக்கப்பட்டன, ஒரு முறை தன்னுடைய கணிப்பொறியை வாங்கியவர்கள் வேறு போட்டியாளர்களிடம் போய்விடக் கூடாது என்ற காரணத்தால் இப்படிச் செய்யப் பட்டது. ஆனால் ஐபிஎம்-300 வந்து வெற்றி பெற்ற பின்னர், அதை அடிப்படையாக வைத்து இந்தக் கணிப்பொறி ஐபிஎம்-ஓடு ஒத்துப் போகிறது என்று சொல்லியே பலக் கணிப்பொறிகளும், மென்பொருள்களும் வெளிவந்தன. இது ஐபிஎம்-கம்பேட்டபுள் என்று பெருமையாகக் கூறிக் கொண்டன. பின்னர் வந்த கணிப்பொறிகள் எல்லாமே இப்படி ஒத்துப் போவதை அடிப்படைத் தத்துவமாகவும் கொள்ளத் துவங்கின. (பில் கேட்ஸும் கூட பின்னாளில் இதே உத்தியைத் தான் பயன்படுத்தி ஐபிஎம் முதுகிலும் கொஞ்சம் குதிரைச் சவாரி செய்து தான் கணினி உலகில் தனக்கான ஒரு திருப்பு முனையையே ஏற்படுத்திக் கொண்டார்.) ஆனாலும் விலையிலும், அதன் அளவிலும் இன்னமும் ஏதுமொரு திருப்புமுனை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. இந்தக் காலக்கட்டத்தில் தான் கேட்ஸும் மெல்ல, மெல்ல உருப்பெற்றுக் கொண்டிருக்கிறார்.

1975-களில் நியூ மெக்ஸிகோவில் உள்ள ஆல்புகார்க்கி நகரில் தான் பில் கேட்ஸ் முதன் முதலில் தொழில் முறை ஒப்பந்தமிட்டு நிரல் எழுதிய மிட்ஸ் கம்பெனி இயங்கி வந்தது. அது தான் உலகின் முதல் விலைக் குறைந்த பெர்ஸன்னெல் கம்ப்யூட்டரையும் (அல்டெய்ர்-8800 என்ற நாமகரணத்துடன்) அறிவித்தது. அல்டெய்ர் பற்றி படோடபமாய் விளம்பரம் கொடுத்து விட்டாரே ஒழிய அதன் கம்பெனி முதலாளி எட்ராபெர்ட்ஸ், அவருக்கும் அதை எப்படி நிறைவேற்ற போகிறோம் என்பது உண்மையிலேயே தெரியாது.. மக்களிடம் அதாவது அந்தக் காலக்கட்டங்களில் தொழில் நுட்ப ஆர்வலர்களிடம் இதன் ஒரே கவர்ச்சி ஈர்ப்பு அம்சம் என்னவென்றால் அது வரை கணினி என்றாலே அளவிலும் (சைஸிலும்,) விலையிலும் பிரமாண்டதாய் இருந்ததை சுருக்கி, நடுத்தர மக்களும் வாங்கத் தக்க ஒரு பொம்மை விலை, (397 டாலர்) அளவை அறிவித்திருந்தது தான்.

மற்றபடிக்கு அதில் கீ போர்டும் இல்லை, மவுஸ் மானிடரும் இல்லை. இருந்தவை எல்லாம் 4000 கேரக்டர்களை (256 பைட்ஸ்-இன்றைய பி.சி-க்கள் 8 மில்லியனுக்கும் மேற்பட்ட கேரக்டர்களை நினைவில் வைத்துக் கொள்ளத் தக்கவை.) நினைவில் வைத்துக் கொள்ளத்தக்க 8080 சிப், 16 முகவரி ஸ்விட்சுகளும், 16 எல்இடி பல்புகளும் கொண்ட ஒரு பெட்டி மட்டுமே. அதற்கென ஒரு மென்பொருள் கூடக் கிடையாது. அதற்குத் தான் மைக்ரோ கம்ப்யூட்டர் என்று நாம கரணம் சூட்டி, பத்திரிக்கைகளில் படாடோப விளம்பரமும் கொடுத்திருந்தார். எப்படி எந்த தில்லில்***** இதை விற்று விடலாம் எனத் தீர்மானித்து விளம்பரம் கொடுத்திருந்தாரோ ராபெர்ட்ஸ் தெரியவில்லை.

உண்மையில் நாம் இந்த இடத்தில் நாம் (நாம் என்றால் ஓட்டு மொத்த மனித குலமும்) நன்றி சொல்வதென்றாலோ அல்லது சபிப்பதென்றாலோ அது எதுவாக இருந்தாலும், எட் ராபெர்ட்ஸுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். அல்லது சபிக்க வேண்டும். காரணம் பில் கேட்ஸ் போன்ற அறிவாளிகள் ஒரு வியாபாரியாக வெற்றி பெற்றது என்பது ஒரு விஷயமே இல்லை. ஏனெனில் அதற்கான திறன், அறிவு, குறிப்பாகத் வியாபார, தொழில் நுட்ப அறிவு, ஒரு மேதைமை என்பது அவரிடம் போதும் போதும் எனச் சொல்லும் அளவுக்கு, ஏராளமாகக் கொட்டிக் கிடந்தது. ஆனால் எந்த ஒரு தொழில் நுட்ப அறிவும் இல்லாது வெறும் வன்பொருள் சம்பந்தமான ஒரு சிறு பராபரியான அறிவை மட்டும் வைத்துக் கொண்டு இப்படி ஒரு அறிவிப்பைத் துணிந்து, “மைக்ரோ கம்ப்யூட்டர்” எனப் பத்திரிக்கைகளில் கொடுத்து விட்டுத்தில்லாக ஒருவர் இருக்க முடியுமானால், அது எப்படியும் சரித்திரத்தில் மீண்டும் ஒரு எட் ராபெர்ட்ஸாய் தான் இருக்க முடியும். “எப்படியும் வறுமைக்குப் பொறந்த ஒரு இளிச்சவாய் அறிவாளியாவது, வராமல் தான், போய் விடுவானா என்ன? என (இதை அவர் அறிந்து தெரிந்து, புரிந்து தான் செய்தாரா? அல்லது எதுவும் புரியாமலேயே, தெரியாமலேயே, அறியாமலேயே ஏதோ ஒரு குத்து மதிப்பாகக் குருட்டுப் பூனை இருட்டில் குதித்ததைப் போல இறங்கிச் செயல்படுத்தினாரா என்பது அது வேறு) எதிர்பார்த்து யூகித்துக் காத்திருந்ததைப் போல, என்னமோ இந்திய இதிகாசங்களில் வருமே சில இதிகாசக் கதாப்பாத்திரங்கள், அது போலவே, ஏதோ சொல்லி வைத்துக் காத்திருந்ததைப் போல ஒரு பில் கேட்சுக்காகக் காத்திருந்தார் பாருங்கள் அது தான் கொஞ்சம் விசித்திரமானது, புதிரானது. இந்தத் துறையில் ஏற்படும் வினாடிக்கு வினாடி, மாற்றங்கள், வளர்ச்சிக் குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்ளத் துடிக்கும் மற்ற சக அறிவாளிகளின் ஆர்வம் ஒன்றையே மட்டும் பிரதானமான ஒரு மூலதனமாய், தூண்டிலாய் போட்டுக் காத்துக் கொண்டிருந்த, ஒரு தூண்டில்காரனைப் போலவே காத்துக் கொண்டிருந்திருக்கிறார் பாருங்கள், இது தான் சரித்திரப் புகழ் பெறத் தக்க ஒரு விஷயம், சம்பவம், இடம், மனிதர்.

ஏனெனில் அல்டெய்ரில் பயன்படுத்திய இண்டெல்லின் 8080 பிராசசரைக் கொண்டு என்ன செய்ய முடியும்? அல்லது என்ன செய்ய முடியாது என்பதை உலகப் புகழ் பெற்ற, மூர்ஸ் விதியைக் கணினி உலகிற்களித்த, கோர்டன் மூரே கூடக் கணிக்க முடியாத ஒரு விஷயத்தை, சந்தைப்படுத்த! ஒருவர் துணிந்திருக்கிறார் அங்கே என்றால் இங்கே தான் வரலாற்றின் உண்மையான நையாண்டி ஒளிந்திருக்கிறது என்றும் அர்த்தம். அவர் மார்க்கெட்டிங்க் செய்தது உண்மையில் இன்டெலின் 8080 ப்ராசசரை மட்டுமல்ல. கூடவே ஒட்டு மொத்த அமெரிக்க மென்பொருளாளர்களின் ஆர்வ உணர்ச்சியையும் சேர்த்தே அவர் மார்க்கெட்டிங்க் செய்துள்ளார்.
மென்பொருளாளர்களின் ஆர்வ உணர்ச்சியின் ஊற்றுப் பெருக்கு என்பது, சாதாரண பொது மக்களுக்கும் பயன் அளிக்கத் தக்கப் பெரும்பெரும் கண்டுபிடிப்புகளை உருவாக்கும், அந்தப் பெரும் பெரும் கண்டுபிடிப்புகள் தான், உண்மையில் மிகப் பெரிய ஒரு வியாபாரச் சந்தையை உருவாக்கும் என்ற அளவுக்கெல்லாம் நீட்டித்து யோசித்து உணர முடிந்த ஒரு நுட்ப வியாபாரியல்ல தான் எட் ராபெர்ட்ஸ் என்ற போதிலும், தன்னையும் அறியாமல், அல்லது அறிந்தோ அல்லது அறியாமலோ பில் கேட்ஸை இந்த உலகத்திற்கு கண்டுபிடித்துத் தர, வரலாற்றில் அந்த இடத்தில் சரியான ஒரு தூண்டில்காரனைப் போலக் காத்திருந்துள்ளார் பாருங்கள் அது தான் (என்னைப் பொறுத்த வரை,) வரலாற்றுப் புகழ் பெற வேண்டிய ஒரு நிகழ்வு.
“எங்களிடம் அந்தப் பத்திரிக்கையில் வந்த கட்டுரை மட்டும் தான் இருந்தது. மைக்ரோ கம்ப்யூட்டர் பற்றி வேறு எந்த விவரமும், தகவலும் கிடையாது. அதைக் கண்ணாலும் கண்டது கிடையாது. ஒன்று நாங்கள் அந்தக் கட்டுரையைத் தவறாகப் படித்துப் புரிந்து கொண்டிருந்தாலும் சரி, அல்லது அந்தக் கட்டுரை தவறாக இருந்திருந்தாலும் சரி அவ்வளவு தான்…..” பில் கேட்ஸ் பேட்டி தாங்கிய, பீப்பிள் பத்திரிக்கையில் தான் இப்படியொரு குறிப்புக் வெளியாகிறது.
ஒரு புறம் மனித உணர்ச்சிகளைக் கொன்று அது மரத்துப் போய், நாளும், நாளும் ஒரு வாழும் இயந்திரத்தைப் போல மனித குலத்தை மாற்றிக் கொண்டிருக்கிற இன்றைய முதலாளித்துவம், தனது பல அற்புதக் கண்டுபிடிப்புகளுக்காகவே ரொம்பவும் இறுமாந்து கொள்ளுகிற உலக முதலாளித்துவத்தின் சாஸ்த்திரியக் களம், இன்னொரு புறம் இயந்திரங்களுக்கு மனிதனைப் போலவே சிந்திக்கிற தன்மையை மட்டுமல்ல உணர்ச்சியையும் சேர்த்துப் புகட்டுவதில் ஒருவேளை வெற்றி அடைந்தால்….? இது இந்த நிகழ்வு, அது விரும்பித், திட்டமிட்டுப் பெற்ற வெற்றியாகவே தான் வர வேண்டும் என்பது கூடயில்லை, விரும்பாமலே, எதிர்பாராமலே, வரும் விபத்தைப் போலக் கூட இது நிகழலாம்…..ஹாலிவுட் சயின்ஸ் பிக்சன் படங்களில் மட்டுமே நிகழும் அத்தகைய தொழில் நுட்ப விபத்துகள் என்பது நிஜ உலகத்திலும் நாளை நடக்காது என்பதற்கு யார் என்ன உத்தரவாதத்தைத் தர முடியும்? அப்போது அத்தகைய ஒரு நாள் வரும் போது நிஜமாகவே நாம், கேட்ஸையும், எட்ராபெர்ட்சையும் போற்றிப் புகழ் மாலை போடுவோமா? அல்லது தூற்றிச் சபித்து, வசை மழை பொழிவோமா?

ஆனால் பாப்புலர் (மெக்கானிக்ஸ்?!) எலெக்ட்ரானிக்ஸ் விளம்பரம் பார்த்து விட்டு அதற்கு ஆர்டர் கொடுத்த, புதிய தொழில் நுட்பங்களின் மேல் ஆர்வம் உள்ள தொழில் நுட்ப ஆர்வலர்களின் எண்ணிக்கை மட்டும் என்னவோ நூற்றுக்கணக்கில் குவிந்து விட்டது. அதைப் பார்த்த எட்-ராபெர்ட்ஸுக்கும் ஒரு பயம். வாடிக்கையாளர்கள் (அதாவது புதுமைகளின் மீது, புதிய தொழில் நுட்பங்களின் மீது, மாளாத காதல் கொண்ட அந்த முதல் சுற்று புதுமை விரும்பி வாடிக்கையாளர்களை, அவர்களை சாதாரண சராசரிப் பொதுமக்கள் திரளுடன் பொதுமைப்படுத்துவது கூட மிகப் பெரும் தவறு.) அவர்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் அல்டெயிரில் இல்லை என்றால், அதைத் திருப்பியனுப்பி விட்டு, “எங்கள் பணத்தைத் திருப்பிக் கொடு” எனக் கேட்கவும் தயங்க மாட்டார்கள். http://www.jeyamohan.in/81190#.VlndS_m6bqA

அந்த முதல் சுற்று, அல்லது முதல் அலை வாடிக்கையாளர்களின் கோபத்திலிருந்து தப்பிக்க வேண்டுமானால், பெரிய கம்ப்யூட்டர்களில் இருக்கும் விஷயங்களை அல்டெயிர்க்குள்ளும் கொண்டு வந்தால் தான் ஆயிற்று! ஆனால் எப்படி? அவரோ அதற்கான வழிமுறைகள் எதுவும் தெரியாத சாதாரண ஒரு வியாபாரி மட்டும் தான். அல்டெய்ரை எப்படி ஒரு வெற்றிகரமான கம்ப்யூட்டர் ஆக்குவது என்று அவர் தன் மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் தான், கேட்ஸும் அவரது உயிர்க் கூட்டாளியுமான பால் ஆலனும் இதே நோக்கத்தோடு தங்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருந்தனர்.

இது வரை பெரிய சைஸ் கணிப்பொறிகளில் மட்டுமே, முதலில் குறைகளைக் கண்டுபிடித்தும், பின் இலவசக் கணினிப் பயிற்சிக்காகவும் மட்டுமே நிரல்களை எழுதியும், பயிற்சி பெற்றிருந்த பில் கேட்சும், பில் கேட்ஸின் ஆருயிர் நண்பர் பால் ஆலெனும் இந்தச் சிறிய ரக அல்டெய்ற்கும் ஒரு நிரல் எழுத ஆசைப்பட்டார்கள். அதனால் துணிந்து ஒரு பொய்யையும் அதாவது தங்களது அல்டெய்ர் கணிப்பொறிக்கான ஒரு மென்பொருளைத் தாங்கள் ஏற்கனவேயேத் தயாரிக்கத் துவங்கி விட்டதாகவும், அது தங்களுக்குத் தேவைப்படுகின்றதா எனத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுக் கேட்டும் விடுகின்றனர். அதன் மூலம் எட் ராபெர்ட்ஸ் வயிற்றிலும் ஒரு பாலையே வார்க்கின்றனர். நேரில் எடுத்துக் கொண்டு வர அழைப்பும் வர, கொஞ்சமும் தாமதிக்காமல் ஆலனை உடன் அழைத்துக் கொண்டு போய் எட் ராபெர்ட்ஸை நேரில் சந்திக்கிறார் கேட்ஸ்.

ஆலனை விட்டுப் பேசச் செய்து, தாங்கள் எப்படியும் அவருடைய மெசினுக்கு ப்ரோக்ராம் எழுதித் தருவதாக வாக்களித்து விட்டும் வந்து விடுகின்றனர். ஆனால் இங்கு இவர்களோ அல்டெய்ரை இன்னமும் கண்ணில் கூடக் காணாமல் எப்படி அதற்கு ஒரு மென்பொருளைத் தயாரிப்பது? ஆனால் தங்களது கடந்த கால அனுபவங்களைக் கொண்டு, எப்படியும் அதற்கொரு மென் பொருள் தயாரித்தளித்து விட முடியும் என்று நம்பியதால், அல்டெய்ர் பற்றிய அறிவிப்பு வெளி வந்த பத்திரிக்கை செய்திகளின் குறிப்புகளின் அடிப்படையில், அதன் இயங்கு முறையைப் பற்றிய உருப்படியான சிலத் துப்புகளை எப்படியோ ஒரு வழியாகக் கண்டறிகிறார்கள், அதை அப்படியே தங்களது ஹார்வர்ட் கல்லூரிக் கணினியான பிடிபி-10-லும் கொண்டு வந்து பிடிபி-10 ஐயே அந்த வேலைக்கேற்றது போல மாற்றிப் பயன்படுத்திக் கொள்வது எனத் தீர்மானிக்கிறார்கள்.

பேசிக் மொழியின் அடிப்படை சமாச்சாரங்களை எல்லாம் அல்டெயிருக்கேற்ற மாதிரி முதலில் மாற்றிக் கொள்கின்றனர். பின் ஒரு வழியாக எப்படியோ அல்டெய்ருக்கான முதல் “பேசிக் இண்டெர்ப்ரெடர்”-ஐ ரெடி செய்து, அதை பிடிபி-10 ல் வெற்றிகரமாக இயங்கவும் செய்கின்றனர். இதற்குள் இங்கே எட்ராபெர்ட்ஸோ, தினம் தொலைபேஸி வழியாக அரித்தெடுத்துக் கொண்டிருக்கிறார். “எங்களுக்கு ஒரு நாளைக்கு 10 கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன, அதனால் யார் எழுதினாலும், முதலில் எழுதுகிறவர்களுக்குத் தான் வாய்ப்பு” என்கிறார்.

ராபெர்ட்சிடமிருந்து கிடைத்த க்ரீன் சிக்னலில் இப்படியொரு குள்ளநரித் தனமான சிவப்பு சமிக்ஞை கிடைக்கவே மிகுந்த வேகத்துடன் தங்கள் தயாரிப்பை இரவும் பகலும் தூங்காமல் உழைத்து எப்படியோ ஒரு வழியாக தயார் செய்து, பின் அதை பால் ஆலன் வழியாகவேக் கொடுத்து விடுகிறார் பில். ஆனால் அந்த மென்பொருளோ அங்குள்ள அல்டெயிரில் வேலை செய்வேனோ என அடம் பிடிக்கிறது. மக்கர் செய்து கிராஷ்ஸ் ஆகியும் விடுகிறது. கடைசி நேரத்தில் தான் ஆலன், தாங்கள் ஒரு துவக்க நினைவூட்டியை (starter prompter) நிரல் (ப்ரோக்ராம்) செய்ய மறந்து விட்டோம் என்பதை உணர்கிறார். பின் எப்படியோ அதையும் சரி செய்து பால் ஆலன் பிரிண்ட் 2+2 என ஒரு கட்டளைக் கொடுக்க, எல்லோரும் கண்கள் அகல, விழி விரியப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அது அச்சாகிறது. பிரபஞ்ச ஆழத்தில் நிகழும் ஒரு புதிய நட்சத்திர ஜனனத்தைப் போல மைக்ரோ சாஃப்டின் ஜனனமும் அங்கேயே அப்போதே அந்தக் கணமே நிகழ்கிறது.

கடைசியில் ஒருவழியாக, கேட்ஸும் ஆலனும் தங்கள் பேசிக் மொழிக்கு மிட்ஸ் நிறுவனத்திடம் இருந்து 3000 டாலர்களும், பங்கு வீத உரிமையையும் (royalty) பெறுகிறார்கள். பின் நண்பர்கள் இருவரும் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்ட படி, பால் ஆலன் மிட்ஸில் மென்பொருள் மேலாளராகப் பணியில் சேர, கேட்ஸோ பேசிக்-கின் தனித்துவத்தைக் காபாற்றுவதற்காகவும், ஏற்கனவேயான தங்களது கனவுப்படியும், மைக்ரோ சாஃப்ட் என்ற அவர்களின் சொந்த நிறுவனத்திற்கு உரிமையாளராகவும் 1975-ஏப்ரல் 14 அன்று உருமாறுகின்றனர். பால் ஆலன் ஏற்கனவேயே மிட்சில் பணியாற்றும் சம்பளமும் சேர்த்துக் கிடைக்குமென்பதால் மைக்ரோ சாஃப்டின் வருவாயில் ஆலனுக்கு 40% மும், கேட்ஸுக்கு (மைக்ரோசாஃப்ட்டை மட்டுமே சார்ந்திருந்ததால் அவருக்கு) 60% என்றும் முடிவு செய்து கொள்கிறார்கள். அதைத் தொடர்ந்து மிட்சுடனான முதல் மோதலும் தொடங்குகிறது.

கேட்ஸும் ஆலனும் சேர்ந்து தயாரித்த பேசிக் மொழி மிட்ஸ், மைக்ரோசாப்ட் இரண்டு கம்பெனிகளுக்கும் பொது உரிமமான சொத்தாக இருந்த போதிலும், கேட்ஸும் தமது வக்கீல் தகப்பனாரின் உதவியுடனேயே மிட்சுடனானான அந்த வியாபார ஒப்பந்தத்தை போட்டிருந்த போதும், மிட்ஸ் அங்கீகரித்தால் மட்டுமே மைக்ரோ சாஃப்ட் அந்த பேசிக்-ஐ மற்ற பிற கம்பெனிகளுக்கு விற்க முடியும் என்ற நிலையிருந்தது. அப்படி ஒரு குள்ள நரித்தனமான ஷரத்தை ராபெர்ட்டும் ஏற்படுத்தியிருந்தார் இந்த ஒரு ஷரத்தைப் பயன்படுத்திக் கொண்டு மிட்ஸின் முதலாளி எட் ராபர்ட் நிறைய குள்ளநரித்தனங்கள் செய்கிறார். மைக்ரோ சாஃப்ட் தனது சொந்த பேசிக்கை, தானே நினைத்தாலும் பிறருக்கு விற்க இயலாத படிக்கு எதேனும் ஒரு சாக்குப் போக்குச் சொல்லி, வருகிற கம்பெனி எல்லாம் வாங்க இயலாதபடிக்கு ஒரு முட்டுச் சந்தில் அடைக்கிறார். அல்லது அவர்கள் மயக்கம் போடும் ஒரு விலையைக் குறிப்பிடுகிறார்.

பின்னே?! தான் அனுபவிக்கிற அந்த அதே மென்பொருளைப் பிற நிறுவனங்களும், பயன்படுத்த ஆரம்பித்தால் தனது கணினி விற்பனை அல்லவா பாதிக்கும். இன்னொரு புறம் மென்பொருள் திருட்டும் கணஜோராக நடக்கிறது. அல்டெய்ரை வாங்கியவர்கள் அதன் மென்பொருளையும் திருட்டு நகலெடுத்து பயன்படுத்தப் போக, கேட்ஸ் மென்பொருள் திருட்டைக் கண்டித்து காரசாரமாக பத்திரிக்கைகளில் கடிதங்களும் எழுதுகிறார். ராபர்ட்ஸ் அதையும் கண்டித்து, “நீ எப்படி வாடிக்கையாளர்களை திருடர்கள் என விளிக்கலாம்?!” இப்படியெல்லாம் நீ எழுதினால் எந்த வாடிக்கையாளர்கள் நம் கணினியை வாங்க வருவார்கள்? என மல்லுக்கட்ட, தினம், தினம் கேட்ஸுக்கும், ராபர்ட்டுக்கும் மோதல் தான் அதிகரிக்கிறது.

மென் பொருள் திருட்டைக் கண்டித்து பத்திரிக்கைகளுக்கு கடிதம் எழுதியதால் யாதொரு பயனும் இல்லை. திருடுபவர்கள் தாங்கள் பாட்டுக்குத் திருடிக் கொண்டே இருக்க, மைக்ரோசாப்டின் பில்லுக்கு இதனால் கிடைத்த ஒரே பயன் என்னவென்றால் “மென் பொருள் உலகில் இந்த சிறு பொடிப் பையன் ஏதோ வித்தியாசமாக செய்து கொண்டிருக்கிறான் போல” எனும் ஒரு சிறு பப்ளிசிட்டிக் கிடைத்தது தான். இந்த இது போன்ற பப்ளிசிட்டி தான் பின்னால் ஐபிஎம் போன்றவர்களையும், மைக்ரோ சாஃப்ட் பக்கம் திரும்பிப் பார்க்க ஒரு உதவியைப் போல ஆனது என்றால் அதுவும் மிகையாகாது. அதே போல மிட்ஸின் எட் ராபெர்ட்டிடம் ஒப்பந்த விஷயத்தில் ஆரம்பத்திலேயே ஒரு கடுமையான பாடம், படிப்பனை பெற்றதால் தான் அதே தவறை அவர் பின் தன் வாழ்க்கையில் என்றுமே செய்து விடாத படிக்கும், வேண்டுமானால் எதிராளிகள் அத்தகைய ஒரு தவறு செய்தால் அதை கப்பென பிடித்துக் கொள்ள ஏதுவான ஒரு படிப்பினை அனுபவமாகவும் விளங்கியிருக்கிறது.

பேசிக் மென் பொருளை மற்ற பிற கம்பெனிகளுக்கும் விற்பதிலிருந்து கேட்சை ரொம்ப நாட்களுக்கும் தடுக்க முடியாது என்பதையுணர்ந்த ராபர்ட்ஸ் கடைசியில் தனது நிறுவனத்தை PERTEC எனும் நிறுவனத்திடம் ஆறரை மில்லியன் டாலர்களுக்கு விற்று விட்டும் சென்று விடுகிறார். மிட்சுடன் கேட்ஸ் போட்டிருந்த அந்த ஒப்பந்தமோ இன்னும் 10 ஆண்டுகளுக்குச் செல்லும். அதே ஒப்பந்தக் கத்தி இப்போது பெர்டெக் வசம். மைக்ரோசாப்ட்டுக்கு இப்போது விழி பிதுங்குகிறது. நீதி மன்றம் செல்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நிலை. இப்போது அதுவே நீதி மன்றம் செல்ல, நீதி மன்றத்திலும் பெர்டெக்குக்கே ஆதரவாய் தீர்ப்பு வரப் போக, கேட்ஸ் மேல்முறையீடுக்குச் செல்கிறார்.

ஒரு வழியாக அங்கு அந்த மேல்முறையீட்டில் தான் கேட்ஸுக்கு இருந்த அந்த ஒப்பந்த கத்தி விலகுகிறது. நீதி மன்றம் மைக்ரோசாப்ட், மிட்ஸின் அங்கீகாரத்திற்கு அவசியமில்லாமல் தனியாக அதற்கு விருப்பப்படுகிற கம்பெனிகளுக்கு எல்லாம் விற்றுக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பளிக்கின்றது. பில் கேட்ஸ் காட்டில் அதற்குப் பின் நடந்ததெல்லாம் ஒரே தொடர் பணமழை என்பது தான். இதே கால கட்டத்தில் (1977-களில்) ஆப்பிள், கமோடார், ரேடியோ ஷாக், டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் போன்ற நிறுவனங்களும் பி.சி தயாரித்து விற்க ஆரம்பித்தன. அவற்றிற்கெல்லாம் தேவைப்பட்ட தனது பேசிக் மென்பொருளை மைக்ரோசாப்ட்டும் விற்க ஆரம்பித்தது. சந்தையில் கிடைக்கும் மென்பொருளை வாங்குவதற்குப் பதிலாக பெரும்பாலான நிறுவனங்கள் பேசிக்கை உபயோகித்து தங்களுக்குத் தேவையானதைத் தாங்களே தயாரித்து வந்தனர். எனவே அன்றைய நாட்களில் பேசிக் மொழி மிகவும் தேவையான ஒரு மென்பொருளாய் இருந்துள்ளது.

அதில் தான் மைக்ரோசாப்ட் தனது பதாகையை உயர்த்திப் பிடித்தது. தனது பேசிக்கைப் பிற நிறுவனங்கள் ரெடிமேட் ஆகப் பயன்படுத்தும் வண்ணம் இடைவிடாமல் மெருகேற்றியும், மேம்படுத்தியும் வந்தது. மற்ற நிறுவனங்கள் அவர்களே தயாரிக்க நேர்ந்தால் அதிகப் பொருட் செலவும், கால தாமதமும் ஏற்படும் எனும் நிலையில், ஆனால் ஆர்டர் கொடுத்தால், அதே மென் பொருள் மைக்ரோசாப்டிடம் இருந்து, குறித்தக் காலக்கெடுவுக்கு முன்னேரேயும், ஓரளவுக் குறைந்தப் பொருட் செலவிலும், இருக்கும் இடம் தேடியும் வந்து கிடைக்குமென்றால் அப்புறம் ஏன் மைக்ரோசாப்டிடம் வாங்க மாட்டார்கள். பில் கேட்ஸின் மொத்த வாழ்க்கை வரலாற்றை பார்க்கும் போது, அவர் காலத்தில் இருந்த சாதாரண வியாபாரிகளுக்குக் கூட வேகமாக வளர்ந்து வரக் கூடிய இந்தக் கணினித் தொழிலில் விரைவில் ஏதோ பெரியதாக இந்தப் பிசினஸ் சூடு பிடிக்கப் போகிறது என்ற உள்ளுணர்வு இருந்திருக்கும் போல.

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே, இந்த இதே பிரக்ஞை, உள்ளுணர்வு, மிட்ஸின் எட் ராபர்ட் போன்ற சாதாரண வியாபாரிகளுக்குக் கூட இருந்த இதே உள்ளுணர்வு பெரிய பெரிய ஜாம்பவான் கம்பெனிகளுக்கே கூட இருந்திருக்க வில்லை. உதாரணமாக இன்டெல் கம்பெனி அதிபர்களில் ஒருவரும், மூர்ஸ் விதி புத்தக ஆசிரியரும் ஆன, கோர்டன் மூரே கூட மிட்ஸ் கம்பெனியின் அல்டெய்ர் மைக்ரோ கம்ப்யூட்டரை வெறும் பொழுதுப் போக்குக் கருவி என்று தான் வர்ணித்தார். அதன் உள்ளீடுகள் (inputs) இணைப்பு விசைகளின்றி வேறில்லை. வெளியீடுகள் (outputs) ஒளிரக் கூடிய எண் வெளியீட்டு அலகுகள் (LED-light emitting diodes) மட்டுமே என்பது அவர் கருத்து.

கேட்ஸைப் பொருத்தவரையிலோ அதை இயக்குவதே ஒரு பெரும் சவாலாகப் பட்டது. “அதைக் கொண்டு என்ன செய்யலாம், என்ன செய்ய முடியாது என்பதை அறிய முயற்சி செய்வதே, அதற்கு ஒரு மவுசைத் (அதாவது ஒரு பிரபல்யத்தை அப்போதெல்லாம் இன்னமும் மவுஸ் என்ற சாதனமே கண்டுபிடிக்கப் பட வில்லை. இந்த இடத்தில் நான் பயன்படுத்திய மவுசை என்ற அந்தப் பழைய வார்த்தையைக் கணினி மவுஸ் அர்த்தத்தில் தவறாகப் பொருள் செய்து கொள்ள வேண்டாம்) தேடித் தந்து விட்டது.

கேட்ஸிடம் இருந்த இந்த, “என்ன செயலாம் இதை வைத்துக் கொண்டு? அல்லது என்ன செய்ய முடியாது இதை வைத்துக் கொண்டு? என்ற இந்த ஆர்வத் தேடல் முயற்சி என்பது ஏதோ அல்டெய்ருக்காக மட்டுமே அவரிடமிருந்து கிளர்ந்தெழுந்த ஒரு புதிய குணமல்ல? அது அவரின் ஒரு ஆதார குணம். அது அன்றைய அமெரிக்க சிலிக்கான் பள்ளத்தாக்கு முழுக்கவே பரவியிருந்த ஒரு தேசிய ஆதார குணம் தான், அந்த ஆர்வம். அந்த ஆதார ஆர்வ குணம் தான் எட் ராபெர்ட்ஸ் போன்றவர்களைக் கூட மைக்ரோ கம்ப்யூட்டர் பக்கம் அவர் தொழில் முயற்சியைத் தள்ளிக் கொண்டு வந்திருந்தது. மைக்ரோ ப்ராசசரைப் பற்றிய அறிவு அப்போது அகல் விரிவாக, ஆழமாகப் பரவியிராத நேரம். ஒரு பேனா நுனி அளவே சிறிதாக இருக்கும் மைக்ரோ ப்ராசசரின் செயல் திறன் பெரிதாக இருக்கும் என நம்பப்பட்டது

ஆனால் இந்த அளவுக்கு விரைவில், ஒரு கட்டத்தில், பெரிய லார்ஜ் ஃபிரேம் கணினிகளுக்கே சவால் விடும் எனுமளவுக்கு அதன் திறன் அதிகரிக்கக் கூடும் என்பதை எல்லாம், முதலில் அதைத் தயாரித்த இன்டெல் கம்பெனி முதற்கொண்டு, எவருக்குமேத் தெரியாத நிலையில் தான் இன்டெலின் அடுத்தடுத்த தயாரிப்புகள் சந்தையை நோக்கி விரைகின்றன.

1972-ல் இன்டெல் நிறுவனம் தனது 8008 என்ற தனது மைக்ரோ ப்ராசசர் சிப்பை வெளியிடுகிறது. எலெக்ட்ரானிக்ஸ் இதழ் ஒன்றில் அதைப் பற்றி வெளி வந்திருந்த 10 பக்கக் கட்டுரை பால் ஆலனின் கண்களில் படுகிறது, கூடவே கேட்ஸின் கண்களிலும் தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா என்ன? 8008 –ஐப் பற்றிய அந்தப் பத்திரிக்கைக் கட்டுரையும் கூடக் கணக்குப் போடக்கூடிய, கட்டுப்படுத்தக் கூடிய, தீர்மானம் எடுக்கக் கூடிய கருவிகளில் பயன்படும் என்று தான் தெரிவித்தது. அதிக பட்சம் அது லிஃப்டிலும், கால்குலேட்டரிலும் பயன்படுத்துவதற்குத் தான் அது தகுதியாகவும் இருந்தது.

ஆனால் பின்னால் ஒரு பி.சிக் கணிப்பொறிக்கே அது ஒரு அடிபடையாய் அமையும் என அதை எழுதிய கட்டுரை ஆசிரியருக்கே அப்போதுத் தோன்றவில்லை, எதிர் பார்க்கவில்லை. 8008-க்கு ஏற்ற மென்பொருள் அப்போது இல்லையாதலால் நமது மைக்ரோ சாஃப்ட் ஹீரோக்கள் அதற்கு ஏற்ற ஒரு மென்பொருள் எழுத முடியுமா எனத் துடிக்கிறார்கள். இன்டெல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு எங்களுக்கு அதன் மேனுவலை அனுப்பமுடியுமா எனக் கேட்கப் போக, அவர்களே ஆச்சரியப்படும் விதத்தில் இண்டெலிடமிருந்து அதன் மேனுவல் (அதாவது செயல் விளக்கப் புத்தகம்) கிடைக்கிறது. இப்போது இருவரும் அதைப் படிப்பதிலேயே தங்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர். தனது உயர் நிலைப்பள்ளியில் பயன்படுத்திய பிடிபி-8 கணினிக்கு எழுதியதைப் போலவே, இந்த 8008-க்கும் ஒரு பேசிக் மென்பொருளை எழுதத் துடிக்கிறார்கள். ஆனால் அதன் மேனுவலைப் படித்துத் தெளிந்த பிறகு தான் அது சாத்தியமில்லை என்று முடிவு செய்கிறார்கள். அப்போது ஆலனுக்கு வயது 19, பில்லுக்கோ 16 தான்.

8008-ல் போதுமான டிரான்சிஸ்டர்கள் இல்லை. (அதிலிருந்த டிரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை 3500 மட்டுமே) தெரு விளக்குகளில் 8008-ஐப் பயன்படுத்த முடியுமா என்று யோசிக்கின்றனர். கடைசியில் சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட, (எவ்வளவு வாகனங்கள், எந்தெந்த நேரங்களில் கடந்தது, எனப் புள்ளிவிபரத்துடன் கணக்கிட) அது பயன்படுக் கூடும் என அதற்கொரு பயன்பாட்டைக் கண்டு பிடித்து விட்டுத் தான் ஓய்கின்றனர். தங்களது அந்தக் கண்டுபிடிப்பு சரிதான் என்பதை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பாக நகர நிர்வாகம் அளித்த அந்தப் சாலை வாகனக் கணக்கெடுப்புப் பணிக்காக ஒரு பிரத்தியோகக் கணிப்பொறியையே உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் அடைகிறார்கள். அதற்கான ஒரு சன்மானமாக 20,000 டாலர்கள் பணத்தையும் சம்பாதிக்கின்றனர்.

அடுத்து 1974-களில் இண்டெலிடமிருந்து 8080 ப்ராசாசர் வருகிறது. எலெக்ட்ரானிக்ஸ் பத்திரிக்கைகள் வாயிலாக அதன் செயல் திறன் 8008-ஐ விட 10 மடங்கு என அறிகிறார்கள். அளவும் பெரிதாக இல்லை. 8008-ஐ விட 8080-ல் 2700 டிரான்சிஸ்டெர்கள் அதிகம். 8080- பேசிக் எழுதப் பயன்படுமா எனப் பார்க்கின்றனர். அந்தச் சிப்பின் மேனுவலை வாங்கிப் பரிசோதித்துப் பார்த்த போது முடியும் என்று தீர்மானமாகிறது. இதை வைத்து ஒரு கணிப்பொறித் தயாரித்தால் 200 டாலருக்கே விற்கலாம், பிடிபி-8 விற்பனை அவ்வளவு தான், என உற்சாகக் குரல் எழுப்புவதோடு நின்று விடவில்லை. 8080-சிப்பிற்கான பேசிக் மென்பொருளைத் தயாரித்துத் தருவதாக எல்லாக் கணிப்பொறி நிறுவனங்களுக்கும் கடிதங்களும் எழுதுகின்றனர். ஆனால் யாரும் வாங்குவதாய் தெரியவில்லை. காரணம் அன்று யாருக்குமே நம்பிக்கை கிடையாது.

இந்தச் சிறிய சிப்புகளைக் கொண்டு ஒரு கணிப்பொறியே தயாரிக்கலாம் என்று எவருக்கும் ஒரு நம்பிக்கை வராத காலக்கட்டம் அது. இந்த நேரத்தில் தான் பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ் அட்டைப் படத்தில், படத்துடன் அல்டெய்ர் பற்றிய அறிவிப்பு, நண்பர்கள் இருவரையும் சுண்டி இழுக்கிறது. விடக்கூடாது. அந்த இடத்தில் நாம் இல்லாது அந்த அதிசயம் நடக்கக் கூடாது என மனதிற்குள் ஒரு தீச் சுவாலையே பற்றியெரிய, “இனி பொறுக்க நேரமில்லை, வேலையைத் துவக்குவோம் என அல்டெய்ருக்காக ஒரு பேசிக் மென் பொருள் எழுத முடியுமா எனப் பரபரக்கின்றனர், இறுதியில் இறுதி வெற்றியும் அடைகின்றனர்.

இத்தனையையும் ஏன் இவ்வளவு விரிவாக, விரித்துக் கூறவேண்டியிருக்கிறது என்றால், “இதனை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? அல்லது என்ன செய்ய முடியாது என்ற ஒரு தெளிவுக்கு வருகிறோம் பாருங்கள் அது தான் இங்கு மிக முக்கியம் என்பதை வலியுறுத்தவே. இதனை என்பது இந்த இடத்தில் கண்ணுக்குத் தெரிகிற ஒரு ஜடப் பொருளாய் இருக்கலாம், அல்லது புறக் கண்களால் பார்க்க முடியாத, அகக் கண்களால் உருவகித்துப் பார்க்க மட்டுமே முடிந்த ஒரு கருத்தாய், தகவலாய்க் கூட இருக்கலாம். கேட்ஸின் கதையைப் பொருத்தவரை அது ஒரு ப்ராசாசர் (சிலிக்கான்) சிப்பு. அதை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்ன செய்ய முடியாது என அதைத் தயாரித்த நிறுவனத்திற்கே ஓரளவு தான், “ஒரு குத்து மதிப்பாய் தான் சொல்ல முடிந்த நேரத்தில், ஒரு இடி, மின்னலைப் போல ஆலன் கேட்ஸ் இவர்களின் யூக, ஹேஸ்யங்கள் பலிக்க நேர்ந்தது என்பது தான் சரித்திரத்தின், “ஒரே நிகழ்வு திரும்பத் திரும்ப நிகழ்வது” என்ற அடிக்கடி நிகழும் சரித்திரத்தின் அந்த விதியை பற்றிய ஒரு நினைவலையை எழுப்புகிறது.

கேட்ஸின் வாழ்க்கையும், ஏன் நம் எல்லோருடைய வாழ்க்கையும் மேற்கண்ட அந்த சரித்திர விதிக்கு உட்பட்டதே. அல்லது கேட்ஸின் வாழ்க்கையிலும் நுணுக்கமாகத் தேடினால் அத்தகைய சரித்திர விதியின் விசித்திரப் புலப்பாட்டை நாம் அவதானிக்க நேரலாம் என்று தான் சொல்ல்த் தோன்றுகிறது. இந்த இதே விதியை அப்படியே ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் சமூக அறிவியல் துறையிலும் பார்க்கலாம். குறிப்பாக ‘குடும்பம், தனிச் சொத்து, அரசு இவற்றின் தோற்றம்” நூலின் ஆசிரியர் எங்கெல்சின் புத்தக விஷயத்தை எடுத்துக் கொண்டால், அதன் முன்னுரையிலேயே (பக்-13,14-களில்) இத்தகைய ஒரு விதியைக் காணலாம். ஒரு உதாரணத்திற்காகத் தான் அதை இங்கு குறிப்பிடுகிறேன். அதைக் கூட அப்படியே அவரின் வார்த்தைகளிலேயே தருவது தான் இங்கு சரியான முறையாய் இருக்க முடியும். எனது இந்தக் கருத்துக்கு ஒரு தர்க்கப் பொருத்தப்பாடு, (அல்லது ஒரு தர்க்க அடிப்படை) உள்ளதா இல்லையா என்பதை சம்பந்தப்பட்ட பக்கங்களை படித்துச் சோதிப்பதன் மூலம் இதைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரும் கூட அவர்களே அதைச் சோதனை செய்தும் பார்த்துக் கொள்ளலாம்.

,

நான் இங்கு என்ன சொல்ல வருகின்றேன் என்பதை, சற்றுக் கஷ்டப்பட்டாவதுப் படித்துப் புரிந்து கொள்ள முடிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

“ நான் சொல்ல வந்த மையக் கருத்துக்கும், அதாவது மனித விந்தனுக்கள் திருடப்பட முடியும் என்பதற்கும், அப்படித் திருடப்பட்டால் அதை நிரூபிப்பதற்கான ஒரு தடய அறிவியல் பரிசோதனை முறைக் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா என்பதற்கும், பில் கேட்ஸின் வாழ்க்கை வரலாற்றுக்கும் நெருங்கிய ஒரு வரலாற்றுத் தொடர்பு இருப்பதாலேயே, அவரது வாழ்க்கை வரலாற்றை மட்டுமல்ல, அதனோடு பின்னிப்பிணைந்த அவர் கால தொழிற் துறையையும், மற்ற துறையைச் சேர்ந்த அவர் கால சம பிரபலங்களையும் சேர்த்தேக் கூடக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதாகிறது. மற்றக் கோடீஸ்வரர்களுக்கும், பில் கேட்ஸுக்கும் இடையே அடிப்படையிலேயே ஒரு பெரும் வேறுபாடு உள்ளது. ”

மற்றெல்லாக் கோடீஸ்வரகளின் உச்சத்துக்கும் பின்னால் குறைந்த பட்சம் அவர்களது சொந்த தகப்பன்மார்களாவது, ஏற்கனவேயே ஒரு சிலத் தலைமுறை உழைப்பையாவது கொடுத்துக் கொட்டித் தான் அவர்களே, அதாவது அந்தத் தகப்பன்மார்களே ஏற்கனவேயே ஒரு கோடீஸ்வர நிலையை எட்டியிருப்பார்கள், மகன்மார்கள் அதை இன்னும் கொஞ்சம் உயரத்திற்குத் தூக்கிக் கொண்டு சென்று ஒரு உயரத்தில் வைத்திருப்பர். இதற்கே குறைந்த பட்சம் ஒரு ரெண்டு, 3 தலைக்கட்டாவது ஆகியிருக்கும். ஆனால் பில் கேட்ஸ் மட்டுமே அப்படிப்பட்டப் பாரம்பரியக் கோடீஸ்வரப் பின்னணிகள் எதுவும் இல்லாமலேயே சாதித்தவர். வாரன் பஃப்பெட்டும், (இன்னும் மற்ற சிலரும்) இதே இலக்கணத்தைக் கொண்டிருந்தாலும் கூட, பில் கேட்ஸ் அளவுக்கு, இவ்வளவு இளம் வயதிலேயே அதைச் சாதித்தவர்களாய் அவர்களாலும் விளங்க முடியவில்லை. 39-ஏ வயதில் உலகின் முதன்மைக் கோடீஸ்வரர் என்ற ஸ்தானத்தை, அதுவும் முதல் தலைமுறையிலேயே அடைந்தவர்கள் இதற்கு முன் யாரேனும் உலக சரித்திரத்திலேயே, மனித குலத்திலேயே இருக்கிறார்களா என்றால், பதில் இல்லை என்றே வருகிறது.

அப்போது அவர் மேல் எந்தளவுக்கு ஒரு பொறாமை கிளம்ப வாய்ப்பிருந்துள்ளது என்பதைச் சிறிதளவு, ஒரு சிறிதளவு சிந்தித்தோமேயானால் கூடப் போதும். பிரபஞ்சத்தின் வரம்பு வேகத்திற்குத் தான் (ஒளிக்கு) எப்போதும் வரம்பற்ற ஒரு தடை, அதை இழுத்துப் பிடிப்பதற்காக விழையும்,

எல்லாவற்றையும் விஞ்ச விரும்பும் ஒன்று, எல்லாவற்றாலும் தடுத்து இழுத்துப் பார்க்கப்படும் என்ற பிரபஞ்ச நியதிக்கு கேட்ஸ் மட்டும் என்ன, விதி விலக்கா என்ன என்பதே எனது கேள்வி!? அதுவும் சதுர அடிக்கு 4000 அறிவாளிகள் உள்ள மேற்கு அரைக் கோளத்திலா இது நடந்திருப்பதற்கு ஒரு வாய்ப்பு இருந்திருக்காது?

கண்டிப்பாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது. அதனால் தான் அப்படி நடந்திருந்தால், அதன் எதிர் விளைவாய் என்ன நடந்திருக்கும் என்று கூடவே மற்றொருத் துணைத் தேடலும் எழுகிறது. அந்தத் தேடல் தான் எனது பழையக் கின்னஸ் மறுதலித்த ப்ரோபோசல் ஒன்றின் பக்கம் இழுத்துச் செல்வதாலேயே இதை முதலில் தமிழ் கூறும் நல்லுலகின் முன் வைத்து உறுதிப்படுத்திக் கொள்ள மனம் விழைகிறது.

(ஐபிஎம்- மைக்ரோ சாஃப்ட்டோடு தொழிற்கூட்டு ஒப்பந்தத்திற்காக வந்து வியாபாரம் பேசிய போது) பில்லின் கண்கள் முழுக்க நிரம்பியிருக்க முடிந்ததெல்லாம் ஆர்வ பயம் (பயமும் ஆர்வமும் கலந்த ஒரு கலவை உணர்வு) ஒன்றாய் மட்டுமே இருந்திருக்க முடியும். எப்படியாவது இந்த ஒப்பந்தத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே, என்ன தகிடு தத்தம் செய்தாகினும் என்ற ஆர்வபயம் மட்டுமே இருந்திருக்க முடியும். அதுவரை அப்ளிகேஷன் (பயன்பாட்டு) மென்பொருளில் மட்டுமே கில்லியாக இருந்த மைக்ரோ சாஃப்ட், ஐபிஎம்-பொசுக்கென தனது கணினிக்கான ஆபரேட்டிங் சாஃப்ட் வேரையும் நீங்களே ஒரு கைபட எழுதி விடுங்கள் என்றதும் எழுந்திருக்குமே பாருங்கள் ஒரு பயம் அதன் கண்களில், அந்தக் கண நேரப் பயத்தைக் கருத்துடன் யூகிக்க முடிந்தால், அதனோடு ஒப்பிடுகையில் ஐபிஎம்-ன் ஆத்திரக் குருடு ஒன்றும் அவ்வளவு பெரியதல்ல என்றே கூடக் கணிக்கத் தோன்றும்.

முதலில் ஐபிஎம் மாதிரி கம்பனிகளிடமிருந்து ஒரு அழைப்பு வராதா என்று ஏங்கிக் கொண்டிருந்த ஒரு நிலை எங்கே?!, அதுவே பின்னால் அந்த வாய்ப்பு, தானாகப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலக் கிட்டியதும், வாய்ப்புக் கிட்டியதும் மைக்ரோ சாஃப்ட் நடந்து கொண்ட முறை எங்கே? இரண்டுக்கும் இடையே ஒரு அதல பாதாள இடைவெளியையே அல்லவா காட்டுவதாய் உள்ளது. ஒரே ஒரு தவறான ஒப்பந்தத்தின் மூலம், இந்த உலகத்திலேயே, “சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொண்ட கதைக்கு” ஒரு சாஸ்த்திரிய உதாரணமாகவே அல்லவா ஐபிஎம் மாறிப் போய்விட்டது.

ஐபிஎம்-ன் அன்றைய நிலையை ஒரு சதுரங்க விளையாட்டு வீரனின் நெருக்கடி கால அவசர நகர்த்துதலுடன் தான் ஒப்பிட முடிகிறது. தனக்குரிய தனது கடிகார நேரத்தை ஏற்கனவேயே நிறைய செலவு செய்து விட்ட, ஒரு சதுரங்க வீரனோடு தான் ஒப்பிட இயலுகிறது.

“தேவைப்படக் கூடிய நேரத்தை ஏற்கனவேயே செலவு செய்து விட்டதால், கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ள இயலாத, நேர நெருக்கடியில் சிக்கிவிட்ட ஒரு சதுரங்க விளயாட்டு வீரனின் மனநிலையோடு ஒப்பிடுவதா? அல்லது அப்படிப்பட்ட ஒரு நேர நெருக்கடியிலும் கூட சற்று, சற்றே சற்று நிதானம் கொண்டு ஆடியிருந்தால் வெற்றியடைந்திருந்தாலும் வெற்றியடைந்திருக்கலாமோ எனுமளவுக்கு நிதானமின்மையால், நிலைகுலைந்ததால், வெற்றியைத் தவறவிட்ட ஒரு சதுரங்க வீரனோடு ஒப்பிடுவதா? அல்லது ஒரு விஷயத்திற்காக, காலம் கடந்த நிலையில் அணுகி, காலத்தை வீணாய் வீணடித்ததற்காக, அந்த கால விரையத்திற்காக செலுத்திய ஒரு விலை தான் ஐபிஎம் அடைந்த அந்த நஷ்டம் என்று சொல்வதா?!. யோசிக்க, யோசிக்க, பின்னனியில் பல விஷயங்கள் தோன்றி எழுந்து புலப்படுவதை உய்த்துணரலாம். ஆழ்ந்து யோசித்தால் பிந்தையது தான் முழுக் காரணம் என்பது புரியும்

ஆனாலும் இந்தப் பதஷ்ட்டம், நெருக்கடியிலும் கூட ஐபிஎம் மட்டும் சற்று, சற்றே சற்று நிதானித்துக் கொண்டு, விழிப்புணர்வுடன் அவ்வொப்பந்த வரிகளை அணுகி இருந்திருந்தால் மைக்ரோ சாஃப்ட்-ஐ அதன் ஆரம்ப நிலையிலேயே கூட சற்று கட்டுபடுத்தியிருக்கலாமோ என்னவோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

ஐபிஎம் மட்டும் மைக்ரோ சாஃப்டுடன் ஆன தங்களது முதல் ஒப்பந்ததிலேயே கொஞ்சம் விறைத்துக் கொண்டு “இது எங்களுக்காக உருவாக்கப்பட்ட ஓஎஸ். எதிர் கால்த்திலும் இதன் முழு உரிமையும் எங்களுக்குத் தான் சேர வேண்டும்”. என்று நெருக்கியிருந்தால், பில் கேட்ஸுக்கும் கூட வேறு வழியிருந்திருக்காதோ என்னவோ? விட்டுக் கொடுத்தாலும் விட்டுக் கொடுத்திருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. அல்லது அந்த எதிர் கால முற்றுரிமையில் முழுவதும் இல்லாது போனாலும், ஒரு பகுதியளவையாவது நியாயமாக ஐ.பி.எம்-க்கு என்ன பங்கு செல்ல வேண்டுமோ அந்தளவுக்கு உள்ள பங்கையாவது போனால் போகிறது என விட்டுக் கொடுக்க மைக்ரோ சாஃப்ட்டும் முன் வந்தாலும், முன் வந்திருக்கக் கூடுமோ என்னவோ? ஆனால் ஐபிஎம் தனது எதிர் கால நிலைமை பற்றியே அப்போது சிந்திதததெரியவில்லை.. எதிர் காலம் பற்றி மட்டுமல்ல, அந்த சரத்துகளை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டு, விட்டால், நிகழ் கால நிலைமையே தகிடுதத்தமாகி விடும் என்பதையும் கவனிக்கத் தவறிவிட்டது,
ஆனால் ஒரு மென் பொருள் தயாராகி, அது வெற்றியடைந்த பின்னர் அல்லது வெற்றியடைவது கேரண்டி, உறுதி என்ற பின்னர் தான் ஒப்பந்தத்தைப் பற்றியே பேச்சு எழுகிறது. மேலும் ஒரு வன்பொருளின் வெற்றி என்பது இறுதி நிலையில் அதற்கேற்றது போன்ற ஒரு மென் பொருளின் வெற்றிகரமான ஒத்திசைவில் தான் உள்ளது. ஆக இந்த இது போன்ற கூட்டு முயற்சிகளில் ஒரு மென் பொருளாளர் நினைத்தால், ஒரு வன்பொருள் தொழில் நுட்பத்தை உரித்தெடுக்கப்பட்டப் பிராய்லர் கோழி போல, வன்பொருளின் தோற்ற வடிவமைப்பை மட்டுமல்ல ஓரளவு உள்ளடக்கத்தையும் கூட முழு நிர்வாணம் போல இல்லையென்றாலும் முக்கால் நிர்வாணத்தையாவது பார்க்க முடிவதைப் போல ஒரு சூழல் எழுகிறது. அதே அளவு உண்மையுடன், மிக எளிதாக கண்ணால் பார்த்தே அனைத்தையும் தெரிந்து கொள்ளுமளவுக்கு, ஒரு வன்பொருளாளர் மென்பொருள் தொழில் நுட்பம் அனைத்தையும் அவ்வளவு எளிதாகத் தெரிந்து கொள்ள முடியாது. மென்பொருள் தொழிலின் இயல்பே அப்படி, “ மறைத்து வாழ்ந்ததால் மறையவர் ” என்ற பட்டம் பெற்ற இந்திய பிராமணர்களைப் போன்றது. அது ஒரு கூட்டு முயற்சி என்ற போதும், அது ஒரு மென்பொருளாளாருக்குத் தான் சாதகமானது
ஒரு மருத்துவரிடம் தனது உடல் உள்ளுறுப்பை மறைக்க இயலாத கையறு நிலையிலுள்ள நோயாளி போலத் தான். நோய் நீங்கி இயல்பான இயங்கு நிலைக்குத் திரும்ப வேண்டுமானால் ஒரு நோயாளி மருத்துவனிடம் எதையும் மறைக்க இயலாது. அல்லது இந்தச் சட்டச் சிக்கலிலிருந்து எப்படி மீள்வேன் எனத் தெரியாது வரும் வழக்கறிஞனின் ஒரு கட்சிக்காரரோடும் ஒரு வன்பொருளாளலரை ஒப்பிடலாமோ எனத் தான் தோன்றுகிறது. ஏனெனில் மனித குலம் இன்று அது எந்த நாடு, மொழி, இனத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் சரி, இந்த இருவரிடத்தில் (மருத்துவர், வழக்கறிஞர்) தான் நெருக்கடியான நேரங்களிலாவது எதையும் மறைக்காமல் உண்மையையே பேசி ஆக வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது.

தன்னிடம் வரும் தனது நோயாளியோ, அல்லது தனது கட்சிக்காரரோ அவர் தன்னிடம் உண்மையாக நடந்து கொள்ளும் அதே அளவுக்கு ஒரு மருத்துவரோ, அல்லது ஒரு வழக்கறிஞரோ தனது நோயாளியிடமோ, கட்சிக்காரரிடமோ நடந்து கொள்கிறார்களா எனப் பார்த்தால்……? (நடந்து கொண்டால் நல்லது தான் ஆனால் நடைமுறையில்….?)
மற்ற பொறியியல் துறைகளுக்கும், மின்னணுப் பொறியியல் தொழில் துறைக்கும் இடையே உள்ள மிகப் பெரிய பெரும் ஒரு ஆதார வேறுபாடு. மற்ற பொறியியல் துறைக் கல்வியைக் வெறும் கண்களால் பார்த்தேக் கூடக் கற்றுக் கொள்ள முடியும் என்றால், மின்னணுப் பொறியியல் துறையை அப்படிக் கண்களால் பார்த்தேக் கற்றுக்கொள்ள முடியாது என்பதில் தான் இதன் தனிச் சிறப்பே உள்ளது. மனக் கண்களால் யூகித்து உருவகித்துப் பார்க்கும் ஒரு திறன் இருந்தால் தான் நன்கு சிறப்புறக் கற்றுக்கொள்ள முடியும் ஒரு துறை. மனக் கண்களால் வெறுமனே யூகித்து உருவகிக்கக் கற்றுக் கொண்டால் மட்டும் போதாது, யூகித்து உருவகித்ததை, ஊர்ஜிதம் செய்து கொள்வதற்கு, அளந்து அறிய வேண்டியவற்றிற்குக் கணிதத்தை, தர்க்க அறிவைப் பயன்படுத்தக் கூடிய ஒரு திறனும் வேண்டும். மொத்தத்தில் ஒரு உண்மையான அறிவியல் படைப்பாக்க நடவடிக்கை வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.
மற்ற பொறியியல் துறைகளை எல்லாம், புற உலகிலிருந்து புற உலகின் காட்சிகளை, தகவல்களை மூளைக்குள் செலுத்துதல் என்றால், மின்னணுப் பொறியியல் துறையைப் பொறுத்தவரை மூளைக்குள் இருப்பதை வெளியுலகிற்கு கொண்டு வருவது, வெளிப்படுத்துவது என்று கூடப் பொருள் கொள்ளலாம். அதாவது மின்னணுப் பொறியியல் என்றால் என்ன எனத் தான் ஏற்கனவே கற்றுத் தேர்ந்தவைகளைப் (படித்துப் புரிந்து, உள்வாங்கி, உருவகப்படுத்தி தனது மூளைக்குள் வைத்துள்ள அந்த முதல் அடிப்படைப் புரிதல் அடிப்படையில் தான் அடுதடுத்தப் புரிதல்கள், கண்டுபிடிப்புகள் நடைபெற்றாக வேண்டும். ஆக அந்த முதல் பிம்பமே கோணல் என்றால் பின் அதற்கப்புறம் எழும் அனைத்துப் பிம்பங்களுமே கோணல் தான். ஆனால் இதே ஒரு இயந்திரப் பொறியியலிலோ, கட்டுமானப் பொறியியலிலோ ஒரு படைப்பு நடந்து கொண்டிருக்கும் போதோ, அல்லது நடைபெற்று முடிந்த நிலையிலோ கூட அதை வெறும் கண்களால் பார்த்தேக் கூட ஒரு கணிசமான அளவுக்குக் கற்றுக் கொள்ள முடியும், அதே பொழுது மின்னணுப் பொறியியல் அப்படியல்ல.
எரிபொருளும்,(fuel) கோர்த்தினைப்பும் (assembling) சரியாய் இருந்தால் போதும், இயக்கத்துக்கு எப்படியும் கொண்டு வந்து விடலாம் என்பதற்கு மின்னணுப் பொறியியல் என்பது வெறும் காரோ, பைக்கோ, கப்பலோ, விமானமோ கூட அல்ல. அதையும் தாண்டியது, புனிதமானது” என்றக் “குணா“ ப்பட கமல் டையலாக் போன்றது எனத் தான் சொல்லத் தோன்றுகிறது. இயக்கம் மட்டுமல்ல, மீண்டும் ஒரு மறுபுத்துருவாக்கத்திலும் இதே தான், ஒரு முறைப் பார்த்தால் போதும், அப்படியே ஈ அடிச்சான் காப்பி அடிச்சான் கதைக் கணக்காகவோ, ஆணைக்கு அர்ரம் என்றால், குதிரைக்கு குர்ரம் கதைக் கணக்காகவோ ஒப்பேற்றிவிடலாம் என்றால் அது எதுவும் இங்கே செல்லாது எனும் படிக்கான துறை இது. அதைத் தனது பெயரிலேயே நிரூபிக்கவும் செய்யும் துறை. தனக்கான ஒரு சிறப்பு அர்த்தத்தைத் தனதுப் பெயரிலேயே பொதிந்து வைத்துக் கொண்டுள்ள துறை இது.

என்றைக்கேனும் உங்களது பள்ளி, கல்லூரி நாட்களில், உங்களது பௌதிக ஆசிரியரை நோக்கி, ஏன் ஸார், “எலெக்ட்ரானும் அணுக் குடும்பத்துக்குள் ஒரு துகள் தான், எலெக்ட்ரானைப் போலவே, ப்ரோட்டான், நியூட்ரானும் ஒரு துகள் தான். ஆனால் அவற்றின் பெயரிலெல்லாம் எலெக்ட்ரானிக்ஸைப் போல ப்ரோட்டானிக்ஸ், நியூட்ரானிக்ஸ் என ஒரு துறையே ஏன் அறிவியலில் வளரவில்லை? அல்லது அப்படியே போட்டானிக்ஸ், நியூட்ரினோ ஆராய்ச்சி போன்ற ஒரு சில துறைகள் வளர்ந்திருந்தாலும் எலெக்ட்ரானிக்ஸ் அளவுக்கு ஒரு ராட்சச வளர்ச்சி அடையவில்லையே அது ஏன்?” இப்படிக் கேட்டு, அதற்கு சரியான பதில் விளக்கமும் பெற்றுள்ளீர்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இது போன்ற கேள்விகளுக்கான பதில், மின்னணு மிகச் சிறியது எடையிலும் அளவிலும், என்பது மட்டுமல்ல அது தன்னிடம் ஒரு அறிமுக அட்டையையும் வைத்துள்ளது என்பது தான்.

அதாவது மிகத் துல்லியமான எதிர் மின்னூட்டம் கொண்டது எதிர் மின்னணு. அது 1.6X10-19 குலோம்புக்கு சமமானது. இதே அளவு நேர் மின்சக்தி அணு உட்கருவில் உள்ள ப்ரோட்டானுக்கும் உள்ளேதென்றாலும் அணு உட்கருவில் உள்ள ப்ரோட்டானின் நிறை மின்னணுவைப் போல 1000 மடங்குகளுக்கு மேல். (நியூக்லியசுக்குள் இருக்கும் வரை) மின் சுமையற்ற நியூட்ரானின் நிறையோ 1840 மடங்கு அதிகம். உட்கருவை விட்டு வெளியேறும் சமயங்களில் தவிர்த்து உட்கருவிலேயே இருக்கும் வரை அது மின் சக்தி ஏதும் வெளிப்படுத்தாத நடுநிலையிலேயே உள்ளது. மேலும் மின்னணு ஒன்றின் நிறையும் I கிராம் எடையை விட 1027 மடங்கு குறைவானது. 1 மில்லி மீட்டர் ஐ விட 4 X1011 மடங்கு சிறியது. அணுகருவை ஒரு வினாடிக்கு 500 ட்ரில்லியன் தடவை வலம் வருவது. இவ்வளவு விரைவாய் நகர்வதால் தேய்மானம் ஏதாவது அடைய வாய்ப்பு உள்ளதா என்று பார்த்தால் அப்படி ஏதும் கிடையாது. வேண்டிய அளவுகளில், வேண்டிய மட்டும், குறைவறக் கிடைப்பது.

மேலும் காலத்தை ஒரு நொடியில் பத்து லட்சத்தில் ஒரு பங்கு அளவுக்கோ, அல்லது ஒரு நொடியின் பத்துக் கோடியில் ஒரு பங்கு அளவுக்கோ அவ்வளவு துல்லியமாக அளக்கக் கூடியது. யாரேனும் ஒருவர் காலத்தை அவ்வளவு துல்லியமாக மின்னணுவியலைப் பயன்படுத்தாமல் அளக்க விரும்புகிறார் எனவும் அதற்கு ஒரு நிறுத்து கடிகாரத்தின்(stop clock) உதவியைப் பயன்படுத்த எண்ணியுள்ளார் என்றும் கொள்வோம். உண்மையில் நமது நிறுத்துக் கடிகாரங்களைக் கொண்டு அதைச் சாதிக்க முடியுமா? அதனுடைய முள் ஒரு நொடியில் ஒரு முழுச் சுற்று சுற்றி விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். மற்றும் அதன் வட்டச் சுற்றளவின் ஒரு மில்லி மீட்டர் ஒரு நொடியின் பத்து லட்சத்தில் ஒரு பங்கு என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்தக் கடிகார டயலின் வட்டச் சுற்றளவு ஒரு கிலோ மீட்டர் ஆகவாவது இருக்க வேண்டும். அதன் விட்டம் 300 மீட்டராவது இருக்க வேண்டும்.
ஒருவேளை அதனது முள் ஒரு சுற்றை ஒரு மைக்ரோ வினாடியில் முடிக்க வேண்டுமானால் அது வினாடிக்கு 10 லட்சம் சுற்றுகளாவது சுற்ற வேண்டியிருக்கும். இந்த கடிகாரத்தின் எந்திரத் தொகுதியை (அதாவது அதன் பற்சக்கரங்களை) நொடிக்கு நூறு சுற்று சுற்றும் ஒரு மின் மோட்டார் கொண்டு இயக்க வேண்டுமானால் ஒரு உயர் வழி (ஸ்டெப் ஆஃப் கியர்) பற்சக்கரம் தான் பயன்படுத்தப்பட்டாக வேண்டும். 1 செ.மீ. விட்டமுள்ள ஒரு சக்கரத்தோடு இந்த மைக்ரோ நிறுத்துக் கடிகாரத்தின் முள்ளை இணைப்பதாய்க் கொள்வோம். முள் இணைக்கப் பட்ட சக்கரம் 1 செ.மீ. விட்டம் எனில் அதோடு இணைக்கப் பட வேண்டிய மோட்டாரோடு இணைக்கப் பட்ட சக்கர அமைப்பின் விட்டம் 100 மீ. ஆவது இருக்க வேண்டும். ஒரு நூறு மீட்டர் பற் சக்கரத்தை ஒரு நொடிக்கு நூறு சுற்றுகள் சுற்ற வைக்க வேண்டிய ஆற்றல் எவ்வளவு தேவைப்படும். முடிவு பெரும் புதிராகும். ஒரு சிறிய மைக்ரோ வினாடியை அளக்கக் கற்பனைக்கெட்டாத ஆற்றல் தேவைப்படுகிறது. ஆனால் அணுக்கருவில் வலம் வரும் ஒரு மின்னணு ஒரு வினாடிக்குள் தனது அணுப் பாதையை 500 டிரில்லியன் தடவை சுற்றி முடித்து விடுகிறது. அதன் இந்தப் பண்பு காரணமாகத் தான் ஒரு நொடியின் பத்து லட்சத்தில் ஒரு பங்கு அல்லது பத்துக் கோடியில் ஒரு பங்கு அளவுள்ள ஒரு குறைந்த காலத்தைக் கூட அளக்க முடிகிறது, அதுவும் அற்ப ஆற்றல் செலவிலேயே. இதன் இந்தப் பிரமாண்ட வேகம் காரணமாகத் தான் அதைக் கணக்கீடுகளில் முதலிலும், பின் மெல்ல, மெல்ல எது ஒன்றையும், பேச்சொலி முதல், காணொளிக் காட்சி வரை எது ஒன்றையும் அதனை டிஜிட்டல் பைனரி வடிவத்திற்கு மாற்ற முடியும் என்ற நிலை காரணமாக எல்லா இடங்களிலும் இதன் ஆதிக்கம் வியாபித்தது.
எத்தனை தான் பணச் செலவை இதற்காக ஐபிஎம்-மும் செய்திருந்தாலும், மைக்ரோ சாஃப்ட் துணை இன்றி அது குறிபிட்ட அந்தக் கால இடைவெளிக்குள் (ஒரு வருடத்திற்குள்) என்னதான் குட்டிக்கரணம் அடித்திருந்தால் கூட ஐபிஎம்-ஆல் தன்னந்தனியாக இதைச் செய்து முடித்திருக்க இயலாததாகையால் அதன் எதிர் கால முற்றுரிமையில் தனக்கொரு பங்கைக் கேட்கப் போய். நிகழ் காலத்தில் இருப்பதையும் இழந்து விட்டால்….?! இப்படிப்பட்டப் பயம் ஐபிஎம் தரப்பிலும் எழுந்திருக்கலாம். ஆனால் எனக்கெனவோ இந்த பயம் அவசியமற்றது என்றே கூறுவேன். அன்றைய நிலையில் ஐபிஎம்-முக்கே தனது சொந்த சுய பலம், பெரிய நிறுவன பலமாய் அதன் சொந்த சுயபலம் புரியாது போனதோ என்னவோ? ஒரு சிறிதளவாவவது ஒரு பங்கைக் கோரியிருக்கலாம் தான். ஏன் 50:50 ஷேருக்கேக் கூட நெருக்கியிருக்கலாம் தான்

ஆனால் அதற்கு இருந்த ஆத்திர, அவசரத்தில் எதிர் காலத்தில் என்ற வார்த்தையே ஒரு இக்கான்னா, அது ஒரு பொய், ஒரு சூழ்ச்சிப் பொறி வார்த்தை என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டது. அல்லது கவனிக்காதது போல பாசாங்கு செய்திருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் கூட எழுகிறது. கடைசி நேரத்தில் கேட்ஸின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளாவிடின் கேட்ஸும் அந்த ஒஸ்-ஐ கொடுக்க மறுத்து விட்டால் பின் வேறு யாரிடம் தான் போய்க் கேட்பது? ஆக ஐபிஎம் பயந்ததிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஐபிஎம் இல்லாவிட்டாலும், கேட்ஸின் மென்பொருளை இனித் தடுக்க முடியாது. வேண்டுமானால் கொஞ்ச காலத்துக்கு தாமதப் படுத்தலாம். அவ்வளவு தான்.

இவை எல்லாம் கால தாமதமாகத் தெரிய வந்த scp கம்பெனி வழக்கு மன்றத்துக்கு போகிறது. ஆனால் அங்கோ மீட்டருக்கு மேல் ஏதாவது போட்டுக் கொடுங்க சாமி-னு கெஞ்சுகிற சென்னை (யின் போன தலைமுறை) ஆட்டோகாரருக்கு போடற டிப்ஸ் பிச்சை போல அமெரிக்க நீமன்றம் 9,25,000…-டாலர் நஷ்ட ஈடு வழங்குமாறு தீர்ப்பளிக்கிறது. ஆனால் எஸ்.ஸி.பி யின் ஓ.எஸ்-ஐப் பயன்படுத்தி பில் கேட்ஸ் சம்பாதித்ததோ மில்லியனையும் தாண்டி பல பில்லியன்கள்.

அடுத்து, மைக்ரோ சாப்ட் மீது ஆப்பிள் கம்ப்யூட்டர் ஒரு உரிமை மீறல் வழக்குத் தொடர்ந்த ஆண்டு 1991ம் ஆண்டு. ஐ.சி.எஸ்.ஐ கண்டுபிடிப்பு பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு 1992 ஆம் ஆண்டு. பில்கேட்ஸின் மைக்ரோ சாப்ட் பங்குகள் சட சட வென உயர்ந்து கேட்ஸ் அமெரிக்காவின் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆனதும் இதே ஆண்டு தான். (அப்போது அவருக்கு இன்னமும் திருமணமாகியிருக்கவில்லை என்பது வேறு கவனிக்கத்தக்க ஒரு விஷயம்).

திருமணமே இன்னும் ஆகாததால் அதற்குள் கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஆக கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளாத ஒரு கோடீஸ்வர ஆண் கிட்டுவதென்பது ஒரு ஐ.சி.எஸ்.ஐ துஷ்பிரயோக முயற்சிக்குக் கிடைத்த ஒரு கிடைத்தற்கரிய வரம் போன்ற வாய்ப்பல்லவா? ஆக கேட்ஸ் விஷயத்தில் (அடி ஆழத்தில்) நடந்தது ஒரு வேளை இது தானோ?!

அடுத்த இரண்டே வருடங்களில் அதாவது கேட்ஸ்-இன் 39-வயதில். (1994-ல்) கேட்ஸின் திருமணம் நடக்கிறது. பின் 2000-ல் மைக்ரோ சாப்ட்டிற்கு எதிராக கிளிண்டனின் (அமெரிக்க) அரசே வழக்கும் தொடுக்கிறது. அதன் ஏக போக ஆதிக்கத்திற்கும் ஒரு வரம்பு கட்ட முயல்கிறது. சர்ச்சைகள் எழுகின்றன.

“மைக்ரோ சாப்டை இரண்டாக உடைக்க முடியாது. வேண்டுமானால் அமெரிக்க நீதித்துறையை இரண்டாக உடைத்து விடலாம்”

என்கிறார் அந்த நேரத்து அமெரிக்க செனட் சபை பெரும்பான்மைத் தலைவர். உண்மையில் அது ஹாஸ்ய உணர்வுக்காக அப்படி சொல்லப்பட்டதா? அல்லது உண்மை நிலையே அது தானா? உண்மையில் மைக்ரோ சாப்டை இரண்டாக உடைக்க இயலாதவாறு அமெரிக்க செனட்டைத் தடுத்த விஷயம் எது ?

ஐயா, வெளியில் அதன் ஏகபோகத்திற்கு ஒரு கட்டுப்பாடு, அங்குசம் விதிக்கப்பட வேண்டும் என்ற தார்மீகக் காரணம் காட்டப்பட்டாலும், ஒட்ட வைக்கப்பட்டாலும் உண்மையில் உள்ளுக்குள் அடி ஆழத்தில் ஓடும், ஓடிக் கொண்டிருக்கும் (எனது சந்தேகம், யூகம், ஒரு வேளை சரியாக இருக்குமேயானால்) உண்மை நிலவரம் தான் என்ன? ஒரு வேளை எனது புதிய புரபோசல் சந்தேகிப்பது போல உண்மையிலேயே கேட்ஸின் விந்தணுக்களே கூட அவருக்கே தெரியாமல் திருடப்பட்டு விட்டதோ?

ஐ.சி.எஸ்.ஐ துஷ்பிரயோகத்திற்கான முதல் கள பலியாக அவரையேக் கூட ஒரு பகடையாக பயன்படுத்திவிட்டார்களோ என்னவோ?! அப்படி அவர் ஒருவர் தானா? அல்லது இப்படி ஒரு பெரும் பட்டியலே உள்ளதா? ஆம். அப்படித் தான் எனில், அது ஏன் கிளிண்டனின் விவகாரம் போல ஏடுகளில் செய்தி ஊடகங்களில் ஒரு வெளிச்சத்திற்கு வரவில்லை? இயல்பாகவே கேள்வி எழுகிறது. ஆனால் பதில் வெளிப்படை.

முதலில் எந்த பத்திரிக்கை முதலாளி அதை பிரசுரித்து விட்டு உடலில் உறுப்பு குறையாது இருக்க முடியம்?! ஏன் உயிரோடேயே இருக்க முடியுமா?! என்ன?! என்பதுவே ஒரு கேள்விக்குறி. மேலும் பத்திரிக்கை முதலாளியும் ஒரு வகையில் ஒரு குட்டி முதலாளி தானே? நாளை அவருக்கே அந்தக் குட்டிப் பூர்ஷீவா முதலாளிக்கே இப்படியொரு நிலை ஏற்படாதென்பதற்கும் என்ன நிச்சயம், உத்தரவாதம் அளிக்க முடியும்?.

அமெரிக்க ஜனாதிபதியாகவே ஒருவர் இருக்கும் பட்சத்திலும் கூட அமெரிக்கப் பெரும் முதலாளி வர்க்கத்தினரோடு ஒப்பிடும்போது, அவர் அமெரிக்காவின் வல்லமை படைத்த ஒரு மனிதர் என்று கூறி விட முடியாது. அதாவது (அங்கும்) 4 முதலாளிகள் பார்த்து நிர்ணயிப்பது தான் அரசாங்கம் என்பதே. அதாவது அமெரிக்க ஜனாதிபதி என்பவர் ஒரு வகையில் அமெரிக்க முதலாளி வர்க்கத்தின் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என்று கூடக் கூறலாம். சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான “Confessions of an Economic hit man” நூலாசிரியர் ஜான் பெர்க்கின்ஸனின் ஒப்புதல் வாக்குமூலமே இதற்கு நல்ல சாட்சி. பெர்க்கின்ஸ் கூறிய படி உண்மையில் அமெரிக்கா ஒரு சக்கரவர்த்தி இல்லாத சாம்ராஜ்யம் தான். அமெரிக்காவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அங்குள்ள சில மாபெரும் நிறுவனங்கள் தான்.

ஆக அமெரிக்க தேசம் அரசு என்பது சாராம்சத்தில் ஒரு வகையில் அமெரிக்க முதலாளிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு பொம்மலாட்டம் என்று கூடக் கூறலாம். அப்படியிருக்க யார் பலசாலி? என்ற ஒரு துவந்த யுத்தம் ஏற்படுமேயானால் (பகுதியளவு மக்கள் செல்வாக்குடனும், பகுதியளவு பெரு முதலாளிகளின் ஆதரவோடும் ஆட்சி கட்டிலில் அமரும் அமெரிக்க ஜனாதிபதியா? அல்லது மக்கள் திரளின் மீதும் அரசியல் வாதிகளின் மீதும் தமது பண பலத்தால் மறைமுக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பெரு முதலாளிகளா? யார் பலசாலி என்ற கேள்வி எழுமானால் களத்தில் வெல்வது, வென்று கொண்டிருப்பது எப்போதும் ஒரு வர்க்கமாகவே, அது முதலாளி வர்க்கமாகவே இருக்கும்.

மேலும் உடைமைக்கான, ஏக போகத்துக்கான ஆதிக்கப் போட்டியில், தான் முதலாளி வர்க்கம் தமக்குள் அடித்துக் கொள்ளுமேயொழிய தமது சொந்த வர்க்கத்தின் பொது நலனுக்கே ஆபத்து என்று வரும்போது அவ்வர்க்க நலன்களின் அஸ்திவாரத்துக்கே ஒரு பெரும் ஆபத்து. குந்தகம் என வரும் போது ஓரணியில் திரண்டு அதை ஒற்றுமையுடன் எதிர்க்கவும் எப்போதும் தயங்கியதேயில்லை. கேட்ஸின் விஷயத்தை (ஒரு வேளை அவரது விந்தணுக்கள் திருடப்பட்டிருக்கும் பட்சத்தில்) ஏன் அதை செய்தி ஊடகங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரவில்லை என்பதை இந்தப் பின் புலத்தைக் கொண்டு பார்த்தால் அப்போது புரிந்து கொள்ளலாம்.

மேலும் கிளிண்டன் கூட மோனிகா விஷயத்தில் அற்ப அளவாவது சம்பந்தப்பட்டிருந்தார். வழக்கு மன்றத்தில் மிகவும் அவமானகரமாக மாட்டிக் கொண்டதும் அவரது தவறை அவரே ஒத்துக் கொள்ளவும் செய்தார். ஆனால் கேட்ஸ் விஷயத்தில்….?! அப்படிக் கேட்ஸ் மீது பகிரங்கமான செக்ஸ் புகார் வழக்குகள் என்று ஏதுமில்லை. அவர் போன்ற [மேலும் (இக்ஸி) ஐ.சி.எஸ்.ஐ முறை இவரிடம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் எந்த ஒரு நபர் விஷயத்திலும் கூட], அவர் உலகின் கோடீஸ்வரராகவே இருக்க வேண்டியதில்லை. கோவணாண்டியாகவே அவர் இருக்கும் பட்சத்திலும் கூட, செய்தி ஊடகங்கள் எப்படி அவசரப் பட்ட விதத்தில் ஒரு பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொள்ள முடியும்?

ஒரு வேளை சம்பந்தப்பட்ட நபர் உண்மையிலேயே குற்றமிழைக்காதவராய் ஐ.சி.எஸ்.ஐ துஷ்பிரயோகம் செய்யப்பட்டவராய் இருக்கும் பட்சத்தில், அது நிரூபணம் செய்யப்படவும் வழி இருக்காத நிலையில் அவசரப்பட்டு இது விஷயம் செய்தி ஊடகங்களால் வெளிச்சத்துக்குள்ளாக்கப்பட்டால், அவர் அடைய இருக்கும் அவமானம் மன வேதனை, உளைச்சல் எத்தகையதாய் இருக்கும்? அவரது மன உளைச்சலுக்கு மான நஷ்டத்திற்கு என்ன விலை கொடுக்க முடியும்? இக்காரணங்களையும் கூடுதலாக முன் நிறுத்தி யோசித்துப் பார்க்கும்போது அப்போது நாம் புரிந்து கொள்ளலாம் ஏன் விஷயம் வெளிப்படையாக வெளியாகவில்லை என்று!

ஆனால் விஷயம் வெளிச்சத்துக்கு வரவில்லையென்பதாலேயே, இக்சி எனப்படும் ஐ.சி.எஸ்.ஐ சிகிச்சை முறை துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்காது என்ற சந்தேகத்திற்கிடமில்லாத ஒரு நிச்சய முடிவுக்கும் நாம் அவசரப்பட்டு வந்து விடத்தேவையில்லை. அதிலும் கேட்ஸ் போன்றவர்களிடம் ஏன் ஐ.சி.எஸ்.ஐ முறை துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கக் கூடாது ? என்பதற்கான சந்தேக முகாந்திரங்களை நாம் நிச்சயம் அவ்வளவு சுலபத்தில் தூர ஒதுக்கிவிடத் தேவையில்லை. காரணம் மைக்ரோ சாப்டின் வளர்ச்சி வரலாறும் அப்படிப்பட்டதே அதற்கேயுரிய அதற்கான பகை முகாந்திரங்களையும் முகாம்களையும் (தொழில் முறை எதிரிகளை)யும் அது நிறைய சம்பாதித்துக் கொள்ளாமல் இல்லை.

மைக்ரோ சாப்டிடம் தங்களது எதிர்காலத்தை இழந்த நிறுவனங்கள் அமெரிக்காவில் ஏராளம். போர்லண்ட், லோட்டஸ், வேர்டு பர்ஃபெக்ட் மற்றும் நோவல் எனப் பட்டியல் நீளும். அவை வலிமை மிக்கதாக இருந்த காலங்கள் உண்டு. ஆனால் மைக்ரோப்ட்டின் பார்வை பட்டதும் நொண்ட ஆரம்பித்து விட்டன. ஆரம்பத்தில் மைக்ரோசாப்ட்டே, IBM ன் பி.ஸிக்காக ஒரு (இயங்கு தளம்) செயற்படு பொறியமைவு (operating system) தயாரிக்கும் வாய்ப்பை பெற்று தான் முன்னணிக்கு வந்தது. ஆனால் மைக்ரோசாப்டே பி.ஸி தயாரிக்க திட்டமிட்டதும் மோசமான உணர்வுகள் தோன்றி இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டது.

பங்கு சந்தையில் IBM ன் பங்குகள் சரிவுற்று மைக்ரோசாப்ட்டின் பங்குகள் மளமளவென்று உயரவும் பின்னால் இதுவே வழிவகுத்துவிட்டது. அதிலும் 1993ம் ஆண்டில் IBM பங்குகளின் விலை அதனுடைய மதிப்பில் 67% என்ற அளவுக்கு சரிந்து அதளபாதாளத்துக்குச் சென்று தான் மீண்டும் எழுந்து வந்தது. தீவிரமான புனரமைப்பு வேலைகளை செய்து தான் கம்யூட்டர் துறையில் எப்படியோ அது தாக்கு பிடிக்க வேண்டியதாயிற்று. ஒரு கட்டத்தில் IBM உடனான உறவை சீர் செய்யும் நோக்கில் கேட்ஸும் தன்னுடைய மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து 10% பங்குகளை வழங்க முன் வந்ததையும் கூட ரோஷத்துடன் நிராகரித்து விட்டது. அப்போது 10 கோடி டாலர்களை முதலீடு செய்திருந்தால் 1997ல் அது ஆயிரம் கோடியாகி இருக்கும். IBM ன் இழப்பு காயம் எத்தகையது என்பதற்கு இதுவே ஒரு சிறு சேம்பிள்,

இல்லையென்றால் சன் மைக்ரோசிஸ்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கேரி ரிபாக் (சிலிகன் பள்ளத்தாக்கு வழக்கறிஞர்) “மைக்ரோ சாப்ட் தின்று தீர்க்க விரும்புவது எங்களது மதிய உணவையல்ல எங்களது மாமிச பிண்டத்தையல்லவா கேட்கிறது” எனப் பேட்டியளித்திருக்க மாட்டார். மைக்ரோ சாஃப்ட் ஒரு குள்ள நரி போன்றது என்றும், அது தனது கூட்டாளிகளை ஆற்றைக் கடந்து கொண்டு போய், அடித்துத் தின்று விடும் என மற்றையோரால் விமர்சனம் செய்யப்பட்டிருக்காது.

மட்டுமல்ல மைக்ரோசாப்டுடன் தொழிற் கூட்டு என்பது யானையுடன் நடனமாடுவதற்கு ஒப்பாகும் என்றெல்லாம் சாப்ட்வேர் வல்லுநர்களால் விமர்சிக்கப்பட்டிருக்காது. ஆக தகவல் யுகத்தின் “கட்டுகடங்காத முரடன்” என்றழைக்கப்பட்ட இந்த கேட்ஸை எப்படியாவது ஏதாவது ஒரு வழியில் கட்டி வீழ்த்த முடியாதா? அதற்கு வாய்ப்பு கிட்டாதா? எனத் தேடும் நிலைக்கு கூட வந்து விட்டார்கள் அவரது எதிராளிகள அந்த அளவுக்கு அவரது எதிராளிகளை ஒரு உசுப்பு உசுப்பி விட்டிருந்தார்கள், கேட்ஸம் அவரது மைக்ரோசாப்ட் நிறுவனமும் என்றால் இதுவும் கூட மிகையல்ல. பில் மீது பொறாமை என்பதை விட பில்லோ போபியா என்ற வார்த்தை தான் பொருத்தம். பொறாமைக்கும் அப்பால் ஒரு பயம், வெறுப்பு இருந்திருக்கிறது அவர் மீது அந்த காலகட்டத்தில் அவரது எதிராளிகளுக்கு. அதனால் தான் இக்ஸித் துஷ்பிரயோகத்திற்கான முதல் களபலியாக ஏன் கேட்ஸே கூட இருந்திருக்கக்கூடாது எனக் கேட்கிறேன்.

இந்த இடத்தில் எனக்கு புகழ்பெற்ற பொதுவுடமை வகைப்பட்ட வாசகம் ஒன்று தான். (அநேகமாக மார்க்ஸினுடையதாகத்தான் இருக்கக்கூடும்) நினைவுக்கு வருகிறது. அதை அப்படியே அவர் வார்த்தைகளிலேயே தருவது தான் இங்கு சாலப் பொருத்தம்.

“இருக்கின்ற உறவுகள் ஒரு நிகழ்வை அவசியப்படுத்துகின்றன என்பதை நிரூபித்து விட்டால், எத்தகைய வெளிப்புறச் சந்தர்ப்பங்கள் அதை மெய்யாகவே தயாரிக்கின்றன என்பதையும், ஏற்கனவே அது தேவையாக இருந்தாலும் இன்னமும் அதைத் தயாரிக்க முடியாதிருக்கின்ற சந்தர்ப்பங்களையும் கண்டறிவது இனியும் கஷ்டமான காரியம் அல்ல”.

கணினி உலகில் மைக்ரோ சாப்ட் உடனான, மைக்ரோ சாப்டால் பாதிக்கப்ட்ட மற்ற நிறுவனங்களின் தொழில் வகைப்பட்ட உறவு என்பது, ஒரு நிகழ்வை, அதாவது கேட்ஸை எப்படியாவது கட்டுப்படுத்தியே தீரவேண்டும் என்ற ஒரு நிகழ்வை அவசியப்படுத்தின என்றால், அதை நிரூபிப்பதற்கு மேற்குறிப்பிட்டது மாதிரியான (பார்க்க பக்கம்… பத்தி… வரி) விபரங்களே போதுமானதாகும். எத்தகைய வெளிப்புறச் சந்தர்ப்பங்கள் அதை மெய்யாகவே தயாரிக்கின்றன, தயாரித்திருக்க முடியும் என்பதற்கு, இக்சி துஷ்பிரயோகம் போன்ற ஒரு விஷயத்தையும், ஏற்கனவே அது தேவையாக இருந்தாலும், இன்னமும் அதை தயாரிக்க முடியாதிருக்கின்ற சந்தர்ப்பங்களை கண்டறிவது இனியும் கஷ்டமான காரியம் அல்ல என்பதற்கு, கேட்ஸிடம் உதவி எதிர்பார்த்து ஏமாந்த அவரது செயலாளினி, அல்லது அந்த செயலாளினி போன்றே உதவி எதிர்பார்த்து ஏமாந்து போன இன்னும் சில வேறு பெண்கள் யாராவது இருந்தால் அத்தகைய நபர்களின் ஒரு பெரும் பட்டியலையும். அந்த ஏமாற்றம் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகளில் தேவைப்படும் அவர்களது முழு ஒத்துழைப்பு போன்றவற்றையும் நாம் இங்கு இனங்காட்ட முடியும், ஒப்பிட முடியும். நம்மால் அப்படி ஒரு பெரும் பட்டியலைச் சுட்டிக் காட்ட முடியாது போனாலும் அப்படிப் பட்ட சாஸ்திரிய உதாரணங்களுக்கு ஒரு வகை மாதிரியாக வாவது பின் வரும் இந் நிகழ்ச்சியை சுட்டிக் காட்ட முடியும்.

***இன்னும கொஞ்சம் விரிவாகவேப் பார்ப்போம். இணையத்தில் கன்னித் தன்மையை ஏலம் விடுகிற கல்லுரிப் பெண்கள் கிடைக்கிற இந்த நவீன இணைய யுகத்தில், இந்த இது போன்ற வேலைகளுக்கெல்லாம் வெளிச் சந்தையிலேயே நிறைய வாடகைத் தாயார்கள், (ஏன் கன்னிப் பெண்களே) கிடைப்பார்கள் என்ற போதிலும், அதற்கும் கூட அதிக அவசியம் இல்லை, இவரது சொந்தக் குண நலன்களே போதும் அதற்கு எனச் சொல்லத்தக்க அளவுக்கு அவரது ஆரம்ப கால மன உரு, சகிப்புத் தன்மையும் நெகிழ்வுத் தன்மையற்றதாகவும் இருந்ததையும் (அதோடு சற்று கடுகடுப்பையும் மூர்க்கத்தனத்தையும் கூட உள்ளடக்கிக் கொண்டிருந்ததையும) கூட சற்று இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். உதார்ணமாக அவரது மாளிகையைக் கட்டி முடிக்க 8 வருடங்களாகிறது. (1990-ல் ஆரம்பித்து 1998-ல் முடிகிறது கட்டுமானப்பணிகள்).

அந்தக் காலக்கட்டத்தில் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் 3 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிவிடுகின்றன. அண்டை அயலார்களின் கோபத்தைத் தணிக்க அவர்களுடைய கார்களையும் இதர பொருட்களையும் தூசி தட்டி துடைக்க, சுத்தம் செய்ய ஆட்களை அனுப்பி உதவுகிறார் கேட்ஸ். அதுவே அவர் குடும்பம் அங்கு குடியேறியதும் அந்தப் பகுதியே இரவு முழுவதும் எரிகிற விளக்குகள் என்ன, காவலாட்கள் என்ன? “ அவர் குடி வந்து விட்டதால் நாங்கள் பத்திரத் தன்மையை உணர முடிகிறது. அவருடைய ஆட்கள் வந்து எங்கள் தோட்டத்துப் புற்களை வெட்டிச் சீர்செய்து தந்து விட்டுப் போகிறார்கள்.” என அதே அண்டை வீட்டார்கள் சொல்லுமளவுக்கு பக்குவப்பட்டிருந்த கேட்ஸின் சமூகவியல் அணுகுமுறை அதே இக்சி ஜனித்த 1992-ம் ஆண்டுகளில் கூட இந்தளவுக்குப் பக்குவப்பட்டிருக்கவில்லை. மென்மைப் போக்கும், தாராள உதாரண குணப் போக்கும் கொண்டவராய் நிஜத்தில் இல்லையென்றாலும் பரவாயில்லை, அப்படி ஒரு போலியான தோற்றத்தை அளிக்கக் கூடிய ஒரு சமூகவியல் முகமூடியோடு கூடக் காட்சியளித்ததில்லை கேட்ஸ். சர்வைவல் நிர்பந்தம் காரணமாக நாம் ஒவ்வொருவரும் அணிந்து கொள்ளும் எத்தனையோ போலியான பொய்மை முகமூடியைக் காட்டிலும், பார்ப்பதற்கு இனிமையல்லாத கண்ணுக்குக் குளிர்ச்சியில்லாத அசல் உண்மை சொரூபமே எவ்வளவோ தேவலாம் தான். ஆனால் உண்மை எவருக்கு உவப்பானதாய் உள்ளது?.

1992ம் ஆண்டில் அவருடைய செயலாளளினி ஒருவர் தான் ஒரு சிக்கலில் மாட்டி நிலைகுலைந்து விட்டதாகவும், தனக்கு உதவ வேண்டும் என்றும், (பண உதவி போலும்.) ஒரு சமயம் கேட்ஸையும் கேட்டிருப்பார் போலுள்ளது. அதற்கு கேட்ஸிடமிருந்து வந்த பதில் இங்கு மிகவும் கூர்ந்து கவனிக்கத் தக்கது. அவரது பதில் இது தான். “நான் என்ன இந்த நாட்டு இராணியா? “ “ ஆண்டு 1992-ம் ஆண்டு. நபர் ஒரு பெண். அதுவும் அவருடைய செயலாளினியே. ஏதோ, (பண?!)உதவி கேட்டிருப்பார் போலுள்ளது. அதற்கு கேட்ஸிடமிருந்து வந்த பதில் , “நான் என்ன இந்த நாட்டு ***இராணியா? “? “

உதவி மனோபாவத்துக்குத் தேவை இராணிப்பட்டமோ, ராஜகுல வம்சமோ அல்ல. உதவும் மனோபாவம் மட்டுமே தான்.. அது உண்டா இல்லையா என்பது தான் கேள்வி. அதற்கான பதிலாய் மறு வினையாய் கேட்ஸிடமிருந்து என்ன பதில் வந்திருக்க வேண்டும். அல்லது என்ன பதில் கூறியிருந்தால் அப்படி அன்று சாதாரணமாக கூறிய அந்த ஒரு பதில் கூட இன்று இப்படியொரு கடும் விவாதப் பொருளுக்கான ஒரு கருப் பொருளாய் அமைந்திருக்க நேர்ந்திருக்காது?. “அம்மா இங்க பாரம்மா இப்போது நீ என்ன கூறினாலும் அது என் காதில், கவன ஈர்ப்பில் விழாது. மேலும் இது அதற்கான நேரமும் அல்ல. நீ மட்டுமல்ல இங்குள்ள ஊழியர்கள் பட்டியலில். ஒரு பெரும் பட்டியலே உள்ளது. ஆக உனக்கு உதவப் போக, அது பலரை வரிசை கட்டிக் கூட்டிக் கொண்டு வந்து விடும். அது இப்போதைய எங்களது பணியில், எங்களுடைய கவன ஒருமைக்கு கூட ஒரு சிதறலை ஏற்படுத்தும். அதற்கும் ஒரு வேளை வருமம்மா. அப்போது பார்க்கலாம். இப்போது ஆளை விடு.” என பதமான இதமான ஒரு பதிலைக் கூட இப்படி அளித்திருக்கலாம் தான். இதுவே வாரன் ஆக இருந்தால் ஈரம் கலந்த இத்தகைய ஒரு பதிலைத் தான் கூறியிருப்பார்.

ஆனால் வாரனைப் போல ஈரத்தோடு, ஒரு பக்குவத்தோடு அதை சொல்ல முடியாமல் போனது மட்டுமல்லாமல் இது போன்ற விஷயங்களை எல்லாம் அப்பட்டமாக வெளிப்படையாகவேச் சொல்ல முடியாதபடிக்கு, அங்கே, அதே வாரன் பஃபெட்டே ஏற்கனவேயே, “30 வயதிற்குள் மில்லியனர் ஆக முடியாவிட்டால் ஒஹாமாவின் உயரமான கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறேன்” என்று நண்பர்களிடையே சூழுரைத்து, சொன்னபடியே சாதித்துக் காட்டியவரும் கூட. கேட்ஸை விட 25 வயது மூத்த வாரன் சொன்னபடியே தனது 30 வயது சாதனையோடே போதும் என முடங்கி விட்டவருமல்ல. சிந்துபாத் போல் தொடர்ந்து அப்போதும் கோடீஸ்வரக் களத்தில் பரப்பரப்பாக இயங்கி வந்த நேரம் தான் அது.

களத்தில் தொய்வடையாத அவரது தொடர்ந்த வளர்ச்சியும் இவரது (கேட்ஸின்) இலக்குப் பாதை நோக்கியே (அதாவது உலகின் தலைமைக் கோடீஸ்வரப் பட்டத்தை நோக்கியே) பயணித்துக் கொண்டிருப்பதும் கூட கேட்ஸின் வாயை அடைத்திருக்கும். என்ன வாரன் பஃபெட் அப்படி ஒரு சவாலை, சூழுரையைச் சொல்லி விட்டே செய்து காட்டியவர். இனியும் இனிமேலும் செய்து காட்டக் கூடிய திறமுள்ளவர். கேட்ஸோ அதை சொல்லாமல் செய்து காட்டத் துடித்துக் கொண்டிருந்தவர். இப்படிப்பட்ட கோடீஸ்வரக் கொல்லர்கள் நிறைந்த அமெரிக்க விதியில் மேலும் ஒரு சாதாரண கோடீஸ்வர கொல்லராய் கூட அல்ல, உலகின் தலைமைக் கோடீஸ்வர கொல்லராகவே மாற எண்ணியிருந்த கேட்ஸ், பலரையும் (அதாவது சகக் கோடீஸ்வரக் கொல்லர்களை அதிலும் வாரன் போன்றவர்களை எல்லாம்) உசுப்பாமலேயே ஒரு மென்பொருள் ஊசி*** விற்று அதை நிரூபித்துக் காட்டவும் நினைத்திருக்கலாம் கேட்ஸ். (****கொல்லன் வீதியில் ஊசி விற்ற கதையாக)

அந்தப் பெண்மணிக்குத் தெரிந்திருக்குமா இதுவெல்லாம். (புத்திசாலியான பெண்மணியாய் இருந்திருந்தால் தெரிந்திருக்க வேண்டும்.) தெரியவில்லை ஆதலால் வாங்கிக் கட்டிக் கொண்டது. ஷ்யாட்டில் எரிந்து கொண்டிருந்த நேரத்தில் பிடில் வாசித்த பெண்மணி போலும். அங்கே அமெரிக்காவில் பலர்மனத்தில் (கேட்ஸ் மனத்தில் மட்டுமல்ல) இப்படி ஒரு தலைமைக் கோடீஸ்வரத் தீப் பற்றி எரிந்து கொண்டிருப்பதும் அந்தத் திகுதிகுப்பில், பரபரப்பில், நம் உதவி கோரும் இப்படிப்பட்டக் கருணை மனுக்களைக் கவனிக்கக் கூட அவர்களுக்கு இப்போதைக்கு நேரம் கிடைக்குமா? கிடைத்தாலும் தான் அது அவர்களின் கண்ணிலும், கருத்திலும், படுமா, ஒரு கவன ஈர்ப்புக்கு உள்ளாகுமா? அல்லது அப்படியே ஒரு கவன ஈர்ப்புக்குள்ளாக வேண்டுமென்றாலும் அதற்குகந்த நேரம் இதுதானா? என்ற புரிதலும் இல்லை.

கவன ஈர்ப்புக் கிட்டாவிட்டாலும் பரவாயில்லை. இப்போது இப்படிப்பட்ட ஒரு கோரிக்கையோடு போனால் உதவிக்கு மாறாக அவர்களுக்கு நம் மீது ஒரு உபத்திரவ, எரிச்சல் தான் வரும் என்பதும் அந்தப் பெண்மணியின் சராசரிப் பார்வையில் புரிந்திருக்க நியாயம் இல்லை தான். கிராமப் புறத்தில், “ஆண்டிக்கு அவன் பாடு என்றால், தாதனுக்குத் தன்பாடு” என்பார்களே அது போல அப்பெண்மணிக்கு என்ன ஒரு சிக்கல் நிலையோ?.

அதே நேரம் எங்கே இதை விட்டால், வளர அனுமதித்தால் இதையே முன்னுதாரணமாகக் கொண்டு நிறைய பேர் இப்படிக் கிளம்பி விடுவார்களோ, அது நம் நோக்கத்துக்கு இடையூறாய் அமைந்து விடுமோ என்ற ஒரு எச்சரிக்கை உணர்வு கலந்த எரிச்சலில் இதை இப்படியே விட்டுவிடக் கூடாது, இத்தகைய அணுகல் முறைகளை சற்று ஆரம்பத்திலேயே, முளையிலேயே ஒரு கிள்ளு கிள்ளி எறிய வேண்டும் என்ற முனைப்பில், உள்ளுணர்வின் ஒரு எரிச்சல் உந்தலில் கூட அப்படிக் கொஞ்சம் கடுமையான பிரயோகமாகவே கூடக் (“நான் என்ன இந்த நாட்டு ***இராணியா? “ ?) எனக் கூறியிருக்க வேண்டும். லாஸ் ஏஞ்சல்ஸ், டைம்ஸ் பத்திரிக்கை அளித்தத் தகவல் ஒன்றின்படி அப்போது மைக்ரோசாப்ட்டில் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 27 சதவீதம். மைக்ரோ சாஃப்ட் ஊழியர்களில் அப்போதே 1200 பேர் கோடீஸ்வரர்களாகி இருக்கின்றனர். இல்லை ஆக்கப்பட்டனர் என்பதே பொருத்தம். ஆனால் கேட்ஸ்…….

அவர் தான் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறாரே அப்போதே உலகின் தலைமைக் கோடீஸ்வரப் பட்டத்தை நோக்கி!. ஆனால் அந்த நேரத்தில் வந்து இப்படிப் பலர் கிளம்பினால்….. நோக்கம் இலக்குப் பனால் ஆகி விடும், காலி ஆகிவிடக் கூடும். ஆகவே “இதற்கு இப்போதைக்கு வேறிடம் பாரம்மா.” என்று இப்படிப் பக்குவமாகக் கூடச் சொல்லியிருக்கலாம் தான். ஆனால் மாறாக கேட்ஸிடமோ அது ஒரு எரிச்சலைக் கிளப்பியிருக்கிறது. சர்வைவல் பக்குவம் இல்லாமல் இப்படி, “ஈ…. என இரத்தலே” அவரைப் பொறுத்த மட்டில் முதலில் இழிவெனப்பட்டிருக்கலாம் அவருக்கு. சாதாரண ஒரு சராசரி வாழ்வுக்குத் தேவையான ஒரு சராசரி விழிப்புணர்வு, சேமிப்பு, ஈட்டுகிற, சம்பளத்துக்கேற்ற சிக்கனம் இல்லாத ஊதேறி வாழ்வு முறைமையாகக் கருதிக் கூட அந்த உதவி கோரலை அலட்சியப் படுத்தியிருக்கலாம். இப்படிப்பட்ட இந்த ஜென்மங்களெல்லாம் வாழ்ந்தால் தான் என்ன? செத்து ஒழிந்தால் தான் என்ன? என்ற ஒரு வித, (இப்படிப்பட்ட) எரிச்சலில் கூட அப்படி (உண்மையில் அப்படித் தான்) சொல்லியிருக்கக் கூடும்.

இது எப்படிப் பட்ட இடம்?. எப்பேர்பட்டவர்கள் கூடியிருக்கும் இடம். இங்கு ஒரு காவிய, யுகப் புரட்சி வாழ்க்கையையே அல்லவா நாங்கள் வாழ்ந்து காட்டிக் கொண்டுள்ளோம். அப்படிப் பட்ட இந்த இடத்தில் வந்து இப்படிப்பட்ட ஒரு மண்டூகமா? கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாட வேண்டாமோ?. கேட்ஸ் வீட்டு, (அலுவலக)க் கேட் கீப்பரும் கூட ஒரு கோடீஸ்வரனாகத் தேவையான தகுதியைப் பெற்றருக்க வேண்டாமா? கேட்ஸின் ஊழியராய் இருப்பதற்கே ஒரு அடிப்படைத் தகுதி வேண்டும். அந்த அடிப்படைத் தகுதி கூட இல்லாத, அப்படிபட்ட அந்த அடிப்படைத் தகுதி என்றால் என்ன என்பதையே புரிந்து கொள்ள முடியாத உனக்கெல்லாம் எப்படி இங்கு வேலை கிடைத்தது? யார் உன்னை இண்டர்வ்யூ செய்திருப்பார்?.

இத்தனைக் கிட்டத்தில் இருந்து பார்த்தும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால்….. உன்னைப் போன்ற ஆட்களெல்லாம் இங்கு இருக்கவே தகுதி இல்லை என்று தான் அர்த்தம். இப்படிப் பட்ட அவருடைய மனோ நிலையில் இருந்து பார்த்தால் அவரது எரிச்சலில் இருக்கும் அவர் தரப்பு நியாயத்தையும், மனோநிலையையும் கூட நாம் புரிந்து கொள்ள முடியும். எத்தனை தத்துவ வியாக்கியாணங்களை நாம் கேட்ஸின் இடத்திலிருந்து கொண்டு கொடுத்தாலும் அத்தனையும் அந்தப் பெண்மணியின் இடத்திலிருந்து பார்த்தால் அவை அத்தனையும் ஒரு சிறு துளியும் எடுபடாது. இதை நிரூபிக்க இந்த இடத்தில் ஆங்கில ஹாலிவுட் திரைப் படமொன்றின் சிறியத் திரைப்படக் காட்சித் துணுக்கொன்றை இணைத்தால் அதைக் குற்றமென்று எவரும் நினைக்கப் போவதில்லை. (கிளிக்கிடவும் பேட் மேன் திரைப்படக் காட்சி ஒன்றை))

இந்தத் திரைப்படத்தில், போலீஸ் கமிஷனர் ஒருவரின் மனைவியை ஒரு நெருக்கடியான குண்டு வெடிப்புச் சூழலில் இன்னொரு சக போலீஸ் பெண்மணியே அங்கிருந்து தப்பி தான் குறிப்பிடும் இன்னொரு இடத்துக்கு வருமாறு கூறுவார். துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட சூழ்நிலையில் வேறு யார் இருந்தாலும் அப்படித் தான் செய்வர் அது வேறு விஷயம். ஆனால் அப்படித் துப்பாக்கி முனையில் மிரட்டியது அந்த நகரத்தின் மேயரே தான். காரணம் அவரது காதலியையும் இதே போல ஒரு நெருக்கடியான நேரத்தில், இந்த இதே போலீசுப் பெண்மணி தான். நீங்கள் அங்கு இருக்காதீர்கள், அங்குள்ள போலீசையும் நம்பாதீர்கள் எனத் தந்திரமாக கூறி வில்லன் (கோமாளி) விரித்த வலையை நோக்கி இழுத்து வந்து வில்லன் கையில் ஒப்படைப்பார்.
இந்த சதித் திட்டத்தில், அந்தப் பெண் போலீசுப் பெண்மணி தன்னையும் அறியாமல் அவரது செய்நன்றி உணர்ச்சி காரணமாக இழுத்து விடப் பட்டிருப்பார். மேயர் தனது காதலி அப்படி தவறான திசை திருப்பலால் தான் பலியானாள், அதற்கு இந்தக் குறிப்பிட்ட போலீசுப் பெண்மணி தான் காரணம் என்று தெரிந்து, வில்லன் அந்தப் போலீசுப் பெண்மணியைப் பயன்படுத்தியதைப் போலவே மேயரும் அதே போலீசுப் பெண்மணியை பயன்படுத்தி, போலீஸ் கமிசனரின் மனைவி குழந்தைகளையேக் கடத்துவார். அந்தக் காட்சியில் தான் மேயர் அந்தப் போலீஸ் பெண்மணியிடம், ஏன் இப்படிச் செய்தாய்? என விளக்கம் கேட்டதற்கு தனது அம்மா மருத்துவமனையில் இருந்த போது அவர்கள் (வில்லன் தரப்பு) தான் உதவி செய்தார்கள் என்று மிக வெள்ளந்தியாக தான் செய்நன்றிக் கடன் என்ற பொறியில் மாட்ட வைக்கப் பட்டு இந்த சதித் திட்டத்தில் இழுக்கப் பட்டதைத் தன்னையும் அறியாமல் தனது வாக்கு மூலத்தின் வாயிலாக வெளிப்படுத்துவார்.

சில நேரங்களில், நெருக்கடியான நேரங்களில் கிடைக்கும் உதவியானது (எவர் ஒருவரையும் என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட மிகப் பெரும்பாலான சாதாரண மனிதர்களை செய்நன்றிக் கடன் என்ற போர்வையில், உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட அந்த அது போன்ற உதவிப் பொறிகளில் மிக எளிதில் சிக்க வைத்து விடுகிறது. கேட்ஸிடம் உதவி கேட்டு மறுக்கப்பட்ட இந்த இது போன்ற பெண்கள் மேலும் சிலர் இருந்திருந்திருந்தால்…. அந்த அது போன்ற சூழலைப் பயன்படுத்திக் கொள்ள இந்தத் திரைப்பட வில்லனைப் போலவே ஒரு நிஜ வில்லன் கேட்ஸ் வாழ்ழ்க்கையிலும் இக்ஸித் துஸ்ப்ரயோகக் குழு என்ற வடிவத்தில் முளைத்திருந்தால்……?!

என்ன நெருக்கடியோ என்ன சிக்கலோ அந்தச் செயலாளினிப் பெண்ணுக்கு ஆக 1200 பேரை கோடீஸ்வரர் ஆக்கியவர் 1201-வது கோடீஸ்வரராக எல்லாம் கூட வேண்டாம். ஒரு சிறு உதவி, கொஞ்சம் பணநெருக்கடி! போக்கமாட்டாரா என்ன தன் பாஸ்? பெண்ணெண்றால் பேயும் இரங்கும் என்பார்களே அந்தப் பேய்க்கு இருக்கும் இரக்கம் கூடவா நம் முதலாளியிடம் இல்லாமல் போய் விடும்? “ என்ற இப்படிப்பட்ட ஒரு பாமரத் தனமான எதிர்பார்ப்பிலும் கூடக் கேட்டிருக்கலாம்.

கேட்டு விட்டு பின், “ஏண்டாப்பா கேட்டோம் இதுக்கு ஒரிஜினல் பேயே தேவல. அப்படியே அந்த ஒரிஜினல் பேயே நேரில் வந்து கேட்டாலும் அதற்கே பே பே காட்டுகிற பேய்க்கெல்லாம் பெரிய பணப்பேய் தான் இது. ஆனால் சுடுமூஞ்சிக் கஞ்சப் பேய்.” என இப்படிக் கடுப்பாகி இருக்கக் கூடும். அந்தக் கடுப்புக் காலாவதியாவதற்கு முன் ஒரு வாய்ப்பு வக்கனையாக இக்ஸியாய் வந்து இதம் கொடுத்துக் கூட சம்மதிக்க வைத்திருக்கலாம். நேரடியாக அவரே இதில் சம்பந்தப் படத் தேவையில்லை. இத்தகைய விசயங்களுக்கு சம்மதம் தரக் கூடியவர்களை இனம் காண்பதற்கான ஒரு கருவியாய் செயல்பட்டால் கூடப்போதும். மேலே கண்ட அந்த பேட் மேன் ஆங்கிலத் திரைப்படக் காட்சியையே கூட எடுத்துக் கொள்வோம். கஷ்டப்படுகிற நேரங்களில் கிடைக்கிற சிறு உதவிக்கும் கூட மனிதர்கள் காட்டுகிற நன்றி விசுவாசத்துக்கு ஒரு அளவு கிடையாது. “கஷ்டமான நேரங்களில் உதவிவிட்டு, நுட்பமான சூழ்ச்சி வலைகளில் இத்தகைய மனிதர்களை மிக எளிதில் பயன்படுத்திக் கொள்ளலாம்” எனத் தெரிந்து தான் அந்தப் படத்தில் தெரிந்தே மிகுந்த உள்நோக்கத்துடன் தான் அந்த ஜோக்கர் கேரக்டர் அந்த பெண் போலீசைத் தேர்ந்தெடுத்துப் பயபடுத்தியிருப்பார்.

காலத்தினால் செய்த உதவி ஒரு சிறிய அளவினதாய் ஆனாலும் “ஞாலத்தின் மாலப் பெரிது” என இதனால் தான் வள்ளுவரும் 2 மில்லினியம் ஆண்டுகளுக்கும் முன்னரே காலத்தில் செய்யப்படக் கூடிய உதவியைப்பற்றி இந்தளவு முக்கியத்துவம் கொடுத்து தனது குறளில் வைத்துள்ளார். இந்தக் காரணத்தினாலேயே மகா பாரதக் கர்ணனை, மரணபரியந்தம் துரியயோதனனும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிந்தது. ஒரு மனிதனை விலை கொடுத்து வாங்கமென்றால், அல்லது காலம் முழுவதும் அவன் நமக்கு ஒரு நன்றிக் கடன்பட வேண்டுமென்றால் அவன் ஏதேனும் ஒரு உதவிக்காகத் துடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த உதவி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிற அந்தக் குறிப்பிட்ட மனிதனைப் பொறுத்தவரை மிக இன்றியமையாத அத்தியாவசியமான ஒரு உதவியாயும் இருக்கும் பட்சத்தில், (வெளி உலகில் அதை அளிப்பவருக்கு அது மிகவும் சாதாரண ஒரு உதவியாய் கூட இருக்கலாம்) அவன் எதிர் பாராத தருணத்தில், காலமறிந்து அவன் கஷ்டப்படும் காலமறிந்து செய்யப்படும் அந்த உதவிக்கு அது எவ்வளவு அற்ப அளவினதாக இருந்த போதிலும் அதற்கு மிகப் பெரிய ஒரு விலை உண்டு, வலிமை உண்டு.

இந்த உலகில் பெரும்பாலான உதவிகளை பணம் என்ற கரன்சி கொண்டே ஸ்வீகரித்துக் கொள்ள முடியும் என்பதால் தான் பணத்துக்கும் மனிதனைக் காட்டிலும் இத்தனை வலிமை. பணத்திலேயே ஒரு பண மழையிலேயே சதா பெருக்கெடுத்து ஓடும் ஒரு வற்றாத பணஅருவி மழையிலேயே குளித்துக் கொண்டிருந்ததால் ஒருவேளை மற்றவர்களின் பணத் தேவையின் வலிமை என்னவென்று கேட்ஸுக்கும் கூடப் புரியாமல் போயிருக்கலாம்.

அவரின் நேர மதிப்புதான் ஏற்கனவேயே …….டாலர்நோட்டுகள் சில கீழே விழுந்தால் அதைக் குனிந்து பொறுக்கி எடுக்கக் கூட நேரமில்லாத அளவுக்கு (அப்படிப் பொறுக்கி எடுக்கக் குனிவாரேயானால் அதை எடுக்கச் செலவிடும் நேரத்தின் அளவு கீழே சிதறிய அந்த டாலர்களின் மதிப்பை விட அதிகமாமே.) அப்படிப்பட்ட ஒரு அதி உயர் பொருளாதார மதிப்பில், வேகத்தில் ஓடிக் கொண்டிருந்திருக்கிறாரே. அப்படிபட்ட அவரின் நேர வேகம் எங்கே? அந்த நேர மதிப்பு தெரியாமல், வேளை கெட்ட வேளையில் அணுகிய அப்பெண்ணின் அறியாமை அளவு எங்கே என்பதா? அல்லது தெரிந்தேயிருந்தாலும் அணுகியே ஆக வேண்டிய கடும் சூழல் நெருக்கடியால் உந்தப்பட்ட அவரது சூழல் நெருக்கடியைக் குற்றம் சாட்டுவதா? எது எப்படியோ அந்த நேரம் அவர் ஒரு உதவி கோரும் நிலை ஏற்படுகிறது. ஆனால் அவ்வுதவி கோரல் ஒரு தோல்வியில் முடியவும் அதுவே (அந்த நேரத்தில் உதவி கேட்டது கூட) ஒரு காரணமாகவும் அமைந்துவிடுகிறது. இந்த ஒரு சம்பவம், இது ஒன்றே கூடப் போதும் இக்ஸித் துஸ்ப்ரயோகம் போன்ற ஒரு சம்பவத்துக்கு என்பதே இப்போதைய எனது நிலைபாடு வாதம்.

மறுபுறம் இந்தப் பெண்மணியின் அணுகு முறையும் ஆய்வுக்குரிய ஒரு விஷயம் தான். உதவி கோரல் என்ற போதிலும் அதற்கும் கூட ஏற்ற ஒரு இடம், பொருள், ஏவல், சமய சந்தர்ப்பம் என்ற மற்ற சில பல இங்கித விஷயங்களும் உண்டு. அது உலகின் குபேர மனிதர்களாகட்டும் அல்லது ஒன்றுக்குமே உதவாத ஒரு கழிசடை மனிதர்களேயாகட்டும், எவர் ஒருவரிடமும் அணுகுவதற்கான ஏற்ற உகந்த ஒரு இடம், பொருள், ஏவல், நேரம் என்ற ஒன்றும் உண்டு. முதலில் அந்த அது போன்ற (பண?) உதவிக்கு எல்லாம் அவர் நேரடியாகவே கேட்ஸிடமே அணுகியிருக்க வேண்டும் என்ற கட்டாய அவசியம் கூட இல்லை. கேட்ஸுக்கு அடுத்த நிலையிலுள்ள வேறு எத்தனையோ உயர் அதிகார மட்டத்தில் உள்ளவர்களை கூட அணுகியிருக்கலாம் என்பது, எனதுத் தனிப்பட்டக் கருத்து.

ஒரு வேளை அந்த சென்ஸ் சற்றுப் போதாது எனும்படிக்கான ஒரு குணநலன் உள்ள பெண்ணாக அந்தப் பெண் அமைந்திருந்தாரோ என்னவோ? ஒரு வேளை அதை அந்தப் பெண்மணி சற்றுக் கவுரவக் குறைச்சலாகவும் எண்ணியிருக்க ஒரு வாய்ப்பு உள்ளது. இல்லையில்லை கீழ் நிலை பணியாளர்கள் யார் உதவி கேட்டிருந்தாலும் அவரிடமிருந்து வந்திருக்கக் கூடிய அந்த நேரத்துப் பதில் என்பது கட்டாயம் அந்த அது மாதிரியான ஒரு பதிலாய் தான் இருந்திருக்க முடியும், கூடும். எனும்படிக்கான கேட்ஸின் தவறுதலான அணுகுமுறைப் பதிலா? அந்த உதவி கோரல் சம்பவம் தோல்வியில் முடியவும், இப்படி முற்றிலும் சர்ச்சைக்குரிய ஒரு பொது விவாதத்துக்கான கருப் பொருளாகவும் மாற, உண்மையிலேயே எது காரணமாய் இருந்திருக்கக் கூடும் என்பது? அது, அதுவும் கூட அவ்வளவு எளிதில் கூறிவிட முடிகிற பதிலாய் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

பொத்தாம் பொதுவில் அது, “கேட்ஸின் மனசாட்சிக்கும் அல்லது சுற்றியிருந்த நெருக்கமானவர்களுக்கும் தான் வெளிச்சம்”. பொதுவில் தனக்குச் சமமில்லாத மனிதர்களை சம மதிப்புடன் நடத்த மனிதர்கள் தயாரயில்லை என்பது தான் உளவியலில் ஒரு பொது விதி. அந்தப் பொது விதி ஒருவேளை அந்த நேரம் கேட்ஸிடமும் செயல்பட்டுக் கொண்டிருந்ததோ என்னவோ?

சிக்கன குலச் சிகாமணிகள் தான்,
கேள்வி: ஒரு மின் விளக்கை மாற்றுவதற்கு மைக்ரோ சாஃப்ட்டின் துணைத் தலைவர்களில் எத்தனை பேர் தேவைப்படுவார்கள்?
பதில்: 8 பேர். ஒருவர் மின் விளக்கை மாற்றுவார், மற்ற 7 பேரும் உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அந்த மின் விளக்கின் விலை 2 டாலர்தானா? அல்லது அதில் ஏதாவது மாற்றம் உண்டா என்று ஆராய்வார்கள்.

அப்படி வாங்கி வந்த “ ஒரு மின் விளக்கை மாற்ற மைக்ரோ சாஃப்ட்டில் இருந்து எத்தனை ப்ரொக்கிராமர்கள் தேவைப்படுவார்கள்? “ பதில்: யாரும் தேவைப்பட மாட்டார்கள். கம்பெனி இப்போது தர அளவீட்டை இருட்டுக்கு மாற்றியுள்ளது.

பில் கேட்ஸ் என்ற தனிமனிதன் மட்டுமல்ல ஒட்டு மொத்த நிறுவனமே சிக்கன குலச் சிகாமணிகள் தான், வடிகட்டிய கஞ்ச மகா பிரபுக்கள் தான். அப்படி இருந்தால் தான் அங்கு பணியாற்றவே முடியும் என்பதைப் பறை சாற்றுவது போலில்லை மேற்குறிப்பிட்ட அந்த இணைய தள ஜோக். (அப்படி இல்லை என்றால் யாரும் அங்கு தப்ப முடியாதே.) கோடீஸ்வரக் கோமான் பட்டத்திற்கு மட்டுமல்ல, இப்படி இணையப் புகழ் பெற்ற சிக்கனத்திற்கும் சொந்தக்காரரான இவர் தான், தனது செயலாளினிப் பெண்மணிக்கு இப்படிப் (“நான் என்ன இந்த நாட்டு ***இராணியா?“ எனப்) பதில் அளித்த இவர்தான், வியாபார ரீதியான தனது பயணங்களுக்கு (ஆரம்ப காலங்களில்) ஆண்டுக்கணக்கில் கமர்ஷியல் ஏர்லைன்ஸ் விமானங்களையே உபயோகித்த இந்த இதே சிக்கன பில் கேட்ஸ் தான் 1997-ல் தான் குடும்பத்தினர் உபயோகத்திற்காக ஒரு ஜெட் விமானத்தையே வாங்குகிறார். பின் பெரும் நன்கொடைகளையும் அறக்கட்டளைகளுக்குத் தானமாக வழங்கத் தொடங்குகிறார்.

பின்னாளில் (97-98- களில்?) தனது பேட்டியொன்றில், என்னுடைய சொத்தில் நான் இறப்பதற்குள் 95%-த்தை நல்ல காரியங்களுக்கு கொடுத்து விடுவேன் எனக் குறிப்பிடுகிறார். இதையும் நாம் இங்கு ஒரு சிறிதளவாவது, ஒரு சிறு அற்பளவுக்காவது சற்றே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதாகிறது. தனது சொத்துக்களில் 30, 40% கொடுக்கட்டும். அட 50% கூட கொடுக்கட்டும். இல்லை 60, 70,% கூட கொடுக்கட்டும். 95% என்பது கொஞ்சம் அதீதமாய் (கொஞ்சமென்ன, மிகவும் அதீதமாய்) படவில்லை? அதுவும் கூட மெல்ல, மெல்ல 1995 களுக்குப் பின்னரே வெளிப்படத் தொடங்குகிறது. அதுவும் எப்படி?… அவரது தயாள குணத்துக்கு டெட்டனர் போன்ற கோடீஸ்வரர்கள் ஒரு பெரும் சவால், “விடாமல் விட்ட பின்னரேயே” (ஐ.நா. சபைக்கு அளித்த டெட்டனரின் 100 கோடி டாலர்கள் உண்மையில் அந்த நேரத்தில் கேட்ஸின் தயாள குணத்துக்கு ஒரு உசுப்பலான சவாலே) அதற்குப் பின்னரே கேட்சிடமிருந்தும், கேட்ஸ் நண்பர் தரப்பு வாரன்பெஃபட்டிடம் இருந்தும், ஒரு எதிர்வினைபோலும் அறப்பணிகளுக்கான பெரும் நன்கொடை அறிவிப்புகள் வெளிவரத் தொடங்குகின்றன.

அனைத்தும் இந்த சர்ச்சைக்குரிய இக்சி சிக்கல் ஜனித்த ஆண்டுகளைச் சுற்றியே, அல்லது அதன் ஜனன மையம் நிகழ்ந்த ஆண்டுகளுக்கருகாமையிலேயோ, பின்னாலேயோ நிகழ்ந்த நிகழ்வுகளாய் உள்ளன. இவை எல்லாம் ஏதோ ஒருசிறு நெருடலையாவது எழுப்பவில்லை?! (வெறுமனே, சந்தர்ப்பவசமாய் அமைந்த வெறும் எதேச்சை நிகழ்வுகளாகவே அவை இருந்தபோதிலும் அர்த்த முக்கியத்துவம் வாய்ந்த அந்த இக்சி சிக்கல் ஜனித்த ஆண்டுகளுக்குப் பின்னாலோ, அல்லது அருகாமையிலேயோ இருப்பதை கவனித்தால், ஒரு சிறு நெருடலாவது எழுவதை தவிர்க்க இயலவில்லையே?

1). தான் போட்டியிட்டு பெற்ற ஒரு விஷயத்தை, போட்டியிட்டு வென்றதும், துறந்து விடுவது. அதாவது அந்தப் பொருள், விஷயம் அல்லது பதவி முக்கியமல்ல. அதற்குத் தான் தகுதியுள்ள நபர்தானா? இல்லையா? என நிரூபிப்பது தான் இங்கு முக்கியம் என்பது போல. உலகின் தலைமை கோடீஸ்வரப்பட்டமல்ல? அப்பட்டத்திற்கு நான் தகுதியுடையவன்தானா? இல்லையா? என இவ்வுலகிற்கு நிரூபிப்பதுதான் இங்கு முக்கியம் என்பது போன்ற ஒரு அர்த்தத்தில் தொனியில் இதை எடுத்துக் கொள்வதா? அல்லது…

2). அதாவது எல்லாக் காலங்களிலுமே இத்தகைய உதராணங்கள் சிலவற்றை நாம் நாடுதோறும், காலந்தோறும், வரலாற்றின் வழி நெடுகிலும் காணலாம். அந்தப் பிரமுகர் ஊரிலேயே, நாட்டிலேயே பெரிய செல்வந்தராய் செல்வாக்கானவராய் இருப்பார். ஆனால், அவரது சொத்துக்களை ஆண்டு, அனுபவிக்க ஒரு வாரிசு இருக்காது. (நமது விஷயத்தில் கேட்சுக்கு இது இந்த முதல் பாயிண்ட் பொருந்தாது, என்றாலும் தொடர்க…..) அல்லது குலப்பெருமையை கெடுக்க வந்த கோடாரி போல தீயொழுக்கங்களால் பீடிக்கப்பட்ட ஒரு வாரிசாய், விரும்பத் தகாத ஒரு வாரிசு வந்து பிறந்திருக்கக் கூடும். அதாவது அவரது குலப்பெருமைக்கும், நற்பண்பு பெயருக்கும் குந்தகம் விளைவிக்காத ஒரு வாரிசுக்கு வழியில்லாத நிலை

(Here I didn’t talk about the Genetic Son, But Charactrical Son, Remember the Tamil Film M.Kumaran, Son of Mahalakshmi’s one notable dialog of Prakashraj to Jayam Ravi, You are my son I accept it, but not my principle, follower, or student for my Boxing profession)

ஒரு சுவீகார புத்திரன் கூட கிடைக்காமை அவரை வாட்டுகிறது. அமிர்தம் கிடைக்கவில்லையே என்பதற்காக சாக்கடையையா பருகுவது? எனும் மனோநிலையில் தனது சொத்துக்களை பெறுமளவுக்குத் தகுதியான, யோக்யதையான ஒரு நபர் (அத்தகைய ஒரு சுவீகார புத்திரன் கூட) கிடைக்காமையால், தனது சொத்துக்கள் முழுவதையுமோ அல்லது பெருவாரியான சொத்துக்களையோ, புகழ்பெற்ற கோயில், மடம், தர்மஸ்தாபனங்களுக்கு எழுதி வைத்துவிடுவார். இது ஒரு நிலை.

3). அடுத்து “ஒரு பிச்சைக்காரனுக்கு, குஷ்டரோகிக்கு எழுதி வைத்தாலும் எழுதி வைப்பேனே தவிர உனக்கு அல்லது உங்களுக்கு எழுதி வைக்கமாட்டேன்” என தனது விருப்பத்துக்கு மாறாய் நடந்து வெறுப்பேற்றிய தனது வாரிசுகளுக்கெதிராக அவர்களை தண்டிக்கும் விதமாக இப்படி செய்பவர்களும் உண்டு. ஒருவேளை அவரின் அந்த வெறுப்புக்குரிய வாரிசுகள் அவரது வைப்பாட்டிகளுக்கு, காமக்கிளத்திகளுக்கு பிறந்தவர்களாய் கூட இருக்க நேரிடலாம். சொத்து, பட்டம், பதவி ஒன்றிற்காகவே, இந்த நோக்கம் ஒன்றிற்காகவே பெற்றுக்கொள்ளப்பட்ட வாரிசுகளாகக்கூட இருக்கலாம் அவர்கள். ***இந்தியாவில் ஜோதிடத்துறையில் இத்தகையப் புத்திரர்களை ஜாரபுத்திரன் என்ற அடைமொழியில் குறிப்பிடுவதுண்டு. (ஜாரபுத்திரன் – தனது பிறப்பு உத்தமமாய் இல்லாது அமைந்த குழந்தைகள் ஜாரபுத்திரன் எனக்குறிப்பிடப்படுவர்.

(திருடப்பட்ட விந்தணுக்களுக்குப் பிறந்த ஒரு குழந்தையின் அல்லது குழந்தைகளின் பிறப்பு மட்டும் எப்படி ஒரு உத்தமமான பிறப்பாய் சமூகத்தால் கருதப்படும்?) ஆக,

எனக்கென்னவோ, ஒருவேளை கேட்ஸ் விஷயத்தில் இந்த இக்சி துஷ்பிரயோகம் நிகழ்ந்திருந்து அதன் வாயிலாய் ஒரு குழந்தையோ (அல்லது பல குழந்தைகளோ) பிறந்திருந்தால் அவர்களுக்கும் இந்த ஜாரபுத்திரன் என்ற இந்த அடைமொழி இயல்பாகவே பொருந்தக்கூடும் என்றே எண்ணுகிறேன். அதாவது அதிகாரப் பூர்வமான மனைவியரல்லாத அன்னிய பெண்களுக்கு பிறந்த குழந்தைகளையோ அல்லது அதிகாரப் பூர்வமான மனைவிக்கே முறைகேடான உறவில் அன்னிய ஆணுக்குப் பிறந்த குழந்தைகளையோ ஆக இந்த விதமான குழந்தைகளையெல்லாம் இப்போது நாம் துணிந்து ஜார புத்திர ரக குழந்தைகளின் ஒரு பட்டியலில் சேர்க்க முடியும்.

இத்தகைய தருணங்களில், தனது இறப்புக்கு பின்னரும் கூட தனது சொத்துக்களின் திரண்ட பகுதிக்கு அவர்கள் ஒரு உரிமை கோரி விடக் கூடாதே என்பதற்காக, உயிருடன் இருக்கும் போதே தர்மஸ்தாபனங்கள் கோயில் குளத்திற்கு எழுதி வைத்தல் போன்ற நிகழ்வுகள் நடக்கும்.

ஆக, தொகுத்துக் கூற வேண்டுமானால், 1. ஒரு பொருள், விஷயம், அல்லது பதவி, பட்டம், சொத்து (இங்கே நமது விஷயத்தில் உலகின் தலைமை கோடீஸ்வரர் பட்டம் ) முக்கியமல்ல, தான் அதற்கு தகுதியானவன் தானா? என இந்த உலகிற்கு நிரூபிப்பது தான் முக்கியம் என்பது போன்ற ஒரு மனோநிலையில் துறப்பது அல்லது தானம் அளிப்பது அல்லது

2. தன்னை ஏதோ ஒரு விதத்தில் வஞ்சித்து மோசம் செய்தவர்களுக்கு தனது வெறுப்புக்கு ஆளானவர்களுக்கு தனது சொத்துக்கள் போய் விட கூடாது என்ற வெறுப்புணர்வு காரணமாக தனது சொத்துக்களை அறப்பணிகளுக்கு ஒதுக்குவது,

3. அல்லது என்ன பாவம் செய்தோமோ ஒரு குழந்தை பேறுக்கு கூட வழியில்லாது போய் விட்டதே! என்றோ அல்லது பிறந்த குழந்தையும் இப்படி உச்சமாய், ஒரு பின்னமாய் (ஜார புத்திர குழந்தைகளை கூட இந்த பட்டியலில் சேர்க்கலாம்) உத்தமமான பிறப்பாய் இல்லாது அமைந்து விட்டதே…, அப்படி என்ன குற்றம் செய்தோம், இது யார் விட்ட சாபமோ? தனது வினையோ?, முன்னோர் முத்தோர்களின் வினையோ?, எனும் ஊமை வேதனையாய், ஏன் தண்டிக்கப்பட்டோம்?, எதற்கு தண்டிக்கப்பட்டோம்?, யாரால் தண்டிக்கப்பட்டோம் என்பது கூட தெரியாமல் தண்டிக்கப்பட்ட ஒரு தண்டனையாய், ஒரு வித ஊனம்பட்ட மனோநிலையில் தனது சொத்துக்களின் பெரும் பகுதியையோ அல்லது முழுவதையுமோ கோயில், தர்ம ஸ்தாபனங்களுக்கு எழுதி வைத்தல்.

இது ஒரு நிலை. (தமிழ் வாசகர்கள் இந்த இடத்தில் 1983-84 -களில் வெளி வந்த “விதி” திரைப்படக் கதையைக் கூட ஒரு உதாரணத்துக்கு எடுத்துக் கொள்ளலாம். அப்படத்தில் கதை நாயகன் மோகன் செல்வச் செழிப்புள்ள வக்கீல் ஒருவரின் மகன். திருமணத்திற்கு முன் பல அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய மன்மத விளையாட்டினால் பல இளம் பெண்கள் பாதிக்கப்பட்டாலும, கதை நாயகியான பூர்ணிமா மட்டும் தைரியமாக வழக்கு மன்றப் படியேறிப் போராடி தனது குழந்தைக்கான தகப்பன் மோகன் தான் என ஒரு நிரூபண அத்தாட்சி பெறுவார். குழந்தைக்கான இனிஷியலைப் போராடிப் பெற்றாலும் பூர்ணிமா தனது முன்னாள் காதலனும், தனது குழந்தைக்குத் இந்நாள் தந்தையுமான மோகனை தொடர்ந்தும் தனது கணவனாக அங்கீகரிக்காமல் நிராகரித்து விடுவதால், மோகன் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுவிடுவார். என்ற போதிலும் (கதைப்படி) அந்த அதிகாரப்பூர்வ இரண்டாவது மனைவிக்குக் குழுந்தை பாக்கியத்திற்கு வழியிலலாமல் போய்விடும்.

மலட்டுத் தன்மை யாருக்கு என்ற ஆராய்ச்சிக்குள் கூட நாம் போகத் தேவையில்லை. அந்த அதிகாரப்பூர்வ மனைவிக்காய் இருக்கலாம். அல்லது மோகனுக்கே கூட திருமணத்திற்குப் பின் அந்தத் தகுதியை (எதேனும் விபத்து காரணமாகவோ அல்லது விதைப்பையிலுள்ள விந்தணுக்குழாய்களில் ஏதேனும் காரணங்களால் ஏற்படும் அடைப்பு காரணமாகவோ) மோகனே கூட இழந்திருக்கலாம். இப்போது அவரது கடந்த கால வரலாறும் தெரிய நேர்ந்த அந்த அதிகாரப்பூர்வ மனைவியின் நிலையிலிருந்து பார்த்தால்….? என்ன தான் அக் குழந்தை தனது கணவனுக்கே பிறந்திருந்தாலும் அதிகாரப்பூர்வ மனைவியைப் பொறுத்தவரை அதுவும் ஒரு வகையில் ஜார புத்திரனே.

ஒருவேளை மகப்பேறுக்கான உடலியல் குறைபாடு அவரிடமிருந்து, அது மருத்துவ சிகிச்சைகளினாலும் நிவர்த்திக்க வழி வகை ஏதும் இல்லாத நிலையில், ஒன்று அவர் முழுக்க முழுக்க வேறு ஒருவரின் குழந்தையை தத்தெடுக்க வேண்டும். அல்லது தனது சக்களத்தியின் குழந்தையைத் தான், அதாவது அந்த ஜார புத்திரக் குழந்தையைத் தான் தனது குழந்தையாகப் பாவிக்க வேண்டிய துர்பாக்கிய சூழல் எழுகிறது. இது நம்மூர் திரைப்பட உதாரணம்.

அதே மேற்கத்திய அமெரிக்காவிலிருந்தே அதுவும் கேட்ஸின் சம காலத்திலேயே, அதுவும் அவர் சார்ந்த அந்த கணினித் தொழில் துறையிலிருந்தே இதற்கு மற்றும் ஒரு நல்லுதாரணம் கொடுக்க வேண்டுமென்றால் நம் எல்லோருக்கும் தெரிந்த ஆப்பிளின் ஸ்டீவ் ஜோப்ஸ்-ஐக் குறிப்பிடலாம். ஸ்டீவின் ஆரம்ப காலத் தோழி கிறிஸானுக்கும் ஸ்டீவுக்கும் லிவிங் டுகெதர் லைஃபில் பிறந்த லிசா ப்ரொனானை நாம் இந்த வரிசையில் சேர்க்க முடியாது என்றாலும், ஒருவகையில், இந்த இது போன்ற பிரச்சனைகளில் ஒரு ஒப்பீட்டிற்காக எடுத்துக் கொண்டு விவாதிக்கலாம். வழக்கு மன்றப் படியேறி, மரபணுப் பரிசோதனைக்கெல்லாம் ஆளாகிக், கடைசியில், நீதி மன்றம் தலையில் நறுக்கென்று, “தலையில் ஒரு கொட்டு” வைத்தப் பின் தான், அந்தக் குழந்தைக்கு தனது புத்திரி என்ற ஸ்தானத்தை அளித்தார் ஆப்பிளின் ஸ்டீவ் ஜோப்ஸ். ஸ்டீவ் கிறிஸானுக்கு மனைவி ஸ்தானம் அளிக்க மறுத்தாலும், அவருக்குப் பிறந்த அந்தக் குழந்தை லிசா ப்ரொனான் அவருடையது தானே?

ஆக கேட்சின் 95% தயாளத்தன்மை பற்றிய பேட்டியையும் கூட மேற்கூறிய இந்த மூன்று நான்குவித மனப்பான்மையின் அடிப்படையில் சந்தேகப்பட முடியும். ஆக எதனால் அப்படி 95%-த்தை நல்ல காரியங்களுக்காக கொடுத்துவிடுவேன் எனக் கூறினாரோ? முந்தைய மனோபாவத்திலா? அல்லது பிந்தைய மனோபாவத்திலா? (இந்த 3, 4 விதமான மனோபாவத்தில் எந்த மனோ பாவத்தில் அப்படிக் கூறினார் என்பது அவ்வளவு சுலபத்தில், எளிதில் இனங் காண முடியாத ஒருநிலை என்று தான் கூற வேண்டும்.

ஜோக்1. ஒரு கம்ப்யூட்டர்கம்பெனியின் தலைமை அதிகாரி செத்தவுடன் சொர்க்கத்துக்குப் போனார், அங்கே நவீனமான பெரிய மாளிகை ஒன்றை கண்டார். அதன் வாயிலில் பி.ஜி என்ற எழுத்துக்களும் மைக்ரோ சாப்ட்டின் லோகோவும் பொறிக்கப் பட்டிருந்தது. பில்கேட்ஸ் செத்துப் போய்விட்டதாகவும் அவர் கேள்விப்பட்டிருக்க வில்லை. அதனால் ஏன் இப்படி என்று ஆச்சரியப்பட்டு, ஹே அது என்ன பில் கேட்ஸ் வீடா? என்று அருகிலிருந்த ஒருவரிடம் கேட்கிறார் அதற்கு அவர் கூறுகிறார் “ஓ அதுவா இல்லை. கடவுளின் வீடு. ஆனால் சில நேரங்களில் தான் தான் பில் கேட்ஸ் என்று அவர் நினைத்துக் கொண்டு விடுகிறார்”

ஜோக் 2. நீங்கள், டிமோதி மெக்வே, பில்கேட்ஸ் மாதிரி ஆசாமிகளுடன் ஒரு லிஃப்ட்டில் சிக்கிக் கொள்கிறீர்கள் உங்களுடைய துப்பாக்கியில் இரண்டே இரண்டு ரவைகள் தான் உள்ளன. என்ன செய்வீர்கள்? “பில் கேட்ஸை இரண்டு முறை சுட்டு உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஒரு உயர்வு நவிற்சியாய்(க்காய்) சொல்லப்பட்ட ஜோக் என்றாலும், (ஜெலசி) பொறாமை என்ற மனித உணர்ச்சியின் ஒரு உச்ச வடிவத்தைப் பாரக்க வேண்டுமானால் மேற்குறிப்பிட்ட இந்த 2 ஜோக்குகளே போதும். பொதுவாக அரசியல்வாதிகளை மையமாய் கொண்டு ஊடகங்களில் ஜோக் வரும், டாக்டர், போலீஸ், நீதிபதி, பழங்கால ராஜா, மந்திரி, சேவகன், புலவர்கள், நடிகைகள் ஆகிய இவர்களைப் பற்றிச் ஜோக் வரும் அநேகம் பேர் நம்மிலும் பார்த்து, ரசித்துப் படித்தனுபவித்திருப்போம். இது தான் வழக்கம். அல்லது அந்தந்த ஸீஸனில் எழும் ஏதோ ஒரு இஷ்யூவை மையமாகக் கொண்டு கூட ஏதும் ஒரு ஜோக் எழும். நாமும் படித்து மகிழ்ந்திருப்போம். ஆனால் ஒரு கோடீஸ்வரரை, ஒரு கோடீஸ்வர நிறுவனத்தை, அதன் வரம்பு கடந்த அந்தச் “செல்வச் செழுமைக்காக மட்டுமே” பொறாமைக் கண் கொண்டு நோக்கும் போக்கு, அதை மையமாகக் கொண்டு எழுந்த, உலகு தழுவிய புகழைப் பெற்ற, “ஜோக்குகள்” என்பது அநேகமாக இவரைப்பற்றியதாக, அல்லது இவரது நிறுவனத்தைப் பற்றியதாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

பழுத்த மரம் தான் கல்லடி வாங்கும் என்பார்கள். அந்த வகையில் இந்தளவு பழுத்த மரமொன்று இந்தக் கிரகத்திலேயே பெரிய பழுத்த மரமொன்று, கடவுளும் பொறாமைப் படத் தக்க செல்வ வளம் கொண்ட ஒரு மரம் எந்தக் கல்லடிக்கும், கண்ணெறிக்கும், காயப்படாமல் எப்படி இவ்வளவு காலம் தப்பிப் பிழைத்திருக்க முடியும்? முடிந்தது? எங்கள் ஊரில் பழமொழி ஒன்று தான் சொல்வார்கள்; கல்லடிக்குத் தப்பினாலும் மனிதன் கண்ணெறிக்குத் தப்ப முடியாது என. இந்தப் பழமொழிக்குப் பெரிய பெரிய தேசங்களே, சாம்ராஜ்யங்களே தப்பாமல் அடிபட்டுப் போன போது ஆனானப்பட்ட மைக்ரோ சாஃப்ட் மட்டும் அப்படி என்ன ஒரு விதிவிலக்கு என்ற ஆச்சரியமும் எழாமல் இல்லை. இதைக் கேட்ஸுமே கூட உணர்ந்தும், ஆமோதித்தும் கருத்துக் கூறிய நிகழ்வுகளும் உண்டு. அதற்குப் பின் வரும் அவரின் இந்தப் பேட்டிக் கருத்துக்களே கூடப் போதும். “எல்லா நிறுவனங்களும் ஒரு நாள் விழத்தான் செய்யும். அதற்கு மைக்ரோ சாப்ட்டும் விதிவிலக்கல்ல” என்று அவரே ஆமோதித்த நிகழ்வுகளும் உண்டு.

ஆனால் ஒன்று நிச்சயம். காரல் மார்க்ஸும் எங்கெல்ஸும் சரியான நேரத்தில் சரியான இடத்தில் பிறந்த துரதிஷ்டசாலிகள் என்றால் கேட்ஸும் பஃப்பெட்டும் அவர்களே ஒத்துக் கொண்டது போல சரியான நேரத்தில் சரியான இடத்தில் பிறந்த அதிஷ்டக்காரர்கள் என்பது மட்டும் நிச்சயம். பொதுவாக சரித்திரம் என்பது ஒரே நிகழ்வு திரும்பத் திரும்ப நிகழ்வது என்றும் கூட ஒரு கூற்று உண்டு. அதில் ஒரு சின்னத் திருத்தம். ஒரே நிகழ்வே என்ற போதிலும் கூட ஒரே மனிதர்களுக்கல்ல. ஒரே மாதிரிக் காலக் கட்டங்களில்ல. சதுரங்கத்தின் திறப்புகள் (openings) சிலவற்றுக்கு அதே பெயர்தான். எத்தனை மனிதர்கள் எத்தனை இடங்களில், எத்தெனை எத்தனை மனிதர்களோடு எந்தெந்த காலங்களில் விளையாண்டாலும் (விதிமுறைகள் மாறாதிருக்கும் பட்சத்தில்) விளைவுகளும் மாறுவதேயில்லை. ஒரு குறிப்பிட்ட திறப்புக்கு (opening) ஒரு குறிப்பிட்ட உலகப் புகழ் வீரர் எவ்வாறு மறுவினையாற்றுகிறார் என்பதே சதுரங்க உலகின் வரலாற்றியங்கியல் (இயக்கவியல்) விதி. கிட்டத்தட்ட சரித்திரம் என்பதுவும் இதுவே. சாமான்யனிலிருந்து, சாதனை மனிதன் வரை ஒரு குறிப்பிட்ட சூழலுக்கு, ஒரு குறிப்பிட்ட உணர்ச்சிக்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார் என்பதே.

செய்யக் கூடாதவை. செய்யத் தவறக் கூடாதவை, (do’s and do not) வெற்றி தோல்வி என்பது இதில் தானே உள்ளது. காலமெனும் மர்மப் பெட்டகம் மனித சரித்திரத்தின் பாதையில் தான் எத்துனை எத்துனை புதிர்மிகு சூழல் பொறிகளைத் தூவி வைத்துள்ளதாய் உள்ளது? தவறான நேரத்தில், தவறான இடத்தில் பிறந்த துரதிஷ்டசாலிகள், சரியான நேரத்தில் சரியான இடத்தில் பிறந்த அதிஷ்டசாலிகள், மற்றும் துரதிஷ்டசாலிகள், தவறான நேரத்தில், தவறான இடத்தில், பிறந்தாலும் கூட சரியான அதிஷ்டசாலிகளாய் தங்களை மாற்றிக் கொண்டவர்கள். மனித வரலாறு என்பது அதன் வழிநெடுக இத்தகையோர்களால் நிறைந்தது தானே?

வாரன் பஃபெட்டின் தான மர்மம்.

அடுத்ததாக வாரன் பஃபெட்டின் தான விஷயத்திற்கு வருவோம்.

2006-ம் வருடம். அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான அந்தச் செய்தியைக் கேட்ட அத்தனை பேரும் ஆச்சரியப் பட்டுப் போனார்கள். பங்குச் சந்தையின் சக்ரவர்த்தி எனப்படும் வாரன் பஃபெட் தனது வாழ்நாள் முழுக்கக் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த 37 பில்லியன் டாலர்பணத்தை உலக மக்களின் நல்வாழ்வுக்காக நன்கொடையாக அளிக்கிறார் அந்த அறிவிப்பைச் செய்த அந்த சமயத்தில் 2006-ல் அதன் மதிப்பு 37 பில்லியன் டாலர். ஆனால் அடுத்த ஒரு வருடத்திலேயே 2007-ல் அதன் மதிப்பை 52 பில்லியன் டாலர் ஆகவும் உயர்த்திக் காட்டுகிறார் அமெரிக்க வரலாற்றிலேயே அது மாபெரும் நன்கொடைத் தொகை. அதில் சில நிபந்தனைகளையும் விதிக்கிறார் (பின்னே இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாகத் தருபவர் அப்படியே தெருவில் வாரி விசிறியடிக்கப்பட்ட சிதறுத் தேங்காய்த் துண்டுகளைப் போலவா தர முடியும்? சில நிபந்தனைகளையும் விதிப்பது தானே நியாயம்

அதாவது பில் கேட்ஸ் அல்லது அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் தொடர்ந்து அந்த அமைப்பில் நீடித்தால் மட்டுமே இந்த நன்கொடை செல்லுபடியாகும். நன்கொடையாக அளித்த பணம் அத்தனையும் ஒரே நாளில் ஒட்டு மொத்தமாகக் கிடைத்து விடாது. வருடம் 5 சதவீதம் என்ற ரீதியில் கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கும் என்பது வாரன் போட்ட இன்னொரு கண்டிஷன். பில் கேட்ஸும் தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் எய்டஸ் விழிப்புணர்வுப் பிரசாரம், கல்வி, விவசாயம், மைக்ரோக்ரெடிட் எனப் பலவற்றுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் நன்கெடையாகக் கொடுத்திருக்கிறார், கொடுத்து வருகிறார் இந்தியாவில் மட்டுமல்லாமல் பல ஆப்பிரிக்கத் தேசங்களிலும் சமூக மேம்பாட்டுக்காக கேட்ஸ் அறக்கட்டளையின் பணம் செலவழிக்கப்பட்டு வருகிறது என்றாலும் கூட பில் கேட்ஸுக்கு இதில் ஒரு பிசினஸ் ஆதாயம் உண்டு என்ற விமர்சனமும் கூடவே உண்டு.

ஆனால் வாரன் பெஃபட்டுக்கு என்ன ஆயிற்று? தனது சொத்துக்கள் அனைத்தையும் அது ஏன் மெலிண்டாகேட்ஸின் அறக்கட்டளையிலேயே கொண்டுபோய் சேர்க்க வேண்டும். தானே தனியாக தனது பேரிலோ, அல்லது தனது குடும்பத்தார், மனைவி, மக்கள், முன்னோர், மூதாதையர் பெயரிலோ அமைந்த ஒரு தனி அறக்கட்டளையின் பெயரிலோ இல்லாமல் அது ஏன்? மெலிண்டாகேட்ஸின் அறக்கட்டளையோடு, கொண்டுபோய் ஏன் சேர்க்கவேண்டும்? அறக்கட்டளையிலும் கூட பிரிக்க முடியாதபடிக்கு அப்படி என்ன ஒரு பொருளாதார நட்புக் கூட்டணி? அப்படி அந்த அளவுக்கு, “இதோ பார் கேட்ஸ் யார் உம்மை கைவிட்டாலும், எந்த நிலையிலும், நான் உனைக் கைவிடேன் எனும் அளவுக்கு அப்படி என்ன ஒரு பொருளாதார முற்றுகை யிலுள்ளது?.

இது ஏதோ ஒரு பொருளாதாரப் போர் சமிக்ஞையை, சூசகமான ஒரு முன் உணர்த்துதலை இது உள்ளடக்கிக் கொண்டிருக்கவில்லை? எந்த நேரமும் முற்றுகை இடப்படலாம் எனும் முற்றுகை அச்சத்திலுள்ள ஒரு மன்னனுக்கு கூடுதல் படை உதவி அனுப்பி உதவும் நேச நாட்டுப் படைக் குவிப்பைப் போல அந்தளவுக்கு கேட்ஸையோ, கேட்சின் குடும்பத்தாரையோ அப்படி என்ன ஒரு பொருளாதார நிழல் ஆபத்து கவ்வியுள்ளது?, எப்போது வேண்டுமானாலும் கவ்விவிடலாம் போல் தோன்றுகிறது எனும் அளவுக்கு, அப்படி ஏதாவது ஒரு நிழல் ஆபத்துக் கவ்வியுள்ளதா? அல்லது இப்போது இந்த நிமிடம் வரையில்லை, ஆனால் எதிர் காலத்தில், அல்லது தூர எதிர்காலத்தில், அது அந்த நிழல் ஆபத்து எப்போது வேண்டுமானாலும் கவ்வலாம், எனும்படிக்கான அப்படியொரு ஆபத்து, தனது (எதிர்) காலத்திற்காக, தனக்கு ஏற்ற, உரிய சமயத்திற்காகக் காத்துக் கொண்டுள்ளதா? ஒருவேளை அது இந்த இக்ஸி-துஸ்பிரயோகம் தானா?

அறக்கட்டளையிலும் கூட பிரிக்க முடியாதபடிக்கு அப்படி என்னப்பா ஒரு பொருளாதாரக் கூட்டணி? இது உண்மையிலேயே ஒரு அறக்கட்டளைக் கூட்டணியே தானா? இல்லை இது (குணா பாடப் பாடலைப் போல) அதற்கும் அப்பாற்பட்ட அறக்கட்டளைக்கும் அப்பாற்பட்ட ஒரு கூட்டணியா? இத்தனைக்கும் கேட்ஸ் ஒன்றும் அவருக்கு ஒரு தொழில் (முறைக்) கூட்டாளி கூட அல்ல. பால்ய கால சிநேகிதமும் இல்லை. வயது வித்தியாசத்திலும் கூடக் கிட்டத்தட்ட ஒரு தலைமுறை இடைவெளியே உள்ளது. ஆனாலும் தனது திரண்ட சொத்துக்களின் பெரும்பான்மையை (அநேகமாக முழுவதையும் என்றே சொல்லலாம்.) மெலிண்டா கேட்ஸின் அறக்கட்டளைக்குத் தான் அளித்துள்ளார். இதுவும் எங்கோ ஒரு நெருடலை ஏற்படுத்தவில்லை? லாஜிக் இடிக்கவில்லை.

கேட்ஸே ஏற்கனவேயே உலகின் நெ.ஒன் தலைமைக் கோடீஸ்வரர். அந்தத் தலைமைக் கோடீஸ்வரரின் அறக்கட்டளையோடு கொண்டு போய் 2-வது, 3-வது அல்லது 4-வது இடத்துக் கோடீஸ்வரர் தனது சொத்துக்களனைத்தையும் கொண்டு போய் இணைக்க வேண்டிய அவசியம் திடீரென என்ன வந்தது? இல்லை கேட்ஸ் தான் சொத்துக்களின் தரவரிசைப் பட்டியலில் திடீரென ஏதும் பெரும் சரிவைச் சந்தித்து விட்டாரா? இப்படி எல்லாம் எந்த லாஜிக்கும் இல்லாத அந்த இணைப்பு நடவடிக்கைக்குப் பொருந்தி வரக் கூடிய வேறு எந்தத் தர்க்கப் பொருத்தமாவது உள்ளதா….? எனத் தேடிப் பாரத்தால்….. கீழ்வரும் வாரனின் பேட்டியையும் காரணத்தையும் கூடச் சுட்டிக் காட்டத் தோன்றும் பலருக்கு.

அதாவது, பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையைத் தான் நீண்ட காலமாகக் கவனித்து வருவதாகவும், அவர்களின் செயல்பாடு தனக்குத் திருப்தி அளித்ததாலுமேயே இந்த முடிவைத் தேரந்தெடுத்ததாகவும் பஃபெட் கூறுகிறார். தானம் அளிப்பதை ஏற்கனவேயேத் தீர்மானித்திருந்தாலும் அதை நம்பகமான ஒருவரின் கையில் ஒப்படைக்க வேண்டியிருந்ததால். இதற்காகப் பல வருடங்கள் காத்திருக்க வேண்டியாயிற்றாம்.. நம்பர்-1 பணக்காரராய் இருப்பவருக்கு அடுத்தவர் செல்வத்தை அபகரிக்க வேண்டிய அவசியம் இருக்காதல்லவா? மேலோட்டமாக பார்த்தால் இது நன்கு பொருந்தி வரக் கூடிய ஒரு தர்க்கப் பொருத்தம் தான் என்ற போதிலும், இதுவே முடிந்த முடிபான ஒரு தர்க்கப் பொருத்தம் ஆகி விடுமா?

இதற்குப் பொருந்தி வரக் கூடிய வேறு மறைமுகத் தர்க்கப் பொருத்தங்களும் ஏதாவது உண்டா…..? என்று பார்த்தால் அது தர்க்கப் பொருத்தத்தைக் காட்டிலும் அவர்களிடம் பொருந்திப் போகக் கூடியதாய் உள்ள அவர்களின் வர்க்கப் பொருத்தமே பெரியதொரு துருத்தல் உறுத்தலாய் தெரிகிறது. இருவருமே அமெரிக்கச் சமுதாயத்தின் நடுத்தரவர்கக்கப் பிரதிநிதிகள் (வேண்டுமானால் கொஞ்சம உயர் நடுத் தரம் என்று வேண்டுமானால் குறிப்பிட்டுக் கொள்ளலாமோ?!). மேல் தட்டில் உதித்த கோடீஸ்வரக் கோமான்களோ சீமான்களல்ல. ஒரு வைதீக இந்தியனின் பார்வையில் வாரன் பஃபெட்டும், கேட்ஸும், (ஏன் ஆப்பிளின் ஸ்டீவ் ஜோசெப்பும், கூகுளும், ஃபேஸ் புக்கும் கூடத் தான்) மகாபாரதத்தின் நவீன இதிகாசக் கதாபாத்திரங்களைப் போலவே கண்ணுக்குத் தெரிவர். வாரனைப் பொறுத்தவரை அவரே இந்த நவீன அமெரிக்க மிடில் க்ளாஸ் பஞ்ச பாண்டவர்களின் தர்மபுத்திரராகவும் தெரிகிறார். கிருஷ்ணரைப் போலவும் தெரிகிறார் கேட்ஸைப் பொறுத்த வரை அவர், பூலோகக் குபேரர்களாகிய அமெரிக்க முதலாளித்துவ சக்கர வியூகத்திற்குள் புகுந்த ஒரு நவீன அபிமன்யூவைப் போலவே (அந்த நாட்டின் சொந்த குடிமகன்களில் ஒருவராகவே அவர் இருந்த போதிலும்) காட்சியளிக்கிறார்;.

இதிகாச இந்திய அபிமன்யூவைப் போல நீ முதலாளித்வ பத்ம வியூகத்தை உடைத்து ஊடுருவி உள்ளே சென்றால் மட்டும் போதாது. மறுபடியும் அதை உடைத்து வெற்றி வாகை சூடி உயிர்ப்போடு வெளியேயும் வர வேண்டும். அதற்கு என்னால் இயன்றதை செய்ய “இதோ இங்கே நானொருவன் இருக்கிறேன்! முதலாளித்துவ அரச குமாரர்களோடு (பாண்டவ, கௌரவர்களுடன்) போட்டியிட அரச குமாரர்கள் மட்டுமே (அதாவது முதலாளிகள் மட்டுமே முதலாளித்துவ வர்க்கத்தில், வம்சத்தில் பிறந்தவர்கள் மட்டுமே) தகுதி படைத்தவர்கள் என்ற அந்தஸ்து பேதத்தையே நவீன பத்ம வியூகமாகக் கட்டி எழுப்புவார்களேயோனால், அதை அங்க தேசத்திற்கு அரசனாக்கி பங்கப்படுத்திய துரியோதனனைப் போல் உனக்குத் தக்க சமயத்தில் நானுள்ளேன் கேட்ஸ்.

“என்னாகுமோ? ஏதாகுமோ? எனக் குந்தி மைந்தனைப் (கர்ணனைப்) போல குழம்பி நிற்கத் தேவையில்லை. அங்கீகரிக்க மறுத்து, அபிமன்யூவைச் சூழ்ந்தது போல ஒரு முதலாளித்துவ பத்ம வியூகமாய்ச் சூழ்ந்து உனைச் சம்ஹாரிக்க நினைத்தால், இந்தியா இதிகாசக் கதாப்பாத்திரங்களான கர்ணனைப் போல, அபிமன்யூவைப் போலத் தட்டுத் தடுமாறித் தவிக்க வேண்டியது இல்லை நீ, அப்படியொரு நிலை ஏற்பட்டால், கர்ண மானம் காக்கத் தோன்றியத் துரியோதனானைப் போல இங்கே நானொருவன் உள்ளேன் என்பதைக் கடைசி வரை மறவாதே? களத்தில் மனம் கலங்கிவிடாதே, துவண்டு விடாதே என்பதைப் போல இல்லை இது?

உலகின் தலைமைக் கோடீஸ்வரப் பட்டத்திற்கு தேவையானது குபேர குலப் (முதலாளித்துவப்) பெருமையல்ல. தகுதி ஒன்றே. அந்தத் தகுதி உனக்கு அது நிரம்பவே உள்ளது. அதைக் கேள்விக்குள்ளாக்க விரும்பினால், அல்லது அதைப் பங்கப்படுத்த எண்ணினால், தலைமைக் கோடீஸ்வரனாகவே உருவெடுத்தாலும் ஒற்றைப் pawn-ஐப் போலத் தனியொருக் கோடீஸ்வரன் தானே எனக் குறைத்து மதிப்பிட்டு விட்டால், கலங்கி நின்று விடாதே. துவண்டு சோர்ந்து விடாதே. வர்க்கத் தோழமை கொடுக்க நானுமுண்டு மீதமுள்ள நம் தம்பிமார்களுமுண்டு. சக்கர வியூகம் சாப்பிட்டு முடிந்த பின் வந்த அர்ஜுணக் காண்டீபமல்ல எனது கணை. காலத்தே வந்து கருத்துடனமர்ந்த கவச மலையன்றோ நானுக்கு, எனச் சொல்லாமல் சொல்வதைப் போல் இல்லை இது?

ஜயா, ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் புரியும். கேட்ஸால், அவரது மைக்ரோ சாப்டால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட கம்பெனிகள் ஒன்றல்ல இரண்டல்ல அமெரிக்காவில். ( ஐ.பி.எம், போன்ற பெரிய கம்பெனிகள் உட்பட, தனிப்பட்ட முறையில் இவராலும், இவரது துறையில் எழுந்த எழுச்சியாலும் பின்னணிக்குத் தள்ளப்பட்ட மற்ற எத்தனையோ தொழிற் பிரிவுகளையும் அதன் தொழில் அதிபர்களையும், பரம்பரை பரம்பரையாய், பரம்பரைக் கோடீஸ்வரர்களாய் கோலேச்சியவர்களையும் கூட நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறக் கூடாது..) அவர்களெல்லோரோடும் ஒப்பிடும் போது இந்த ஐவர் அணியைத் தவிர்த்து, மற்றவர்கள் எல்லாம் தீடீர் பணக்காரர்களல்ல. ஒரே நாளில் நேற்று பெய்த சிலிக்கன் மழையில் இன்று முளைத்த பில்லியன் டாலர், ட்ரில்லியன் டாலர் காளான்களல்ல.

அவர்களில் மற்றவர்கள் எல்லோரும் (எல்லோரும் என்று சொல்லி விட முடியாத போதும் பெரும்பாலோர், அல்லது குறைந்த பட்சம் அதில் சிலருக்காவது) இந்த ஸ்தானத்தை அடைவதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட காலத்தை ஒப்பிடும் போது, மழைக் காளான் வளர்ச்சியாய் இந்த நவீன மிடில் கிளாஸ் அமெரிக்கப் பாண்டவர்களின் அசுர வளர்ச்சி வேகம் அவர்களையும் அச்சுறுத்தியிருக்கும். அதே போது, ஸீசன் முடிந்ததும் நின்று போக இது பருவ மழையும் அல்ல. அல்லது மழை முடிந்ததும் மறைந்து மக்கிப் போக இவர்கள் ஒன்றும் மழைக் காளான்களுமல்ல. வீசி அடித்துக் கொண்டிருப்பது வெறும் சிலிக்கன் மழை மட்டுல்ல இது ஒரு யுகம், சகாப்தம், தகவல் யுகம் என்ற சிலிக்கன் சகாப்தம். இப் புது யுக சகாப்தத்தின் புத்திளம் பிரம்மாக்கள் இவர்களே இவர்களைப் போன்றோர்களே என்பதைப் போல இவர்களின் அசுர வளர்ச்சி பாரம்பர்யக் பரம்பரைக் கோடீஸ்வரர்களை மிரட்டியிருக்கலாம்.

மூத்த தலைமுறையில் யதிஷ்டரைப் போன்ற வாரன் பஃப்பெட்டும் பீம கர்ணனைப் போன்ற அல்லது பீம அபிமன்யூவைப் போன்ற ஆப்பிளின் ஸ்டீவ் பாமரும் மைக்ரோசாப்டின் கேட்ஸும் பின்னாலேயே உதித்த நகுல சகாதேவர்களைப் போன்ற கூகுளும், ஃபேஸ் புக்கும் இப்போது அமெரிக்க மணிமகுடத்திலுள்ள ரத்தினக்கற்களைப் போல. (மகா)பாரதத்தில் ஜாம்பவானிடமிருந்த பெற்ற சியமாந்தளக் கற்களைப் போன்றவர்கள். ஆனால் அதெல்லாம் இப்போது. இந்த நவீன அமெரிக்க நகுல சகாதேவர்களான கூகுளும், முகநூலும் தோன்றி எழுந்த ஒரு வளரிணைப்புக்கு முன்பு வாரன், கேட்ஸ், ஸ்டீவ் சகாப்தம் எழுந்த போது இந்த அங்கீகாரம் அவ்வளவு எளிதில் நிகழ்ந்திருக்காது.

Strom in the cup என்பார்களே அது போன்ற முதலாளித்துவ “கோப்பைக்குள் ஒரு புயலைப் போன்ற ஒரு பனிப்போர் காலம்” கட்டாயம் ஒன்று நிகழ்ந்திருக்கும். இம் மும்மூர்த்திர்களின் அனுதின வளர்ச்சி அந்தப் பாரம்பர்யக் கோடீஸ்வரகளின் மணிமகுட ஸ்தானங்களை எட்டிப் பறிப்பதை நாளும் அவர்கள் கையறு நிலையிலேயே, பொறாமைத் தீயுடனேயேப் பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம். புரிந்தவர் புகழ்ந்தனர், புரியாதோர் பாதிக்கப் பட்டோர் வழி மறித்திருக்கலாம். மறித்து நின்றவரெல்லாம் தெறித்துச் சிதறும் படியாய் மேலும் மேலும் இவர்களது வளர்ச்சிக் கட்டுப்படுத்த முடியாததாய் விஸ்வரூபம் கண்டது தான் பலன்.

மறிக்கப் பட்டவர்களில் பிரதானமானவர் பின்னாளில் அமெரிக்க மணிமகுடத்தின் ரத்தினக்கல்லாகவே, முதலாளித்துவ யுரேனிய ஐஸோடோப்பின் முக்கிய நியூட்ரானாகவே மாறியவர். முதலாளித்துவ யுரேனிய ஐஸோடோப்பின் எந்த நியூட்ரானை இன்று அதன் மணிமகுடத்தில் உள்ள ரத்தினக் கல்லாகக் கருதுகிறார்களோ, எந்த ஒற்றை நியூட்ரானை அதன் பிரிக்கமுடியாத ஒரு அங்கம் என்றே கொண்டாடுகிறார்களோ அந்த அதே ஒற்றை நியூட்ரானை அந்த ரத்தினக் கல்லை, தங்களது உட்கருவைப் பிளக்க வரும் பத்ம வியூக அபிமன்யுவைப் போல பார்த்தக் காலங்களும் இருந்திருக்கக் கூடும். முதலாளித்துவ உட்கருவுக்குள் ஊடுருவ இயலாது பத்மவியூகமாய்த் தடுத்து நிறுத்தி, நீதி கோரி, நீதி மன்றம் சென்ற காலங்களும் உண்டு. நீதி மன்றங்களினாலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு நிலை, திணறல் சூழலில்…..!

பாதிக்கப்பட்டவர்களின் அவல அழுகுரல்களும், அதிருப்தி குரல்களும் அமெரிக்க நீதி மன்றத்திலும் எடுபடாத ஒரு நிலையில், “எங்களின் அவல அழுகுரல் நீதி மன்றங்களுக்குத் தான் புரியவில்லை என்றால், “ஏ அமெரிக்க அரசாங்கமே உனக்குக் கூடவா புரியவில்லை? “ என்ற இவர்களின் ஒப்பேரி லாபி ஒரு கட்டத்தில் நேரடியாகவே முதலாளித்துவக் குழுமங்களால் இயக்கப்பட்ட ஓட்டு மொத்த அமெரிக்க அரசியல்வாதிகளின் (கிளிண்டனின் அரசாங்கப்) பார்வைக்கும், கவன ஈர்ப்புக்கும் செல்கிறது. அது போன்ற ஒரு சமயத்தில் இது போன்ற ஒரு சதி (நான் குறிப்பிடும் இந்த இக்ஸித் துஷ்பிரயோகம் போன்ற ஒரு சதி) மட்டும் ஒருவேளை நிகழ்ந்திருந்தால்……?

சட்டத்தால், சட்டப்படித் தண்டிக்க முடியாத ஒருவரை, “அரசதிகாரத்தின் அதிகாரப்பூர்வ சட்டத்திற்கன்றி தார்மீக அறநெறிகளுக்கு எல்லாம் பணியாத ஒருவரை”, அவரின் அதே வழியில், பாணியில் சென்று தண்டிப்பது என்பது எப்படியிருந்திருக்கும்?. முள்ளை முள்ளால் எடுப்பது போல கேட்ஸுக்கு எதிர்ப்பானவர்களுக்கு நல்ல சுவையான, உவப்பான ஒரு விசயமாகவே இருந்திருக்கும் என்பது சொல்லாமலே விளங்கக் கூடிய ஒரு உண்மை.

மற்றவர்கள் விஷயத்தில் எப்படியோ தெரியாது. ஐ.பி.எம் விஷயத்திலும், எஸ்.சி.பி. கம்பெனி விஷயத்திலும் நெட்ஸ் கேப் விஷயத்திலும் கேட்ஸின் அப்பட்டமான அறநெறி மீறல்கள் மேலோட்டமான ஒரு பார்வையிலேயே சற்று அப்பட்டமாகவே, பட்டவர்த்தன அம்மணமாகவே தெரிகிறது. இதற்கு சட்ட வல்லுனர்களின் நுண்மான் நுழைநுட்ப பார்வையெல்லாம் தேவையேயில்லை. ஒரு பாமரப் பார்வையிலேயே புலப்பட்டுவிடக் கூடியத் தகிடுத்ததங்கள் தான் அவை. மேற்குறிப்பிட்ட அந்தக் கம்பெனிகளுடனான ஒப்பந்தம், தொழிற் போட்டி அணுகு முறை சட்டப்படியிலான ரீதியில் சரி என்ற போதும் தார்மீக அநநெறிகளின் படி பார்த்தால் அது ஒரு மோசடி ஒப்பந்தமே, மோசடி அணுகுமுறையே. ஒருவரின் அறியாமையையும், இன்னொருத்தரின் பேராத்திரத்தையும், (பச்சையாக கொச்சையாகச் சொல்ல வேண்டுமென்றால் பேரவிட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.) இன்னொருவரின் பிஞ்சு வளர்நிலையையும் ஒரு கில்லாடி நரித்தந்திர ஆசாமி லாவகமாக, நைச்சியமாகப் பயன்படுத்திக் கொண்ட கதை தான்.)

பெரிய பெரிய கணினிகளிலேயே காலத்தைச் செலுத்திக் கொண்டு தனியாள் கணினிகளில் கவனத்தைச் செலுத்த மறந்து விடடோமே!. இப்போது பார்த்தால் இந்தத் தனியாள் கணினிச் சந்தையே இவ்வளவு பிரமாண்டமாய் வளர்ந்து நிற்கிறதே. எங்கே இந்த சந்தையைத் தவற விட்டுவிடுவோமோ என்ற அவசர ஆத்திரப் பதை பதைப்பில் தானே ஐ.பி.எம் ஏமாந்தது. பர்சனல் கம்ப்யூட்டர் பக்கம் அப்போது எழுந்த அலையை, அந்த சந்தையை முற்ற முழுதாகக் கைப்பற்ற வேண்டுமென்பதற்காக, “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற நிலையில் தானே கேட்ஸிடம்; சென்றது? சென்றது வரை சரி தான். சென்றார்கள் வென்றார்களா? (சென்று வென்று வந்ததா…?) என்று பார்த்தால்… அங்கு தான் திருப்பமே. (ட்விஸ்ட்டே)

விரைந்துக் கைப்பற்ற வேண்டிய சந்தை என்ற, தனக்கிருந்த ஆத்திர அவசரத்தால் ஒப்பந்த “ஷரத்துக்களைக் கூடச் சரியாகப் படித்துப் பார்த்திராமல் அல்லது படித்துப் பார்த்த போதும் அதன் அர்த்த முக்கியத்துவம், ஆழம் புரியாமலேயே, தொலை நோக்கு இல்லாமலேயே கேட்ஸின் சூழ்ச்சி வலை ஒப்பந்தத்துக்குப் பலியாகி விட்டது. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு, பதறாத காரியம் சிதறாது என்ற சொலவடைக்கெல்லாம் இலக்கணம் ஆகி விட்டது. ஐ.பி.எம்-ன் அந்த நிலை என்பது (தனது) சொந்தக் காசிலேயே (தனக்குத் தானே) சூனியம் வைத்துக் கொண்ட கதை தான்.

ஐ.பி.எம்-ன் செலவில் ஓ.எஸ் தயாரித்துக் கொண்டு (அதையும் இவர் எங்கே தயாரித்தார்? அதைத் தான் எஸ்.சி.பி கம்பெனி கிட்டத்தட்ட உரித்த வாழைப் பழம் போல் வழங்கி, ஊட்டி விடத் தோதாக கிம் பேட்டர்சனையும் வாரி வழங்கி விட்டதே. ஆக அது எஸ்.சி.பி. மற்றும் ஐ.பி.எம் இரண்டு பேருக்குமே ஒரு மெகா சைஸ் அல்வா கொடுத்த கேட்ஸின் சாமார்த்தியம் ஒன்றும் சரித்திரம் இதுவரை காணவே காணாத புதுமையல்ல. பழைய ஈசாப், பஞ்ச தந்திரக்கதைகளில் சொல்லப் பட்ட அதே ஆமை, யானைக் கதை தான். மலையுச்சியிலிருந்த ஆமை ஒன்று மலை அடிவாரத்திலிருந்த இரண்டு எதிரும் புதிருமான யானைகளை ஏமாற்றிய அதே பழைய பஞ்ச தந்திர, ஈசாப் கதை தான். இரண்டு உலகச் சதுரங்க வீரர்களை அவர்களுக்கே தெரியாமல் அவர்களை மோத வைத்து வென்ற சாமான்யன் ஒருவனின் அதே பழைய கதை தான். பழைய கள் புதிய மொந்தையில் என்பார்களே அது போலத் தான். காலமும் இடமும் மட்டுமே வேறுபடுகிறது. ஆனால் சரித்திரத்தின் சம்பவங்கள், “ஒரே சம்பவம் திரும்பத் திரும்ப நடப்பது வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு மொழி, இன, மக்களுக்கு நடப்பது,” என்ற அதன் இலக்கண வரையறை மட்டும் மாறுவதேயில்லை.

மைய விஷயத்திற்கு மீண்டும் வருவோம் மாமியார் உடைத்தால் மண் சட்டி மருமகள் உடைத்தால் பொன் சட்டி என ஒரு பழமொழி கூறுவர் எங்களுரில். அதெப்படி பில் கேட்ஸ் மட்டும் தனது முதல் ஒப்பந்தத்தில் (மிட்ஸ் கம்பெனியின் எட்ராபர்ட்டுடனான ஒப்பந்தம்) தோல்வியுற்றதும் வழக்கு மன்றத்திற்கு செல்வாராம். வழக்கு மன்றமும் இவருக்கு உரிய நீதியை வழங்கி நீதித் துறையின் கௌரவத்தைக் கண்ணியத்தைக் காப்பாற்றி விடுமாம். அந்த அதே நீதித் துறையின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அதன் சுய கௌரவம் மீண்டும் பின்னாளில் இதே எஸ்.சி.பி கம்பெனி விஷயத்தில் மட்டும் இருதரப்புக்குமே வசதியாய் (நீதித் துறைக்கும் சரி, பில் கேட்ஸுக்கும் சரி இருதரப்புக்குமே வசதியாய்) தங்களது தார்மீக அறநெறிக் கண்களை இறுக மூடிக் கொள்வார்களாம்.

வளர்ந்து வரும் இளைஞன், அதுவும் வழக்கறிஞர் ஒருவரின் மகன். தோற்றத்தில் சின்னப் பையனாகக் காட்சியளிக்கும் தன்னை எங்கே ஏமாற்றி விடுவாரோ இந்த மிட்ஸ் முதலாளி எனத் தனது தந்தையும் வழக்கறிஞருமான வக்கீல் தந்தை உதவியுடன் வணிக ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக் கொள்கின்றார். ஆனால் போட்டுக் கொண்ட அந்த ஒப்பந்தமே பின்னாளில் அவரது வளர்ச்சிக்குத் தடையாய், இல்லையில்லை கழுத்துக்கு சுருக்குக் கயிறாகவே மாறுகிறது. ஆனால் அமெரிக்க நீதி மன்றம், “கறாராய் சட்ட (ஷரத்து) விதிகளின் படி தான் நடந்து கொள்ள முடியும். வழக்கறிஞர் ஒருவரின் மகன் என்பதற்காகவெல்லாம் ஒரு தலைப் பட்சமாக ஒப்பந்த விதிகளுக்கு மாறாகவெல்லாம் தீர்ப்பளிக்க இயலாது” எனக் குறுகிய வறட்டு சட்ட வரம்பெல்லைகளுக்குள் மட்டுமே நின்று தனது பார்வையைச் சுருக்கிக் கொண்டிருக்கவில்லை.

அப்படிச் சுருக்கிக் கொண்டிருந்தால் இந்நேரம் உலகில் மைக்ரோ சாப்ட் என்ற இந்தப் பகாசுரப் பன்னாட்டு நிறுவனம், (அமெரிக்க முதலாளித்துவ மணிமகுடத்தில் ஒரு வைரக்கல்லைப் போல ஜொலித்துக் கொண்டிருக்கும் இந்தப் பகாசுரப் பன்னாட்டு நிறுவனம்) தோன்றியே இருக்க முடியாது. வேரிலேயே வெந்து கருகியிருக்கும். எங்கோ ஏதோ இயற்கையிலேயே ஆசிர்வதிக்கப் பட்டதைப் போலத்தான் பல நிகழ்வுகள் கேட்ஸின் வாழ்க்கையிலும் நடந்துள்ளன என்ற போதிலும் அதுவும் இது போன்ற சில நெருடல்களுக்குட்பட்டுத் தான்.

எஸ்.சி.பி கம்பெனி விஷயத்தில் மட்டும், “தவறுதலான ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்ட உங்களின் மீது தான் தவறு. மைக்ரோ சாப்ட் மீது அல்ல இருந்த போதிலும் நீதித் துறைக்கும் ஏதோ மனிதாபிமானம் உண்டு. வறட்டுத்தனமாய் சட்ட விதிகளை மட்டுமே இறுகப் பிடித்துக் கொண்டிருக்கும் இரும்புப் பார்வை எல்லாம் கிடையாது. என்பது போன்ற ஒரு கண் துடைப்பு நீதியை வழங்கிய அதே முதலாளித்துவ அமெரிக்க நீதித் துறை அதே கண் துடைப்பு நீதியை கேட்ஸுக்கு, மைக்ரோ சாப்ட்டுக்கு அதன் ஆரம்ப காலங்களில் (மிட்ஸ் கம்பெனியின் எட்ராபர்ட் தரப்புக்கு எதிரான வழக்கில்) வழங்கி இருந்தால்…? Scp கம்பெனி விஷயத்தில், மைக்ரோ சாப்ட்டுக்கு தான் மனசாட்சி இல்லை என்றால், நீதி மன்றத்தில் கிடைத்த தீர்ப்பு அது அதை விடக் கொடுமை. நிவாரணம் என்ற பெயரில் ஏதோ மீட்டருக்கு மேல் சிறிது போட்டுக் கொடுத்து செட்டில் பன்னும் ஒரு இந்திய ஆட்டோக் கட்டண செட்டில்மென்ட் போல் செட்டில் செய்துள்ளது.

நாட்டில் இங்கு (இந்தியாவில்) ஊழல் பெருச்சாளிகள் இலட்சம் கோடி ரூபாய்களில் ஊழல்களில் திளைத்துக் கொண்டிருக்கும் போது பிச்சாத்து 1500 கோடி ரூபாய் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைக்கு) அடுத்த தேர்தல் வரை படிப்படியாக அமல் (தாமதமப்?) படுத்தத் தீர்ப்பு வழங்கும் இந்திய நீதித் துறையின் கண்ணியத்தை விட இது அவ்வளவு கேவலமாக இல்லை என்ற போதிலும், “இரண்டு வர்க்கங்களுக்கு இடையே உள்ள விரோதத்தை ஒரு ஜனநாயகக் குடியரசு தீர்த்து வைப்பதில்லை, மாறாக சண்டையிட்டு வளர்த்துக் கொள்ள ஒரு களம் தான் அமைத்துக் கொடுக்கிறது” என்ற எங்கெல்சின் தீர்க்க தரிசனத்தைத் தான் எனக்கு இங்கு நினைவு படுத்துகிறது.

ஆக ஒரு (உயர்) நடுத்தர வர்க்கத்து இளைஞன் ஒருவன் இவ்வளவு உயரத்திற்கு, உலகத்திலேயே பெரிய கோடீஸ்வரன் என்ற விஸ்வரூப உருவெடுக்கக் காத்திருக்கிறார் என்றெல்லாம் கனவிலும் நினைத்திருக்காது அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம். உலகின் குபேர முதலாளிகள் எல்லாம் பெரும்பாலும் அமெரிக்காவிலேயே குவிந்திருக்க, ஆக அப்படிப் பட்ட குபேர குல முதலாளிகளோடு போட்டியிடுவது என்பது, (கொல்லன் வீதியில் ஊசி விற்க கிளம்பிய பழைய பழமொழியைத் தான் நினைவூட்டுகிறது.) அதாவது அமெரிக்காவிலேயே பெரிய கோடீஸ்வரவனாக உருவெடுப்பது என்பது வெறும் அமெரிக்கக் கோடீஸ்வரப் பட்டத்திற்குப் போட்டியிடுவது என்ற ஒற்றை இலக்கை மட்டுமே கொண்டது அல்ல. சாராம்சத்தில் உலகின் தலைமைக் கோடீஸ்வரப் பட்டத்திற்கும் சேர்த்தே போட்டியிடுவதற்கு ஒப்பான ஒன்று தான் ஆகும்.

எப்படிக் காலனித்துவப் போட்டியில் பிரிட்டன் (அமெரிக்க, ஐரோப்பிய ஆடுகளத்தில் மட்டுமல்ல, உலக ஆடுகளத்திலேயே) இவ்வளவு பெரிய அசுர சக்தியாய் உருவெடுக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லையோ அப்படி… அப்படித் தான் கேட்ஸ் விஷயத்திலும். அப்படி எதிர்பார்த்திருந்தால் நெப்போலியன் ரஷ்யா மீது படை எடுத்திருக்க மாட்டார். கட்டுப்படுத்தப்பட வேண்டியது ரஷ்யா அல்ல, பிரிட்டனின் கடல் ஆதிக்கமே என்ற உண்மையை உணாந்தவராய் பிரிட்டனை அடிமைப் படுத்த முயன்றிருப்பார். ஆனால் நடந்ததோ வேறு. உண்மையை உணாந்த போது காலம் கடந்திருந்தது. தேசங்களுக்குப் பொருந்துகிற அதே விதி சமயங்களில் தனி மனிதர்களுக்கும் பொருந்தி விடுகிறது. கேட்ஸ் விஷயத்திலும் இதுதான் நடந்துள்ளது. கேட்ஸ் ஒரு கட்டுப்படத்தப்பட வேண்டிய நபர் என்பதை இதர முதலாளித்துவ, பரம்பரை பாரம்பர்ய கோடீஸ்வரர்கள் உணர்வதற்குள் காலம் கடந்து விட்டது. அவரின் விஸ்வரூபம் வளர்ந்து விட்டது.

இனிமேல் இவருக்குக் கடிவாளம் இடுவது என்றால் அது அரசதிகாரத்தின் துணை இருந்தால் அன்றி, நம்மால் மட்டும் தனித்துச் சாத்தியப்படக் கூடிய ஒன்றல்ல என்ற நிலையையும் எட்டிவிட்ட நிலையில், கேட்ஸால் பாதிக்கப்பட்ட கேட்ஸின் எதிராளிகள், அவருக்கு எதிரான ஆயதமாய் கையில் எடுக்கத் தோதாய் வேறு என்ன தான் உள்ளது?. அவர்களுக்காதரவாய் அரசை வளைக்க வேண்டுமானால் அதிபரை வளைக்க வேண்டும். அதிபரை வளைக்க வேண்டுமானால் அதற்காதரவான அவரது பலவீனங்களைப் பரிசோதிக்கவேண்டும், பட்டியலிட வேண்டும். கிளின்டனின் பூர்வாசிரம வரலாறும் இதற்காதரவாகவே இசைவளிக்கக் கூடிய ஒன்றாகவே இருந்துள்ளது.

கிளின்டனின் வாழ்வு ஏதோ சந்தர்ப்பவசத்தால் மோனிகாவினால் மட்டுமே கறை படிந்ததல்ல. அவரது வாழ்வில் மோனிகாவின் வருகைக்கும்; முன்னரேயே பலர் உண்டு. ஜெனிபர்ஃப்ளவர்ஸ்(1980), கேத்லின் வில்லி(1998), ஜொனிதா ப்ராட்ரிக(1978);, பவுலா ஜோன்ஸ், (இவற்றையெல்லாம் தான் முன்னமே நாம் பார்த்துவிட்டதால் மீண்டும் விவரிக்கத் தேவையில்லை.) முதலில் கேட்ஸிடம் இக்சி துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கக் கூடும் என்று தான் தோன்றுகிறது. அதற்குத் தீர்வேதும் உடனடியாகக் கிடையாதென்பதால் தான் தீர்வுக் காலம் வரை மேலும் மேலும் தொல்லைப்படுத்தவோ, அல்லது தொல்லைப்படாமல் இருக்கவோ வேண்டிக் கூட இரு தரப்புக்களுமே கூட அதிபரின் உதவியைப் பெற, அதற்காக அதிபரையே கூட வளைக்கவும் கூடத் தீர்மானித்திருக்கலாம்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு (அதாவது எனது இந்த யூகங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் கேட்ஸ் தரப்பு.) பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கு முன்னமே அதிபரை தங்கள் தரப்புப் பக்கம் வளைக்க ஒரு கூடுதல் மின்னல் வேக முயற்சியைக் கூட எடுத்திருக்கலாம். துஷ்பிரயோகத் தரப்பும் தங்கள் பங்குக்கு அதிபரை பணம் கொண்டோ அல்லது இதர வழிமுறைகள் எதேனும் மூலமோ அவர்களும் கூடக் கிளிண்டனைச் சரிக் கட்டக் கூட முயற்சித்திருக்கலாம். அன்றி (அல்லது) அவர்களே கூட அவர்கள் தரப்பிலிருந்து கிளிண்டனையும் இதே இக்ஸி வலையில் முதலில் அதிபரையே இந்த வலையில் வீழ்த்தி விட்டால், பின் அதிபர் எங்கே போவார் நம் கட்டுப்பாட்டை மீறி? என்ற நினைப்பில் அவர்களும் கூட இதே இக்ஸி-ஐத் தேர்ந்தெடுக்க வாய்ப்பிஉள்ளது. ஆக எத்தரப்பு எந்தக் காரணத்துக்காக கிளிண்டனை இலக்கு வைத்தார்களோ? மொத்தத்தில் கிளிண்டனும் அதில் (இக்ஸித் துஸ்ப்ரயோகத்தில்) பலியாகியிருக்க வேண்டிய ஒரு நபர் தான். ஆனால் அதற்குள் கருத்தடை அறுவை சிகிச்சை என்ற பெயரிலோ, அல்லது, மலட்டுத் தன்மை என்ற வடிவிலோ ஏதோ ஒரு ரூபத்தில் வந்து அவரை இன்னமும் அதிக (ஜீவனாம்சம், நஷ்ட ஈடு என்ற) அபாயங்களில் விழாமல், செக்ஸ் க்ரைம் என்ற மட்டத்துக்கு மேல் ஈடேராமல் பார்த்துக் கொண்டது என்று தான் தோன்றுகிறது.

இரண்டு தரப்பில் எந்த ஒரு தரப்புமே கூடத் தான்…. அதிபரின் அரசியல் (என்ன இருந்தாலும் அதிபருக்கு என ஒரு பவர், செல்வாக்கு, அதிகாரம் இருந்து இருக்கும் இல்லையா?) செல்வாக்கு அதிகாரம் காரணமாக தான் பலியாகி விடாமல் இருக்க வேண்டி, முதலில் அதிபருக்கே அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அவர் எங்கே போவார்? என கேட்ஸின் எதிராளிகளும் கிளிண்டனின் மீது இக்ஸி துஸ்ப்ரயோகத்திற்கு முயற்சித்திருக்கலாம். அல்லது கேட்ஸ் தரப்பில் இக்ஸி-ஆல் பாதிக்கப் பட்ட பிறகு, வலி என்றால் என்னவென்று புரிந்தால் தான், தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தானே புரியும். என்ற ரீதியில் ஒழுங்கான ஒரு தீர்ப்புக்காக வேண்டியும் கூடக் கேட்ஸ் தரப்பிலிருந்தும் கூட இக்ஸி-யின் பொருட்டு மோனிகாவின் பிரவேசம் நிகழ்ந்திருக்கக் கூடும்.

ஆக இந்த ஓட்டு மொத்தப் பிரச்சனைகளின் தாக்கத்தால் கூட கேட்ஸிடம் அப்படி ஒரு தயாள குணம் வெளிப்பட்டிருக்கக் கூடும். பின்னே 95% தயாள குணத் தாரளம் என்பது மிகவும் அதீதமல்லவா? அதுவும் கூட மெல்ல, மெல்ல 1995 களுக்குப் பின்னரே வெளிப்படத் தொடங்குகிறது. அதுவும் எப்படி?… அவரது தயாள குணத்துக்கு டெட்டனர் போன்ற கோடீஸ்வரர்கள் ஒரு பெரும் சவால் விடாமல் விட்ட பின்னரேயே (ஐ.நா. சபைக்கு அளித்த டெட்டனரின் 100 கோடி டாலர்கள் உண்மையில் ஒரு உசுப்பலான சவாலே) அதற்குப் பின்னரே கேட்சிடமிருந்தும், கேட்ஸ் தரப்பு வாரன்பெஃபட்டிடம் இருந்தும், ஒரு எதிர்வினைபோலும் அறப்பணிகளுக்கான பெரும் நன்கொடை அறிவிப்புகள் வெளிவரத் தொடங்குகின்றன.

1997-ம் ஆண்டுகளில் கேட்சும், அவரது மைக்ரோ சாப்ட் நிறுவனமும் செய்திருந்த அறப்பணிகளின் அளவு 400 மில்லியன் டாலர்கள் ஆனாலும் அப்போதும் கூட உலகின் தலைமைக் கோடீஸ்வரருக்கு தயாள குணத்தில் என்னவோ 4-வது இடமே (ஃபார்ச்சூன் பத்திரிக்கையின் தரவரிசைப்படி). இப்படிப்பட்ட கேட்ஸ் குடும்பத்தாரின் அறக்கட்டளையில் ஏறக்குறைய தனது சொத்துக்கள் முழுவதையும் சேர்த்துள்ள வாரன்பஃபெட்டின் இணைப்பு நடவடிக்கையும் கூட எனது இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

என்ன ஒரு கொடுமை பாருங்கள்? அம்மண உலகில் ஆடை கட்டிய மனிதன் முட்டாள் என்பதைப் போல, ஒரு மனிதனின் (அல்லது ஒரு நிறுவனத்தின்) மிகவும் அதீத வள்ளல் தன்மையையும் கூட என்ன ஒரு குரூரமான சந்தேகக்கண் கொண்டு நோக்க வேண்டியுள்ளது பாருங்கள். இந்த சூழல் நிர்ப்பந்தம் உள்ளதே…..?.

ஒரு மனிதன் கடைசியாக எத்தனை நாட்களுக்கு முன்பு. எத்தனை மாதம், ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக பாலுறவு உச்சம் அடைந்தான் என்பதை அறிவியலால் கண்டுபிடிக்க முடியுமா? என்ற என் பழைய புரபோசல் கேள்வியை எப்படி, எல்லோரிடமும் வெளிப்படையாக நான் கேட்டு விட முடியாதோ? அப்படி அதே போல் தான் குறிப்பிட்ட இந்தப் பிரச்சினைக்கான தடய அறிவியல் பரிசோதனை முறையைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு அறிவிப்பையும் கூட வெளிப்படையாக பகிரங்கமாக ஒரு பரிசுப் போட்டி அறிவிப்பு போலும் (பகிரங்க அறிவிப்பாய்) அறிவிக்க முடியாது போனதோ என்னவோ? (அதாவது ஒரு வேளை நிகழ்வு ஐ.சி.எஸ்.ஐ துஷ்பிரயோக நிகழ்வு ஏற்கனவேயே நிகழ்ந்திருந்தால், நிகழ்ந்து விட்ட பின்னரும் கூட).

அப்படி அறிவித்தால் இது யாருக்கு, எதற்குத் தேவைப்படுகிறது. என்ற கேள்வியையும் இயல்பாகவே இது எழுப்புகிறது ஆக இது ஒரு பிரகடனப்படுத்தப்படாத அறிவியல் ஆய்வாகக் கூட உலகில் எங்கேனும் ஒரு முலை முடுக்கில் நடத்திக் கொண்டிருக்கப்பட்டாலும் படலாம்! யார் கண்டது?! எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதை தான் ஆப்பசைத்த குரங்கின் நிலை போலத் தான்.

எல்லோரிடமும் வெளிச் சொல்லி விட முடியாத 2 தர்ம சங்கட நிலைபாடுகள் இவை. இலக்கணத்தில் 2 எதிர்மறைகள் ஒரு உடன் பாட்டுப் பொருளைத் தருவது போல திருமண ஒழுக்கங்களில் இரண்டு விபச்சாரங்கள் ஒரு நன்னெறியாக்கப்படுவதைப் போல, எல்லோரிடமும் வெளிச் சொல்லிவிட முடியாத இந்த 2 தர்ம சங்கட நிலைபாடுகள் ஒன்று சேரும் போது இதுவும் கூட இனி வெளிப்படலாம். இனி மேலும் இப்போதும் அஞ்சத் தேவையில்லை எனும் படிக்கு இதற்கு ஒரு பாப விமோசனம், சாப விமோசனம் கிடைத்தது போல் ஆகி விடாதா? விஷயம் நீர்த்துப் போய் விடாதா என்ன?! என்பதே என் கேள்வி. (அதாவது இவ்வளவும் நிகழ்வு ஏற்கனவேயே நிகழ்ந்திருந்தால் மட்டுமே).

ஐயா, வெளிச் சொல்ல முடியாத இந்த 2 தர்ம சங்கட நிலைபாடுகள் எப்படி ஒன்றிணைய முடியும்?! பரஸ்பரம் ஒன்றுக்கொன்று அனுசரணையாய் எப்படி உதவிக் கொள்ள இயலும் எனக் கேட்க வரலாம் தாங்கள். எளிது என எளிதாய் கூறுவதை விட முயற்சித்தால் சாத்தியக்கூறுகள் உண்டென்கிறேன்.

மனித உடல் செல்களின் வளர்ச்சிதை மாற்ற வேகம் (கருச்செல்கள் உட்பட) நவீன அறிவியல் ஏற்கனவே அறிந்த ஒன்றாகத் தான் இருக்கும். இந்த வளர் சிதை மாற்ற வேக விகிதத்தை வைத்துக் கொண்டு (சர்ச்சைக்கிடமான இது போன்ற) குழந்தைகளின் கருத்தரிப்பு நிகழ்ந்த நேரத்தை (பின்னோக்கிச் சென்று) ஓரளவு துல்லியமாகக் கண்டுபிடிக்க இயலாதா? என்பதே என் வினா. இயலும் என்றே நானும் நினைக்கிறேன். நம்புகிறேன்.****

அப்படி கருத்தரிப்பு நிகழ்ந்த நிகழ்வு நேரத்தைக் கண்டுபிடிக்க இயலுமானால் குறிப்பிட்ட அந்த அதே நாள் நேரத்தில் சம்பந்தப்பட்ட குழந்தையின் பெற்றோர்களும் மிகக் குறிப்பாக அதன் தகப்பனாரும் பாலுறவு உச்சம் ஏதும் அடைந்துள்ளாரா£? எனத் தேடிப்பார்ப்பது? இதை வைத்துக் கொண்டு குறிப்பிட்ட அக்குழந்தை கலவிவழித் தான் தரித்தது என்றோ அல்லது இல்லை என்றோ ஏன் ஒரு முடிவு கட்டக் கூடாது? என்பதே என் வினா அபிப்பராயம் கருத்து.

கலவி நிகழ்ந்திருந்தால் கண்டிப்பாக பாலுறவு உச்சம் எனப்படும் செக்சுவல் ஆர்கஸமும் கண்டிப்பாக நிகழ்ந்திருந்தே ஆக வேண்டும். அப்படி ஒரு ஆர்கஸமே குறிப்பிட்ட அந்த கருத்தரிப்பு நேரத்திற்கு மிக அருகாமையில் எங்குமே நடைபெற்றிருக்கவில்லை எனும் பட்சத்தில், இந்தப் பிரச்சினைக்கு ஏன் எளிதில் ஒரு முடிவு கட்டக்கூடாது ? இதற்கெல்லாம் அஸ்திவாரம் போல் முதலில் ஒரு மனிதன் (குறிப்பாக குறைந்த பட்சம் ஆணுக்காவது) எப்போதெல்லாம் பாலுறவு உச்சம் அடைந்தான், (தனது முதல் கன்னி அனுபவத்திலிருந்து தற்போதைய நாளது தேதிவரை) என்ற ஒரு தகவல் (தரவு) பட்டியல் கண்டுபிடிக்கப் படவேண்டும். அத்தகைய ஒரு தகவல் பட்டியலை தரக்கூடிய ஒரு புதிய தடய அறிவியல் பரிசோதனை முறையைக் கொண்டு ஐ.சி.எஸ்.ஐ பிரச்சினைக்கும் ஒரு முடிவு கட்டியது போலாகி விடும். ஒழுக்கத்தின் படிநிலைகளாம் கற்பு, பிரம்மச்சரியம், நைஷ்டிகப் பிரம்மச்சரியம் என்பது பற்றியதற்கும் ஒரு புதிய அறிவியல் அளவீட்டு முறையைக் கண்டுபிடித்தது போலாகும்.

******தற்பொழுதே ஏதோ ஒரு விதத்தில் அறிவியல் பிறந்த தேதியைக் கண்டுபிடித்து விட முடிகிற அளவுக்கு முன்னேறியாயிற்று. இன்னும் அங்கிருந்து ஜஸ்ட் ஒரு சிறு தாவல் (ஜம்ப்) தான். அடுத்த படி time of fertilization என்ற கண்டுபிடிப்பை நோக்கிய அடி தான். அந்த நாளும் வெகு தொலைவில் இல்லை. விரைவில் எட்டப்படும் என்றே தோன்றுகிறது. பார்க்கக் கலைக்கதிர்ப் பெட்டிச் செயதிகள்-2- “இறந்தவன் கண்கள் அவன் பிறந்த தேதியைச் சொல்கின்றன” (என்ற ஸ்கேனிங் கோப்புகளைப் பார்க்கவும்.)

கிழக்கின் சிந்தாந்த, தத்துவ, ஆன்மீகப் பிரச்சினைகளுக்கும், கலாச்சார ஒழுக்கவியல் பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு கிடைத்தது மாதிரியாகி விடும். மேற்கின் (ஏன் முழு உலகின்) லௌகீகப் பிரச்சினை ஒன்றுக்கும் ஒரு தீர்வு கிட்டியதைப் போலாகி விடும். போலிச்சாமியார்களின் ஒழுக்க நெறிகளுக்கும் ஒரு கடிவாளம் இட்டது போலாகும். கல் ஒன்று மாங்காய் மூன்று.

இத்தனையும் ஏற்கனவேயே இக்ஸித் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தால் (அல்லது எதிர்காலத்தில் துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடுமானால்) மட்டுமே. அதுவும் உலகின் செல்வாக்கான மனிதர்களிடத்தில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே. இனி மேலும், இதற்கு மேலும், இது உங்களோடு மறைமுகமாகவாவது தூர எதிர்காலத்திலாவாவது எப்படி ஒரு சம்பந்தம், தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளக் காத்துக்கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் இனிமேலும் நான் விளக்கத் தேவையில்லை என்றே எண்ணுகிறேன். ஒரு மனிதன் கடைசியாக எப்போது பாலுறவு உச்சம் அடைந்தான் என்பதை நேரடி மனித சாட்சியங்களின் துணை உதவியின்றி நவீன தடய அறிவியல் பரிசோதனை மூலமே கண்டு பிடிக்க இயலும் என்ற சூழல் எழுந்து விட்டால், எழுந்துவிடும் பட்சத்தில், கின்னஸ்ஸை சாட்சிக்கு அழைக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிர்ப்பந்த சூழலும் இயல்பாகவே என் போன்ற மனிதனொருவனுக்கும் மறைகிறது.

ஆனால் அதே நேரம் மனித குலத்தில் எங்கேனும் யாரேனும் ஒருவரால் (இலட்சத்தில், கோடியில் ஒருவராவது அப்படி தேற மாட்டார்களா என்ன?) கடந்த இத்தனை வருடங்களாக இவரால் இன்னாரால் பாலுணர்ச்சி முற்ற முழுக்க, முழுதாக அடக்கி ஆளப்பட்டுள்ளது, இன்னமும் இந்த கணம் வரை அடக்கி ஆளப்பட்டுக்கொண்டுள்ளது, என்பதுவும் உலகத்திற்கு தெரியவருமேயானால் அதுவும் ஒரு புதிய தடய அறிவியல் பரிசோதனை முறைப்படி நிரூபிக்கப்படுமேயானால் அப்போது இயல்பாகவே உங்களுக்கும் வேலை வந்துவிடுகிறது இல்லையா?! இதை சாதனையா? இல்லை வேதனையா?! என்ற கேள்விகளுக்கு, சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு இதை பதிவு செய்ய வேண்டிய ஒரு கட்டாய பங்களிப்பும் அவசியமும் உங்களுக்கும் கூட இயல்பாகவே ஏற்படும் ஏற்படக்கூடும். இல்லையா?

சும்மா உலகிலேயே இவ்வளவு நீள மீசை வளர்த்தார், ரொட்டி சுட்டார், தோசை சுட்டார், ரக கோமாளிச் சாதனைகளுக்கு பதிலாக உண்மையாகவே ஒரு பெரும் மாபெரும் சாதனைப் பதிவு வந்தமர்ந்து விடுகிறது! பாலுணர்ச்சி மனித குலத்தினால் இடப்பட்ட நீண்ட கால முற்றுகை. ஏன் வெல்லப்பட வேண்டும் என்பதல்ல?! ஏன் வெல்லப்பட முடியாததாய் இருக்கிறது என்பதே அதற்கு ஒரு சுவாரஸியத்தை தருகிறது. இந்து மதம் குறிப்பிடும் நைஷ்டிகப்பிரம்மச்சரியம் என்பது உண்மையில் மனித குலத்தில் எங்கேனும் இலட்சத்தில், கோடியில் ஒருவருக்காவது சாத்தியமா என்பதுவும் இதன்மூலம் தூர எதிர்காலத்திலாவது தெரிந்துவிடும்.

ஒரு நல்ல சுவாரசியமான கற்பனைக் கதையொன்றை நாவல் படித்த ஒரு உணர்வைக் கூட இந்நேரம் இக்கடிதம் தங்களுக்குத் தந்திருக்கலாம். ஆனால் இது வெறும் கற்பனையா அல்லது ஏற்கனவேயே நிகழ்ந்த நிகழ்வுகளின் ஒரு பின் அனுமானமா? அல்லது நிகழக் காத்துக் கொண்டுள்ள நிகழ்வுகளின் முன் அனுமானமா? என்பதை எல்லாம் இனிமேல்தான், தங்களைப் போன்றவர்களின் பதில் மூலம் தான் நானும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

காரணம் ICSI பற்றி நான் அறிய நேர்ந்த எனதூர் பத்திரிக்கைகள் ஒன்றும் சர்வதேச தரம் வாய்ந்தவையல்ல. அதிகாரப்பூர்வமான அறிவியல் பத்திரிக்கைகள் அவை என்றும் கூட கூற முடியாது. Secondary Periodicals என்பார்களே ஆங்கிலத்தில், அது போன்ற இரண்டாம் நிலைப் பத்திரிக்கைகளே பொதுவாக அவற்றின் நம்பகத்தன்மை தரம் பற்றி குறிப்பிட வேண்டுமானால் so good எனக் கூற முடியாவிட்டாலும் Not Bad எனத் தார்ளமாகக் கூறலாம். இருந்த போதிலும் ஒரு விஷயத்தை கருத்தை ஒரு டஜன் வெவ்வேறு முறைகளில் நிரூபிக்க முடிந்தால் ஒழிய வெளியிடக்கூடாது என்ற மார்க்ஸின் வழிமுறைகள் மேல் அளவுகடந்த பற்றுடையவன் என்பதினாலேயே எனது ஐயங்கள், யூகங்கள், கருத்தபிப்ப்ராயங்கள் சரியானவை தானா? அல்லவா? சரியானவை தான் என்றால் எந்த அளவுக்கு? தவறானவை என்றால் எந்தளவுக்கு? என்பதையெல்லாம் தங்கள் போன்றவர்களின் பதில் மூலம் தான், இனிமேல்தான் நானும் உறுதிபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

எது எப்படியோ, இக்ஸித் துஷ்பிரயோகச் சிக்கல் என்பது ஒரு ஜனித்து விட்ட நிஜம், இந்தக் கணத்தில் இப்போதும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிஜம் என்பது உண்மையானால், இயற்கை வேறு எவ்வகையிலும் இந்த (mode of fertilization) கருத்தரிப்பு முறைமை பற்றிய பிரச்சினையை தீர்க்க இயலாதபடிக்கு எனது பழைய புரபோசல் வழி (கேள்வி ஒன்றின் வழியாகத் தான்) இப்பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் எனத் தீர்மானித்திருந்தால் அத்தீர்ப்பை வேறு எவரேனும் மாற்றியா அமைத்துவிட முடியும்?! அப்படியொரு விதி,

அது இந்து, சனாதன, மனு தர்மம் குறிப்பிடுவதைப் போன்ற கர்ம விதியாக இருந்தாலும் சரி அல்லது மார்க்ஸிய பிதாமகர்களான கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றோர் குறிப்பிடும் சமுகவியல் விதிகளின் அடிப்படையில் இருந்தாலும் சரி அப்படி ஒரு சமூகவியல், கர்ம விதி, நிர்பந்தம் இருக்குமேயானால் உங்களால் மறுதலிக்கப்பட்ட எனது பழைய புரபோசலும் தவிர்க்க இயலாதபடிக்கு ஒரு நாள் செயற்பாட்டுக்கு வந்தே தீரும். தீர வேண்டும் இல்லையா?!

அந்த வகையில் எனது புரபோசலின் செயற்பாட்டுக்கு ஒரு உயிர்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகளை, அது பற்றிய செய்தியை நான் வாழும் காலக்கட்டத்திற்குள்ளேயே எனது இறப்புக்கு முன்பேயே எனது சொந்த்க் கணகளாலேயே (பத்திரிக்கைகளிலாவது) பார்த்து படிக்க நேர்வேனா என்னவோ தெரியாது. அந்த அதிர்ஷ்டம் எனக்கிருக்கிறதோ இல்லையோ தெரியாது. ஆனால் எனக்குக் கிட்டாத அந்த வாய்ப்பு குறைந்த பட்சம் அடுத்த தலைமுறைகளுக்காவது அல்லது அதுவும் சாத்தியப்படாது போனால் ஒரு வேளை தூர எதிர்காலத்தினர்களுக்காவது கிட்டும் என நம்புகிறேன் எனக் கூறி சலிப்பும் களைப்பும் ஊட்டும் (ஒரு வேளை எரிச்சலூட்டியிருக்கும்)

இந்த நீண்ட மடலிலிருந்து விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.

தமிழகத்திலிருந்து சந்துரு.

3 இது நடக்கக் கூடியதா…?!, நடை முறைச் சாத்தியம் கொண்டது தானா?!,

இதுவெல்லாம் நடக்கக் கூடியதா…?!, நடை முறைச் சாத்தியம் கொண்டது தானா?!, எந்த அடிப்படையில், நம்பிக்கையில், இது போன்ற வினாக்களை முன் வைக்கிறீர்கள் எனக் கேட்பீர்களானால், ஐயா, இங்கு சில எளிய (உதாரணங்களை) விளக்கங்களை முன் வைக்க விரும்புகிறேன்.

1. அ) ஐயா, முதலில் எடுத்த எடுப்பிலேயே, “திடும்மென” எனது பழைய Proposal பக்கம் உங்கள் பார்வையைத் திருப்புங்கள்ஷ என்றெல்லாம் கூட கேட்கவில்லை

அ) Normal (matting) mode fertilization ஐயும் Artificial mode fertilization ஐயும் பிரித்து வேறுபடுத்தி அறியத் தக்க தடய அறிவியல் பரிசோதனை முறை தற்சமயம் உலகின் வேறு எந்த ஒரு பகுதியிலும் இன்னமும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கவில்லை எனும் பட்சத்தில்,

ஆ) “அண்மை எதிர்காலத்திலோ அல்லது தூர எதிர்காலத்திலோ கூட இது போன்ற விஷயங்களுக்கெல்லாம் எப்படி என்ன விதமாய்?!, இப்படி ஒரு தடய அறிவியல் பரிசோதனை முறையைக் கண்டுபிடிக்க?” எனும் விதமாய் முயற்சியில் ஒரு சுணக்கம் எழும் பட்சத்தில், எந்த ஒரு நேரடியான சாத்தியக் கூறுகளும், தீர்வுமுறைகளும் கிட்டாமல் போகும் பட்சத்தில், ஐயா அப்போது நான் குறிப்பிட்ட இந்த எனது Proposal வழிச் சாத்தியக் கூறுகள் பற்றியும் சிறிது ஏன் சிந்திக்க கூடாது?! அறிவியல் உலகின் கவன ஈர்ப்புக்கும் சிறிது வழிவகை செய்யக் கூடாது?!

அ.) இது இந்த உலகின் லௌகீகம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமன்று. இதில் கிழக்கின் மதம், ஆன்மீகம், சித்தாந்தம், தத்துவம் பற்றிய, அதன் கலாச்சாரம், ஒழுக்கம் பற்றிய ஒரு சுய தேடலையும், உள்ளடக்கிய விஷயமாய், இதை ஏன் நீங்கள் சற்றுப் பரிவுடன் கவனிக்கக் கூடாது ?! என்கிறேன்.

ஆ.) “மரம் அமைதியை விரும்பினாலும் காற்று சும்மா விடாதாம்” – சீனப் பழமொழி அதுபோல, கற்பொழுக்கம் பற்றிய சந்தேகப்புயல் எழுந்தால் அது (அவன்(ள்) எவரையும் விட்டு வைப்பதில்லை. புராண இதிகாச காலங்களிலிருந்து, இன்றைய டயானா, கிளிண்டன் காலம் வரை, இதன் வீச்செல்லையை, சுவடுகளைப் பார்க்கிறோம், (மிக சமீப உதார்ணம் இன்போசிஸ் நிறுவனத்தின் ————)******

நாடு, இனம் மொழி மத எல்லைகளைத் தாண்டி வரலாறு முழுக்க, ஏன் வரலாற்றையே வழி நடத்திச் செல்லும் வலிய காரணியாகக் கூட இருந்து வருவதை, (வந்திருப்பதைக்) கண்கூடாகப் பார்க்கிறோம்; உணர்கிறோம். சிலர் பலியாகவும் செய்கிறோம். பலர் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம். ****கதேயின் வார்த்தைகளில் கூறினால் அருகில் செல்லக் கூட அஞ்சுகிறோம்.

உணர்ச்சிக்கும் புத்திக்கும் இடையேயான பரிணாமப் பந்தயத்தில், போராட்டத்தில், மனிதகுலம் இன்றுதான் சிருஷ்டித்த தனது சொந்தக் கருத்து வலைப்பின்னல்களிலிருந்தே வெளி வரத் தெரியாத ஒரு சிலந்தியாய் துடித்துக் கொண்டிருக்கும் நிலை. விண்ணை, மண்ணை அளக்க முடிகிற விஞ்ஞானத்தால், இந்த விலங்கின் புதை வடிவம் இத்தனை கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது, பூமியின் வயது இத்தனை கோடி ஆண்டுகள் ஏன் பிரபஞ்சத் தோற்றம் குறித்தே (From Big Bang To The Black hole) என ஏதேதோ கண்டுபிடிக்க முடிகிற விஞ்ஞானத்தால் இதற்கு மட்டும் ஏன் ஒரு தீர்வு காண முடியாமல் போனது?! இயலாமையா?; விருப்பமின்மையா?;

3) மேலும் பாலியல் வன்கொடுமை, (பலாத்காரம்) சம்பந்தப்பட்ட வழக்குகளில், குற்ற நிரூபணத்திற்கான தடயங்களாக புறத் தடயங்களையே ஏன் இன்னமும் மனிதன் சார்ந்திருக்க வேண்டும் ?!

4) எல்லா வகைப்பட்ட புறத் தடயங்களும், அதிகார, அடியாட்கள் பலத்திற்கு முன், பண பலத்தின் முன் எளிதில் அழித்தொழிக்கப்படத்தக்க அல்லது விலை கொடுத்து வாங்கத் தக்க இலக்குகளாக மாறிவிட்ட நிலையில், இந்த வகைக் குற்றங்களுக்கான தடயத்தை மனித உடலின் அகத்தேயே ஏன் தேடக் கூடாது ?!

5) “ஒவ்வொரு விசைக்கும் அதற்குச் சமமான எதிர்விசை உண்டு” என்ற நியூட்டன் கோட்பாட்டை ஏன் உயிரியல் உலகிற்கும் நீட்டிக்கக் கூடாது?! மனித உணர்ச்சிகளும், அடிப்படை உணர்ச்சிகளான, பாலுணர்ச்சி தன்மான உணர்ச்சி, கோபம், vs சாந்தம், விருப்பு vs வெறுப்பு, விரக்தி, vs உற்சாகம் போன்ற அடிப்படை உணர்ச்சிகளும், ஒரு வகையில் பௌதிக விசைகளைப் போன்றது தானே ?!

6) எப்படி தனது வயது எத்தனை என்பதை, மரங்களாக இருந்தால், குறுக்கு வளையங்களாகவும், மனிதனாக இருந்தால் தோராயமாக எலும்புகளிலும் துல்லியமாகக் கண்களிலும் (பார்க்க கலைக்கதிர் பக்-50, மார்ச்-2008 இதழின் “இறந்தவன் கண்கள் பிறந்த தேதியைச் சொல்கின்றன”) தடயங்களாக விட்டுச் செல்லுமாறு இயற்கையால் நிர்பந்திக்கப்பட்டுள்ளனரோ?!

7) எப்படி ஒரு தாவரம் மிகச் சரியாக, ஆண்டின் எந்தப் பருவத்தில் பூப்பூக்க வேண்டும் என்பதற்கான மரபணு செயல் திட்டம் கொண்டுள்ளதோ, எப்படி நாளமில்லாச் சுரப்பிகளின், சுரப்புலயம் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் குறிப்பிட்ட ஒரு வகை லய மாற்றத்திற்கு (rythamic change) உள்ளாகுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதோ.

8) எப்படி மனித மண்டை ஓட்டின் இணைப்புக் கோடுகள் (Cranium Sutuers) குழந்தை பிறந்து இத்தனைக் காலம் கழித்து பின் கிரேனியம் சூச்சர்கள் இணைந்து ஒரே எலும்பாக வேண்டும் என மரபணு திட்டத்தில் ஒரு முன்வரையறை, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ,

9) அப்படி மனித (அடிப்படை) உயிர்ச் செயல் நடவடிக்கைகள் பற்றியும், குறிப்பாக இனப் பெருக்க நடவடிக்கைகளின் செயல் முறைக் குறிப்புகள் பற்றியும், அச்செயல் முறைகளோடு தொடர்புடைய அளவுநிலை மாற்றங்கள் (Quantative changes) பண்பு நிலை மாற்றங்கள் (qualitative changes) ஆகிய இந்த இரு வகைப்பட்டத் தகவல் விபரங்களையும் கண்காணிக்கும் விதமாகவும், கண்காணிக்கப்பட்டவையை பதிந்து வைத்துக் கொள்ளும் விதமாக ஒரு பதிவியல் முறையும் கண்டிப்பாக இயற்கையால் எங்கோ மனித மரபணுத் திட்டத்தின் இருண்ட மூலை முடுக்கிலோ அல்லது (அவ்வளவு ஏன்) மனித மூளையினுள்ளேயே கூட இப்படி எங்கோ ஒரு இடத்தில் ஏன் பதுக்கி வைக்கப்பட்டிருக்கக் கூடாது என்றே கேட்கிறேன்.

10) Constant Gene பற்றிய செய்திகள் (பார்க்க கலைக்கதிர் பெட்டிச் செய்திகள்) காட்டும் உண்மை இவைதானே ?! இன்னமும் வலியுறுத்திக் கூற வேண்டுமெனில் மற்றொரு உதார்ணமும் குறிப்பிடலாம். அது விலங்குகளின் குரோமசோம்களில் உள்ள டீலோமியர் குல்லாய்களை பற்றியது (பார்க்க விரிவான செய்தி – கலைக்கதிர் பெட்டிச்செய்திகள்) எப்படி ஒரு செல்லின் குரோமசோமிலுள்ள டீலோமியர் குல்லாயின் தேய்வு அதன் மூப்பை இனங்காண்பிக்கும் ஒரு தடயமாய், அடையாளமாய் விளங்குகிறதோ அப்படி அளவு நிலை மாற்றங்களாகட்டும், பண்பு நிலை மாற்றங்களாகட்டும் அவற்றைப் பதிந்து வைக்கும் ஒரு பதிவமைப்பு முறையும் கண்டிப்பாக.

11) மனித மரபணுத் திட்டத்தில், அனைத்து ஜீன்களிலுமேயோ அல்லது இதற்கென்றே உள்ள பிரத்யோதமான சில ஜீன்களிலேயோ அல்லது மனித மூளையிலேயோ, ஆக எங்கோ இவ்வமைப்பு முறை கண்டிப்பாக இருக்கும் என ஏன் எதிர்பார்க்கக் கூடாது ?! நமக்குத் தான் இத்தகைய தேடிப்பார்க்கும் ஆர்வம், முயற்சியும், பொறுமையும் வேண்டும் என்பதே என் நிலைபாடு.

12. மனிதனில் பாலுணர்ச்சியாக வெளிப்படுத்தப்படும் சக்தி முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டால் ஓஜஸாக மாறுகிறது என்ற இந்தியத் துறவி விவேகானந்தரது கருத்தோட்டம் மனிதனுக்கு பொருந்துகிறதோ இல்லையோ ?! ஆனால் மிருக வகையினங்களில் ஓரளவாவது பொருந்துவது போல் தானே தோன்றுகிறது ?! வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமெனில் அளவு நிலைமாற்றங்கள் பண்பு நிலை மாற்றங்களுக்கு வழி கோலுகின்றன. எனும் கருத்தோட்டம் மனிதனில் எப்படியோ, மிருக இனத்தில் குறிப்பாக காளைகளில் செயற்படுத்தப்படும் castration நிகழ்வு மூலம் ஒரு வகையில் இது மறைமுகமாகவாவது நிரூபிக்கப்படுவது மாதிரிதானே தோன்றுகிறது. (பார்க்க-கேஸ்ட்ரேசன் பற்றிய செய்தி, புகைப்படம்)

13. ஏதோ குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாய் இல்லாமல், ஒரு குத்துமதிப்பாகவேனும், மேலோட்டமான ஒரு பார்வையிலேயே, ஒரு ஜனரஞ்சக அறிவியல் பத்திரிக்கை வாசகனின் ஒரு சராசரிப் பார்வையிலேயே புலப்படத் தக்க விஷயங்களின் அடிப்படையிலேயே இத்தகைய எனது கண்ணோட்டத்தை, காரியங்களுக்கான காரணத்தை புறவய அடிப்படையிலே இல்லாமல் அகவயமாகவே ஏன் காண முயலக்கூடாது என்ற அடிப்படையிலேயே மேற்கண்ட வாதத்தை முன் வைத்துள்ளேன்.

14. (அ) புற உலகை நோக்கிய சாகசப் பயணங்களுக்கு (Adventure) எடுத்துக்காட்டாய், மத்திய காலத்தில் கொலம்பஸின் அட்லாண்டிக் கடற்பயணமும், தற்போதைய நவீன காலத்தில், விண்வெளி, அண்டவெளி பயணங்களும் எப்படி முன் உதார்ணங்களாய் சுட்டிக் காட்டப்பட்டனவோ, சுட்டிக்காட்டப்படுகின்றனவோ அப்படி அக உலகை நோக்கிய துணிகரமான சாகசப் பயணமாய் எனது பழைய Guinness Rejected proposal -ஐயும் ஏன் கருதக்கூடாது?!

(ஆ) கண்ணுக்குப் புலனாகாத இயற்கையின் புறச்சக்திகள் மட்டுமல்ல கூடவே அகச் சக்திகளும் (அப்பட்டமான அம்மண வார்த்தைகளில் கூற வேண்டுமானால் பாலுணர்வும்) மனித ஆளுமைக்கு உட்பட்டவை தான் என்றும், வலியுறுத்தும் கிழக்கின் இந்த மிகப்பழைய வகைப்பட்ட சிந்தனையை எனது Proposal- மூலம் ஏன் மீண்டும் ஒரு மறு நிருபணம் தேடித் தரக் கூடாது ?! ஏனெனில், எங்கள் மெய்ஞானம் ஏற்கனவே கூறியதைத் தான் உங்கள் விஞ்ஞானம் திரும்பவும் கண்டுபிடிப்பதாக “இங்கு கிழக்கில் அடிக்கடி கூறப்படுவதுண்டு. இயற்கையின் அகச் சக்திகள் கிழக்கு கூறுவதை போல் உண்மையாகவே மனித ஆளுமைக்கு உட்பட்ட ஒன்றுதானா அல்லது அல்லவா? என்பதை ஏன் மீண்டும் ஒரு மறுதேடல் மூலம் சரிபார்க்கக் கூடாது?! குறைந்த பட்சம், ஒரு தேடலாவது நிகழ்த்திப் பார்க்கக் கூடாது

அப்படியும் எனது தேடலுக்கு உடனே விடை கிட்டி விடக் கூடும் என்றும் நினைக்கவில்லை காரணம் ஏனெனில் சில நேர்வுகளில் நமது முன் மதிப்பீட்டின் துல்லியம், மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் எண்ணிக்கையையே பெரிதும் சார்ந்துள்ளது, அதாவது ஒரு (தோராயமான உதார்ணத்திற்கு) நாணயம் சுண்டுதலில் உள்ள பூவா?! தலையா?! என்பதற்கான நிகழ்தகவை போல. அதே நேரம் முழுக்க, முழுக்க நிகழ்தகவுச் சாத்தியக்கூறுகளின் வலிமையான எண்ணிக்கைப் பலத்தை மட்டுமே சார்ந்த ஒரு விஷயமாய் உள்ளது என்றும் கூறிவிடமுடியாது. ஏனெனில் எல்லா தற்செயல் நிகழ்வுகளும் சம அளவுக்கு சாத்தியமானவை அல்ல என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

நாணயம் சுண்டுதலில் உள்ள பூவா ? தலையா ? விரிவான அலசல் தனியாகப் பார்க்கவும் (பார்க்க பக்கம்- )
15. எப்படியிருப்பினும் எதற்கும் ஒரு தொடக்கம் வேண்டுமல்லவா?! முதலில் புதிய விளையாட்டுக்கான அறிமுகப்படலமே தொடங்கப்படாத நிலையில் குறைந்த பட்சம் ஆடுகளத்தையும், ஆட்டவிதிகளையும், பார்வையாளர்களையும், பங்கேற்பாளர்களையும், நடுவர்களையுமாவது தயார் செய்ய வேண்டாமா?! இவர்களெல்லாம் இல்லாமல், ஆட்டம் எப்படி வெளிப்படும்?! அங்கீகாரத்துக்குள்ளாக்கபபடும்?! இந்த ரீதியிலேயே ஒரு பிள்ளையார் சுழி முயற்சியாகவே தங்களைப் போன்றவர்களுக்கு இது போன்ற நீண்ட மடல்கள்.

4 பெட்டி செய்திகள் ஒவ்வொரு செடியும் பருவத்தில் பூத்துக் குலுங்குகின்றன. காலம் தவறாமல் அவை எப்படி பூக்கின்றன? எப்படி காலத்தை தெரிந்து கொள்கின்றன. இது ஒரு புதிராகவே இருந்து வருகிறது. தாவரங்கள் குறித்தகாலத்தில் பூக்கவில்லை என்றால் என்னாகும்? கருவுறுவதற்கு உதவி செய்யும் பூச்சினங்கள் வந்து காத்திருந்து விட்டு மறைந்துவிடும். அல்லது ஏடாகூடமான காலத்தில் விதைகளை ஏற்படுத்திக் கொண்டு மழைக்காலத்தை தவறவிட்டுவிட்டு திருதிருவென்று விழிக்க வேண்டிவரும். எனவே பூக்கள் எப்போது பூக்கவேண்டும் என்று முடிவெடுப்பது மிகவும் அத்தியாவசியமாகிறது. ஸ்கிரிப்ஸ் என்ற (Researcர் Institute, San Diago, California) தாவரவியல் அறிஞர் CONSTANS என்ற ஜீன் தாவரங்களைப் பூக்கத் தூண்டுகிறது என்று நிரூபித்துள்ளார்.

CONSTANS ஜீன் உருவாக்கும் புரதத்தின் அளவு நாள் முழுவதும் சீராக இருக்காமல் தினமும் 24 மணிநேர சழற்சியில் பல்வேறு அளவுகளில் உற்பத்தியாகிறது, குறிப்பிட்ட அளவுக்கு அதன் உற்பத்தி அதிகரிக்கும்போது புஷ்பித்தல் தூண்டப்டுகிறது. இந்தப் புரதத்தின் உற்பத்திக்குக் காரணமாக CONSTANS ஜீன் இருந்தாலும், இந்த ஜீனின் செயல்பாட்டை இரண்டு முக்கியமான நிறமிப் பொருள்கள் கட்டுப்படுத்துகின்றன. கிரிப்டோகரோம் 2 மற்றும் பைட்டோகுரோம் என்ற இரண்டு சாயமேறிய புரதங்கள் சூரிய ஒளியை முறையே நீலம் மற்றும் சிவப்புப் பகுதியில் உறிஞ்சுகின்றன. பகல் காலமும், இரவு காலமும் பருவத்துக்கேற்ப கூடிக்குறைந்து வரும். இதை மேற்கூறிய நிறமிகள் கவனிக்கின்றன. பூப்பதற்குத் தகுந்த காலம் வந்ததும் இந்நிறமிகள் CONSTANS என்ற ஜீனைத் தூண்ட அது மேலும் வரிசையாக அருவி போல் பல நிகழ்ச்சிகளைத் தட்டிவிட முடிவில் செடி, புஷ்பிக்கிறது.

4) உயிரூட்டுபவை அல்லது சமாதி கட்டுபவை

இந்த Proposal-ன் மேம்படுத்தப்பட்ட வடிவத்திற்கு உயிரூட்டுபவை அல்லது அதற்கு சமாதி கட்டுபவை கீழ்க்காணும் சில கேள்விகளுக்கான பதில்களே…

முதலில் ஒரு மனிதனின் விந்தணுக்களை அவனுக்கே அந்த சம்பந்தபட்ட மனிதனுக்கே தெரியாமல் திருட முடியுமா?! முடியாதா?! அப்படித் திருட முடியுமானால், திருடப்பட்ட அந்த விந்தணுக்களுக்கு பிறக்கும் ஒரு குழந்தை, திருட்டு விந்தணுக்களுக்குத் தான் பிறந்தது என்பதை எப்படி நிரூபிப்பது?!

1. மனித உடல் ஏற்கனவேயே, தனக்குத் தானே அதுவே ஒரு வேதித் தொழிற்சாலை போலத் தான்… இல்லையா? அப்படியிருக்க அதற்குள் புறத்திலிருந்து ஒரு வேதிப் பொருள் தடயமாகச் செயல்படுமாறு செலுத்தப்பட்டால், அது உடலின் உயிர் வேதிவினைகளால் பாதிக்கப்படாமலும் (அல்லது அப்படியே பாதிக்கப்பட்டாலும் இன்னமும் தனது தடயத்தன்மையை இழக்காதவாறும் ஒரு தடயப் பொருளாகத் தங்கி இருந்து செயல்படக் கூடிய குறைந்தபட்சகாலம் எவ்வளவு?! அதிகபட்ச காலம் எவ்வளவு?! அது மனித உயிருக்கு ஊறு (தீங்கு) விளைவிக்காததாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட (வேதிப்) பொருட்கள் ஏதுமுண்டா?! உண்டு ஆம் எனில், அது போன்ற வேதித் தடயங்களை தடயங்களாகப் பயன்படுமாறு எவ்வளவு அதிகபட்ச காலத்துக்கு வேலை வாங்க முடியும்?!

மேற்கண்ட இதுபோன்ற கேள்விகளுக்கான தெளிவான அதிகாரப் பூர்வமான பதில் இன்றி மேற்கொண்டு இது விஷயத்தில் எதுவும் செய்ய இயலாது.

2. இது போன்ற சிக்கலான விஷயங்களில் இதற்கே உரித்தான பிரத்தியோக தடய அறிவியல் பரிசோதனை முறைகளைக் கண்டுபிடிக்கும் போது
3. முதலில் எனது பழைய புரபோசல் கேள்வியோடு**** (பார்க்க மாத்ருபூதத்திற்கு, நேச்சர் பத்திரிக்கைக்கு எழுதிய கடிதம்) சம்பந்தப்படாத மாதிரியான வேறு ஏதேனும் தடய அறிவியல் பரிசோதனை முறைகளுக்கு வாய்ப்புள்ளதா? என்பது பற்றியும் தெளிவாக வேண்டும்.
4. அப்படி அது போன்ற வாய்ப்புகள் இருப்பின் அதுவே இது விஷயத்தில் இறுதித் தீர்வுக்குப் போதுமா?!
5. அல்லது எங்கு சுற்றியும் எப்படியும் எனது பழைய புரபோசல் கேள்விகளின் அடிப்படையில் அமைந்த தீர்வு முறைகளுக்கு தான் வந்து ஆக வேண்டும் அவற்றையும் ஒதுக்க இயலாது! எனப் புறச் சூழல், நிலைமைகள் நெருக்குமா?.

“இந்த விஷயத்தில் ஒரே ஒரு ஒற்றைத் தீர்வை மட்டும் வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஓன்றுக்கும் மேற்பட்ட மாறுபட்ட வேறு பல தீர்வுகளும் தேவைப்படும்” என்பது போன்ற, இது போன்ற இக்கட்டான முட்டுச் சந்து நிலை ஏதும் உள்ளதா இப் பிரச்னையில் ? என்ற இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் முதலில் தெளிவான, அதிகாரப் பூர்வமான பதில் தெரிந்தாக வேண்டும். இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் மிகக் கறாரான அதிகாரப் பூர்வ அறிவியல பதில் வேண்டும்.

இந்த இடத்தில் எனக்கு இதே பில் கேட்ஸ் வாழ்க்கையில் அவர்செய்த சிறு வயது தில்லாலங்கடி ஒன்று தான் நினைவுக்கு வருகிறது.

அவரது சிறு வயதில் அவரது பள்ளிக் கூடத்தில் கட்டணச் சுமையால் கணினிப் பயிற்சிக்கு வழியில்லாத சூழல் ஏற்படுகிறது. அதை எதிர்கொள்ள தனியார் கணினி மையம் ஒன்றுக்குச் செல்கிறார் அந்த நாளைய ஆரம்பக் கணினிகள் நிறையக் குறைபாடுகளைக் கொண்டிருந்ததாலும் விலையும் அதிகமானதாய் இருந்ததாலும் யாரும் காசு கொடுத்து சொந்தக் கணினி வாங்கப் பயந்த காலம். ஆகவே அதை வாடகை அடிப்படையில் பயன்படுத்திக் கொண்டிருந்தனர் கணினியில் திடீரென பிரச்னை ஏதும் ஏற்பட்டால், வாடகை செலுத்தத் தேவையில்லை. இந்தச் சிறிய லூப் ஹோலைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாடகைப் பிரச்னையை ஒரளவு நீர்த்துப் போகச் செய்யக் கூட அந்தத் தனியார் மையத்திற்குத் தெரியவில்லை.

அப்போது பிரச்னைகளை சரி பண்ணத் தெரிந்திருந்ததோ இல்லையோ பிரச்னைகளை உருவாக்குமளவுக்காவது கணினிப் பயிற்சியைப் பெற்றிருந்தார் கேட்ஸ். இதன் மூலம் கொஞ்ச காலம் இருவரும் ஆதாயமடைந்தனர் என்ற போதிலும் அது அதிக காலம் நீடிக்க வில்லை. எனினும் அந்த கொஞ்ச கால அனுபவம் கூட பில் கேட்ஸின் கணினிப் பயணத்தில் ஏதோ ஒரு விதத்தில் அவருக்குப் பயனள்ளதாகவே இருந்ததை இன்று நாம் அறிவோம். அன்று ஆரம்பித்த பிரச்னைகளின் வடிவம் இன்று வரை தீர்ந்த பாடில்லை. வைரஸ், மால்வேர், என ஹேக்கர்களின் தொடர்ந்த சவால் இன்று வரை தொடர்கிறது. ஆக ஒரு வகையில் ஒரு அர்த்தத்தில் பார்த்தால் ஹேக்கர்களின் முதல் ஞானப்பிதாவே பில் கேட்ஸ் தான் போலுள்ளது.

இதே நடைமுறையையே நாம் நமது இக்ஸிப் துஷ்பிரயோக முயற்சியிலும் எதிர்பார்க்கலாம். எப்படியும் இது போன்ற துஷ்பிரயோக முயற்சிகளில் செயற்கை முறைக் கருத்தரிப்பு தான் பயன்படுத்தப்பட முடியும். அப்படி செயற்கை முறைக் கருத்தரிப்பு என்ற ஒரு விஷயத்தைக் கையிலெடுத்தால், கரு வளர்ச்சிக்கான தூண்டு ஹார்மோன் (stimulation harmon injection) என்ற தடயப் பொருளாய் மாறக் கூடிய ஒரு பொருளையும் பயன்படுத்தியே ஆக வேண்டும் எனும் ஒரு நிலையை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் இந்த தூண்டு ஹார்மோனே***** கூட உதவக் கூடியளவுக்கு ஒரு தடயமாய் மாற வாய்ப்பொன்று உள்ளது. சதித்திட்டத்தில் ஈடுபடுவோர் இதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படுவார்களேயானால், இதை இன்னும் நுணுக்கமாகத் திட்டமிட வேண்டியதன் அவசியத்தை உணருவர். அப்போது இயல்பாகவே

1). அத்தகைய இனங்காட்டிக் கொடுக்கத் தக்கத் தடயத்தை அழிக்க முயற்சி செய்வார்கள் அல்லது துல்லியமாக அதை இனங்காண முடியாதவாறு வேறு வகை (வேதிப் பொருள்களால்) முயற்சிகளால் அதைச் சிதைத்தழிக்கவோ அல்லது அதை வேறொரு பரிமாணத்துக்குத் திசை திருப்பவோ முனைவர். நேரடியான, சுருக்கமான வேறு எளிய வார்த்தைகளில் குறிப்பிட வேண்டுமென்றால் சதுரங்கத்தில் குறிப்பிட்ட சில சூழல்களில் ராஜாவை ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு நகர்த்தச் செய்வதன் மூலம் எதிராளி தனக்குச் சாதகமான சூழலை (உருவாக்கி) உறுதிப் படுத்திக் கொள்வார். அதற்கான முதல் தூண்டில் ராஜாவுக்கு ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக கொடுக்கப்படும் ஒரு பர்ப்பெஸடு செக்.

அந்தக் குறிப்பிட்ட பர்ப்பெஸடு செக்கின் நோக்கம், ஏமாந்தால் ராஜாவையே மேட் செய்வதாகவோ அல்லது மேட்டிங்கை நோக்கி ராஜாவைப் பலவீனப்படுத்துவதாகவோக் கூட இருக்கலாம். மொத்தத்தில் அது ஏதோ ஒரு பொழுது போகாத, நகர்த்த வேண்டுமென்பதற்காக நகர்த்தப் பட்ட ஒரு வெற்று நகர்த்தலல்ல) அந்த முதல் பர்ப்பெஸடு செக்கினால் எதிராளி ராஜாவை உடனே மேட் செய்ய இயலாது போனாலும் தப்பித் தவறி அந்த வினைக்கு எதிர்வினையாக நகர்த்தக் கூடாத ஒரு நகர்த்தலைச் செய்து விட்டால் ஆட்டம் அதன் பின் பர்ப்பெஸடு செக் வைத்தவருக்கு சாதகமய் சென்று விடுவதைப் போல,

. ******அநேகமாக இந்தத் தூண்டு ஹார்மோன் காரணியே கூட மலட்டுத்தன்மை கொண்ட ஆண்களின் விஷயத்தில் தான் எடுபட முடியும். என்ற போதிலும் இது சம்பந்தப்பட்ட போதிய மருத்துவ அறிவு எனக்கு இல்லாததால் அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டே பேசியாக வேண்டிய சூழல் எனக்கு.

என்ன செய்தால் இப் பிரச்னையை அவ்வளவு எளிதில் தீர்க்க முடியாத ஒரு பிரச்னையாக உருமாற்றம் செய்யலாம்? அல்லது என்ன செய்தால் எனது ப்ரொப்போசல் வழித் தீர்வு தவிர்த்து வேறு என்ன செய்தாலும் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியாது எனும்படிக்கு இப் பிரச்னையை உருமாற்றலாம் எனச் சிந்தித்து செயலாற்றினால், எனது ப்ரொப்போசல் வழித் தீர்வு நோக்கியும் இப்பிரச்னையை ஒரு மடைமாற்றம் செய்ய முடியாதா? திசை வழிப்படுத்த முடியாதா என்பதுவே இப்போது எனது கேள்வி. ஒரு வாதத்திற்காகவே நான் இப்படிக் கேட்கிறேன். உடனே இப்படிக் கேட்பதாலேயே (வருங்காலத்தில் இப்படி ஒரு சதித் திட்டம் தீட்டப் பட்டு அமல் படுத்தப்படுமேயானால் கூட) இச் சதித் திட்டத்திற்கான முழுச் சூத்திரதாரியும் நான் தானோ என என்னைச் சந்தேகிக்கத் தேவையில்லை. அதற்கு இந்தச் ஜென்மத்தில் வாய்ப்பில்லை. இனி நான் என்றைக்கு உயிர் வேதியியல் கற்று என்றைக்கு இதில் வல்லுனராவது? ஆனால் ஏற்கனவேயே இத் துறையில் உள்ள வல்லுனர்கள் நினைத்தால்……? அது சாத்தியம் தானே?

உண்மையில் எனது ப்ரொப்போசல் வழித் தீர்வு****** என்பது தான் இருப்பதிலேயே தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் தீர்வாக இருக்கக் கூடும். ஆனால் மற்ற வழிமுறைகள் எல்லாம் ஏதேனும் ஒரு வகையில் இயற்கையாகவே தகர்க்கப்படுவதற்கான, தடுத்து அடைக்கப் படுவதற்கான வாய்ப்புகள் தென்பட்டு, அவற்றின் வழியாகத் தீர்வென்பது இனிச் சாத்தியமே இல்லை. சாத்தியமுள்ள ஒரே தீர்வு என்பது எனது ப்ரொப்போசல் வழித் தீர்வொன்றே பாக்கி என்பது போல் ஒரு அக, புறச் சூழல் நிலைமைகள் நெருக்குமாயேனால்…….? அப்போது….?! அப்போது அது இனிமேலும் கிழக்கின் சித்தாந்தத் தத்துவப் பிரச்னையாய், கலாச்சார ஒழுக்கவியல் சம்பந்தபப்பட்ட பிரச்னையாய் மட்டுமே இருக்கப் போவதில்லை. அப்புறம் இது கிழக்கு அரைக்கோளத்தின் ஆன்மீகப் பிரச்னை மட்டுமல்ல மேற்கு அரைக்கோளத்தின், ஏன் முழக் கோளத்தின் லௌகீக விஷயத்தோடும் சம்பந்தப்பட்ட ஒன்றாய் உருமாற்றம் பெற்று விடுகிறது. இல்லையா

ஒரு கட்டத்தில் இதுவெல்லாம் நடைமுறைச் சாத்தியம் கொண்டது தானா?! இல்லையா?! என்பது பற்றி ஒரு சிறிதாவது தெளிவேற்படுத்திக் கொள்ளவே எனக்கு சில, பல வருடங்கள் கடந்து விட்டன.

நானும் முதலில், ஏதோ இதை (விந்தணுத் திருட்டு என்பதை) ஏதோ எளிதான ஒன்றாய்த் தான் கருதினேன். சில மருத்துவ மாணவர்கள் மற்றும் சில பேரராசியர்களிடம் விவாதித்ததில் பலருக்கு (கொஞ்சமாவது இதோடு சம்பந்தப்பட்ட மாதிரியான பொது மருத்துவர்களுக்கே, கைனகாலஜிஸ்டுகளுக்கே) இதுபற்றிய தெளிவின்மையைத் தான் முதலில் எதிரிட நேர்ந்தேன். எனவே ஓரிரு ICSI Specilist -களையே அணுகினால் என்ன என முதலில் கடிதம் மூலமும் ( பின் நேரிலும் ஒரு இக்ஸி ஸ்பெசலிஸ்ட்-ஐ) அணுகினேன். ஆனால் அந்த ஒரு சில ICSI Specilist களும் இது விஷயம் சம்பந்தமாக எந்த ஒரு பதிலும் நேரடியாகவோ, கடிதம் மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ எந்த ஒரு பதிலும் அளிக்கத் தயங்கியதால், ஒரு புறம் எனது சந்தேகம் மென்மேலும் வலுத்துக் கொண்டே போனது, மறுபுறத்தில் என்னதான் எனது சந்தேகம் வலுத்துக் கொண்டே போனாலும் அதிகாரபூர்வமான ஊர்ஜிதம் செய்து கொள்ள இயலாமலும் மனம் துடித்தது. மேற்கொண்டும் இது விஷயத்தில் என்ன செய்வது எனத் தெரியாத ஒரு முட்டுச் சந்தில் தான் தடுமாறி கொண்டிருந்தேன்.

ஒரு கட்டத்தில், பார்க்கிற, எதிரிட நேருகிற மருத்துவர், விரிவுரையாளர்கள் (இதோடு கொஞ்சமாவது சம்பந்தப்படுகிற மாதிரியான மெடிக்கல் காலேஜ், லெக்சரர்கள், Bio-Technology, Micro Biology, Bio- Informatics, Veterinary Lectures, Final year students) என எனது தேடல் தொடர்ந்து கொண்டேயிருந்தது! ஒரு கட்டத்தில் Veterinary Doctor. ஒருவர் தான் உங்கள் Proposal- -க்கான சாத்தியம் ஒரு துளியும் இது விஷயத்தில் சாத்தியப்படாது, ஏனெனில்,

**** (பார்க்க பக்- மற்றும் மாத்ருபூதத்திற்கு, நேச்சர் பத்திரிக்கைக்கு எழுதிய கடிதம்)

அப்படி நேரடி ஆக (testis- லிருந்தே) விதைகளிருந்தே நுண் ஊசி மூலம் உறிஞ்ச முடியும் என்றால், எங்கள் veterinary science-ல் ஒரு விந்தணு சேகரிப்பு முயற்சிக்கு Dummy cow & artificial Vegina – எல்லாம் செட் செய்து ஏன் Artificial Insemination நடைபெற வேண்டும்?. ஊசிமூலமே உறிந்து முயற்சிக்கலாமே; Almost ஏறக்குறைய மனிதர்களிடம் நிகழ்த்தப்படுகிற மைதுனப் பழக்கத்தை ஒத்தது போலத்தான், கால்நடைகள் விஷயத்திலும்! Master Bation–மூலமே விந்தணு சேகரிப்பு என்பது நடைபெறுகிறது!

அப்படியே நீங்கள் கூறுவது போல், நீங்கள் காட்டிய சில மருத்துவக் கட்டுரைகளின் அடிப்படையில், நேரடியாக விதைகளிலிருந்தே நுண் ஊசி மூலமே உறிஞ்சப்பட்டு எடுக்கப்படுவதாகவே (திருடப்படுவதாகவே) வைத்துக்கொண்டாலும், விதைப்பையிலுள்ள எபிடிடிமஸ், Vas-Difference- குழாய்களை எப்படி இனங்கண்டு அடையாளம் காண்பீர்கள் எந்த ஒரு சிறு அறுவை சிகிச்சையும் இன்றி?! ( பார்க்கவும் படம்).

தோல் பகுதி கிழிக்கப்பட்டு விலக்கிய பின்னரே அதனடியில் உள்ள நுண்ணிய (0.2 மில்லி மீட்டரே குறுக்களவுள்ள) விந்தணுக் குழாய்களை அடையாளங்கண்டு இனம் பிரிக்க முடியும். அதற்கு சுமார் ஒரு இன்ஞ் அளவுக்காவது தோல் பகுதியில் ஒரு சிறு அறுவை சிகிச்சையாவது ( அதாவது ஓரு சிறு கிழிசலாவது ) தேவைப்படாதா…?! அந்த ( கிழிசலும் )அறுவை சிகிச்சையும், தையலும் கூறிவிடாதா?! திருட்டு விஷயத்தை…?! ஆக உங்களது கோணம் எப்படிப் பார்த்தாலும் தவறு…?!

அப்படியெல்லாம் சாத்தியமிருந்தால், இந்நேரம் இந்நிகழ்வு உலகில் எங்கேனும் ஒரேயோரு இடத்தில் ஒரேயொரு நபருக்குக கூடவா நடக்காமல் போயிருக்கும்?! ஆக முதலில் விந்தணுத் திருட்டு என்பதே சாத்தியமில்லாத ஒன்று. பின் எங்கே அதை மையமாய் வைத்து முன் எடுத்துச் செல்லப்படும் உங்கள் Proposal- செயற்பாடு…?! Waste… Waste….எனத் தலையில் ஒரு பேரிடியை இறக்கினர்.

இதனால் Upset ஆன நிலையில், அதற்குப் பின் இதைக் கொஞ்ச நாள், நினைக்கக் கூடத் தோன்றாமல் கிடப்பிலேயே போட்டுவிட்டேன். ஆனால் அதே Vetrenary College -ஐ சேர்ந்த இன்னொரு மாணவர், அண்ணா, இயற்கையான முறையில் அல்லாத செயற்கை முறை ஸ்கலித நிகழ்வும், Vetrenary Science -ல் பயன்படுத்தப்படுவது உண்டு. அது எப்பவாவது (Rare case) மிகவும் அரிதாகத் தான் பயன்படுத்தப்படும். அதற்குப் பெயர் Electrical Ejaculation என்று பெயர். மிகவும் அழியும் தருவாயில் உள்ள, அல்லது அடிபட்டு, Matting செய்ய இயலாத அரிய அபூர்வ வகை மிருக இனங்களில், இயற்கையான Matting செய்ய இயலாத சூழ்நிலையில் இந்த Electrical Ejaculation மூலம் ஒரு சிறிய மின் தூண்டலின் மூலம் (7 லிருந்து 12 மைக்ரோ வோல்ட் வரை) ஸ்கலிதம் தூண்டப்பட்டு, விந்தணு சேகரிப்பு நிகழ்த்தப்படுகிறது.

ஆனால் இது எந்தளவுக்கு மனித இனத்துக்குப் பொருந்தி வரும் என்பது தெரியாது! ஆனால் ஸ்கலித நிகழ்வு என்பது மின் தூண்டலின் மூலமும் சாத்தியம் என்றால், மயக்கநிலையில் ஏன் சாத்தியமாகாது,? ஆக உங்களின் சந்தேகத்தை அவ்வளவு எளிதில் ஒதுக்கி விடத் தேவையில்லை. எதற்கும் Net -ல் Search செய்து பாருங்கள்….. என முடித்துக் கொண்டார்.

நானோ, எனது Daily life சராசரி Survival- -க்கே தகிடுதத்தம் போடவேண்டிய பெரும் போராட்ட வாழ்வில், எங்கே போய் Net -ல் தேடல் செய்ய…?! மேலும் அப்போதெல்லாம் பிரவுசிங் என்றால் அது கணினி வழி பிரவுசிங் மட்டுமே சாத்தியப்பட்ட ஒரு காலக் கட்டம், கூகுளின் ஆண்ட்ராய்டு யுகமும், மொபைல் பிரவுசிங்கும் இன்னமும் பிறந்து விடாத காலம், அல்லது பிறந்திருந்தாலும் நான் இன்னமும் இணையத்துக்குள் பிரவேசிக்காத காலம். காரணம் ரூபாய் 50க்கு ஒரு மாதம் முழுவதுமே அன்லிமிடெட் 2 G எங்கே? ஒரு ஹவருக்கே 30,40, வாங்கிய பிரைவேட் பிரவுசிங் செண்டெர்ஸ் எங்கே? அருகாமை டவுனுக்கு வருவதற்கான பேருந்துக் கட்டணத்தையும் சேர்த்தால் ரூ 50. மொபைல் இணையத் தொழிற்புரட்சி மட்டும் இவ்வளவு வேகமாக வளராது சற்று மெதுவாக மட்டுமே வளர்ந்திருக்குமேயானால் என்னைப் போன்றவர்களுக்கெல்லாம் இந்தச் ஜென்மம் முழுக்க இணையம் என்பது எட்டாத உயரத்தில் தான் இருந்திருக்கும். மேலும் ஆங்கிலத்திலும் அவ்வளவு பரிச்சயம் இல்லாத நிலையில், மொழிச் சிக்கல் காரணமாகவும், பொருளாதார்ம் காரணமாகவும் மீண்டும் கொஞ்சகாலம் இது விஷயத்தைக் கிடப்பில் போட்டு விட்டேன் (கிடப்பில் போட்டு விட்டேன் என்பதைவிட சுத்தமாகக் குழி தோண்டி ஆழப் புதைத்தே விட்டேன் என்று தான் கூற வேண்டும்.)

இந்த நிலையில், சில மாதங்களுக்குப் பின் சற்றேறக் குறைய ஒரு 7, 8, 10 மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் (காலைக்கதிர் (நாளிதழ்)செய்தித்தாள் என நினைவு) ஒரு சிறு செய்தி X-ray Vedio -பற்றிய ஒரு சிறு செய்தி படிக்க நேர்ந்தேன். அதே வாரத்தில் தான் மீண்டும், அந்தப் பழைய கலைக்கதிர் இதழ்களைப் புரட்டிக் கொண்டிருக்கும் போதும் மீண்டும் அதே X-ray Vedio -வைப் பற்றிய மற்றொரு செய்தியையும் படிக்க நேர்ந்தேன். இது விஷயத்தின் தனி ஒளி நகல்களையும் இத்துடன் இணைத்துள்ளேன். அது தான் என்னை மீண்டும், ஆழக் குழி தோண்டிப் புதைத்துவிட்ட எனது மனக் குழியிலிருந்து விஷயத்தை தோண்டி எடுத்து இன்று மீண்டும், உங்களுக்கு இந்தளவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது!

அதாவது அந்த- X-ray Vedio – வைப் பற்றிய? செய்தியின் சாரம் இதுவே. இதுவரை எக்ஸ்ரே மூலம் மனித உள் உறுப்புகளை படம் பிடிப்பதில் எலும்புகள் மட்டுமே படம் பிடிக்கப்பட்டன. தற்போது எலும்புகளை மட்டுமல்லாமல், தசைநார்கள், மெல்லிய திசுக்கள், இரத்தக்குழாய்கள், நரம்பணுக்கள் என பல வேறுபட்ட உறுப்பு மண்டலங்களையும் கூடத தனித்தனியே பிரித்து வித்தியாசப்படுத்தி படம் பிடிக்க முடியும். கண்டுபிடித்தவர் – ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பால் சிரோ இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த விஞ்ஞானி. பிரான்ஸ் பொஃபரும், அவரது சகவிஞ்ஞானிகளும்.

இப்போது இந்த புதிய கண்டுபிடிப்பின் அடிப்படையில், அறுவை சிகிச்சைக்கே அவசியமின்றி விந்தணுக்குழாய்களை ஏன் பிரித்து வேறுபடுத்தி இனங்கான முடியாது?! என்ற என் வாதத்தை இதற்கு மேல் எதிர்கொள்ள முடியாத அந்த கால்நடை மருத்துவரும், ஐயா, “நேற்றுவரை எப்படியோ? ஆனால் இனிமேல், இது விஷயத்தில்… என்னால் உங்களின் கருத்துக்கு எதிராக நிறுத்துவதற்கான வாத அடிப்படை தகர்ந்து விட்டதால், இனி ஒருவேளை எதிர்காலத்திலாவது நிகழும் என நிகழ்வை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றுதான் தோன்றுகிறது,” என அத்தோடு அவர் தம் வாதத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளியை அவராகவே வைத்துக் கொள்ளவே, இது விஷயத்தை மீண்டும் நான் கையிலெடுக்க ஒரு வகையில் அவரே தன்னையும் அறியாமல் âù‚ எனக்கு மற்றுமொரு தூண் டுகோலாய் அமைந்து விட்டார்.

இதற்கு முன்னரே மருத்துவ கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் சிலர், அண்ணா அந்த Veterinary Doctor கிடக்கிறார் விடுங்கள் இது சாத்தியம் தான் என நம்பிக்கை யூட்டியிருந்தனர். தங்கள் தரப்பு வாதத்துக்கு வலு சேர்க்கும் விதமாய், “கைகளில் கூடத் தான் இரத்தப் பரிசோதனைக்காக ஊசி மூலம் நேரடியாக, இரத்தக் குழாய்களிலிருந்தே இரத்தம் உறிஞ்சி எடுக்கின்றனர். குளுக்கோஸையும் கூட இதே முறையில் தான் ஊசி மூலம் செருகி ஏற்றுகின்றனர். இதற்கெல்லாம் என்ன தோலைக்கிழித்தா இரத்தக் குழாய்களை நேரடியாகக் கண்ணில் பார்த்தேவா இதை நிகழத்துகின்றனர் ?!

நன்கு பயிற்சி பெற்ற (சில நாள் பயிற்சி பெற்ற யார் ஒருவரும் இதைச் செய்யலாம்) செவிலியர்களே இதைச் செய்யும் போது நன்கு பயிற்சி பெற்ற ஒரு மருத்துவர் ஏன் இதைச் செய்ய முடியாது? சாத்தியமே! இரத்தக் குழாய்களின் தடிமனும் விந்தணுக் குழாய்களின் தடிமனும் ஒன்றல்ல, என்று வாதிடலாம் தான் ஏற்றுக் கொள்கிறோம் நாங்களும்.. இரண்டின் தடிமனும் வெவ்வேறானவையே. அதுவும் விந்தணுக் குழாய்களின் தடிமன் வெறும் 0.2 மில்லி மீட்டர் அளவுக்கு நுண்ணியதாய் இருந்த போதிலும், நன்கு பயிற்சி பெற்ற ஒரு மருத்துவர் மூலம் முயற்சித்தால் இது ஒன்றும் சாத்தியமேயில்லாத ஒன்றல்ல சாத்தியமே.

அவர் என்ன குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறைகளைப் பார்த்ததே கிடையாதா?! அதில் அவர் கூறுகிற மாதிரியா மிக நீண்ட கிழிசல்களா விதைகளில் நிகழ்த்தப்படுகிறது. இல்லவே இல்லை. ஒரு சிறு துளைதான் இடப்படுகிறது. இழந்தைப் பழத்தைப் பிதுக்குவது போல் மிக எளிதாக அந்தச் சிறு துளை வழியே பிதுக்கி நுண் விந்தணு குழாய்களை வெளியே பிதுக்கி முடிச்சிடுகிறார்கள். வேண்டுமானால் அந்த அது போன்ற வீடியோ படங்களை பார்க்கச் சொல்லுங்கள், எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் அந்த வசதி கிட்டும் என அவர்கள், அவர்கள் தரப்பு வாதத்தை மிகவும் வலுவுடனேயே வைத்தனர். இதற்குப் பின்னரும் X-ray Vedio பற்றிய செய்திகளுக்குப் பின்னரும் ஆன இந்த வாதங்களுக்குப் பிறகு தான் அந்த கால்நடை மருத்துவரும் இது விஷயத்தில் தனது வாதப்பிரதி வாதங்களை ஒதுக்கி கொண்டு ஒதுங்கினார் என்று கூற வேண்டும். என்ன செய்ய விஷயம் அப்படி பட்டதாய் ஆகிப் போய்விட்டது.

ஒரு கட்டத்தில் எவரெல்லாம் எனது நலம் விரும்பிகளோ அவர்களெல்லாம் கூட ஏன் Individual -ஐ குறிப்பிட நினைக்கிறாய்?! Issue-வை மட்டும் குறிப்பிடு Individual -ஐ குறிப்பிடாதே என்று தான் ஆன மட்டும் வாதாடிப் பார்த்தார்கள். ஆனால் எனக்குத் தான் அதிலெல்லாம் சற்றும் உடன்பாடே கிடையாது. இது எப்படி உள்ளது எனில் சத்து, சாரத்தையெல்லாம் விட்டு விடு, சக்கையை மட்டும் வெளிப்படுத்து என்பதைப் போல இருந்தது எனக்கு. Issue-என்ற நாரோடு Individual எனும் பூவும், சேரும் போது தான் இந்த இது போன்ற Issue- களுக்கே ஒரு முழு மரியாதை, முழு உலகின் கவன ஈர்ப்பு கிட்டும் எனும் போது, எப்படி பூவை ஒதுக்கி நாரை மட்டும் மாலையாய் தொடுக்க.

Issue- -ன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கே, Individual.பால் அறிவியல் உலகின் முழு கவன ஈர்ப்பைத் திருப்பவே இது விஷயத்தில் Individual -பால் இவ்வளவு கவன முக்கியத்துவம் கொடுத்துள்ளேன். மற்றபடி எனது நேரடி வாழ்வில் அவர்கள் நேரடியாய் நான் உண்ணுகிற உணவில் என்ன கல்லையும் மண்ணையுமா போட்டு விட்டனர் ?!
இப்போதும் இதற்குப் பின்னரும் எனது proposal நடைமுறைக்கு வருவதில் இன்னமும் சில தடைக்கற்களைத் தாண்டியாக வேண்டிய நிலையுள்ளது என்பதையும் இப்போதும் இந்த நிலையிலும் நானும் யூகிக்கத் தவறவில்லை! அது இது போன்ற சிக்கல்களில், இச்சிக்கல் முடிச்சை அவிழ்க்க உதவும் வேறுவகை, தடயங்கள், மருத்துவ அறிவியல் துறையில் உள்ளனவா என்பதே?!

அதாவது, எப்போது இது போன்ற திருட்டு சதி வேலைகள் நடைபெறுகின்றனவோ, அப்போதே அது செயற்கை முறைக் கருத்தரிப்பில் நிகழ்த்தப்படும் வாய்ப்புகள் தான் மிக அதிகம். அப்படி செயற்கை முறை கருத்தரிப்பாய் நிகழ்த்தப்படும் போது கருவளர்ச்சிக்கான, தூண்டல் ஊக்கியாக சில தூண்டு உறார்மோன் இன்ஜெக்ஷன்களை பயன்படுத்த நேரிடும். அந்த செயற்கை வேதிப்பொருள்களே, (தூண்டு உறார்மோன்களே) கூறிவிடாதா? இக்குழந்தை செயற்கைமுறைக் கருத்தரிப்பில் தான் பிறந்திருக்க வேண்டும் என்பதை…” என இப்படி இது போன்ற ஏதேனும் ஒரு சூழல் நிர்ப்பந்தம், எளிய வழி இருந்தால் கூடப்போதும். அப்போதும், எனது proposal – செயற்பாட்டுக்கு வருவதில் மீண்டும் ஒரு பெரும் தடைக்கல் எழுந்தே தீரும். ஆனால் அதே நேரத்தில் நாம் இன்னொன்றையும் அவ்வளவு சுலபத்தில் ஒதுக்கி விடத் தேவையில்லை.

“மனித உடலே ஏற்கனவேயே அதுவே தனக்குத்தானே ஒரு வேதித் தொழிற்சாலையைப் போலத்தான்”…. இல்லையா?! அப்படியிருக்க, அதற்குள் புறத்திலிருந்து. ஒரு வேதிப்பொருள் தடயமாகச் செயல்படுமாறு செலுத்தப்பட்டால், அது உடலின் உயிர் வேதிவினைகளாலும், பாதிக்கப்படாமல் அல்லது அப்படியே பாதிக்கப்பட்டாலும், இன்னமும் தனது தடயத் தன்மையை இழக்கவில்லை எனுமளவுக்கும் ஒரு தடய பொருளாகத் தங்கிச் செயல்படக் கூடிய குறைந்தபட்ச காலம் எவ்வளவு?! அதிகபட்ச காலம் எவ்வளவு…?! தடயப் பொருளாகச் செயல்படும் தனது பதவிக் காலத்தில் அது மனித உயிருக்கு ஊறு விளைவிக்காததாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வேதித் தடயப் பொருட்கள் ஏதுமுண்டா…?! இதுபோன்ற கேள்விகள் எழுகின்றன.

ஏனெனில் இப்போது இந்த ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ஊக்க மருந்துப் பரிசோதனைக்காக, இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை எடுக்கும் போது, குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்குள் என அதற்கென அமைந்த நேரக் கெடுவுக்குள் பரிசோதனை சேம்பிள்கள் எடுக்கப்படுவதை பத்திரிக்கைளில் பார்க்க நேரிடுகிறோம் எவ்வளவுக்கெவ்வளவு, பரிசோதனைக்கான (சேம்பிள்) மாதிரி எடுக்கப்படும் நேரம், போட்டி நேரத்திலிருந்து நீண்டு கொண்டே போகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு, பரிசோதனையின் முடிவு, தரம் தனது துல்லியத் தன்மையை இழந்து கொண்டே வந்து, முடிவில் தனது துல்லியத்தையே கூட இழக்க நேரிடுகிறது. விளையாட்டு என்பதால், இது தெரிகிறது! அனைவரும் அறிய பார்க்க இது நடத்தப்படுகிறது. எனவே போட்டி முடிந்த சில நிமடத்துளிகளுக்குள்ளாகவே அவர்களை பரிசோதனைக்கு உள்ளாக்குவதும் சாத்தியமாயுளள்ளது.

ஆனால் இந்த இது போன்ற ICSI துஷ்பிரயோக, Mode of Fertilization நிகழ்வுகளெல்லாம், நிகழ்வு நிகழந்து, பலமணி நேரங்கழித்தல்ல, பல மாதங்கள், ஏன் பல வருடங்கள் கழிந்தே கூட வழக்கு வழக்கு மன்றங்களுக்கு வரலாம். அப்போது அந்த, அது போன்ற சூழல்களில், இந்த செயற்கைக் கருத்தரிப்பு முறைக் குழந்தைகளின் உடலில் செலுத்தப்பட்ட அந்த Stimulation உறார்மோன் இன்ஜெக்ஷன் தடயமெல்லாம் அவ்வளவு நீண்ட நெடுங்காலங்களுக்கு தனது தடயத் தன்மையை இழக்காமல், தொடர்ந்து அக்குழந்தையின் உடலில் ஒரு வேதித் தடயமாய் தங்கியிருந்து (குழந்தையின் உயிருக்கும், ஆரோக்கியத்திற்கும் ஊறு விளைவிக்காமல்) தனது தடயத் தன்மையை நிரூபிக்குமா?! என்பதே இங்கு முக்கியக் கேள்வி. மிகவும் சிக்கலான இவ்வகை வினாக்களுக்கு எல்லாம், அந்தந்த துறை சார்ந்த நிபுணர் குழாம் தான் ஒரு அதிகாரப் பூர்வமான விளக்கம் அளிக்க முடியும் எப்படியும் என் போன்ற பாமரனல்ல.

அப்படியும், ஏற்கனவேயே (உயிருக்கு ஊறு விளைவிக்கவில்லையென்ற போதிலும்) அப்படிப்பட்ட வேதியியல் இராசயனங்களும் வழக்கத்தில் பயன்பாட்டிலும் இல்லாமல் இல்லை. ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிப்பவை என மேற்கத்திய அரசுகளால் தடை செய்யப்பட்ட எத்துனையோ வேதி இரசாயனங்களின் நீண்ட ஒரு பட்டியலே உண்டு. உதார்ணத்துக்கு இந்த விவசாய உணவு பயிர்களுக்கு அடிக்கப்படும் டிடிஹெச் பூச்சிக் கொல்லி இரசாயனத்தையே எடுத்துக் கொள்வோம், டிடிஹெச் இரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட பூச்சிக் கொல்லிகள் தானியங்களுக்குள் சென்று. அதைச் சாப்பிடும் விலங்கு, கால்நடைகள் வாயிலாகவும், நேரடியாக அதைச் சாப்பிடும் மனிதர்கள் வாயிலாகவும், உள்ளே சென்று நீண்ட நெடுங்காலம் தனது நச்சுத் தன்மையை செலுத்தி வருகிறது! இறுதியாக டிடிஹெச் இரசாயனத்தால் பாதிக்கப்பட்ட உணவு பயிரைச் சாப்பிடும் ஒரு தாய், தனது தாய்ப்பாலின் மூலம் தனது குழந்தைகளுக்கும் கூட அதை அளிக்கும் நிலை தொடர்கிறது! ஓம்பி விட்டு, அடுத்த உயிர் ஓம்பி என, ஒரு தலைமுறை கடந்து அடுத்த தலைமுறைக்கே கடத்தும் வரை கூட, இந்தக் கொடிய ரசாயனம் செயல்படுகிறது” இதனால் தான் உங்கள் மேற்கத்திய நாடுகளில் தற்போது இது ரசாயனம் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பூச்சிக் கொல்லிகளுக்கு, அராசாங்கமே தடை விதித்திருப்பதையும் கூட பத்திரிக்கைகளில் படிக்க நேர்கிறோம் (இது விஷயத்தில் உங்கள் தேசத்தவர்கள் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். ஆனால் எங்கள் இந்தியாவிலோ… உங்களுக்கேப் புரியும். தெரியவரும்).

ஆக, ஏற்கனவேயே, உயிருக்கு ஊறுவிளைவிக்காத, இத்தகைய ரசாயனங்கள் இருப்பதாவது, இதுபோல் இன்னும் என்னென்ன, எத்தனைவிதமான இரசாயனங்கள் உள்ளனவோ என்ற சந்தேக எதிர்பார்ப்பைத்தான் தூண்டுகின்றன என்ற போதும் …. தடயத் தன்மைக்காகவே தடயப் பொருளின் நீள் ஆயுளுக்காகவே, மனித உயிரோடும், ஆரோக்கியத்தோடும் அதிகாரப்பூர்வமான மருத்துவத்துறை விளையாடாது என்றே நம்புவோமாக , இன்னொரு விஷயத்தையும் இங்கு நான் கட்டாயாமாகக் கூறியே ஆக வேண்டும இந்த இதுபோன்ற சிக்கலான விஷயங்களில், மலட்டுத் தன்மை கொண்ட ஆண்களின் மிகக் குறைந்த விந்தணுக்களை குழந்தைப் பேறுக்காக பயன்படுத்துகையில் தான் மேற்கண்டவாறு எல்லாம் சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளது! ஆனால் இது போன்ற சதித் திட்டங்களில், துஷ்பிரயோகங்களில், விந்தணுத் திருட்டுக்கு ஆளாக நேரிடும் ஆண்கள் எல்லாம் மலட்டுத் தன்மை கொண்டவர்களாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயம், அவசியம் கிடையாதே!

நல்ல ஆரோக்கியம் உள்ள ஆணிடம், இருந்து எடுக்கும் போது, Invitro fortilization-க்குப் பதிலாக, மீண்டும் Invivo fertilization. ஆகவே அதாவது Test tube Baby – Mode – போலவே, நேரடியாக கருத்தரிப்பை இயற்கையான கலவி வழிக் கருத்தரிப்பு போலவே, ஒரு வாடகைத் தாயின் கருப்பையிலும் நிகழ்த்த வாய்ப்புள்ளதே?! அப்படி நிகழ்த்தப்பட்டால், எந்த ஒரு (stimulation ர்armon injection) தூண்டு ஹார்மோன் இன்ஜெங்ஷனுக்கும் தேவையே இல்லாமல் கூட இதை நிகழ்த்தலாமல்லவா?! ஆக, இப்போதைய சூழ்நிலையில், விந்தணுத் திருட்டு என்பது 100% சாத்தியமான ஒன்றுதான் என்பதை நிரூபிக்க முடிந்தால் அதுவே போதும் எனக்கு.

இந்த ஒரு செய்தியை உங்கள் ஆழ்மனதில் நன்கு பதிய வைத்தால் போதும்… அதற்கு மேல், இதை அந்தப் பிரச்னையின் வீர்யத் தன்மையே பார்த்துக் கொள்ளும்! ஆக எப்படிப் பார்த்தாலும், ICSI- துஷ்பிரயோகச் சிக்கல் என்பது ஒரு ஜனித்து விட்ட நிஜம், அல்லது ஜனிக்க காத்துக் கொண்டுள்ள நிஜம் என்பது நிரூபணப்படுமேயானால், அது போதும் எனக்கு.

இயற்கை இதை எவ்வகையில் தீர்த்து வைக்குமாறு மனித குலத்துக்கு கட்டளையிட்டு வைத்துள்ளதோ அந்த வகையிலேயே தான் மனிதகுலமும் தீர்த்துக் கொண்டுதான் போகட்டுமே. எப்படியும் ஒருநாள் வெளியில் தெரியவரத்தான் போகிறது. என்ன ஆனால், இயற்கையோடு சேர்ந்து நானும் ஒரு வரலாற்றுப் பார்வையாளனாய் காத்திருக்க முடியாத அளவுக்கு மிக அற்ப ஆயுள் கொண்ட சாதார்ண மனிதனல்லவா? ஆகையால்தான் எனது ஆயுட்காலத்திற்குள் எனது புரபோசலின் செயற்பாட்டிற்கான வாய்ப்பு ஒரு சிறு அற்ப அளவுக்காவது தென்படுகிறதா (ஆனால் அந்த அற்ப அளவு புறக்கணிக்கதக்கது என புறக்கணிக்க முடியாத அளவு ஒரு வலிமையோடு தென்படுகிறதா) என இதன் சாத்தியப்பாட்டிற்கான சகல மூலை, முடுக்குகளையும், இன்டு, இடுக்குகளையும் தேடி அலசிப்பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

தானாக இதுபோன்ற விஷயங்கள் என்று கசிந்து என்று பத்திரிக்கை செய்தியாய் நடைமுறை உலகினில் பிரவேசிக்க? அது எனது ஆயுட்காலம் தாண்டிய ஒன்றாய் இருந்து விட்டால்… ?! “சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம்” கொடுக்க வேண்டுமல்லவா?!” முதலில் இங்கு ஒரு விஷயத்தை வலியுறுத்த நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும். எவ்வளவு தான் பலமான சாத்தியக் கூறுகள் இருந்தாலும், ஊர்ஜிதப்படாதவரை யூகம், யூகம்தான்! அனுமானம், அனுமானம் தான். ஒரு விபரீதக் கற்பனையின் விளிம்பெல்லையாகத்தான் உலகால் பார்க்கப்படுமேயன்றி, அது எவ்வளவு பெரிய விபரீதக் கற்பனையென்றாலும் பரவாயில்லை. அதன் நிகழ்தகவுச் சாத்தியக் கூறுகளையும்தான் சிறிது பார்ப்போமே என்று பார்க்காது.

இந்த மந்தை மனோபாவத்திலிருந்து, விடுபட்ட விதிவிலக்கான சில மனிதர்களும் உலகில் இல்லாமல் போய்விடவில்லையே. இந்த உலகில் எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக மிக அரிதான அளவில் என்ற போதிலும் அவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். தங்களையும் அத்தகையவர்களில் ஒருவராய்த் தான் பார்க்கின்றேன். உயர்வு நவிற்சியாய் புகழ்ச்சிக்காக இதைக் கூறவில்லை. உண்மையாகவே நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து தான் இதைக் கூறுகிறேன். சாதாரண …………., ஒரு Appointment- -கேட்பதற்கும் Guinness book of Record ஒரு appointment கேட்பதற்கும் இடையே ஒரு பெரும் வித்தியாசம், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறதல்லவா?! அப்படியொரு Appointment–ஐ திரு.கேட்ஸிடமும், கிளிண்டனிடமும் பெற்று விட்டீர்களேயானால், அது போதும், எந்த ஒரு இடை முகவரும் இல்லாமல் நேரடியாகவே எனது சந்தேகத்தை, எனது இந்தக் கடிதக் கட்டுரையை நேரடியாகவே சம்பந்தப்பட்டவர்களின் கவன ஈர்ப்புக்கேக் கூடக் கொண்டு சென்று விட முடியும்.

இல்லாவிடில் வழக்கமான உலகியல் வழிகளில் முயன்றால், அது சம்பந்தப்பட்ட அந்த மனிதர்களின் இமேஜையும், திரண்ட அவர்களின் சொத்து மதிப்பையும் பங்குச் சந்தையில் வீழ்ச்சியடைய வைப்பதாகத தான் (ஒரு வேளை எனது இந்த யூகம் சந்தேகம் உண்மையாகவே இருந்து விடும் பட்சத்தில், 750 கோடியில் ஒரு வாய்ப்பு என வைத்துக் கொள்ளுங்களேன்) அமையுமேயொழிய, எனது தனிப்பட்ட தேடல்களுக்கும் ஒரு பதிலளிப்பாய் அது அமையாது! (அமையும் என நான் நம்பவில்லை). அநாவசியமாக அவர்களின் Privacy-யில் தலையிடுவதால் எனக்குத் தனிப்பட்ட விதத்தில் என்ன பலன் கிட்டிவிடப் போகிறது?! (அதுவும் யாரை எதிர்த்து யாருடைய அந்தரங்க விஷயத்தில் நுழைந்து). தெரிந்தோ, தெரியாமலோ, இது விஷயத்தில் ஒரு நிலைபாட்டை (இதன் tail, claimax, end – எது எனத் தெரிந்து கொள்ளாமல் விடுவது இல்லை) என்ற ஒரு நிலைபாட்டை எடுத்து விட்டேன்.

பலன் கிட்டுகிறது கிட்டாது போகிறது என்பது, அது குறித்த கவலை என்பது இரண்டாவது! முதலில் எடுத்த செயலை முடித்தே தீருவது என்ன விலை கொடுத்தாவது! என்ற இந்த எனது நிலைபாடு, இதன் நோக்கம் உண்மையாகவே ஒரு Black Mail அல்ல என்ற போதிலும், ஒரு Black Mail போன்ற ஒரு வடிவத்தில்தான் இப்போது, வெளிப்பட நேரிடுகிறது என்பது வும் ஒரு வகையில உண்மையிலேயே எனது துரதிஷ்டம் தான். எனவே இது விஷயம் குறித்து, இப்போதாவது எனக்கு ஏதேனும் ஒரு ஆக்கபூர்வமான உதவி புரிவீர்கள் என நம்புகிறேன். ஒரு வேளை இப்போதும் எனக்கு ஏமாற்றமான ஒரு பதிலே அளிப்பீர்கள் எனும் பட்சத்தில், எனக்கு வேறு வழியேயில்லை!

நேரடியாக அவர்களுக்கே சம்பந்தப்பட்ட அந்த முக்கிய பிரமுகர்களுக்கே அனுப்பிப் பார்ப்பது… அதற்கும் பதிலில்லாது போகும் பட்சத்தில், பத்திரிக்கைகளுக்கும்…. பத்திரிக்கைகளிடமிருந்தும் சலனம் ஏதுமில்லை எனும் பட்சத்தில், இணைய தளங்களின் பார்வைக்கும் வைப்பது என்ற என் அடுத்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் நோக்கி நகர்வது தவிர வேறு வழியேயில்லை. அத்தகைய ஒரு சூழல் நிர்பந்தத்தில் எனை நெருக்கித் தள்ளமாட்டீர்கள் என்று தான் இது கணம்வரை நம்புகிறேன். அதற்கும் மேல் விதி பிராரப்தம் எப்படியோ? அப்படி. இல்லையெனில் காதும், காதும் வைத்தது போல் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு செய்திக்கு, பகிரங்கமான விளம்பர முக்கியத்துவம் ஏற்படுத்தித்தந்த ஒரு பெரும் மாபாவத்திற்கும், இழிச்சொல்லிற்கும் கூட நீங்களும் உங்களுடைய தரப்பும் ஆளாக வேண்டியிருக்கு மோ என்னவோ?.

“…………. என்ற ஏதோ ஒரு அற்ப அநாமதேய மனிதன் தான் முட்டாள் தனமாய் “எங்களது Privacy சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தில் மூக்கை நுழைத்துச் சொதப்பக் காத்துக் கொண்டிருந்தான் என்றால் நீங்களும் கூடவா கின்னஸ்… ?!” என்ற அவர்களின் “you too Brutus” ரக பார்வைக்கு உங்களை நீங்களே ஆளாக்கி கொள்ள மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன். உங்களால் இயலும்; நீங்கள் மனம் வைத்தால் எனது இந்த கோரிக்கையை, எனது இந்த தேடலை, எனது proposal விஷயத்தை சம்பந்தப்பட்ட அந்த VIP மனிதர்களிடமேயே நேரடியாகக் கொண்டு போய் சேர்க்க முடியும். இடையில் எந்த 2வது, 3வது மனிதரின் தலையீடு இல்லாமலேயே நேரடியாகவே அவர்களின் கவன ஈர்ப்புக்குக் கொண்டு சென்று விட முடியும். ஆனால் என்னால் தனியொரு மனிதனாய் அப்படி இயலாது என்பதாலேயே இந்தப் பெரும் சிக்கலான ஒரு விஷயத்தில் தங்களின் முழு ஒத்துழைப்பையும் (விரும்பி மனமுவந்து செய்தாலும் சரி, அல்லது ஒரு கட்டாய நிர்பந்ததத்தின் பெயரில் இதைச் செய்தாலும் சரி, எப்படியோ இது விஷயத்தில் ஏதேனும் ஒரு குறிப்பிடும்படியான ஒரு உதவி செய்தால் சரி, அது போதும்! அது போதும் எனக்கு!) வேண்டி விரும்பி நிற்கிறேன்.

இதனால் எழக்கூடிய சகல விளைவுகளுக்கும் நானே பொறுப்பாளி! உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த நபர் ஒருவரின் கோபத்தோடு, அவரது அந்தரங்கம் பற்றிய ஒரு விஷயத்தோடு விளையாடுகிறேன் என்று தெரிந்து அறிந்தேதான் விளையாடுகிறேன். என்ன மிஞ்சிப் போனால் இந்த விளையாட்டிற்காக அதிக பட்சம் நான் எனது உயிரையே இழக்க வேண்டியிருக்குமா? என்ன? அதிகபட்சம் அவ்வளவுதானே?! அதற்கும் தயாரே! எனது உண்மை நோக்கம்; பிரதான நோக்கம் எவர் ஒருவரின் மனதையும் காயப்படுத்துவதோ, அல்லது அவர்களின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்வினுள் மூக்கை நுழைப்பதோ அல்ல தான் என்ற போதிலும் துரதிஷ்டவசமாக தற்போது நிகழ்வுகள் அந்தத் திக்கில் தான் சென்று கொண்டுள்ளன. ஆனால் அதன் சீரிய (Pure) நோக்கம் தனிமனித அந்தரங்க வாழ்வினுள் பிரவேசிப்பதல்ல (Pure) அறிவு தேடல் மட்டும் தான் என்பதை என்றேனும் ஒரு நாள் இவ்வுலகம் புரிந்து கொள்ளும் என்ற அந்த திடமான அபார நம்பிக்கை மட்டும் உண்டு.

5) டோபமைன் துறவிகள், சிற்றின்பவாதியா? பேரின்பவாதியா?; …….

இவை எல்லாம் ஒருபுறமிருக்கட்டும், எந்த சில ஆதாரமான அடிப்படைக் கேள்விகளுக்கான (அறிவியல்) பதில்களை நோக்கி கடந்த 18, 20 வருடங்களாகவே எனது மனம், செயல் முயற்சிகளை ஒருங்கிணைத்து ஒரு புள்ளியாக்கி வைத்துள்ளேனோ அந்த சில கேள்விகளுக்கான பதில்களையும் ஒருவேளை அறிவியல் உலகம் இந்நேரம் ஏற்கனவேயே கண்டுபிடித்து விட்டதோ என்னவோ? என்ற மற்றொரு சந்தேக ஐயமும் ஒரு இன்ப அதிர்ச்சியாய், என்னுள் பிரவேசிக்காமல் இல்லை!

ஆமாம் ஐயா, எந்த அடிப்படையில், நம்பிக்கையில், இந்த இது போன்ற கேள்விகளை எல்லாம் முன் வைக்கிறீர்கள் ….. எனக் கேட்பீர்களானால், அதற்கான பதிலாய் ஏதோ ஒரு ஒப்புக்கு சப்பாணியாகவாவது ஏதேனும் ஒரு பதில் விளக்கம் நானும் என் தரப்பிலிருந்து தந்தாக வேண்டுமல்லவா?! அந்த அதுபோன்ற பதில்களின் வரிசையில்தான் (பார்க்க பக் எண் – கட்டுரை எண் – பத்தி எண்- ) டோபமைன் ரசாயனம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.

இந்த proposal -ன் ஆரம்ப காலத் தேடல்களில், மனித Sexual -நடவடிக்கைகளின் Orgsam -நிகழ்விற்கு எல்லாம் ஆதாரமாய் அகவயச் சான்றுகளை மனித உடலுக்குள்ளேயே Invivo -வாக எங்கே போய்த் தேடுவது எனத் திக்குத் தெரியாத இருண்ட கேள்விக் காட்டிலகப்பட்ட சிறு குழந்தையாய் என் கேள்வி மனம் அலைந்து கொண்டிருந்த காலக் கட்டத்தில் தான் இளங்காலைச் சூரியக கதிர்களைப் போன்ற சில அறிவியல் செய்திகள் எனை நோக்கி படர்ந்தன. அத்தகைய செய்திகளில் (கட்டுரைகளில்) ஒன்று தான் 2004-ஜூன் கலைக்கதிர் இதழ் கட்டுரை ஒன்று (பக் – 31 -38) “போதைக்கு அடிமையாகிவிட்ட மூளை” எனும் தலைப்பில் வெளியாகியிருந்த கட்டுரை அது. அதில் எனை வசீகரித்த விஷயங்களில் ஒன்று தான் இந்த டோபமைன் என்ற இரசாயனம் பற்றியது. அதாவது, மண் புழுவிலிருந்து, மனிதன் வரை. இன்பம் துய்விக்கும் நடவடிக்கைகள் என்ற ஒன்றில் ஈடுபட்டால், அவற்றின் உடலில், அதாவது அவற்றின் நரம்பு மண்டலத்தில் இந்த டோபமைன் சுரப்பு என்பது கட்டாயம் நிகழும் என்ற செய்தி தான். கட்டுரையிலிருந்து சில வரிகளைப் பார்ப்போம். (விரிவான முழுக் கட்டுரைக்கு பார்க்க பக்கம் 31-39, “போதைக்கு அடிமையாகிவிட்ட மூளை” எனும் தலைப்பிலான ஜுன் 2004 கலைக்கதிர் கட்டுரை, ஒளிநகல் இணைக்கப்பட்டுள்ளது, இணைப்பு எண் )

மனித மூளை சொத சொத என்று ஈரமாக உள்ள மாமிசமாக இருந்தாலும் அதில் உள்ள கோடானு கோடி நரம்பு செல்கள் மெல்லிய இழைப் பின்னலினால் பின்னப்பட்ட “(Electronic Circuit)” மின் சுற்று போல இருக்கிறது. அதில் பாய்ந்து செல்லும் சிக்கலான மின்சுற்று தான் நமது நினைவுகளும், உணர்வுகளும், எண்ணங்களும், இந்த பல்லாயிரம் மின்சுற்றுகளில் ஒரு முக்கியமான மின்சுற்றுதான் “ஊக்கப்பரிசு” சுற்று! இந்த மின்சுற்றின் வழியாக உடல் மின்சாரம் பாயும் போது ஒரு ஆனந்தம் பிறக்கிறது.

திவ்யமாக சாப்பிட்டு முடிந்ததும் ஏற்படும் ஒரு மனத்திருப்தி, அத் திருப்தி காரணமாகப் பிறக்கும் இதமான, மகிழ்ச்சி நிறைந்த ஆனந்தம் … இதே போன்று ஆண், பெண் உடலுறவுக்கு பிறகு ஏற்படும் களிப்பும் நிறைவானந்தமும் இதே “ஊக்கப் பரிசு” சுற்றின் ஊடாக ஏற்படும் மின்னோட்டம் தான்.

ஆனந்தம் கிடைக்குமென்றால் தான் உயிரினங்கள் செயலிலேயே ஈடுபடும். துன்பம் தரும் செயலை யார் தான் நாடுவார்கள். எது மகிழ்ச்சியையும் மனக்களிப்பையும் தருகிறதோ அது மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என்ற விழைவை ஏற்படுத்துகிறது…
சாப்பிடுவதும், உறவு கொள்வதும் துன்பம் தருவதாக இருந்திருந்தால் எந்த உயிரினமாவது சாப்பிட்டிருக்குமா?! இனப்பெருக்கம் செய்திருக்குமா?! உலகில் உயிர்கள் நிலைத்து நீடூழி வாழ்ந்து பரிணாம கதியில் நடந்து மனிதன் வரை வளர வேண்டுமானால் ஊக்கமும் ஆனந்தமும் உடன் நிகழ வேண்டுமல்லவா..!

இந்த டோபமைன் ஆய்வுபற்றி குறிப்பிடுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ****சமீபத்தில் (கடந்த 2000-த்தில்) அமெரிக்காவின் ஓக்லஹாமா பல்கலைக்கழகத்தில் எங்களூர் சந்நியாசி ஒருவரிடம் (நித்தியானந்தா) உடல், மனம் சம்மந்தப்பட்ட சில புதிரான ஆய்வுகள் நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டது, சில பத்திரிக்கைகளும் அப்படிப் பட்ட செய்திகளை வெளியிட்டன. அதில் ஒன்றுதான் இந்த டோபமைன் பற்றிய ஆய்வும். அதாவது எங்களது இந்துமதம் குறிப்பிடும் நித்தியஆனந்தம் சமாதிநிலையில் கிட்டக்கூடிய பேரின்பம் என்பதுவெல்லாம் உண்மையிலேயே மெய்யான ஒன்றுதானா? அல்லது கஞ்சா, ஹெராயின் போன்ற போதை வஸ்து உபயோகிக்கும் போலிச் சாமியார்கள் குறிப்பிடும் போலியான ஒரு விஷயமா? என ஒரு ஆய்வு நடத்தப்பட்டுதாம்.

அதில் தான் (நித்தியானந்த சுவாமிகள் என அழைக்கப்படும் எங்களூர் இளஞ்சந்நியாசியிடம்) அவரது ரத்தத்தில்தான் இந்த டோபமைன் சுரப்பு என்பது (வழக்கமாக மனிதர்களிடம் காரண காரியத்துடன் இன்பம் துய்க்கும் நடவடிக்கைகளில் மட்டுமே காணப்படும் டோபமைன் சுரப்பு) அசாதாரணமான அளவில் காணப்பட்டதாகவும் இங்குள்ள ஸ்தல பத்திரிக்கைகளிலும் அவரது மட பிரசுரங்களிலும் படிக்க நேரிட்டேன். இது எந்த அளவுக்கு உண்மையானது? என்பது குறித்தும் என்னால் ஒன்றும் ஊர்ஜிதம் செய்து கொள்ள முடியவில்லை. ****

காரணம் துறவிகள் என்றாலேயே அது பௌத்த துறவியாகட்டும், இந்து, முஸ்லிம், கிறித்துவ துறவியாகட்டும் எவர் ஒருவரையுமே நம்பிவிட இயலாதபடிக்கு அவர்களிடம் இன்று காணப்படும் (சாதாரண சராசரி பொதுமக்களைக் காட்டிலும்) மலிந்துவிட்ட ஒழுக்கச்சீரழிவுகள். அந்த ஒழுக்கச்சீரழிவுகள் ஏற்படுத்திய வடுக்களும் வெறுப்புணர்ச்சியுமே உண்மையானவர்களைக் கூட ஒருவேளை இவரும் போலியாக இருப்பாரோ? என சந்தேகிக்கத் தான் தூண்டுகிறது. வட இந்தியா எப்படியோ? இன்று தென்னிந்தியாவை பொறுத்தவரை சற்று நம்பிக்கை அளிக்க கூடிய விதத்தில் காட்சி அளிக்கிற துறவிகள் எனில், அது எனைப் பொறுத்தவரை இந்த நித்தியானந்த***** சுவாமிகளும், ஈஷா யோக மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அவர்களும்தான்.

இவர்களிலும் ஜக்கி வாசுதேவ் போன்றோரின் சில கூற்றுகளைக் கேட்டால், சில நேரங்களில் இவரும் ஒரு போலிதானோ? எனக் கூட சந்தேகிக்க தோன்றுகிறது. காரணம் அவரது மறுபிறவி கோட்பாடுகள் பற்றிய அவரது சொந்த வாழ்க்கை, சொந்த பிறவி அனுபவங்களே கூட நவீன விஞ்ஞானம் நம்ப இயலாததாய்தான் உள்ளது. 370 வருடங்களுக்கு முந்தைய தனது 3 பிறவிகளுக்கு முந்தைய விஷயங்களெல்லாம் தனது ஞாபகத்திற்கு வந்துள்ளது என்கிறார். அதில் ஒரு பிறவியில் (கடந்த பிறவியில், பழனிசுவாமிகள் ஸ்ரீ பிரம்மா என்றழைக்கப்பட்ட பிறவியில்) அகஸ்தமாக ராணுவ வசம் சிக்கிக் கைது செய்யப்பட்டாராம்

அந்த சமயம் சிறைச்சாலையிலிருந்தே கம்பிகளை ஊடுருவிக் கொண்டு ஏதோ டெர்மினேட்டர் பட வில்லனைப் போல் வெளியில் வந்ததாகவும், தனது அதிசய சித்திகள் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்துவதற்காக அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனின் தலையில் கைவைத்ததாகவும், உடனே அச்சிறுவனால் ஒரு ஏரியின் மீது, தரையில் நடப்பதைப் போல் நடந்து செல்ல முடிந்ததாகவும், இது கண்டு திகைத்த இராணுவத்தினர் உண்மையிலேயே இவர் ஏதோ ஒரு சித்தபுருஷர்தான் என கைது வாரண்டை விலக்கி அவர் வழியிலிருந்து விலகிக் கொண்டதாகவும், அவரது மடாலய வெளியீடுகளின் வாயிலாகவே வெளியிட்டுக் கொள்வதெல்லாம் உண்மையான ஆன்மீகம் என்பது பற்றிய ஒரு அளவிலாத ஐயத்தையும் கூடவே ஆர்வத்தையும் ஒருங்கே கிளப்புகின்றன.

ஜக்கியின் விஷயம் அவரின் கருத்துக்களை ஊர்ஜிதப்படுத்திக் கொள்வது என்பதற்கு, அந்த அளவுக்கு விஞ்ஞானம் இன்னும் உயர்வளர்ச்சியை எட்டவில்லை என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொண்டு இன்னும் அதிஉயர் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிக் கொண்டு வரக்காத்துள்ள எதிர்கால விஞ்ஞானத்திற்காக காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் நித்தியானந்தா பற்றிய ஓக்லஉறாமா பல்கலைக்கழக ஆய்வு பற்றி அப்படிக் காத்திருக்க தேவையில்லை அல்லவா! தேவை எல்லாம் ஓக்லஉறாமா பல்கலைக்கழக தரப்பிலிருந்தே சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்தே ஒரு அதிகாரப் பூர்வமான ஊர்ஜிதமே. *****

வேதாளம் சுமந்த நவீன விக்கிரமாதித்தன் கணக்காய் இதை நான் சுமக்கத் துவங்கி இன்றோடு வருடங்கள் 18 கடந்து விட்டது. சுருங்கக் கூறின், இது விஷயம் எனை “விடை தெரிந்திருந்தும் (சரியோ? தவறோ? அது இரண்டாவது பட்சம், முதலில் கைவசம் உள்ள இந்த சிறு (யூகத்தின் பாலமைந்த) விடையை ஒரு ஊர்ஜிதம் செய்து கொள்ளாமல், மௌனம் காப்பாயேயானால் உனது தலை சுக்கல் நூறாய் வெடித்துச் சிதறட்டும்” எனச் சாபமிட்ட நவீன வேதாளமாய் தான் எனைத் துன்புறுத்துகிறது இந்த இக்சி துஷ்பிரயோக விவகாரம்.

***** துரதிஷ்டவசமாக இவர் ஒரு போலி, டூப்ளிகேட் என இவரது சாயம் இப்போது இங்கேயே உள்ளூரிலேயே வெளுக்கத் துவங்கி விட்டதால் மேற் கண்ட பத்தியில் எழப்பப் பட்டுள்ள கேள்விகளுக்கான விடையும் என்னவாக இருக்க முடியும் என்பதையும் ஓரளவு முன் அனுமானிக்கவே முடிகிறது. என்றபோதிலும் அப்ப இத்தனை நாளும் மெத்தப் படித்த ஒரு கூட்டமே இவருக்கு ஆதரவாய் களமிரங்கி இப்படி ஒரு மெகா சதி வேலையில இறங்கிச் செயல்பட்டுக் கொண்டிருந்திருக்கிறதா? அதனைத் தான் நாமும் நம்பத் தலைப்பட்டோமோ என்பதையெல்லாம் எண்ணிப்பார்த்தால் அதிலும் அரசாங்கங்கள் இது விஷ யத்தில் இவ்வளவு மெத்தனமாய் க்ளைமேக்ஸ் வரை கண்டும் காணாதது மாதிரி இருந்து விட்டுக் கடைசி நேரங்களில் இதோ நாங்களும் இருக்கோம்மல்ல என்பதைப் போல் ஏதோ செயல்படுவதையும் பார்க்கையில் வருங்காலங்களில் இன்னும் என்னென்ன கூத்துகள் அரங்கேறக் காத்துக்கொண்டுள்ளதோ என சாதாரண பாமர அச்சத்தை வெளிப்படுத்துவதைத் தவிர தற்போதைக்கு வேறொன்றும் செய்ய இயலவில்லை.

எனது இந்த 20 வருட தேடலின் ஒட்டு மொத்த சாரம் தான் உருத்திரண்டு, இப்படி ICSI துஷ்பிரயோகம், அதற்கான தீர்வு, தீர்வாய் அமையக் கூடும் என எதிர்பார்க்கக் கூடிய அந்தத் தடய அறிவியல் பரிசோதனைக்கு, ஒழுக்கத்தின் படிநிலைகளாம் கற்பு, பிரம்மச்சரியம், நைஷ்டிகப் பிரம்மச்சரியம் இவற்றோடு ஏற்பட காத்துக் கொண்டுள்ள தொடர்புறவு (etc,etc…….) இன்ன பிற, இன்ன பிறவாக எல்லாம் விரிந்துள்ளது. கொஞ்சம் யோசித்துப் பார்க்கிறேன். இந்தக் கேள்விகளை எல்லாம் சற்றே பின்னோக்கிய ஒரு காலத்தில் மனித குலம்தான் கேட்க முடிந்திருக்குமா?! அறிவியல் தான் அப்போது இந்தளவு பிரம்மாண்டமாய்த் தான் வளர்ந்திருந்ததா?! சில கேள்விகளுக்கான பதிலுக்கு மட்டுமல்ல. குறிப்பிட்ட அந்த சிலக் கேள்விகளை எழுப்பவே அத்தகைய கேள்விகளின் ஜனனத்துக்கே மனித குல அரசியல், அறிவியல் வரலாறே வளர வேண்டியுள்ளது. உரிய குழல் வந்ததும் உறை கிழித்தெழும் விருட்சம் போல் தன்ணை வெளிப்படுத்தும் புறச் சூழல் கணிந்துள்ளதா? என்றும் பார்க்க வேண்டியுள்ளது அப்படி அந்த வகையில் இந்த எனது proposal -ஐயும் இனியும் காலதாமதப்படுத்தாமல் இது காலத்தின் கட்டாயம், தடுக்க இயலாதது என அங்கீகரித்து இதன் இலக்கு புள்ளி சென்றடைய தங்கள் தரப்பு பங்கைக் கட்டாயம் செலுத்துவீர்கள் என நம்புகிறேன்.

6). 40 வருட சந்தேகத்தைத் தெளிவு படுத்திய தடய அறிவியல் பரிசோதனை முறை.

நீண்ட நெடுங்காலங்கள் கழித்தும் (வெறும்) தனது தடயத் தன்மையை மட்டும் வெளிப்படுத்துவது மாதிரி என்றால் அதற்கு இங்கு எத்தனையோ பொருட்களுண்டு. ஆனால் இங்கு இந்த இடத்தில் அது (அந்தத் தடயத்தன்மை) ஒரு நிபந்தனையோடு வலியுறுத்தப்படுகிறது.

உயிருக்கும், ஆரோக்கியத்திற்கும் ஊறுவிளைவிக்காமல் அதே நேரம் இன்னமும் (எவ்வளவு நீண்ட நெடுங்காலம் ஆன பின்னரும்) தனது தடயத் தன்மையை இழக்காதவாறு தக்க வைத்துக் கொள்ளும் பிரத்யோகமான தன்மையையும் அது தன்னகத்தே கொண்டுள்ளதாய் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வேதித் தடயம் ஏதேனும் இந்த இது போன்ற வழக்குகளில் சம்மந்தப்பட (தர்க்கப் பொருத்தப்பாடு)வாய்ப்பு உள்ளதா? என்பதே இங்கு மிக முக்கிய வினா இது விஷயத்தின் விரிவான புரிதலுக்கு மேலும் இரண்டு உதாரணம் எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.

உதாரணமாக சரித்திரப் பிரசித்தப் பெற்ற நெப்போலியனின் மரணத்தில் எழுந்த சர்ச்சையைக் குறிப்பிடலாம். அவர் மரணம் இயற்கை மரணமா, அல்லது கொலையா? என்ற சர்ச்சை எழுந்த போது, விஷம் கொடுத்து செய்யப்பட்ட அந்தக் கொலையைப் பிரத்யேகத் தடய அறிவியல் பரிசோதனை முறை மூலம் தான் கண்டுபிடிக்க முடிந்தது. அதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நெப்போலியன் இறந்து 140ஆண்டுகள் கழித்து 1961ம் ஆண்டு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

அவர் எந்த விஷத்தால் கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்பதற்கு தோதாக (அன்றைய நிலைமையில்) ஆர்சனிக் தான் யூகப் பார்வைப்புலத்துக்கு வந்தது. ஏனெனில் சொல்லப்படுபவர் சந்தேகமுறாதபடி ருசியற்ற விஷம் தான் தேவைப்பட்டிருக்கிறது. அது மிகவும் வீரியமுள்ளதாக இராமல் அவர்உடலில் மெதுவாகச் சேர்ந்து மிக மெதுவாகக் கொல்லும் விஷமாக இருத்தலும் அவசியமாயிற்று. இதையெல்லாம் பூர்த்தி செய்வது (அன்றைய நிலையில்) ஆர்சனிக்தான். ஆனால் இதை நிரூபிப்பது எப்படி? முடிவில்லாமல் அனுமானங்கள் செய்யலாம். ஆனால் இங்கு வேண்டியதெல்லாம் கேள்விக்கிடமில்லாத நிரூபணம்தான்.

இவ்வழக்கு ஸ்மித், ஷபார்ஷ்ப்வுட் என்ற இரு மருத்துவர்களால் வழக்காடப்பட்டது. முதலில் அவர்கள் உலகிலுள்ள பொருள் காட்சி நிலையங்கள் பலவற்றுக்கும் ஒரு விநோதமான வேண்டுகோள் அனுப்பினார்கள். அங்கு சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் பலவிதமான விநோத பொருட்குவியல்களுக்கிடையே அந்தப் பெரிய பிரெஞ்சுக்காரரின் முடிக்கொத்து ஏதும் இருக்கிறதா என? எப்படியோ ஒரு வழியாக நெப்போலியனின் மரணத்துக்குப் பின் பலமணி நேரம் கழித்து வெட்டி எடுக்கப்பட்ட சில முடிகள் அவர்களுக்குக் கிடைத்தன. அம்மருத்துவர்களுக்கு மனித உடலினுள் சென்ற ஆர்செனிக் மிக மெதுவாக முடியில் ஒன்று சேருகின்றது என்று தெரியும். போன பார்ட்டின் முடியில் அவர்கள் இதைத்தான் தேடினர் ஆனால் இதைக் கூறுதல் எளிது. சொல்வதை போல செயல் அவ்வளவு எளிதல்லவே.

பின்னர் இந்த வழக்கில் ஸ்வீடிஸ் பௌதிக அறிஞர் வஸ்ஸென் என்பாரும் சேர்ந்து கொண்டார் அந்த மதிப்பு மிகுந்த முடிகள் கவனமாக ஓரு அலுமினிய உருளையில் வைத்து மூடப்பட்டு, ஒரு யுரேனிய வினைக்கலத்துள் சிலமணி நேரங்களுக்கு வைக்கப்பட்டு பின் எடுக்கப்பட்டது.

பின் முடிவுகளை எடுத்து பிரத்யோகமான சில அளவுகள் எடுக்கப்பட்ட போது போனபர்ட் விஷத்தினால் தான் இறந்தார் என்பது நன்கு தெளிவாயிற்று. அவரது முடியில் சாதாரணமாக இருக்க வேண்டிய அளவை விட 13 மடங்கு அதிக ஆர்சனிக் இருந்தது. மேலும் ஆர்சனிக் மிக மெதுவாக, மிகச் சிறிய அளவுகளில் கொடுக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

இரசாயன முறை ஒன்றையும் பயன்படுத்தாமல், அவர்களால் எப்படி ஆர்சனிக் இருப்பதை அறிய முடிந்தது. இயற்கையில் கிடைக்கும் ஆர்சனிக் மிகவும் ஸ்திரத் தன்மை கொண்ட தனிமம் அதில் கதிரியக்கத்தை எவரும் கண்டதில்லை. ஆர்சனிக் மற்றுமொரு அசாதாரணத் தன்மை கொண்டது. அதை ஒருவர் ‘தனிமையான தனிமம்” எனலாம். மற்றத் தனிமங்களில் அநேகம் 2, 3 அல்லது அதற்கு மேற்பட்ட ******ஐசோடோப்புகளைக் கொண்ட கலவைகளாய் ;காணப்படுகின்றன.

*****ஐசோடோப்பு : ஒரே அணு எண், மாறுபட்ட அணு எடை கொண்ட தனிமம். அதாவது நியூக்ளியஸில் நியூட்ரான்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் மற்ற எலக்ட்ரான், புரோட்டான்களில் ஏதும் வித்தியாசமில்லா தனிமங்கள். உதாரணமாகத் தசரத்தில் பத்து வெவ்வேறு விசையின் அணுக்கள் உள்ளன. இவை யாவும் இயற்கையில் காணப்படுகின்றன.

ஆனால் ஆர்சனிக் தனியானது. அதன் கருவில் 33 புரோட்டான்களும் 42 நியூட்ரான்களும் உள்ளன. இத்தகைய ஒரு தொகுப்பு மிக ஸ்திரமானது. ஆயினும் எவ்வழியிலேனும் ஓருஅதிகப்படி நியூட்ரான் இந்தக் கருவினுள் (ஆர்சனிக் கருவினுள்) ஊக்குவிக்கப்பட்டால், அதன் ஸ்திரத் தன்மை மறைந்து விடுகிறது. இந்த ஐசோடோப்பை இரசாயன முறையின்றிக் கண்டுபிடிக்கலாம். கதிரியக்க வெளியீட்டை பதிவு செய்ய ஒரு கருவி தான் தேவை. கதிரியக்கமுள்ள ஆர்சனிக் அளவு அதிகமாக ஆக அதன் கதிர்வீச்சும் அதிகரிக்கின்றது.

இதுதான் அந்த எளிதான ஆனால் அதிமுக்கியமான தடய அறிவியல் பரிசோதனை முறையின் அடிப்படை அறிவியல் தத்துவம். தசமப்புள்ளிக்கு பிறகு 10 அல்லது 12 பூஜ்ஜியங்களை கொண்ட எண்களால் குறிப்பிடக்கூடிய ஒரு கிராமின் அத்துணை சிறிய பின்ன அளவு பொருள்களைக் கூட தீர்மானமாகக் கண்டுபிடிக்க இது உதவுகிறது.

இவ்வாறுதான் நெப்போலியன் போன பர்ட்டின் மரணத்தின் சூழ்நிலையை சரித்திரம் எழுதுவோர் கண்டுபிடித்தனர். இந்த முறைக்கு Method of activation analysis என்று பெயராம். நல்லது மைய விஷயத்தை விட்டு சற்று தள்ளியே வந்து விட்டேன். இந்நிகழ்வை எதற்கு இங்கு எடுத்துக்காட்ட விரும்பினேன் என்றால், சில நேரங்களில் ஒரு தனிமத்தின் அசாதாரண பண்பு கூடப் போதும் அந்த அசாதாரண பண்பே அதற்கு ஒரு பிரத்யோகத் தடயத் தன்மையை அளித்து விடுகிறது என்பதை எடுத்துக்காட்டவே. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொருள் (ஆர்செனிக்) விஷமே என்ற போதிலும் அதனையும் கண்டுபிடிப்பதற்கான வழி முறையில் எந்த விதமான ஒரு இரசாயனப் பரிசோதனை முறையையும் கூட உபயோகிக்காமலே வேறு ஒரு புதிய முறையில் (Metர்od of activation analysis) எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது இறுதியில் என்பதை சிறிது நமது விஷயத்தோடு ஒப்பிட்டு சிந்தித்துப் பார்க்கவே.

மேலும் நெப்போலியன் விஷயத்தில் தடயப்பொருள் ஒரு இறந்த உடலில் ( dead body -ல்) உள்ள தடயப் பொருளாய் போயிற்று என்றால், நமது விஷயத்தில் உயிருள்ள மனித உடலுக்குள்ளேயே தேட வேண்டிய ஒரு பொருள். ஆக சிக்கல் இன்னமும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என்றால் இதுவும் மிகையில்லை பரிசோதனை பொருளுக்கான சேம்பிளை எடுப்பதிலிருந்து அதை எங்கே, எப்படி தேடுவது என்பது வரை, ‘எல்லாமே ஒரே சிக்கல் மயமே”.!

இதே போல இன்ஸுலினை எடுத்துக் கொள்வோம். அதை செயற்கை முறையில் ஆய்வுக் கூடத்தில் தயாரிக்க வேண்டும் எனில், மிக நீண்ட காலம் பிடிக்கிறது. காரணம் இன்ஸுலின் உண்மையில் ஒரு பேருருவு மூலக்கூறு. அதில் உள்ள தனிமங்கள் மிகச்சிலவே. எனினும் அவற்றின் அணுக்கள் அமைந்திருக்கும் இணைப்புமுறை மிக அரியது; விரிவானது. இம் மூலக்கூறில் 2 சங்கிலித் தொடர் அமைப்புகள் உள்ளன.

A, B என்பதான இவ்விரு சங்கிலித் தொடர்களும் ஒன்றுடன் ஒன்று இரட்டைக் கந்தக அணுப்பிணைப்பினால் இணைந்திருக்கின்றன. அதாவது அவற்றின் குறுக்கே பாலம் போல் இரு கந்தக அணுக்கள் கொண்ட இணைப்பு உள்ளது. இன்சுலினை செயற்கை முறையில் தயாரிக்க வேண்டுமெனில் முதலில் இந்த A, B என்னும் இரு சங்கிலித் தொடர்களையும் தனித்தனியே தொகுத்துக் கொள்ள வேண்டும். பின் இவ்விரண்டையும் இரட்டைக் கந்தக அணுப்பினைப்பினால் இணைக்க வேண்டும். இவ்வாறு செயற்கை முறையில் இன்ஸுலினை தயாரிக்கும்; ஆரம்பகால முயற்சிகளில் (1960 தசாப்தங்களில்) சற்றேறக்குறைய 223 தொடர்வினைகளைச் செய்து முடித்தனர் என்பதை நினைத்துப் பாருங்கள். இதற்கு முன்வேறு எந்த வேதிச் சேர்மத்தின் தயாரிப்பும் இவ்வளவு கடினமானதாக இருந்ததில்லை. 10 மனிதர்கள் 3 ஆண்டுகள் இடைவிடாமல் உழைத்த உழைப்பின் பயன் இதுவாம்.

ஆனால் உயிர் வேதியியலறிஞர்கள் ஓரு அபூர்வ உண்மையைக் கூறுகிறார்கள். ஓரு உயிர் பிராணியின் செல்லில் இதே மூலக்கூறு 2, 3 விநாடிகளில் தயாராவதாக! 3 ஆண்டுகள் எங்கே? 3 விநாடிகள் எங்கே? உயிர்ப் பிராணிகளின் செல்களில் உள்ள தொகுப்புச் சாதனங்கள் இன்றைய வேதியியலின் சாதனங்களைவிட எவ்வளவு மேன்மையானவை?! அவற்றில் தயாராகக்கூடிய சிக்கலான உயிர் வேதிமங்கள் எவ்வளவு சிக்கலானவை?! என்பது இதில் இருந்து நன்கு புலனாகிறதல்லவா?! மனித முயற்சியை குறைத்து மதிப்பிடுவதற்காக நான் இதை இங்கு குறிப்பிடவில்லை. இன்றைய நவீன விஞ்ஞானத்தின் பகுப்பாய்வு முறையில் ஏற்படும் துல்லியத் தன்மை நம்மைப் பிரம்மாண்டமாக வியக்க வைக்கிறது.

உதாரணமாக 1940-50 வரை ஒரு பொருளில் உள்ள அசுத்தம் 0.01 முதல் 0.001 என்ற அளவு வரை இருந்தால் வேதியலறிஞர்களுக்கு அநேகமாக எல்லா அசுத்தங்களையும் பகுத்தாராய முடிந்தது. 1960-களுக்குப் பின் ஒரு சதவீதத்தின் ஆயிரம் மில்லியனில் ஒரு பாக (10-12) அளவுள்ள அசுத்தத்தைக் கூட கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சில தனிமங்களின் கதிரியக்கமுள்ள அணுக்களைத் தனித்தனியாக நம்மால் இன்று நிர்ணயிக்க முடியும். ஆனால் அறிவியல் அப்போதே தனித் தனிமங்களைக் கண்டுபிடிப்பதில் நுண்மையை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் அப்படி தனித் தனிமங்களைக் கண்டு பிடித்தல் எளிதா? அதுவும் எல்லாத் தனிமங்களுக்கும் இது சாத்தியமா? கதிரியக்கத் தனிமங்களின் விஷயத்தில் வேண்டுமானால் நமக்கு அதிர்ஷடம் துணை புரியலாம். கதிரியக்கமில்லா மற்றத் தனிமங்களின் விஷயத்தை பொறுத்தவரை என்ன கதி?.

எனினும் ஸ்திரமான அணுக்கள், அவற்றின் சேர்மங்கள் இவைகளைக் கண்டுபிடித்து நிர்ணயிப்பதன் நுண்மைத் தன்மை அந்த நுண்மை எல்லைக்கு மிகவும் சேய்மையிலேயே (தொலைவிலேயே) இன்னும் இருக்கிறது. அந்த சேய்மைத் தொலைவு எந்தளவிற்கு பெரியது என்பது பற்றி ஓளவுக்குப் புரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் அவோகாட்ரோவின் எண் என்பது பற்றியும் ஒரு சிறிது புரிந்து கொண்டே வேண்டுமாகையில் அதுபற்றியும் சிறிது பார்ப்போம்.

காகிதத்தில் எழுதினால் இது ஏறக்குறைய 1க்குப் பக்கத்தில் 23 பூஜ்யங்கள் மேலும் சரியாகக் குறிப்பிடப்பட வேண்டுமானால் 6.025×1023 என்று எழுதலாம். சரி இந்த எண்ணானது கற்பனை செய்ய கடினமானது எனுமளவுக்கு எவ்வளவு கடினமானது? முயற்சி செய்வோம். இந்தப் பூமியின் ஜனத்தொகை 2030-ல் சுமார் 1000 கோடி பேர்கள் என வைத்துக் கொள்வோம்.) ஒரு அதிகபட்ச அளவுக்காக எதிர் கால புள்ளி விபரம் ஒன்றையே எடுத்துக் கொள்வோம்).

6.025×1013 ÷ 1000,00,00,000 = 6.025×1013 ஒரு நபருக்குக் கிடைக்கக் கூடிய அணுக்களின் எண்ணிக்கை இவ்வளவு. எனில் 6.025×1013 ÷ 60×60×12×365 = 1,57,68,000 (ஒரு நாளைக்குப் 12 மணி நேரம் எண்ணுகிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட) நமது கிரகத்தில் இந்தியா சீனா இந்த இரண்டு நாடுகளின் மொத்த மக்கள் தொகையை மட்டும் கூட்டினால் அது வரும் 2020-ம் ஆண்டுகள் வாக்கில் அநேகமாக 300 கோடியைத் தாண்டி விடும் என எதிர்பர்க்கப்படுகிறது, நம்பப்படுகிறது.

இந்த இரு நாடுகளின் எல்லா மனிதர்களும் கூடி ஏதோ ஒரு, ஒரே ஒரு தனிமத்தின் ஒரு கிராம் அணுவில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையைக் கண்டுபிடிக்கத் தீர்மானிப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு மனிதனும் பிரதி தினமும் எட்டு மணி நேரங்களுக்கு ஒரு விநாடிக்கு ஒன்றாக எண்ணினால் கூட அவ்வணுக்களை எண்ணுவதற்கு ஆசியக் கண்டவாசிகளான நம் அனைவர்க்கும் ஆகும் நேரம் எவ்வளவு தெரியுங்களா? (ஒரு எளிதான கணக்கீட்டிலேயே புலனாகும் இது) சற்றேறக்குறைய 10 மில்லியன் ஆண்டுகள் பிடிக்கும். எங்கள் மாநிலத்தின் புகழ்பெற்ற மறைந்த காலம் சென்ற ஒரு அறிவியல் எழுத்தாளர் (சுஜாதா) தான் எழுவார் இப்படி ‘எல்லாக் கேள்விகளுக்குமே உங்களால் பதில் சொல்ல முடியுமா? என்ற வாசகர்களின் முதல் கேள்விக்கு அளிக்கும் முதல் பதிலிலேயே எழுதுவர் இப்படி. ( பார்க்க பக்கம் – ஏன் எதற்கு எப்படி பாகம் 1)

‘யாராலும் முடியாது? பிரபஞ்சத்தின் சரித்திரத்திற்கு போக வேண்டாம். ஒரே ஒரு கல் உப்பு (சோடியம் க்ளோரைடு) அந்த உப்புக் கல்லை அறிவதற்கு கூட நமது அறிவு போதாது. என!” என்னடா இப்படிக் கூறிவிட்டுச் செல்கிறாரே என அந்த அறியாப் பள்ளிப் பிராயத்தில் புதிர் முடிச்சாய் புருவம் சுருக்கியதுண்டு.

ஆனால் இன்று சற்று உட்கார்ந்து சில எளிய கணக்கீடுகளைச் செய்து பார்த்து நேரடியாய் நானே(மே) பிரமிக்கும் போதுதானே புரிகிறது. அந்த ஒப்பீடு ஒன்றும் அவ்வளவு தவறான செய்தி அல்ல என்றும் சற்று ஏற்றுக் கொள்ளவே முடிகிற ஒரு உண்மை தான் என்பதுவும் இப்போதல்லவா புரிகிறது. இரசாயனத் தனிமங்கள் அனைத்தும் எங்கும் நிறைந்துள்ளன என்னும் தத்துவம் ஒரு திடமான அடிப்படையைக் கொண்டது என்பதற்கு அவோகாட்ரா எண் மிகப் பெரியதாக இருப்பதே சான்றாகும்.

அவோகாட்ரோ எண் மிகப் பெரியதாயிருப்பதிலிருந்து அசுத்தங்களே (கலப்பே) இல்லாத மிகப் பரிசுத்தமான பொருள்களை அடைவதற்கான எல்லா முயற்சிகளும் வீணே என்பதும் தெளிவாக தெரிகிறது.

உதாரணத்திற்கு இரும்பின் ஒரு கிராம் 1023 அணுக்களைக் கொண்டது. ஆனால் அதில் ஒரே ஒரு சதவீதம் (1மில்லி கிராம் ) தாமிரம் கலந்து அசுத்தமாக இருந்தால் அதுவே 1020 அணுக்களுக்கு குறையாமலிருக்கும். அசுத்தத்தினளவு ஒரு சதவீதத்தின் பத்தாயிரத்திலொரு பாகமாகக் குறைக்கப்பட்டாலும் (அதாவது 0.0001 சதவீதம் என குறைக்கப்பட்டாலும்) 1023 இரும்பு அணுக்களுக்கு கலப்பு அசுத்தத்தின் அளவு (தாமிரத்தின் அளவு) 1016 அணுக்களாக இருக்கும். தனிம அட்டவனையில் உள்ள எல்லாத் தனிமங்களுக்கும் அசுத்தக் கலப்பில் பங்கு அளிக்கப்பட்டால் சராசரியாக 1014 அணுக்களாவது (அதாவது 100 டிரில்லியன் அணுக்களாவது) ஒவ்வொரு தனிமத்திலிருந்தும் இருக்கும்.

தற்போதைய நேனோடெக்னாலஜி யுகத்தில் விபரங்கள் எப்படியோ? ஏனெனில் தனி ஒரு அணுவின் எலக்ட்ரான் கூட்டத்தில் மேலும் ஒரு எலக்ட்டரான் சேர்க்கும் வித்தையை (இதையும் முதலில் ஐபிஎம் கம்பெனிக்காரர்கள் தான் சாதித்துள்ளனர்) இன்று விஞ்ஞானம் சாதித்துள்ளது ஏற்கனவே இதே ஐபிஎம் குழுவினர் 1989-ல் 35 செனான் அணுக்களை ஒரு பரப்பில் வரிசையாக ஒன்றன் பக்கம் ஒன்றாக அடுக்கி (IBM) ஐபிஎம் என்ற எழுத்தைப் பதித்தார்கள். இதுவே உலகின் மிகச் சிறிய எழுத்து என்று கூட கூறலாம். ஒரு அர்த்தத்தில் நேனோடெக்னாலஜி எனும் ஒரு புதிய டெக்னாலஜியே அன்றிலிருந்து தான் உதித்தது என்றும் கூட கூறலாம்.

பட்டானியைப் பொறுக்கி எடுத்து வரிசையாக வைப்பது போல தனி அணுவைப் பொறுக்கி எடுத்து வைப்பது என்பது சாதாரண விஷயமில்லை தான். இன்று தங்கரேக்கின் பரப்பில் தனித்தனி தங்க அணுவின் எலக்ட்ரான் கூட்டத்தில் தனி எலக்ட்ரானை செலுத்திக் காட்டி இருக்கிறார்களாம். ஸ்கேனிங்டன்னலிங் எலக்ட்ரான் மைக்ரோஸ்சோப் (scanning tunnel microscope) என்கிற நவீன மைக்ராஸ்கோஸ் இதற்கு உதவி இருக்கிறது. 1980-ல் உருவாக்கப்பட்ட இந்த மைக்ராஸ்கோப்பில் ஒரு ஊசி முனை இருக்குமாம். இதன் கூர்மை எத்தனை நுட்பமானது என்றால் அதன் நுனி தனி அணுவில் முடிவடையும் என்பதைக் கற்பனை பண்ணிப் பார்க்கவும் என்கிறார்கள்.

இந்த ஊசியின் முனை மூலக்கூறுகளின் மேல்புறம் வரியோட்டம் செய்யும் பொழுது மூலக்கூறுகளின் மேல் பரப்பிலுள்ள மின் மேடு பள்ளத்தின் வரைபடத்தை இது தயாரித்து விடும். இந்த STM துணையுடன் இங்ஃ;பில்லர் மூலம் சொட்டுச் சொட்டாக தண்ணீர் விடுவது போல அணுக்களின் மீது எலக்ட்ரான்களை ஒவ்வொன்றாக விடுகிறார்களாம்.

அணுவையே கண்ணில் பார்க்கலாம் என்பதுடன் அதைத் தொடவும் செய்யலாம் என்பதும் நிரூபணமாகி விட்டது என்கிறார்கள். இனி எலக்ட்ரான் சர்க்யூட்டுகள் 10000 மடங்குச் சிறிதாகிவிடும் என்றும் கூறுகிறார்கள். அது மட்டுமல்ல தனியொரு அணுவின் நிழலைக் கூடப் படம் பிடிக்க முடியும் என்பதையும் இந்த விஷயம், பண்பு, வரக் காத்திருக்கும் க்வாண்டம் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்திற்கு மிகவும் பயனுள்ளதாயிருக்கும் என்றும் கண்டுபிடித்துள்ளார்கள். (பார்க்க நேச்சர் பத்திரிக்கையின் )

இதையெல்லாம் எதற்குக் கூறுகிறேன் என்றால், தனி அணுக்களின் இரசாயன நிகழ்வுகளை இனம் காண முடிகிற திக்கு நோக்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சி முன்னேறிக் கொண்டுள்ள நிலையில், நாம் எவ்வளவோ படிநிலைகளைத் தாண்டித்தான் இப்போது இன்றுள்ள நிலையையும், இன்னும் எவ்வளவோ தாண்டி செல்ல வேண்டிய படிநிலைகளைக் கடந்து தான் எதிர்கால இலக்குகளையும் அடைய வேண்டியுள்ளது.

பத்து மனிதர்களின் 3 ஆண்டு இடைவிடாத முயற்சி எங்கே (இன்சுலின் விஷயத்தில்) 3 விநாடிகளில் உயிர்ப் பிராணிகளின் உடலில் தயாராகும் உயிர் வேதிச் செயல்பாடுகள் எங்கே? இன்சுலின் விஷயத்திலேயே இந்தளவு என்றால் மற்ற வேதிவினைகளின் நிகழ்வில்……?

மனித உடல் என்பது இயற்கையின் பன்னெடுங்கால பரிணாம வரலாற்றில் நன்கு சோதித்து பார்த்து, வடிகட்டித் தோ;ந்தெடுக்கப்பட்ட ஒரு இயற்கைத் தோ;வு. சிக்கலான உயர் உயிர் வேதிச் செயல்களை அற்ப ஆயுள் கொண்ட இன்றைய ஆய்வு கூட விஞ்ஞானம் அவ்வளவு எளிதில் சுலபத்தில் மதிப்பீடு செய்ய, பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமா என்ன? என்பதும் ஒரு சவாலான புதிரும் மர்மமும் நிறைந்த கேள்வியே அதாவது இயற்கையோடு ஒப்பிடுகையில் மனிதன் இது விஷயத்தில் மிக மிக அற்ப ஆயுள் கொண்டவன்.

எது எது எல்லாம் எந்த எந்த உயிர் வேதிச்செயல்முறைகள் எல்லாம் ஒரு பிராணியின வாழ்வுக்கு உகந்தது அல்லது பாதகம் என்பதை எல்லாம் முடிவு செய்யும் அனுபவ வல்லமை, ஆயுள், பரிணாமத்தின் நீணட நெடிய வரலாற்றுப் பாதையை எல்லாம் ஒரு பார்வை நோக்காளனாய் இருந்து பார்க்க முடிகிற அளவுக்கெல்லாம் ஒரு நீணட அனுபவ ஆயுள் இவையெல்லாம் தனியொரு மனிதனுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த மனித குலத்திற்கே அந்த ஆயுள் கிடையாது. ஒட்டு மொத்த மனித குலத்தின் அனுபவ ஆயுளைக் காட்டிலும் அதிகமானது பரிணாமத்தின் ஆயுள். லட்சக்கணக்கான, கோடிக் கணக்கான ஆண்டுகளை தனது அரை ஆயுட்காலமாகக் கொண்ட உயர் கதிரியக்கத் தனிமங்களுக்கு வேண்டுமானால் அத்தகைய ஆயுள் சாத்தியம்.

சரியான Shortcut root – ஐ கண்டுபிடிக்கத் தவறினால் 3 விநாடிகள் அல்ல 3000 ஆண்டுகளானாலும் இயலாது என்பதைத் தான் இன்சுலின் விவகாரமே நம்மிடம் புலப்படுத்துகிறது என்றால் இப்போது நாம் எடுத்துக் கொண்ட விஷயத்தில் உள்ள எதிரிட நேடுகிற சிக்கல்களைப் பற்றியெல்லாம் என்ன கூற? மிகவும் சிக்கலான இவ்வகை வினாக்களுக்குத் தேவைப்படும் ஒரு தெளிவான அதிகாரப்பூர்வமான விளக்கத்தை எல்லாம் எப்படியும் அந்தந்த துறை சார்ந்த நிபுணர் குழுக்களின் ஒரு பெரிய பட்டாளம் மட்டுமே அளிக்க முடியும். எப்படியும் என் போன்ற பாமர அறிவியல் சஞ்சிகை வாசகனல்ல

7) நெப்போலியன் வீழ்ச்சியும் கூடவே பங்குச்சந்தையில் அதன் எதிரொலியும்.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்? என்ற கணக்காய் என்ன செய்தால் இந்தப் ப்ரொப்போசல் பக்கம் அறிவியல் உலகின் முழு கவன ஈர்ப்பைப் பெற முடியும் என நான் அதிதீவிரமாக இதன் சாத்தியப்பாடு குறித்து எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் எல்லாம் கலந்தாலோசித்த காலங்களில் ஒரு சமயம் அவர்களின் மூலம் அறிமுகமான ஒரு ஷேர்மார்க்கெட் புரோக்கர் ஒருவர் தந்த ஆலோசனை தான் இது. “பேசாமல் இதை இணையத்திலேயே ஏதேனும் ஒரு புனைப் பெயரில் வலைப் பதிவாய் அல்லது புதினமாய் வெளியிட்டு விடுஙகளேன்” என்பது. நிச்சயம் ஒரு சில மாதங்களில் பின்னூட்டம் (எதிர் வினை) என்ன என்பது தெரிந்து விடும். கடைசிக்கும் கடைசியாய் குறைந்த பட்சம் மைக்ரோ சாஃப்ட் பங்குகளை பெறுமளவில் வைத்துள்ள முதலீட்டாளர்கள் மூலமாகவாவது அவர்களின் எதிர் வினை மூலமாகவாவது இதற்கு ஒரு விமோசனம் கிட்டக்கூடும். என்ன ஆனால் கூடவே இதன் பின் விளைவுகளுக்கும் தயாராயிருக்க வேண்டியிருக்கும்.

நீங்கள் தான் ஏற்கனவேயே இதற்கெல்லாம் தயார் தானே? எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்? மனநிலையில் ஏற்கனவேயே உள்ளவர் தானே? இதற்காக ஒருவேளை தேவை ஏற்பட்டால் உயிர் தியாகமே கூட செய்யத் தயார் எனும் மன நிலையில் உள்ளவர் தானே?! அப்புறமென்ன?. ஒரு வேளை உங்களது யூகம் பொய்த்துப் போய் விட்டாலும் பரவாயில்லை இதனால் ஒன்றும் உங்கள் குடி முழுகிப் போய் விடாது அப்படியே போனாலும் அதுவும் பில் கேட்ஸினுடையதாய் தான் இருக்க முடியும். அப்புறம் என்ன? இணைய அரங்கேற்றம் செய்துவிட வேண்டியதுதானே? எனக் கூறி இதற்காக ஒரு வரலாற்றுதாரணத்தையும் எடுத்துக் காட்டினார். அவர் தொடர்ந்தார்

“முதலில் பங்கு மார்க்கெட் என்பதே ஒரு வகையில் இதுவும் ஒரு யூக வாணிபம் போல தான் இதற்கெதற்கு உண்மையும் ஊர்ஜிதபாடான தகவல்களும்?” உண்மையைப் போல் பொய்யையும் ஒரு சத்திய சோதனைக்கு உள்ளாக்கிப் பார்க்க ஆக மிகச் சிறந்த சோதனைக் களம் அதிலும் உங்களுடையதைப் போன்ற சந்தேகங்களை எல்லாம் போக்கிக் கொள்ளப் பெரிய சிறந்த இடம் பங்குச் சந்தையே. எப்படி இதை இவ்வளவு உறுதியுடன் கூறுகிறேன் என்பதற்கு அந்த மேற்கத்திய அரைக்கோளத்திலிருந்தே தொழில் ரீதியாக நான் சம்பந்தப்பட்டுள்;ள இந்த இதேப் பங்குச் சந்தை நிகழ்வுகளிலிருந்தே மேலே நீங்கள் சுட்டிக் காட்டினீர்களே நெப்போலியன் அந்த நெப்போலியன் காலத்திலேயே அவரோடு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலிருந்தே அதாவது பங்குச் சந்தையின் தொடக்க காலங்களில் இருந்தே ஒரு மிகச் சிறந்த முன் உதாரணத்தை உங்களுக்குத் தர முடியும். இதற்காதாரமாய் நெப்போலியனின் வீழ்ச்சியின் போது பங்குச் சந்தையில் நடந்த நிகழ்வுகளை சற்றே நினைவுகூற முடிந்தாலே போதும்.

1800- சொச்சங்களில் ஐரோப்பிய அரசியல் களத்தில் நெப்போலியன் ஒரு அகற்ற இயலாத அரசியல் சக்தியாய் அரசியல் வானில் உச்சானிக் கொம்பில் உயரப் பறந்த காலம். முதன் முதலாக அந்தப் பெரிய சரித்திர மனிதர் தோல்வியுற்ற நேரம். வாட்டர்லூ கடற் போரில் தோல்வியுற்று விடுகிறார். (ஏற்கனவேயே ரஸியப் படையெடுப்பில் கணிசமாகப் பலவீனப்பட்டு இருந்த போதிலும்) அவரது தோல்வியை, வீழ்ச்சியை வெளி உலகிற்கு அதிகாரப்பூர்வமாய்ப் பிரகடனப்படுதிதிய முதல் போர் எனில் அது வாட்டர்லூச் சண்டையே. இன்று நமக்கு இது எளிதாய் தெரிந்த கடந்த கால உண்மைச் சரித்திரம் ஆனால் அன்று…….? இந்தச் சரித்திர சம்பவம் என்று நடந்ததோ அன்று அந்த சம காலத்தில்……? தகவல் தொழில் நுட்பத்திலோ, போக்குவரத்து சாதனங்களிலேயோ ஒரு புரட்சியே ஏற்பட்டு விட்ட இன்றைய அதி நவீன காலமல்ல நெப்போலியன் காலம்.

நெப்போலியனின் தோல்விச் செய்தியை அதே சமயம் இங்கிலாந்தின் வெற்றிச் செய்தியை சுமந்து கொண்டு வந்த போர்க் களத்துச் சிப்பாய் ஒருவன் லண்டன் மாநகரத்தினுள் நுழைந்த சமயம். யூக வாணிபம் (பங்குச் சந்தையைத் தான் இப்படி நக்கலாகக் குறிப்பிட்டார்.) செய்த அதிஷ்டம் அவன் அரண்மனைக்குள் நுழையும் முன்னரே உள்ளுர் பிரபு ஒருவரின் பார்வையில் படுகிறான். அவர் அவனிடமிருந்து போர்க்களத்து நிலவரம் பற்றியத் தகவலைக் கறந்து கொண்டதோடில்லாமல் அச் சிப்பாயை நைச்சியமாய் ஏமாற்றி மது மயக்கத்தினுள்ளும்; ஆழ்த்தி தன் மாளிகையில் போதையில் உறங்க விட்டு விட்டு அத் தகவலை வைத்து நாலு காசு பார்த்து தகவலைப் பெரும் ஒரு செல்வமாக சொத்தாக மாற்றிய ஒரு சரித்திரப் புகழுக்கும்; (உலக சரித்திரத்திலேயே) முதல் உதாரணமாகி விட்டார்.

அதாவது பிரிட்டன் படைகள் தோற்று விட்டதாகவும் நெப்போலியனின் படைகள் வெற்றி பெற்றுவிட்டதாகவும் அவை விரைந்து பிரிட்டன் நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் ஒரு அப்பட்டமான பொய்யை வதந்தியைக் கிளப்ப விடுகிறார். விளைவு பங்குகள் கிடுகிடுவென சரியத் தொடங்க வதந்தியைக் கிளப்பியவரே பின் நல்ல அறுவடையையும் செய்து கொண்டதாக வரலாறு. ஆக ஒரு செய்தி உண்மையா பொய்யா? என்பதை விட ஒரு வேளை அந்த செய்தி உண்மையாக இருக்குமோ….? இருந்து விட்டால்…….? என்ற இப்படிப் பட்ட ஒரு பயத்தில் எடுக்கப்படும் முடிவுகளே இங்கு கவனிக்கத்தக்கது. ரிஸ்க் எடுக்க விரும்பாத வெகு ஜன மனநிலை, அதன் தாக்கம் அரசியல் பொருளாதாரத் தளத்தில் எப்படியிருக்கும் என்பதே இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளத்தக்க ஒரு அம்சம். அந்த வகையில் உங்களது அனுமானமும் ஒரு சிறிதளவிற்காவது அற்ப அளவிற்காவது ஒரு அர்த்த முக்கியத்துவம் கொண்டிராமல் இல்லை.

அதிலும் உடனடியாக ஊர்ஜிதம் செய்து கொள்ள முடியாத வதந்திகளுக்கு பொருளாதர தளத்தில் ஒரு அர்த்த முக்கியத்துவம் முற்றிலும் இல்லாமலே போய்விடவில்லை. ஊர்ஜிதம் ஆகும் காலம் வரை தான் என்ற போதிலும் அது எவ்வளவு அற்ப அளவுக் காலமாகவே இருந்தாலும் அந்த அற்ப அளவுக்காலத்திற்கும் கூட ஒரு விலை இருக்கவே செய்கிறது. என்ன ஆனால் இதற்கே உரித்தான ரிஸ்க்குகளும் இல்லாமல் இல்லை. “பரிசுக்கு ஆசைப்பட்டால் சேர்த்துத் தண்டனைக்கும் தயாராகவேயிரு” என்ற ஒரு பழமொழியைப் போல நீங்கள் இரண்டுக்கும் தயாராய் இருக்க வேண்டும்.” சொல்லி விட்டுத் தரகர் சென்று விட்டார் ஆனால் அவர் விதைத்த பரிசோதனை முயற்சி எனும் விதை தான் இன்றும் எனை விட்டு அகலாது ஆலவிருட்சமாய் ஆக்ரமித்துக்கொண்டுள்ளது. ஓசைபடாத முயற்சிகள் தோல்வி எனும் பட்சத்தில் கடைசி முயற்சியாகத் தான் இணையப் பதிவை எண்ணியுள்ளேன்.

முதலிலேயே எனைக் கடைசித் தேர்வு நோக்கித் தள்ளி விட மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன். அல்லது இதையெல்லாம் தாண்டி கடைசிக்கும் கடைசியான மற்றொரு நீர்த்துப் போன ஆப்சனுக்கும முயற்சிக்கும்) ஒரு வாய்ப்பு இல்லாமல் இல்லை ஆனால் ஏனோ எனக்கு அதில் ஒரு சிறிது கூட விருப்பம் ஆர்வம் இல்லை என்பதோடு அதற்கெல்லாம் ஒரு சிறிதும் நேரமும் கிடையாது என்பது தான் அது. அந்த ஆப்சன் இப்பிரச்னையை பேசாமல் ஒரு அறிவியல் புனைவு இலக்கியமாய், புத்தகமாய் நாவலாய் முயற்சித்துப் பார்க்கலாம். அல்லது இன்னொரு கடைசி கட்ட முயற்சி இதை விக்கீ லீக்ஸ் ஜுலியன் அசாங்கேவுக்கோ அல்லது அவரது குழு உறுப்பினர்களில் எவருக்காவது ஒருவருக்கோ அனுப்பி ஒரு ரிசல்ட் பெறுவது. விக்கீலீக்ஸ் போன்றவர்கள் மனம் வைத்தால் என் சந்தேகத்தி;ற்கு கண்டிப்பாக ஒரு விடை கொடுக்க முடியும். என் முன் உள்ள சாத்தியப்பாடுகள்; தற்போதைக்கு இவ்வளவே.

ஆனால் எனக்கிருக்கும் நேர அழுத்தத்தில் சராசரி சர்வைவலுக்கே பெரும் போராட்ட வாழ்க்கை எனும் சூழலில் புனைவாக்க நாவல், புத்தாக்கப் புதின முயற்சிக்கெல்லாம் சற்றும் நேரமில்லை. சர்வைவல் தாண்டி இந்தளவுக்குத் இதைத் தங்கள் கவன ஈர்ப்புக்குக் கொண்டு வருவதற்கே நான் எவ்வளவு பெரும் ஒரு வலியை, போராட்டத்தை விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது என்பதை எனைத் தவிர அந்த ஆண்டவன் என ஒருவன் இருந்தால் அவன் ஒருவனே அறிவான். (அப்படி ஒருவர் இருந்தால்… இருக்கும் பட்சத்தில்…..); ஏன் ஒரு வகையில் என் முழு வாழ்க்கையையே கூட இதற்காகப் பலி கொடுத்திருக்கிறேன என்றால் இதுவும் மிகையாகாது என்றே எண்ணுகிறேன் ஆக இதற்கு மேல் இனிமேல் என்னிடம் இழக்க ஏதுமி;ல்லை உயிரைத் தவிர என்ற நிலையில் தான் இந்தளவுக்கு ஒரு விளிம்பு நிலை விரக்தியில் தான் இம்முயற்சியை முன்னெடுத்துக் கொண்டு வந்துள்ளேன் என்றால் இதுவும் மிகையல்ல.

8) திட்டத்தின் மூல நகலும் அதன் பிறப்பிடமும்.(மாத்ருபூதம்)

இடம்- தேன்கனிக் கோட்டை,
நாள் – 26.01.1998.
அன்புள்ள,
டாக்டர் மாத்ருபூதம் அவர்களுக்கு,

தங்களின் “புதிரா? புனிதமா?” நிகழ்ச்சியைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் நிகழ்ச்சியை முதன் முதலாக நேற்று தான் பார்க்க நேரிட்டேன். இந்நிகழ்ச்சி சம்பந்தமாக நான் கேட்க விரும்பும் தெளிவு கொள்ள விரும்பும் விஷயங்கள் வருமாறு.

1. பாலுணர்ச்சி பற்றிய மதக் கருத்துக்களில் குறிப்பாக ஹிந்து மதத்தின் புகழ் பெற்ற துறவியாம் காலம் சென்ற சுவாமி விவேகானந்தர் கூறியுள்ள கருத்துக்கள் (எவ்வளவு தூரத்திற்கு) எந்தளவுக்கு அறிவியல் கூறுகளை உள்ளடக்கியுள்ளது? (ராமகிருஷ்ண மடத்தார் வெளியிட்டுள்ள அவரது ராஜயோகம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள்)

2. குறிப்பாக மனிதனில் பாலுணர்ச்சியாக வெளிப்படும் சக்தி முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டால் ஓஜஸ் ஆக மாறுகிறது எனவும், கற்பொழுக்கம் வாய்ந்த ஆண் பெண்கள் நிறைய ஓஜஸை மூளைக்கு எடுத்துச் சென்று சேகரிக்க முடியும் என்றும், குண்டலினி சக்தி எனப்படும் அது முதுகு தண்டின் அடிப்பகுதியில் சுருண்டு உறங்கிய நிலையில் இருப்பதாகவும் உரிய யோகப் பயிற்சியின் மூலம் அதை மூளைக்கு உயர்த்த முடியும் எனவும், இந்நிகழ்வுகளின் போது அரிய பல சித்திகள் கிடைக்கும் என்றும் இறுதியில் மூளையிலுள்ள சகஸ்ராமம் என்ற மையத்தை எட்டியவுடன் சமாதி (முக்தி) நிலையை அடைகிறான் எனவும் மேலோட்டமாகவும் பொத்தாம் போக்கிலும் தெளிவற்றும் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் பற்றிய அறிவியலின் நிலைபாடு என்ன?

3. மொட்டையாக பாலுணர்ச்சியாக வெளிப்படுத்தபடும் சக்தி என்று சுவாமி விவேகானந்தர் எதைக் குறிப்பிடுகிறார்?! குறிப்பிட்டிருக்கக் கூடும்?! சரி, ஆண்கள் விஷயத்திலாவது ஸ்கலித நிகழ்வினால் வெளிப்படும் விந்தணுக்களையே (Semen -ஐயேக்) குறிப்பிடுகிறார் எனக் கொண்டால் எவ்வளவு Semen கட்டுப்படுத்தப்பட்டால் அல்லது எவ்வளவு ஸ்கலித நிகழ்வுகள் கட்டுப்படுத்தப்பட்டால் எவ்வளவு ஓஜஸாக மாறுகிறது? சராசரி மனிதர்கள் (இங்கு முதலில் ஆண்களை மட்டும் எடுத்துக் கொள்வோம்) கொண்டிருக்கும் ஓஜஸ் அளவு எவ்வளவு? சராசரிக்கும் மேற்பட்ட கீழ்ப்பட்டவர்கள் கொண்டிருக்கும் ஓஜஸ் அளவு எவ்வளவு?

இப்படி இவை பற்றிய விளக்கங்கள் எதுவும் இல்லாமல் மொட்டையாக ஓஜஸ் என்றால் எப்படி புரிந்து கொள்வது? எப்படி நவீன அறிவியலால் புத்திசாலித்தனத்தின் அளவு (I.Q. Factor) ஆல் அளக்கப்படுகிறதோ அப்படி ஓஜஸூக்கு என்று அதனை அளக்க முடியும் எந்த ஒரு அளவீட்டு முறையையும் குறிப்பிடாமல் (இத்தனைக்கும் ஓஜஸ் ஒன்றும், (I.Q. Factor) போல், Qualitative Meaurement கூட அல்ல,. Quantitative ஆன ஒன்றே) அது பற்றி ஊர்ஜிதம் செய்து கொள்வதற்கான அறிவியல் அடிப்படையில் அமைந்த எந்த ஒரு பரிசோதனை முறையையும் குறிப்பிடாமல் மொட்டையாக ஓஜஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை எங்ஙனம் தெளிவுபடுத்திக் கொள்வது?

4. அடுத்ததாக Semen-ஐ (அதாவது விவேகானந்தரின் பாஷையிலேயே கூறுவதென்றால் பாலுணர்ச்சியாக வெளிப்படுத்தப்படும் சக்தியை யாரேனும் (ஆண், பெண் இருபாலரையும் சேர்த்து தான் குறிப்பிடுகிறேன்) முழுமையாகக் கட்டுப்படுத்துதல் என்பது நடைமுறையில் சாத்தியமா?

எதிர்பாலினரோடு, நேரடி உடலுறவு அல்லது சுயமைதுனம் அல்லது ஓரினச் சேர்க்கை போன்ற அனைத்து விதமான பாலியல் நடவடிக்கைகளையும் கூட கட்டுப்படுத்தி விடலாம். (இங்கு முதலில் ஆண்கள் விஷயத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்) இப்படி எல்லா புறவயப்பட்ட பாலியல் நடவடிக்கைகளினால் செமன் வெளியேறுவதைக் கூட எந்த ஒரு ஆணும் (பலாத்காரமாகவேனும்) கட்டுப்படுத்தி விட முடியும் என்றே தோன்றுகிறது.

5. ஆனால் கனவு நிலையில்…. உறக்கத்தின் போதே எழும் கனவுகளில் பாலுணர்ச்சி தூண்டப்பட்டு செமன் வெளியேற்றம் நிகழ்ந்தால் அதை (சாதாரண ஒரு மனிதன்) கட்டுப்படுத்துதல் என்பது நடைமுறையில் சாத்தியமா? ஆக, மனம் முழு விழிப்புடன் இல்லாத கனவு நிலையில் கூட தன் சொந்த உணர்ச்சிகளின் மேல் (குறிப்பாக பால் உணர்ச்சிகளின் மேல்) எந்த ஒரு மனிதனாவது (இங்கு ஆண், பெண் இருபாலருக்கும் சேர்த்தே குறிப்பிடுகிறேன்) ஆதிக்கம் செலுத்த முடியுமா?

6. இப்படி இது போன்ற ஆய்வுகளுக்கு மனிதனை ஒரு நீண்ட கால அளவிற்கு (ஒரு 25, 30 வருடங்களுக்கு) உட்படுத்தி இது வரையில் விஞ்ஞானம் ஆராய்ந்துள்ளதா? அப்படி ஆராய்ந்திருந்தால் அது கூறும் முடிவு என்ன?

7. இல்லையெனில் இப்படி இது போன்ற ஆய்வுகளுக்கென்று மனமுவந்து தன்னை உட்படுத்திக் கொள்ள எவரேனும் முன் வந்தால், அப்படி முன் வருபவர்களை ஏற்று ஆராய உரிய அறிவியல் துறை, வல்லுநர்கள் தயாராக உள்ளனரா? (தா?) ஆம் எனில் இதற்கு எங்கு யாரை அணுகுவது?

8. சமீபத்தில் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் ணி.னி. E.Q. Factor – என்ற ஒரு புதிய அளவீட்டு முறையை கண்டுபிடித்துள்ளதாகவும், இதன் மூலம் (Emotional Quotient) எனப்படும் இந்த E.Q. Factor – மூலம் ஒரு மனிதன் தனது சொந்த உணர்ச்சிகளின் மேல் எவ்வளவு ஆளுமை கொண்டுள்ளான் என்பதை அளக்க முடியுமென்றும், ஒரு சிறிய செய்தித்துணுக்கு ஒன்றை முன்பொரு முறை புதிய பார்வை என்ற ஒரு பத்திரிக்கையில் படித்தேன். அந்த E.Q. (Emotional Quotient ) Factor – என்பது பாலுணர்ச்சியையும் உள்ளடக்கியது தானே?

9. ஆம் எனில் E.Q. Factor – ல் பாலுணர்ச்சி வகிக்கும் பங்கு என்ன? ஒரு நிகழ்வில் அளவு நிலை மாற்றங்கள் பண்பு நிலை மாற்றங்களுக்கு வழி கோலுகின்றன எனும் Concept – ojas விஷயத்திற்கு எவ்வளவு தூ ரம் பொருந்தும்? (உதாரணத்திற்கு நீரைச் சூடுபடுத்துதல் 100 டிகிரி செல்சியஸைத் தாண்டும்போது நீராவியாக மாறி விடுவதைப் போல்)

ஒரு ஆணுக்கு பாலியல் நடவடிக்கை உச்சத்தை எட்டி நிறைவுற்று விட்டது எனபதற்கு புற அடையாளமாக உயிரணு வெளியேற்றத்தைக் கொள்ளலாம். (அதாவது அப்போதைக்கு).

10. அப்படி ஒரு ஆணிடம் கடைசியாக எப்போது எத்தனை மணி நேரத்துக்கு முன் அல்லது எத்தனை நாள் அல்லது மாதம் அல்லது ஆண்டுகளுக்கு முன் ஸ்கலித நிகழ்வின் மூலம் உயிரணு வெளியேற்றம் நிகழ்ந்துள்ளது என்பதைத் துல்லியமாக அறிவியலின் துணை கொண்டு கண்டு பிடிக்க இயலுமா?.

11. அதேபோல் பெண்களுக்கு அவர்களின் பாலியல் நடவடிக்கை உச்சத்தை எட்டி நிறைவுற்று விட்டது என்பதற்கு குறிப்பிட்டுச் சொல்லும் படிக்கான, பெரிதான புற அடையாளம் என்று ஏதுமில்லாத நிலையில் கடைசியாக அவர்கள் எப்போது உச்சத்தை எட்டினர் என்று (ஓரினச் சேர்க்கை அல்லது கை மைதுனம் மூலம் அல்லது எதிர் பாலினரோடு நேரடி உறவு என இப்படி ஏதேனும் ஒரு முறை மூலம்) விஞ்ஞானத்தின் மூலம் துல்லியமாகக் கண்டுபிடிக்க இயலுமா?

12. பொதுவாகவே ஒரு மனிதன் (இரு பாலருக்கும்) தன் பாலுணர்ச்சியை முழுவதுமாகக் கட்டுப்படுத்த முயன்றால் அவன்(ள்) எதிர் கொள்ள நேரிடும் உளவியல், உடற்செயலியல் எதிர் விளைவுகள் எத்தன்மையதாக இருக்கும்?

13. அடுத்ததாக கற்பழிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை அல்லது குற்றம் சாட்டப்பட்ட நபரை சில சமயங்களில் வழக்கின் அவசியம் கருதி ஆண்மைப் பரிசோதனைக்கு உட்படுத்துவதாகப் பத்திரிக்கைகளில் படிக்க நேர்கிறோம். அப்படி உட்படுத்துகையில் எதைக் (காரணியாகக்) கொண்டு அவர் ஆண்மையுள்ளவர் அல்லது ஆண்மையற்றவர் எனத் தீர்மானிக்கின்றனர்? மிகவும் தர்ம சங்கடமான கேள்வியெனினும் கேட்டாக வேண்டிய தர்ம சங்கடம் இந்தப் proposal-க்கு உண்டு.

உள்ளுணர்வின் இயல்பான தூண்டுதல் இல்லாமல், புறத்தூ ண்டுதல்களின் அடிப்படையிலும் கூட வெறுமனே ஒருவரின் உடலுறுப்புகளைத் தூண்ட முடியுமே? அதேபோல என்ன தான் வலிமையான புறத்தூண்டுதல்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும் பேலன்ஸ் இழக்காத மனப்பக்குவம், மனக் கட்டுப்பாடு அதிகமாக உள்ள நபர்களும் இருக்கலாமே? வேறு அறிவியல் மொழியில் கூறினால் E.Q. (emotional Quotient) Power அதிகமாக உள்ள நபர்களும் இருக்கலாமே? பாலுணர்ச்சியைக் கூடத் தவிர்த்திடுவோம்.

14. சிரிப்பு, கண்ணீர் இரண்டை எடுத்துக் கொள்வோம். இரண்டிலுமே செயற்கையான நமுட்டுச் சிரிப்பும் உண்டு. இயற்கைச் சிரிப்பும் உண்டு. செயற்கைக் கிளிசரின் கண்ணீரும் உண்டு. துக்கம் தாங்காது வெளிப்படுத்தும் இயற்கைக் கண்ணீரும் உண்டு. எது எந்த ரகம் என அறிவியலால் அறுதியிட்டுக் கூற முடியுமா? கண்ணீரில் செயற்கைக் கிளிசரின் கண்ணீரைக் கிளிசரினேக் காட்டிவிடும் என வைத்துக் கொள்ளுங்கள். கிளிசரின் இல்லாமலே அழும் நீலிக் கண்ணீர் ரகங்களும் உண்டே.

9). ஏன் மறுத்தது கின்னஸ்?
கின்னஸ் மறுதலிப்புக்கான காரணம் (யூகத்தின்பாற்பட்டது.)

எந்தச் சில நிர்பந்தங்களுக்குட்பட்டு நான் எனது பழைய கின்னஸ் மறுதலிப்பு திட்டத்தை செயற்படுத்த விரும்பினேனோ அப்படி அவர் களும், கின்னஸ் தரப்பு என்று தான் என்றில்லை. இது சம்மந்தமாக ஆர்வம், ஈடுபாடு காட்டும் எந்த ஒரு அறிவியல் ஆய்வு நிறுவனம் தான் ஆகட்டும் அல்லது தனி மனிதர்கள் தானாகட்டும் அவர்களும் கூட சில நடைமுறை நிர்பந்தங்கள் காரணமாகவே கைகள் கட்டப்பட நேர்ந்திருப்பர்

அது எனது Proposal–க்கான தகுதி (Eligibility) குறித்தே ஒரு கேள்வி எழுப்பி ஆக வேண்டிய ஒரு கட்டாயம் நிர்பந்தம் இருக்கிறதே அது., அதுவாகத்தான் இருக்கக்கூடும். ஒரு பிச்சைக்காரன் நான் அனைத்தையும் துறந்து விட்டேன் என்பதில், எப்படி, என்ன பொருள் இருக்க முடியுமோ?, ******உணர்விழந்தவன் தன்னடக்கம் பயில்கிறேன் என்பதில் எப்படி என்ன பொருள் இருக்க முடியுமோ?! அப்படி…!, அப்படிப்பட்ட கதையாய், விஷயமாய் எனது (கின்னஸ் ப்ரொப்போசல்) திட்டம் அமைந்து விடக் கூடாதல்லவா? இந்த நிர்பந்தம் காரணமாகத்தான், எப்படித் தகுதி குறித்து கேள்வி எழுப்புவது?! தகுதிச் சோதனை நடத்துவது? என்ற இந்த ஒரு தர்மசங்கடநிலை காரணமாகக் கூட இத்திட்டம் குறித்த அவர் களின் ஒத்துழைப்பில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

மேலும் சாதாரணமாக ஆய்வு நோக்கங்களுக்காக பிராணிகளை வதைப்பதையே பிராணிகளை இம்சிக்கக் கூடாது. சொல்லக்கூடாது எனக் கண்டனக் குரல்கள் எழும் இக்காலத்தில்….. (இதற்கும் சில ஜீவகாரண்ய (சி)சங்கங்கள் அமைப்புகள் சமூகத்தில் உள்ளதில்லையா? இது போன்ற ஆய்வுகளுக்கு ஒரு நீண்டகால சாட்சியமாய் செயல்பட்டார்கள் இவர்கள் என மனிதகுலச் சமூகத்திற்கு தெரியவரும் பட்சத்தில் அதனால் எழக்கூடிய சமூகவியல் பின்விளைவுகள் குறித்த அச்சம் காரணமாகக் கூட மறுத்திருக்கலாம். இதே காரணங்களுக்காவே இனி வரும் காலங்களிலும் கூட மறுக்கப்படலாம. குறைந்த பட்சம் எவர் ஒருவரையும் தயங்க வைக்கும் காரணிகள் இவை என்ற அளவிலாவது இதை அர்த்தப் படுத்திக் கொள்ளலாம.

.
அடுத்ததாக சமூகம் என்ற சாட்டையடிக்காக மட்டுமல்ல, இது அவர் களது சொந்த மனசாட்சிக்கே கூட சற்றுக் கர்ணகடூரமான, ஒருவிதக் கொடூரமான குரூரச் சாடிஸப் பரிசோதனையாயும் பட்டிருக்கலாம். அதற்கு துணை போன பாவம் நமக்கேன் என்ற சென்டிமெண்ட்டான ஒரு குற்ற உணர்வு காரணமாகவும் மறுத்திருக்கலாம். இனிமேலும் மறுக்கப்படலாம. ஆக 1. தகுதி குறித்த சோதனை எவ்வாறு நடத்துவது, 2. சமூகவியல் பின்விளைவுகள், 3. சென்டிமெண்டான குற்ற உணர்வு இம் மூன்று காரணங்கள் காரணமாகத் தான் இதை ஏற்று ஒரு ஆய்வாய் நடத்த முன்வரும் எவர் ஒருவரையும் தயங்க வைக்கும் காரணிகள். எனவே கின்னஸ் தரப்பின் மறுப்பு இயல்பாகவே எதிர்பார்க்க கூடிய ஒன்று தான்.

எனவே தான் இது போன்ற பரிசோதனைகளுக்குச் சாட்சியங்களாய் மனித சாட்சியங்களைச் சார்ந்திருக்காமல், இதற்கெனவே பிரத்யோகமாக அமைந்த தடய அறிவியல் பரிசோதனை முறைகளை சார்ந்திருக்குமாறு பார்த்துக் கொண்டால் என்ன?! எனச் சிந்தித்ததன் விளைவே இப்பழைய – Proposal – ஐ ஐ.சி.எஸ்.ஐ கண்ணோட்டத்திலும், அது துஷ்பிரயோகம் செயல்பட்டால் என்னாகும் என்ற கண்ணோட்டத்திலும் எனைச் சிந்திக்கத் தூண்டியது.

எனது உண்மைப் Proposal (Proposal -ன் மைய அச்சாணி) யேல் பல்கலைக் கழகத்துக்கும் மாத்ருபூதத்துக்கும் அனுப்பிய கடித சாரம் தான். அது செயற்படுத்தப்பட வேண்டுமெனில் மனித சாட்சியம் என்ற தர்மசங்கடத்திலிருந்து ஒரு நைஷ்டிகப் பிரம்மச்சாரியை விடுவிப்பது என்பது தான் மட்டுமல்ல நைஷ்டிகப் பிரம்மச்சரியம் என்பதே மனித குலத்துக்கு (எங்கேனும் லட்சத்தில், கோடியில் ஒருவருக்கேனும்) சாத்தியமான ஒன்று தானா? அல்லது அல்லவா எனச் சோதிப்பதும் தான்.

முயற்சித்தால் இது விஷயத்தில் வெற்றியும் கிட்டலாம். தோல்வியும் கிட்டலாம். ஆனால் முயலாவிட்டால் வெற்றி என்பதே கிடையாதல்லவா. அதிலும் தோல்வி என்பதே கூட முன்பே நாம் கூறியபடி நமது முயற்சிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து தான் இருக்கிறதே ஒழிய, போதுமான அளவுக்கு எண்ணிக்கை பலத்தில் நம் முயற்சிகளின் அளவு ஓங்குமானால் ஓங்கியிருக்குமேயானால் கண்டிப்பாக உறுதியான ஒரு வெற்றியும் கூட கிட்டக் கூடும் என்றே நம்புகிறேன்.

********உண்மையில் உணர்விழந்தவன் என்று கூட ஒருவன் இந்த உலகில் உண்டா என்ன? முற்ற முழுதாகக் கூட ஒரு மனிதன் (அவர் ஆணோ, பெண்ணோ அது இரண்டாவது) உணர்விழந்திட முடியுமா என்ன? உணர்வென்றாலே அது மனம் சம்பந்தப்பட்டது என்ற நிலையில், ஒரு மனிதனின் மன ஊனத்தை எந்தக் கேமரா கொண்டு பார்க்க? ஆணின் மன ஊனத்தைக் கூட ஒரு வகையில் வெளிப்பாட்டுக்குக் கொண்டு வந்து விட முடியும். பெண்கள் விஷ யத்தில்? புராண கால அகலிகை தான் அப்படி ஒரு உணர்விழந்த கேரக்டராக யாரோ ஒரு நம்மூர் தமிழ் எழுத்தாளரால் சித்தரிக்கப்பட்டுள்ளார். ஆனால் நவீன காலத்தைப் பொறுத்த வரை….?

நம்மூர் நாராயண ரெட்டி வேறு, கடவுள் ஒன்றும் ரேஸன் ஆஃபீசர் (விகடன் வெளியீடு உயிர் பக்-103) இல்லை, விந்தணுக்களை ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே கொடுக்க. ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருந்தால் அவன் சாகிற வரைக்கும் இது சுரந்து கொண்டே இருக்கும். ஞாயிறு விடுமுறையெல்லாம் கிடையாது” என்கிறார். ஆனால் இன்னொரு புறம் வேறு எங்கோ எப்போதோ ஒரு தமிழ் பத்திரிக்கைச் செய்தியில், ஆண்களுக்கும் மெனோபாஸ் என்ற சமாச்சாரம் உண்டு என நவீன ஆய்வுகள் கூறுவதாகப் படித்த நினைவும் மனதில் நிழலாடுகிறது. இன்னும் பக்காவான உலகப் புகழ் செக்ஸாலஜிஸ்டுகளை துணைக்கு வைத்துக் கொண்டு தான் இது விஷ யத்தில் ஒரு முடிவுக்கு வர வேண்டும் போலுள்ளது.

11) திட்டத்தின் ஆஸ்திக, நாஸ்திக இரட்டை முகம்.(அர்த்தநாரிக் கடிதம்)

******கீழ்க் கண்ட கடிதம் சேலம் கருங்கல்பட்டியைச் சேர்ந்த (ஏ-டெக்ஸோ, ஓ- டெக்ஸோ பெயர் சரியாக நினைவில் இல்லை. அதன் உரிமையாளர் அப்போது அவர்.) வயதான ஒரு கோடீஸ்வரருக்கு எழுதப்பட்டக் கடிதம். கடிதம் தனிப்பட்ட ஒருத்தருக்கு எழுதப்பட்டது என்றாலும் கடித சாரம் நாம் அனைவரும் படித்துப் பார்த்து ஒரு கருத்து, அபிப்ராயம் சொல்லத்தக்க ஒன்றாய் ஒரு பொது விஷ யமாய் இருந்தது என்பதால் இதை மாற்றம் செய்யாமல் அப்படியே இங்கு முன் வைத்துள்ளேன்.

தேன்கனிக்கோட்டை

அன்புள்ள அர்த்தநாரி**** அவர்களுக்கு,

பாலப்பட்டி …………. எழுதிக் கொள்வது. பெருவாரியான மக்கள் திரள் மூட நம்பிக்கையில், கடவுள் நம்பிக்கையில் அல்லது உங்கள் பாஷையில் சொல்லப்போனால் “மகத்துவக் கோட்பாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள நிலையில் அதிலிருந்து மக்கள் திரளை விடுவிக்க அதை உடைத்தெறிய முதலில் ஒரு வழிசொல். பின் நானே உனக்குச் சீடனாகிறேன்” என்றீர்கள். அன்று தங்களின் உரையாடலின்போது.

பெருவாரியான மக்கள் திரளை மதத்தின் கோரப்பிடியிலிருந்து ஏக காலத்தில் விடுவிப்பது என்பது ஒரு வினாடியில் சொடுக்கு நேரத்தில் மந்திரத்தில் மாங்கனி வரவழைப்பது போன்றதா என்ன? (ஜீ பூம்பா -ன்னா உடனே வந்து விடுவதற்கு). நேரடியாகத் தாங்கள் இப்படிக் கூறவில்லையென்றாலும், அன்றைய நமது உரையாடலின்போது, தங்களின் தொணி கிட்டத்தட்ட இந்த விதத்தில் தான் இருந்தது. என்னைப் பொறுத்தவரை……..

கடவுள் உண்டு என்ற சொல்பவனுக்கிருப்பதை விட, இல்லை என நிரூபிக்க விரும்புகிறவனுக்குத் தான் கூடுதல் பொறுப்பும் சுமையும் என்று கருதுகிறேன். எந்தெந்த விதிகளுக்குட்பட்டு கடவுள் (எந்த விதிகளுக்கும் உட்படாதவர் என கடவுளாளர்கள் கூறிக்கொண்டாலும், நடைமுறையில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் உருவாக்கப்படுகிறார்) என்ற கருத்தோட்டத்தை முன் வைக்கிறார்களோ அதே விதிகளுக்குட்பட்டே இதோ பார் இல்லை என்றும் உடைத்துக் காட்ட வேண்டிய கூடுதல் பொறுப்பும் சுமையும் நமக்குண்டு.

அந்த வகையில் எனது முதல் கடிதச் சாரத்தைத் தாங்கள் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே எண்ணுகிறேன். தங்களுக்குப் புரியும் வகையில் எடுத்து வைக்க என்னாலும் ஓரளவுக்கு மேல் இயலவில்லை (இதைக் கடிதம் எழுதும் அவ்வேளையிலேயே ஓரளவு உணரவும் முடிந்தது.) தற்போதும் மேற்கொண்டும் எப்படி எடுத்து வைப்பது என புரியாமல் ஒரு சிறிது தடுமாற்றமும் அடைகிறேன். எனினும் முயற்சிக்கிறேன். ஒரு வகையில் இப்போதைய எனது நிலைபாடு இது தான். அதாவது “கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற தேடலை, சர்ச்சையை விட, (முற்றாக ஒதுக்கிவிடச் சொல்லவில்லை) கடவுள் நமக்கு தேவைப்படுகிறார் என்பதே எல்லாம் வல்ல, எளியவரைக் காப்பதில் வலிவயரைக் கண்டு அஞ்சிவிடாத, செல்வத்தை லஞ்சமாகப் பெற்று விலை போய் விடாத ஒரு கடவுள் தேவைப்படுகிறார் என்பது தான் மனித குலத்தின் தலையாயத் தேவை.

கடவுள் என்ற அடைமொழியைக் கூட எடுத்து விடலாம். மனிதருள் மாபெரும் மாணிக்கமான, ஒரு நல்ல தலைமையை (அதாவது ஒரு தலைவரை) அதே நேரம் சராசரி மனிதனை விஞ்சிய ஒரு சக்தியைப் பெற்றுள்ள, அதையும் நல் நோக்கங்களுக்கு மட்டுமே பிரயோகிக்கும் ஒரு மனிதனையே என்பதாகக் கூடக் குறிக்கலாம். இப்படிப்பட்ட ஒரு கடவுளை வான மண்டலத்திற்கப்பால் எல்லாம் போகாமல் பூமியிலேயே சிருஷ்டித்துக் கொள்ள முடியாதா? அல்லது கண்டுபிடித்துக்கொள்ள முடியாதா? என்பதே என் வினா? நிலைபாடு. இந்த அடிப்படையிலேயே தியாகுவுடனான எனது கடிதமும் அமைந்திருந்தது என்று கூற வந்தேன். ஆனால் அதை தெளிவாகக் கூற இயலாத அளவிற்குக் கடிதத்தின் பக்க வரம்பும், நேர வரம்பும் என்னைக் கட்டுப்படுத்திவிட்டன.

முன்னுக்குப் பின் முரணான குழப்பமான தோற்றத்தை உருவாக்கி விட்டது. சரி இப்போது அது விஷயத்திற்கே போக வேண்டாம். தூர ஒதுக்கி வைத்து விடுவோம் (தற்போதைக்கு)

மைய விஷயத்திற்கு வருவோம். மின்சாரம் இருக்கிறது என அறிவியல் சில விதிகளுக்குட்பட்டு கூறினால் அந்த விதிகளின் படி அதன் இருப்பையாவது (Existing – ஐ ஆவது) புறக்கண்ணால் முடியாவிட்டாலும் தொடு உணர்வின் மூலமாகவாவது நிரூபணம் செய்கிறது. அதற்கு நீ பாவியா, புண்ணியவானா, ஏழையா, பணக்காரனா, கீழ்சாதியா மேல் ஜாதியா எம்மொழி எந்நாடு? இனம்? என மின்சாரம் எவர் ஒருவரையும் கேள்வி கேட்பதில்லை, எந்த வித பாகுபாடும் இல்லாமல் தனது இருப்பை நிரூபணம் செய்கிறது.

அப்படி இருக்க, தனது இருப்பையே காட்டிக் கொள்ள இயலாத, அல்லது மறுக்கின்ற அல்லது அஞ்சுகின்ற ஒரு கடவுளை எப்படி (அதுவும்) கருணையின் வடிவம் என நம்புவது? தனது இருப்பையே பெரிய பிரபஞ்ச ரகசியமாய் வைத்துள்ள, அனைத்தையும் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்கிற அந்த கடவுளை ஏன் கையாலாகாத ஒரு கடவுள் எனக் கூறக் கூடாது? இத்தகைய ஒரு வெளிப்பாட்டைத் தான் அன்று சேலத்தில் தியாகுவின் மூலதனம் முன் வெளியீட்டு விழாவில் கூட தாங்களும் முன் வைத்தீர்கள்.

நான் கூற வருவது என்னவென்றால் அத்தகைய ஒரு கடவுளை வெறுமனே புறக்கணிப்பதின் மூலம் மட்டுமே ஒழித்துக் கட்டிவிட முடியாது என்பது தான். வேறு வார்த்தைகளில் கூறினால், குறிப்பாக மார்க்ஸின் வார்த்தைகளின் கூறினால், “எப்படித் தலைமைப் பாசாங்குதாரராகவும் கொடுங்கோலருமான ஒருவராகச் சித்தரிப்பது?” இதைச் செய்துவிட்டால் இப்படிச் சித்தரிக்க முடிந்து விட்டால் போதும். அதற்குப் பின் கடவுளை நாம் அழிக்கத் தேவையில்லை. அத்தகைய ஒரு கடவுள் தானாகவே ஒரு சமூகத்திலிருந்து மெல்ல மெல்ல அழிந்து விடுவார். அழித்தொழிக்கப்பட்டு விடுவார் என்பதே எனது நிலைபாடு அப்படிப்பட்ட ஒரு அரெஸ்ட் வாரண்டுக்குள், கடவுளை அல்லது கடவுளாளர்களை எப்படி சிக்க வைப்பது? இதுவே பிரதான கேள்வி.

ஏற்றத்தாழ்வான, பாரபட்சமான இந்த உலகில் பாரபட்சமில்லாத, எல்லோருக்கும் பொதுவான சில பொது விசயங்களும், விதிகளும் கூட இருக்கத் தான் செய்கின்றன. இதை ஒரு வகையில் நாமும் (கடவுள் மறுப்பாளர்களாகிய நாத்திகர்களாகிய நாமும்) ஒத்துக் கொள்ளத் தான் வேண்டியுள்ளது. பசி, பிணி, பிறப்பு, இறப்பு, மூப்பு ஆசை அபிலாசைகள், எதிர்காலம் பற்றிய நம்பிக்கைக் கனவுகள் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அதே போல் எவ்வளவு தான் செல்வத்தைக் கொட்டி அள்ளிக் கொடுத்தாலும், பணத்தால் விலை கொடுத்து வாங்கிவிட முடியாத, பணத்தால் மாற்றீடு செய்து விட முடியாத சில விசயங்களும் உலகில் இருக்கத் தான் செய்கின்றன. மீண்டும் கூறுகிறேன். நாத்திகர்களாகிய நாம் இதையும் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும்.

சரி இப்போதென்ன சொல்ல வருகிறீர்கள்? நேரடியாகவே விசயத்திற்கு வாருங்கள் என்கிறீர்களா? காலம் சென்ற சுவாமி விவேகானந்தர் தான் கூறுவார் இப்படி. “கைகளைக் கட்டிக் கொண்டு ஓ ஆண்டவனே உனது நாசி எவ்வளவு அழகாக இருக்கிறது? உனது கண்கள் எவ்வளவு இனிமையாக உள்ளன? என்பன போன்ற அபத்தங்களைச் சொல்லி பிரார்த்தனை செய்வதின் மூலம் உங்களது மோட்சம் உறுதியாகி விடாது. கடவுள் அவ்வளவு சுலபமாக அடைந்து விடக் கூடியவர் அல்லர், நெஞ்சில் உரமில்லாதவர்களின் கைப்பாவையாகி விடுவதற்கு கடவுள் ஒன்றும் அவ்வளவு முட்டாள் அல்ல என்பதாய்.

எனது கேள்வி இது தான். எந்த விலை கொடுத்தாவது கடவுளை அடைந்தே தீருவது எனும் நோக்கோடு யாரெனும் ஒருவன் முனைந்தால் அவனால் அந்த மனிதனால் (ஆணோ பெண்ணோ) கொடுக்க முடிந்த ஒரு உச்ச பட்ச விலை என்னவாயிருக்க முடியும்? கோழையோ, வீரனோ, முட்டாளோ, புத்திசாலியோ, சாதி, மத, இன, மொழி, தேசம் என்ற பாரபட்சம் இல்லாமல் ஒரு பிச்சைக்காரன் கூட தன்னிடம் இல்லை என்று மறுக்க முடியாத, அனைவரிடமும் இருந்தும் கடவுளுக்கு கொடுக்கக் கூடிய மிகவும் உகந்த, விலை உயர்ந்த ஒரு பொதுச் சொத்தாக, பொது விஷயமாக என்ன (இருக்க முடியும்) உள்ளது?

யோசிக்காமலே பாமரனும் ஒரு விசயத்தில் வந்து நிற்பதை உணர முடியும். பீடிகை எதற்கு? பாலுணர்ச்சியைத் தான் குறிப்பிடுகிறேன். பணக்காரனின் பாலுணர்ச்சி இத்தனை கோடி பெறும்? பிச்சைக்காரனுடையது இவ்வளவு பெறும்? அழகானவர்களுடையது இவ்வளவு மதிப்பு பெறும். அழகற்றவர்களுடையது இவ்வளவு மதிப்பு பெறும் என இதற்கொல்லாம் ஏதும் ஒரு வரம்பு (ரேட் பிக்ஸ்) செய்ய இயலும்? (நடைமுறையில் இதுவும் இப்படித்தான் நிகழ்த்தப்படுகிறது என்றபோதிலும் அதே நடைமுறையில் மனிதனின் இத்தகைய கணிப்பீடுகள் பொய்த்துப் போய் விடுவதையும் தோல்வியுறுவதையும், மறந்து விடக்கூடாது. தவறான அர்த்தத்தில் பொருள் கொள்ள மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்.

வேண்டுமானால் புற அழகு (Anotomy, க்கு structure) க்கு வடிவ அமைப்பிற்கு, நிறத்திற்கு தனியே ரேட் பிக்ஸ் செய்யலாமே ஒழிய, அதுவும் வெளியில் உள்ளவர்களால் நிர்ணயிக்கப்படலாமே ஒழிய (தன்னைத்தானே எந்த ஒரு மனிதனும் விற்பனை சரக்காகப் பண்டமாக பாவித்துக் கொள்ள இயலாது) உணர்வுகளுக்கு அல்ல.

ஆக கடவுளுக்காக தத்தம் செய்ய, அர்ப்பணிக்க, இதை விட விலை உயர்ந்த வேறு ஒரு விசயத்தை, நிவேதனத்தை காட்ட முடியுமோ? தன்னலமறுப்பிற்கு இதைவிடச் சிறந்த உதாரணத்தைக் காட்ட முடியுமோ? கடவுள் இருப்பதாகவே (ஒரு வாதத்திற்கு தான்) பாவித்துக் கொண்டு அக்கடவுளுக்கும் தான் ஒரு இறுதி வாய்ப்பு தான் கொடுத்துப்பார்ப்போமே? ஆனால் இப்படியும் தத்தம் செய்தவர்கள் (தன்னை தனது ஆசை அபிலாசைகளை, சுயநலத்தை அந்தக் கடவுளின் பேரிலோ அல்லது சமூக அர்ப்பணிப்பின் பேரிலோ சுட்டெரித்து அர்ப்பணித்துக் கொண்டவர்களும் சரித்திரத்தில் தன் சுவடுகளை விட்டுத் தான் சென்றிருக்கிறார்கள்.

புத்தன், ஏசுவிலிருந்து வள்ளலார், விவேகானந்தர் வரை ( ஏன் நமது நந்தன் பத்திரிக்கையின் பெயரிலேயே கூட ஒருவர் உண்டு) சமூகத்தினிடையே தன்னலமற்ற ஒரு தொண்டு வாழ்வு நிகழ்த்தியுள்ளனர். ஆனால் அதற்கெல்லாம் ஆதாரப்பூர்வமான அறிவியல் உலகின் சாட்சி கிடையாது. இது தான் அவர்கள் செய்த தவறு எனில், அவர்கள் செய்ய தவறியதை இன்றைய தலைமுறையில் நாம் செய்வோம். நாளைய தலைமுறைக்குச் சாட்சியமாய் நமது தடயங்களையும் விட்டுச் செல்வோம், எனும் இந்நோக்கிலேயே அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்திற்கும் அங்கிருந்து ஏதும் பதில் (சலனம்) இல்லாமல் போகவே வேறு வழி தெரியாமல் (சாராம்சத்தின் சாயத்தை மட்டும் கொஞ்சம் மாற்றி) கின்னசுக்கும் எழுதினேன்.

இதை விடத் தெளிவான ஒரு விளக்கம் கொடுக்க எனக்குத் தெரியவில்லை. இதற்கு மேலும், இனியும், கேட்கும், படிக்கும், பொறுமை தங்களுக்கும் இருக்குமோ என்னவோ? ஆக இனி ஜட்ஜ்மெண்ட்டை நீங்களே தீர்மானம் செய்து கொள்ளுங்கள். அப்படியே அது குறித்து எனக்கும் ஒரு வரி எழுதுங்கள். (திறந்த அஞ்சல் அட்டையில் அல்ல).

எங்கு சுற்றியும் எப்படியும் மனித குலம் கடைசியில் (சீக்கிரமாகவோ அல்லது சற்று காலம் தாழ்த்தியோ ஒழுக்கம் பற்றிய சோரம் போகாத கற்பு நிலை பற்றிய ஒரு தெளிவான கருத்தோட்டத்திற்கும் வந்து சேர்ந்தே ஆக வேண்டும். இந்த அஸ்திவாரத்தின் மேலேயே சகல தார்மீக உரிமைகளும், கடமைகளும், சமத்துவம் பற்றிய கோட்பாடுகளும் மலர முடியும். அப்படிப்பட்ட ஒரு நிர்பந்தத்தில் தான் மனித குலம் உள்ளது. கடவுள் என்ற கருத்தோட்டதை (Concept) ஐ உடைக்க மட்டும் அல்ல. மீண்டும் கட்டி அமைக்கவும் (வான மண்டலத்திலிருந்தோ, கற்பாறைகளிலிருந்தோ கொண்டு வரப்பட்ட கடவுளை அல்ல) சமூக நலனைக் காக்கவும், தனி உடமைக்கும் பொது உடமைக்கும் இடையிலே ஆன, புத்திக்கும் உணர்ச்சிக்கும் இடையிலேயான போராட்டத்தில் ஆக புதிய பொது வரம்பு எல்லைகள் நிர்ணயிக்கப்படவும்.

ஆக மனித குலத்தின் கற்பொழுக்கம் பற்றிய அறவியல் கூறுகள் அறிவியல் அடிப்படையில் அமைந்த ஒரு புதிய தெளிவான வரையறைக்கு உட்படவேண்டும் எனக் கூறி எனது இந்த நீண்ட மடலை முடிக்கிறேன்.

12). கீழ்கண்டக் கடிதம் இலண்டன் பி.பி.சி.தமிழோசை ஆனந்தி சூர்யப்பிரகாசம், மற்றும் மகாதேவன் இவர்களுக்கு எழுதியதின் கடித நகல் (……………………தேதியிட்டது.)

கீழ்காணும் பகுதி லண்டன் பி.பி.சி.தமிழோசையின் மூத்த நிகழ்ச்சித் தயாரிப்பாளரான (சீனியர் ப்ரொடியூசர்) ஆனந்தி சூர்யப் பிரகாசம் மற்றும் மகாதேவன் அவர்களுக்கு கடந்த . தேதியில் அனுப்பப்பட்ட கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி. கீழ்க்காணும் பகுதியை மட்டும் ஆங்கலத்தில் மொழி பெயர்த்து கின்னஸ் தரப்புக்கு அனுப்புமாறு கோரியிருந்தேன். ஏனோ ஆனந்தி அவர்களிடமிருந்தும் எந்தவித சலனமுமில்லை. முதலில் எனது கடிதங்கள் அவரது கையை எட்டியதா இல்லையா என்பதிலேயே எனக்குச் சிறிது நெருடல் உண்டு. காரணம் எனது கடிதங்கள் அவரது கையை எட்டா வண்ணம் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஒரு சந்தேகமும் *** உண்டு.

***எனதிந்த சந்தேகம் சரியே. சரியே என்பதை பின்னால் மற்றொரு சமயம் ஆனந்தி சூர்யப் பிரகாசம் அவர்களுடனான ஒரு நேரடி தொலை பேசி உரையாடல் வழியே நானே நேரடியாய் ஊர்ஜிதம் செய்து கொள்ளவும் நேர்ந்தேன்;.

தேன்கனிக்கோட்டை

“இருக்கின்ற உறவுகள் ஒரு நிகழ்வை அவசியப்படுத்துகின்றன என்பதை நிரூபித்துவிட்டால், எத்தகைய வெளிப்புறச் சந்தர்ப்பங்கள்*** அதை மெய்யாகவே தயாரிக்கின்றன என்பதையும், ஏற்கனவே அது தேவையாக இருந்தாலும் இன்னமும் அதைத் தயாரிக்க முடியாதிருக்கின்ற சந்தர்ப்பங்களையும், கண்டறிவது இனியும் கஷ்டமான காரியம் அல்ல.”

குடும்ப உறவோ சமூக உறவோ இரண்டுக்கும் மேற்குறிப்பிட்ட மார்க்ஸின் வாசகங்கள் பொருந்தும் என நம்புகிறேன். மூலதனம் எழுதிய உலகின் முதன்மைக் கம்யூனிஸ்ட் என்னவோ எளிதாகச் சொல்லி விட்டுப் போய்விட்டார். ஆனால் என் விசயத்தில் (எனது புரபோசல் விசயத்தில்) ஏனோ அப்படி எளிதாகத் தோன்றவில்லை.

திட்டவட்டமாக மறுத்து விட்ட நிலையில் மீண்டும் மீண்டும் தங்களை வற்புறுத்துவது போல் ஒரு கடிதம் எழுதுவதென்பது ஒரு வகையில் அநாகரிகமே. எனினும் சில நேரங்களில் நாகரீகம், அநாகரீகம் பார்க்க இயலாத நிர்பந்தம் மனிதர்களுக்கு நேருவதுண்டு.

“தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்; தேடுங்கள் கிடைக்கும்” பைபிள் வாசகம். சரியாகத்தட்டப்படாததாலே கூட திறக்காமல் போயிருக்கலாம் அல்லவா? அதுவும் திறந்த கதவு பின் ஏனோ மூடிக் கொண்டால்?

ஒருவேளை எனது முதல் கடிதத்திற்கே முதலிலேயே தங்கள் மறுப்பை திட்டவட்டமாக தெளிவாக தெரிவித்திருப்பின் மீண்டும் இக்கடிதத்தை எழுதும் எண்ணமே எனக்கு ஏற்பட்டிக்காதோ என்னவோ? Actually now I don’t expect any publicity எனத் தெரிவித்திருந்தும் தாங்கள் மறுத்தது தான் மறுப்புக்கான உண்மையான காரணம் என்னவாயிருக்கும் என்ற (தேடலுக்குள்) யூகச் சிக்கலுக்குள் என்னை ஆழ்த்தி விட்டது.

*** (வெளிப்புறச் சந்தர்ப்பங்கள் என்ற மொழிபெயர்ப்பை இங்கு நாம் வெளிப்புறச் சக்திகள் என்றும் கூடப் பொருள் கொள்ளலாம்.)

எந்த சில நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டு நான் எனது புரபோசலை தங்களுக்கு அனுப்பினேனோ, அதே போலவே தாங்களும் ஏதேனும் சில (நடைமுறை) நிர்ப்பந்தகளுக்குட்பட்டு அந்நிர்ப்பந்தங்கள் காரணமாகவே கைகள் கட்டப்பட்டு இருப்பீர்கள் என நம்புகிறேன். எனது இந்த நம்பிக்கை யூகம் சரியானது தானா எனத்தெளிவு படுத்துவீர்கள் எனவும் நம்புகிறேன்.

ஒரு வேளை எனது புரபோசலுக்கான தகுதி (Eligibility) குறித்தே கட்டாயமான ஒரு கேள்வி எழுப்பியாக வேண்டியிருக்குமே? எப்படி எனும் தர்ம சங்கட நிலையா? அல்லது இதன் பின் விளைவாய் எழும் சமூகவியல் சட்டவியல் ரீதியான சிக்கல்கள் …! இப்படி ஏதேனும் இருக்குமோ?

சாதாரணமாக ஆய்வு நோக்கங்களுக்காக பிராணிகளையே இம்சிக்கக் கூடாது? கொல்லக்கூடாது எனக் கண்டனக் குரல்கள் எழும் இக்காலத்தில், எதிர் காலத்தில் இதனால் மேலும் என்னென்ன சிக்கல்கள் எழுமோ? இது நமக்கு தேவையா? எனும் எச்சரிக்கை உணர்வு காரணமாகவா? எதனால்? எதனால்?

முன்னது எனில் நீங்கள் உங்கள் கடமையைத் தான் செய்தவர்கள் ஆவீர்கள். இதில் தார்மீக ரீதியிலமைந்த குற்ற உணர்வு, பாவ புண்ணியம் போன்ற சென்டிமெண்ட்ஸ்க்கு இடமில்லை. மேலும் நீங்கள் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை. மாறாக நான் தான் உங்களை கட்டாயப்படுத்துகின்றேன்.

இது இழிவு மனிதாபிமானமே அற்ற செயல் என்றோ அல்லது ஏளனமாக பின்னாள் ஒரு நாள் இம்முயற்சி பற்றி கேலி செய்யப்படும் என்றோ கருதுவீர்களானாலும் கூட அதற்காக கவலைப்பட வேண்டிய முதல் நபர் நான் தான். இல்லை நீங்கள் முழுக்கத் துணிந்த நபர். உங்களுக்கு முக்காடு தேவையில்லை. ஆனால் எங்கள் நிலை? உங்கள் தரப்பில் இப்படியும் ஒரு வாதம் எழலாம். அப்படிப் பார்த்தால் இந்த அளவிற்கு ஒரு நிலையை இது மிகவும் இழிவு எனக் கருதுமளவுக்கு ஒரு நிலையை உருவாக்கிய ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் தான் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு, தார்மீகக் கடமையுள்ளது. இழிவு எனக்கும் உங்களுக்கும் மட்டும் அல்ல. ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் சேர்த்தே தான்.

ஆண், பெண் கூடல் என்பதை கண்ணியமான எந்த ஒரு ஜோடியாவது யாரையாவது நேரடியாக சாட்சியம் வைத்து நிகழ்த்த முடியுமா? (அதுவும் உலகில் நிகழ்த்தத் தான் படுகிறது என்ற போதிலும் அது ஒரு (Extreame side stage) விளிம்பு நிலை (அந்த விதி விலக்குகளை விட்டு விடுவோம்.)

இந்த ஒரு இயற்கை ஒழுக்கவியல் நிர்பந்தம் காரணமாகவே இதுவரை மனித குலத்தில் பலியானவர்கள் எத்தனை எத்தனை பேர்? ஒரு கனம் எண்ணிப் பாருங்கள். அந்த மௌன அலறல்களுக்கு இன்றைய நவீன அறிவியலின் மரபணுச் சோதனை முறைகள் ஓரளவிற்காவது ஒரு விடிவை தரவில்லையா? நவீன அறிவியலின் மரபணு (DNA Test) சோதனைமுறைகளுக்கு முன் இன்று எந்த ஒரு ஆணோ பெண்ணோ உண்மைக்கு புறம்பாக இந்தக் குழந்தை எங்கள் இருவருக்கும் தான் பிறந்தது என்றோ, அல்லது பிறக்கவில்லை என்றோ (உண்மை நிலவரத்திற்கு மாறாக) எப்படி பொய் சொல்லி விட முடியாதோ, அப்படி மனிதனின் (ஆண், பெண் இருபாலரின்) கற்பொழுக்கம் பற்றிய கோட்பாடுகளுக்கும் ஐயப்பாடுகளுக்கும் ஒரு தீர்வை அளிக்கும் விதமாக இதற்கென ஒரு பொது வரம்பெல்லையை, வரையறையை நவீன அறிவியலின் துணை கொண்டு ஏன் நிறுவ முடியாது. (கூடாது) என்பதே என் கேள்வி.

மீண்டும் அணு ஆயுதங்களோடு ஒரு ஹிட்லரை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். லட்சக் கணக்கான யூதர்களை கொன்றொழித்த ஹிட்லரின் கொடூரமான ஒரு முகத்தை மட்டும்பிரதிபலிக்கும் வரலாறு மறுபுறத்தை உளவியல் இருளில் ஆழ்த்தியது ஏன்? ஹிட்லரின் தாய்க்கு ஒரு வேளை அன்றே களங்கம் துடைக்க இந்த டி.என்.ஏ,. சோதனை முறைகள் இருந்திருப்பின் மனித குலம், அட்லீஸ்ட் யூத இனம் முற்றிலும் வேறான ஒரு ஹிட்லரைக்கூட சந்தித்திருக்குமோ என்னவோ? மொத்தத்தில் யாரோ ஒரு யூதச் சீமானின் வஞ்சித்தலுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு இனமே பெரிய விலையைக் கொடுக்க நோந்தது என்று ஏன் பொருள் கொள்ளக்கூடாது?

“மரம் அமைதியை விரும்பினாலும் காற்று சும்மா விடாதாம்.” சீனப் பழமொழி. அதுபோல கற்பொழுக்கம் பற்றிய சந்தேகப் புயல் எழுந்தால் அவன்(ள்) உலகின் சாதாரண சராசரிப் பிரஜையாகட்டும், அல்லது சாதனை மனிதனாகட்டும், எவரையும் விட்டு வைப்பதில்லை, புராண இதிகாச காலங்களிலிருந்து, இன்றைய டயானா, கிளிண்டன் காலம் வரை, இதன் வீச்செல்லையை, சுவடுகளைப் பார்க்கிறோம். நாடு, மொழி, இன, மத எல்லைகளைத் தாண்டி வரலாறு முழுக்க, ஏன் வரலாற்றையே வழிநடத்திச் செல்லும் வலிய காரணியாகக்கூட இருந்து வருவதை, வந்திருப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். உணர்கிறோம். சிலர் பலியாகவும் செய்கிறோம். பலர் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்.

“உண்மை ஒரு தீவர்த்தி, அதன் அருகில் செல்ல அஞ்சி அதைக் கடந்து விடுகிறோம்” என்ற கதேயின் வார்த்தைகளுக்கு ஒரு நிரூபணம் கொடுத்துவிடுகிறோம். உணர்ச்சிக்கும் புத்திக்கும் இடையேயான பரிணாமப் பந்தயத்தில், போராட்டத்தில் மனித குலம் இன்று தான் சிருஷ்டித்த தனது சொந்த கருத்து வலைப்பின்னல்களிலிருந்தே வெளி வரத் தெரியாத ஒரு சிலந்தியாய் துடித்துக் கொண்டிருக்கும் நிலை.

விண்ணை, மண்ணை அளக்க முடிகிற விஞ்ஞானதால், இந்த விலங்கின் புதை படிவம் இத்தனை கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது, இந்த பூமியின் வயது இத்தனை கோடி ஆண்டுகள், ஏன் பிரபஞ்சத் தோற்றம் குறித்தே (A Brief history of time – From Big Bang to Black hole) என ஏதேதோ கண்டுபிடிக்க முடிகிற விஞ்ஞானத்தால் இதற்கு மட்டும் ஏன் ஒரு தீர்வு காண முடியாமல் போனது? இயலாமையா? விருப்பமின்மையா? இரண்டும் கிடையாது. பயம், அச்சம் என்று தான் கூறுவேன். ஆராய்ச்சி மனப்பான்மைக்கும் தார்மீக ரீதியிலான அற உணர்வுக்கும் இடையேயான கடைசி (பொது) வரம்பெல்லையை, விளிம்பை நிர்ணயிக்க முடியாததால் தான் என்பேன். ஆராய்ச்சி வெறிக்கும், மனப்பான்மைக்கும் ஒரு எல்லையே கிடையாதா? என்ற சமூகத்தின் சாட்டையடிக்கு, கண்டனக் குரல்களுக்கு உள்ளாக நேரிடுமே” என்ற பயம் எழுந்ததால் என்பேன்.

எனது Proposal உலகெங்கும் உள்ள (Not only Hindu Religion) மதங்கள், நடப்பு சமூக அமைப்பு இவற்றை, இவற்றின் அஸ்திவாரத்தையே சந்தேகிக்கும் விதமாக (சந்தேகித்தால் என்ன? எதிர்த்தால் என்ன? இரண்டும் ஒன்று தானே என்கிறீர்களா?) உள்ளதால், என்னோடு சேர்ந்து தங்கள் நிறுவனமும் பகை சம்பாதிக்க நேரிடும் என்பது கூட தங்களின் மறுதலிப்புக்கான காரணங்களில் ஒன்றாக இருக்க கூடும். ஆக உண்மையை அறிய விரும்பும் முயற்சி என்பதே இந்த உலகில் ஒரு யுத்தப் பிரகடனம் போலத் தான் எனில், அதை மேற்கொள்வதில் என்ன தவறு? கேவலம் ஒரு எயட்ஸ் கிருமியைக் கூட புறக்கணிக்க இயலாத மனித குலம் தனது சொந்த சக பயணிகளில் சிலரை எப்படி புறக்கணிக்க இயலும்?

பலவான்களும் பலவீனர்களுமான பல தனி மனிதர்கள் சேர்ந்தது தான் ஒரு சமூகம். சமூகங்கள் பல உள்ளடக்கியது தான் இவ்வுலகம். தனி மனிதர்கள் பலரால் உருவாக்கப்படும் இதே உலகம் அதே அந்த தனி மனிதனின் மீது, அதிலும் எளியவர்களின் மீது செலுத்தும் தாக்கம் தான் எவ்வளவு வன்மையானது? வலியது எளியதுக்கிடையேயான போராட்டத்தில் யார் வலியவர்? யார் எளியவர்? யார் பார்வையாளர்?, யார் பங்கேற்பாளர்?, யார் நடுவர்?! என்பதையெல்லாம் காலம் தான் முடிவு செய்ய இயலும்.

எனக்கு இதில் எந்த வித பொறுப்பும் (பங்களிப்பும்) இல்லை என்றெல்லாம் யாரும் அவ்வளவு சுலபமாக ஒதுங்கி நின்று விடுதல் இயலாது. யாரோ ஒரு தனி மனிதனின் பிரச்சினை என்றோ, அல்லது ஒட்டு மொத்த மனித குலமும் சேர்ந்து பதில் அளிக்கக் கடமைப்பட்ட ஒரு விஷயத்திற்கு, கேள்விக்கு, நான் ஒருவன் மட்டும் எப்படி தனித்து பதில் சொல்ல முடியும் என்றோ ஒதுங்கி விடுதல் இயலாது. அப்படி ஒதுங்கிவிடும் முயற்சி என்பது “எதைத் தவிர்க்க விரும்புகிறோமோ அதன் வாயிலேயே அகப்பட்டுக் கொள்வதைப் போலத் தான் இருக்க முடியும். மரணம் போலும் உண்மை இதுவே”

13. வார மலர்-அனுராத ரமனனின் “அன்புடன் அந்தரங்கம”; மீதான விமர்சனம் (பக்கம்-22 13.08.2001 தேதியிட்ட வாரமலருக்கான விமர்சனம்)

மணமாகி 18 ஆண்டுகளுக்குப் பின்னர் (இரண்டு பெண் குழந்தைகள் பெற்றபின்) வரும் ஒரு பெண்ணின் கடிதம் மாதக் கணக்கில் இடைவெளி எனக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்தே அம்மாதின் அவஸ்தை எவ்வளவு தர்மசங்கடத்திற்கு இடமானது என்பதை விளக்கத் தேவையில்லை. இதை ஒரு

தனிப்பட்ட பெண்ணின். அந்தப் பெண்ணின் கணவன் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மட்டும் பாவிக்காமல் “ஒரு பானை சோற்றுக்கு ஓரரிசி பதம்” என்பார்களே அது போல ஒரு சமூகவியல் பிரச்சனையாக பாவிப்போம்.

“communication media’s எல்லாம் வணிக நோக்கத்திற்காகக் கற்பனையாகவே இப்போதெல்லாம், இப்படியெல்லாம் கூசாமல் மஞ்சள் பத்திரிக்கைகளை மிஞ்சும் விதத்தில் (பேசி) எழுதி வெளியிடச் செய்து விட்டார்கள்: இதற்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.” என இப்படி ஒரு வாதத்தைக் கூட இதை எதிர்ப்பவர்கள் முன் வைக்கலாம், ஆனால் அதற்காக இவற்றில் உண்மையே இல்லை என்று முடிவுகட்டிவிடலாமா? அதிலும் குறிப்பாக, பாதிக்கப்ட்ட பெண்ணின் கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, அதில் எழுப்பப்பட்டு உள்ள நியாயமான காரணங்களை எழுத்தாளர் அ.ரா.ர.அலசியுள்ள போதிலும், அவராலும் சரியானதொரு தீர்வை முன் வைக்க இயலாமை தெரிகிறது.

“எனக்கு அன்புதான் வேண்டும், உறவு வேண்டாம்” என்ற வரிகள் கடிதத்தின் சமூக, நாகரீகத்தை சபைக் கண்ணியத்தைக் காட்டுகின்றனவே அன்றி, உண்மையில் கடிதசாரம் தெரிவிக்கும் செய்தி அதுவல்ல, கடிதம் அப்பட்டமான அதிருப்தியை, திருப்தியின்மையை, ஏமாற்றத்தைக் குறிக்கின்றது.

நமது நாட்டில், பெரும்பாலும் திருமணம் என்பது பெற்றோர்களால் நடத்தி வைக்கப்படும் நாகீரிகமான வியாபாரங்களாகி விட்ட நிலையில் இதைத் தவிர அப்புறம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? சௌகர்யத் திருமணங்கள் அனைத்துக்கும் பூரியேயின்***** பின்வரும் சொற்கள் பொருத்தமானவை தான். “இலக்கணத்தில் இரண்டு எதிர்மறைகள் ஒரு உடன்பாட்டுப் பொருள் ஆவது போல், திருமண ஒழுக்கங்களில் இரண்டு விபச்சாரங்கள் ஒரு நன்னெறியாக ஆகின்றன.

பெண்ணிடம் மாப்பிள்ளையோ, மாப்பிள்ளையிடம் பெண்ணோ தன்னந்தனியாக பேசவே அனுமதிக்கப்படாத சூழ்நிலையில், அப்படியே பேச அனுமதிக்கப்பட்டாலும், பேச அவகாசமளிக்கப்பட்ட அந்த 5 நிமிட 10 நிமிட அவகாசத்தில் ஒரு பெண்ணோ ஆணோ என்ன பேசி, பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு விட முடியும். அதுவும் இந்தக் குறிப்பிட்ட (ஆகஸ்டு 13, 2000 வாரமலர்) இதழில் குறிப்பிட்டுள்ளது போன்ற சிக்கல்கள் குறித்து எல்லாம (சமூகம் குறிப்பிடும்) சமூக கண்ணியம் கெடாமல் எந்த ஒரு ஆணோ பெண்ணோ குறிப்பாக கண்ணியமான எந்த ஒரு பெண்ணாவது, தைரியமாக தன்னைப் பெண் பார்க்கவரும் மாப்பிள்ளையிடம் எடுத்த எடுப்பில் முதன் முதலிலேயே ஏதோ Run Rate Score கேட்பது போல சராசரியாக ஒரு (நாளைக்கு) வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு எத்தனை முறை உங்களால் உறவு கொள்ள முடியும்? எனக் கேட்டு விட முடியுமா?! என்ன?! அல்லது மாப்பிள்ளை வீட்டார் தான் எங்கள் பையன் Run Rate. Score average/month/weak/day இவ்வளவு என இதற்கெல்லாம் விதரணையான ஒரு எண்ணிக்கை, அளவு முறையை, உறுதி கொடுக்க முடியுமா?!

இன்றைய போட்டி உலகில் பொருளாதார சிக்கல்களால் எத்தகைய மனோ உளைச்சல்களை ஆணுலகம் சந்திக்க நேரிடுகிறது என்பதை வெளி உலகம் தெரியா இல்லத்தரசிகள் உணர்வார்களா?! பொருளாதாரக் காரணங்களால், திருமணச் சந்தையை அழுகத் தொடங்கிய ஒரு காய்கறியாய் எதிர்நோக்கும் 30 வயது கடந்த முதிர்கன்னிகள் கூட ஒரு விதத்தில், ஒரு விஷயத்தில், ஆண்களுக்கேயுரித்தான ஆண்களுக்கே ஏற்படக்கூடியதான ஒருவிதப் பிரச்சனையிலிருந்து எளிதில் தப்பித்துக் கொள்ள முடியும் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனால் ஆண்களின் நிலை…..?! (இயற்கை மிகச் சரியாகவே செயல்படுகிறது என்பதற்கு இதுவே சரியான எடுத்துக்காட்டு, பெண்ணுரிமை பேசுபவர்கள் சற்று இதைக் கவனிப்பார்களா?!

பூடகமான பீடிகையெதற்கு?! குடும்பச் சமூக உறவுகளின் மீது செலுத்தப்படும் பொருளாதாரக் காரணங்கள் தவிர்த்து, அதற்கு வெளியிலிருந்தும், பொருளாதாரத்தின் வீச்செல்லைக்கு அப்பால் இருந்தும் சில அழுத்தங்கள் ஆண் பெண் இருபாலருக்கும் இயற்கையால் ஏற்படுத்தப்படுவதுண்டு. (இயற்கைக்கு இதில் ஆண், பெண் என்ற பாரபட்சமே இல்லை. அது நல்ல அழகான தோற்றம், நிறம், உடல்வாகு, அதாவது புற அழகின் வடிவமைப்பு etc இது எல்லோர்க்கும் சமமான அளவில் கிடைக்காமை.

So, பொருளாதாரம் காரணமாக மட்டுமே (ஏழ்மையின் காரணமாக மட்டுமே) இவர் சந்தையில் விலைபோகாமல் உள்ளார் என்று விலைபோகாத எந்த ஒரு 30 வயது முதிர்கன்னியையோ, முதிர்கண்ணணையோ குறிப்பிட்டு விட முடியாது. விரித்துக் கூறினால், (முதலில் இங்கு பெண்கள் விஷயத்திற்கு வருவோம்) ஏற்கனவே பெற்றோரின் பொருளாதார இயலாமையின் காரணமாய் ஒரு புறமும், மறுபுறம் இயற்கையிலேயே நல்ல உடற்கட்டு, நிறம், தோற்றம் கிட்டாமை, என்ற நிலையினாலும், இன்னமும் திருமணச் சந்தையில் விலை போகாததால், இவர் வழிவிடாததால் இவருக்கு பின்னுள்ள மற்ற சகோதர சகோதரிகளுக்கும் (ஒருவேளை அவர்களுக்கு பொருளாதாரம் தவிர்த்த இயற்கையின், மேற்கூறிய மற்ற அனைத்துக் கொடைகளும் கிட்டியிருந்த போதிலும், அதன் காரணமாகவே அவர்களுக்கும் வரன்கள் வந்து மோதத் தொடங்கிவிட்டன என்ற நிலையில்) இவருக்கு மட்டும் திருமணம் தடைபடுகிறது. தள்ளிப் போகிறது எனும் பட்சத்தில், (குடும்பத்தின் அந்த மூத்த பெண் (சகோதரியின்) மணியின் மன உளைச்சல்கள் எவ்வளவு ஆழமும் அழுத்தமும் கொண்டிருக்கும்? இதனாலேயே திருமண ஆசையே வெறுத்துப் போகும் பெண்கள் நாட்டில் எத்தனை எத்தனை பேர்?!

ஒரு காலகட்டத்திற்கு மேல், “தான் பிறந்த வீட்டிற்கும், குடும்பத்திலுள்ள மற்ற சகோதர, சகோதரிகளுக்கும் எவ்வளவு பெரிய பாரம், சுமை, தடைக்கல் என்ற விரக்தி நிலையில்,” அவர்களின் சுமை தீர்ந்தால் போதும், ஏதோ ஒரு ஆணுக்கு- எப்படியோ ஒருவனுக்கு அவன் சொல்லையோ, சொத்தையோ, வாலிபனோ, வயோதிகனோ, அழகனோ, குரூபியோ, மொண்டியோ, முடமோ, 2-ம் தாரமோ, 3-ம் தாரமோ எப்படியோ, எங்கோ வாழ்க்கைப்பட்டால் போதும், தனது விருப்பு வெறுப்புகளுக்கு இங்கு இனி இடமில்லை; தேர்வு சுதந்திரத்திற்கு வாய்ப்பே இல்லை,” எனும் நிலையில், ஒரு வித ஊனம்பட்ட மனநிலையில் தான், குடும்பச் சமூக நிர்பந்தங்களால் தான் திருமணத்திற்கே இசைவு தருகிறாள் என்று கூடக் கூறலாம்.

ஊனம் வெளித்தோற்றத்தில் மட்டுமல்ல வெளித்தெரியா இந்த மனோ ஊனத்துடனேயே கூட இனி அவள் தன் வாழ்வைத் தொடர்ந்து நகர்த்திக் கொள்ள முடியும், கணவன் என்பவன் உறவுக்கழைக்கும் போது (இது உலகிலுள்ள அனைத்துப் பெண்களுக்குமே கூட சேர்த்துப் பொருந்தும்) வெறுமனே தன் உடல் ஒத்துழைப்பை மட்டும் கொடுப்பவளாய் இருந்தாள் கூடப் போதும் கணவனுக்கான பாலுறவுத் தேவையைப் பூர்த்தி செய்தவளாகி விடுவாள். அதை அவள் மனம் விரும்பி மலர்ச்சியுடன் செய்தாளா அல்லது மரத்துப்போன மரக்கட்டையாக நிறைவேற்றினாளா என்பதல்ல, கேள்வி ஏதோ ஒரு வகைக் கடமைக்குட்பட்டவளாய் நிறைவேற்றிவிட முடியும் சுருக்கமாகச் சொன்னால், பெண்ணின் மனோ ஊனம் ஆணின் தாம்பத்ய வாழ்க்கைக்கு அதாவது, பாலுறவுத் தேவைக்கு (ஒரு குறைந்தபட்ச வடிகாலுக்காவது என்ற அர்த்தத்தில்) ஒரு தடையாகவே இருக்க முடியாது.

ஆனால் ஆணின் நிலை…….?!

தனக்குச் சந்தோஷமில்லாவிட்டாலும் பராவாயில்லை. தனது துணைவிக்கான குறைந்த பட்சக் கடமையாகவாவது ஆற்றவேண்டுமே?! அந்தக் கடமை தவறிய குற்றத்திற்காளாகிவிடக் கூடாதே என முயன்றாலும்…… ஆணால், இது விஷயத்தில் பெண்ணை போல நடந்து கொள்ள இயலாது என்றே தோன்றுகிறது. இல்லை இயலுமென்கிறவர் உண்டா?!

தூண்டல் ஏற்பட்டால் ஒழிய மனம் மலர்ந்து ஈடுபட்டாலொழிய, அவனால் தனித்து தன் குறைபாட்டை மனோ ஊனத்தை (மனோ ஊனம் காரணமாக வெளிப்படும் உடலியல் குறைபாட்டை) முற்ற முழுக்க மறைத்து ஒளித்துக் கொண்டு பெண்ணை பூரண சந்தோஷப்படுத்தி விட முடியாது என்றே தோன்றுகிறது. சுருக்கமாக இப்படி கூறலாம்?! ஆணின் மனோ ஊனம் பெண்ணின் பாலுறவுத் தேவைக்கு (ஒரு குறைந்த பட்ச வடிகாலுக்கும் கூட) ஒரு பெரும் தடைக்கல்லே!

அவனது மன ஊனம், மன அழுத்தம் எத்தன்மையது என்பது உடலியல், உடற்செயலில் ரீதியில் வெளிக்காட்டிக் கொடுக்கப்பட்டுவிடும். மனைவி கொஞ்சம் புத்திசாலித்தனமான, சூட்சமமான, அடங்கா வேட்கையுடைய பெண்ணாக இருக்கும் பட்சத்தில் இதையே மேலும் அவனது மாபெரும் பலவீனமாக மாற்றிப் (பிளாக்மெயில் செய்யவும்) காரணப் பொருளாகிவிடும். ஒரு பெண் நினைத்தால் வரம்பில்லாது (ஒரு வாதத்திற்கு உதாரணத்திற்கு வரம்பில்லாது எனக்குறிப்பிடுகின்றேன. இதற்காக விதரணை கெட்ட, ஒரு அளவு முறை இல்லாத எண்ணிக்கையை மனதில் கொள்ளத் தேவையில்லை) எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் தொடர்ச்சியாக இது விஷயத்தில் (அதாவது, அப்போதைக்கு ஓரளவுக்காவது என்ற அர்த்தத்தில்) திருப்தி செய்துவிட முடியும்.

இதைத் தான் உழைக்க நோகும் தொழில் முறை விபச்சாரிகள் செய்கின்றனர். மான அவமானத்திற்கு அஞ்சாத, உழைப்புக்கஞ்சும் ஆண் வர்க்கத்தினர் சிலரும் (அல்லது பிழைப்புக்குவேறு வழியேயில்லாத பாரம்பரிய குலத்தொழிலாக இதையே கொண்ட விபச்சாரத் தரகர்களும்) தொழிலாகவே வளர்க்கின்றனர். வளர்க்கத் துணைபோகின்றனர். தொழில் முறை விபச்சாரிகள் தான் என்றில்லை, “கண்ணியமான குடும்பத் தலைவி எனப்படுபவர்களில் சிலரும் பகுதியளவு இதையே ஆயுதமாக (ஆணின் இந்த பலவீனத்தையே) மேற்கொள்கின்றனர். ஆனால் ஆணின் நிலை……..?! உலகின் மூலதனமில்லா இந்த முதன்மை ஆதித் தொழிலை (விபச்சாரத்தை) மட்டும் ஏன் ஆணுலகம் கைப்பற்ற இயலவில்லை?. கைப்பற்றி பகிரங்கமான, பட்டவர்த்தனமான, வெற்றிகரமான, இலாபகரமான அங்கீகரிக்கப்பட்ட தொழிலாய் தொழில்முறை அடிப்படையில் ஏன் நடத்த இயலுவதில்லை. ஒரு தொழில் முறை போட்டியை ஆணுலகத்தால் இது விஷயத்தில் (விபச்சாரத்தில்.) மட்டும் ஏன் ஏற்படுத்த முடியாமல் போனது? ஏன் அது பெண்களின் ஏகபோகமானது?

இதுவும் வெற்றிகரமாக நடைமுறையில் சில ஆண்களால் நடத்தப்படத்தான்படுகிறது என்ற போதிலும், அவையெல்லாம் இலைமறை காயான, விதிவிலக்குச் சம்பவங்களாகத்தான் நடைபெறுகிறது. எந்த விதிக்கும் ஒரு விலக்கு இருக்கத்தான் செய்யும். விதிவிலக்குகள் உதாரணங்கள் ஆகா, ஆக பொருளாதாரம் முழுக்க முழுக்க ஆணுலகத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததினால் தான் என்று மட்டுமே கூறிவிடமுடியாது. (ஒரு வேளை வருங்காலத்தில் பின்னொரு நாள் பின்னொரு சகாப்தத்தில் பொருளாதாரம் முழுக்க, முழுக்க இல்லையென்றாலும் ஆணுக்குச் சரிநிகராக பெண்ணுலகின் கட்டுப்பாட்டுக்குள்ளும் வந்தாலும் வரும்; அப்போது பார்த்துக் கொள்வோம் என தீர்க்கதரிசனத்துடன் விட்டு வைத்தனரோ என்னவோ?!)

பொருளாதாரம் தவிர்த்த, இயற்கையின் நிர்பந்தத்துக்கு ஆட்பட்ட உடலியல் காரணங்களும் ஒரு காரணி என்பதை, எவரேனும் மறுக்க முடியுமா?! இயற்கையின் பாரபட்சமின்மையை கனம் பொருந்திய மேன்மை தாங்கிய பெண்ணியவாதிகள் நன்கு கண்விழித்துப் பார்க்க வேண்டும்.

இன்று விதி திரைபடத்தில் நடிகை சுஜாதா டயலாக் மாதிரியெல்லாம் பெண்கள் வழக்கு மன்றத்தில் அவமானப்படத் தேவையில்லை ஆணுக்குத் தான் அத்தகைய ஒரு நிலை. கிளிண்டன் நல்ல உதாரணம் பெண்ணுக்கு சட்டரீதியிலும், சமுதாய ரீதியிலும், கொடிய விளைவுகளை உண்டாக்கத் தக்க அதே குற்றம் (விபச்சாரம் என்று கூற முடியாவிட்டாலும், ஒரு வகையில் கற்பு நெறி தவறும் சோரநாயக(கி) முறை) ஆண்கள் விஷயத்தில் மரியாதைக்குரியதாகாவெல்லாம் இனிமேலும் கருதப்படபோவதில்லை, அவனது ஒழுக்கத்துக்கு அது ஒரு சிறிய கறை என்றெல்லாம் ஒதுக்கிவிடமுடியாது, அதை அவன் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறான் என்றும் முன்புபோல் கூறிவிடமுடியாது மிகச் சமீப உதாரணம் இன்போசிஸ்…… பார்க்க இந்தியா டுடே………..

நவீன தடய அறிவியல் பரிசோதனை முறைகளின் மரபணுச் சோதனை முறைகளின் காரணமாக, உலகின் முதன்மைக் குடிமகனாம், ஏகாதிபத்தியத்தின் ஏகச் சக்கரவர்த்தி எனக் கருதப்படும் அமெரிக்க முன்னால் ஜனாதிபதி கிளிண்டனே வழக்கு மன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் கூனிக் குறுகி நிற்க வேண்டி வந்துவிட்டது. ஒரு வினாடியாவது. ஒரு துளியாவது கண்கள் கலங்கி அழுமாறு எப்போதும் நிர்பந்திக்கப்பட்டாரோ அந்தக் கணத்திலேயே உலகளவில் பெண் மீண்டும் தன் ஆட்சி சூத்திரத்தை வீட்டில் மட்டுமல்ல நாட்டிலும், (நாட்டிலும் கூட ஏதோ ஒரு நாட்டிலல்ல ஏகாபத்தியத்தின், தனிச் சொத்துடைமையின் தலைமைச் செயலகத்தினுள்ளேயே, அதன் உட்கருச் செல்லுக்குள்ளேயே நடத்திய தாக்குதல் மூலம்) கைப்பற்றி விட்டாள், விரைவில் உலகளவிலும் கூட வென்றெடுக்கத்தான் போகிறாள் என்பதற்கு கட்டியம் கூறியதாய் அமைந்துவிட்டது என்றே கூறலாம்.

கர்ப்பிணியும் ஆக்கிவிட்டு இன்று கைவிட்டுவிட்டார் என அழுது புலம்பி, ஆர்ப்பாட்டம் செய்ய, தடயமாய் கைவசம் ஒரு கருவையோ அல்லது குறைந்தபட்சம் மோனிகா (கிளிண்டன்) போல உயிரணு கறைபடிந்த ஒரு உள்ளாடையையோ பத்திரப்படுத்தி வைத்திருந்தால் கூடப் போதும். வேறு வார்த்தைகளில் கூறினால், ஆண் என்பவனை தடயத்தை விட்டுச் செல்பவனாவும், வெளிப்படுத்துபவனாகவும், பெண் என்பவளை தடயத்தைப் பெறுபவளாகவும், அல்லது பிடித்து வைத்திருப்பவளாகவும் மட்டுமல்ல தேவையேற்பட்டால், பிடிங்கி வைத்துக்கொள்ள ஏதுவாகவும் இயற்கையின் திட்ட அமைப்பிலேயே (சிருஷ்டிக்கப்பட்டுள்ளது) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏன்?!

ஆண் என்பவன் இயற்கையாகவே பெண்ணைக்காட்டிலும், உடற்கூறு ரீதியாக வலிமையுள்ளவனாயிருப்பதால் அதன்காரணமாகவே ஒரு (வன்புணர்ச்சியை) மிருக ஆளுமையை பிரயோகம் செய்தாலும் செய்வான் என்பதனாலேயே (இயற்கையின் பாரபட்சமின்மையை பெண்ணுரிமைவாதிகள் சற்று மீண்டும் ஒரு முறை உற்றுக் கவனிப்பார்கள் என்று நம்புகிறேன்) ஆனால் ஆணுக்கு?! “இந்தப் பெண் என்னைக் காதலித்துக் கடிமணமும் செய்து விட்டுப் பின் பாருங்கள்! இப்போது அம்போ என கைவிட்டுவிட்டாள்” என்று அழுது புலம்பி, கழிவிரக்கம் தேடி எதைத் தடயமாய் காட்டுவான்? பாலியல் மோசடி, (பலாத்காரம்) சுரண்டல் என்பது எல்லாம் ஏதோ ஆண்களுக்கே யுரித்தான ஏகபோகமா என்ன?! (இதோ உதாரணம் – பார்க்க (தினத்தந்தி- 22.06.2003 – பக்கம் IV டெமிமூர் (பிரபல ஹாலிவுட் நடிகை உதாரணம்)

பெண்ணுக்குக் கைகொடுக்க இன்று (இன்றென்றால் 19……லிலேயே) தடய அறிவியலின் மரபணுச் சோதனை முறைகள் வந்துவிட்டன. ஆனால் ஆணுக்கு?

அ.ரா.ர குறிப்பிட்டுள்ள குறிப்பிட்ட ஆகஸ்டு 13, 2000 வாரமலர் பிரச்னைகளுக்குகெல்லாம் எந்த அடிப்படையில் என்ன விதமான அளவுகோல்களைக் கொண்டு தீர்ப்பு வழங்க?! இதுபோன்ற முன் உதாரணங்கள் காரணமாகவே திருமணம் கண்டு, பின் வாங்கும், அஞ்சும் நிலை ஆண்களுக்கு ஏற்படுமானால்…….(ஏற்படுமானால் என்ன?! இப்பொழுதே ஏற்பட்டுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்) அப்புறம் அவனின் கதிதான், நிலைதான் என்ன?!

பெண்ணுக்காவது (பெயருக்கு ஒரு திருமணம் கூட வேண்டாம்) எங்கோ, யாருக்கோ ஒரு குழந்தையை ரகசியமாகவேனும் பெற்றுக் கொள்ள வழி வகையுள்ளது. தனக்கான (இரத்த உறவு அடிப்படையலந்த) ஒரு குழந்தையை துணையை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை) தனது பிற்கால முதுமைப் பாதுகாப்பிற்கும், தனது சொத்துகளுக்கு வாரிசாகவும், சந்ததி உற்பத்தி என்ற ரீதியில் பெற்றுக் கொள்ள என்பதற்கெல்லாம் முற்று முழுக்க கணவன் என்பவனையே சார்ந்தவளாய் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. சட்டத்துக்கு உட்பட்டோ, உட்படாமலோ, சட்டத்துக்குப் புறம்பாகவே கூட திருமண உறவுக்கு வெளியிலேயே கூடப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் ஆணின் நிலை……..?!

ஆஸ்திரேலியாவில் (பார்க்க பெட்டி செய்தி……… தினமலர் பக் 4, 31.07.2000) அரசாங்கமே குழந்தை வேண்டுமென்று நிஜ ஆசையுள்ள ஆனால் திருமணம் வேண்டாத பெண்களும் பயன்படுத்திக் கொள்ளத் தக்க வகையில் ஒரு விந்தணு வங்கியை நடத்தி வருகிறதாம். குழந்தைப் பேற்றுக்கு வழியில்லாத கணவன்மார்களைக் கொண்ட பெண்கள் பயன்படுத்திக் கொள்ளத் தக்க வகையில் அந்த விந்தணு வங்கியை நடத்தி வந்தாலும், திருமணம் வேண்டாத பெண்களும் அதைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்துள்ளது. ஜப்பான் அரசு தன் நாட்டு யுவ, யுவதிகளைப் பார்த்து, திருமணம் செய்து கொள்ளாது போனாலும் பரவாயில்லை. குழந்தையாவது பெற்றுக் கொள்ளுங்களேன் எனக் கெஞ்சும் நிலையில்தான் உள்ளதாம் (பார்க்க–பக் வைரமுத்து பயணக்கட்டுரை)

சீன உதாரணம் இன்னும் கொஞ்சம் தூக்கல் அளவுக்கு மிஞ்சி குடும்பக்கட்டுபாடு முறையை வலியுறுத்தப்போக குடும்ப உறவுகள் சீர்குலைந்து போகத் தொடங்கியுள்ள நிலை அண்ணன் தங்கை, அக்காள், தம்பி போன்ற சகோதரத்துவ உறவு முறைகளில் ஒரு பெரும் நசிவு ஏற்பட்டுள்ளதால், பெருகி வரும் நைட்கிளப்புகளைக் கண்டு கொள்ள வேண்டாம் என வாய்மொழி உத்தரவே இடவேண்டிய நிலை.

மேற்கத்திய நாடுகளிலோ ஒரு எல்லையையே கடந்து விட்து. ஓரினச் சேர்க்கைக்கு, ஓரினச் சேர்க்கையாளர்கள் தம்பதி போல் வாழ்வதற்கு சட்டரீதியான அங்கீகாரம் பெறுவது வரை என சென்று விட்டது.**** நாமோ இன்னமும் இந்தியாவில் இதுபற்றி வாய் திறக்கவே அஞ்சுகிறோம். மௌனம் சாதிப்பதன் மூலமே பிரச்சனையைக் கொன்றுவிடலாம் என உள்ளோம். நம் சந்ததிகளை அவர்களுக்கான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு அடிப்படையான கருத்துப் பரிமாறல் சுதந்திரத்திற்கே ஆண், பெண் நட்புக்கே வழிவிடாது. முடக்கி மூச்சடக்கி வைக்கப் (பிராயசைப்படுகிறோம்) பார்க்கிறோம் (ஏதோ இப்போது சிறிது நிலமை அவ்வளவு மோசமில்லை என்ற போதிலும்) கற்பு, கற்பு எனப் பெண்ணைப் பொத்திப் பொத்தி ஒரு அளவுக்கு மேல் அடக்கியதன் விளைவு இன்று வேறு வடிவில் 18 வருடங்களுக்கு பிறகும் முந்தைய தலைமுறை சமூக அடக்குமுறையின் வடிவம் இந்தத் தலை முறையில் அன்புடன் அந்தரங்கம் என வெடிக்கிறது.

உண்மையில் இது 18 ஆண்டு குமுறல் அல்ல ஆயிராமாயிர ஆண்டுக் காலமாக அடக்கி வைக்கப்பட்ட அடக்குமுறை குமுறல் என்றே கூறுவேன். இவையனைத்திற்கும் மூல அச்சாணி பொருளாதாரத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஆணாதிக்கச் சமூகத்தின் ஒரு தலைப்பட்சமான (போலி) கற்பு, கலாச்சாரக் கோட்பாடு.

தற்போது நவீன மரபணுச் சோதனை முறைகளும் காப்பாற்ற முடியாத ஒரு முட்டுச் சந்தில் மனித குலம் (குறைந்தபட்சம் சொத்துடைமை வர்க்கங்கள்) நிற்க வேண்டிய அவலம் எழுந்துள்ளதே?!

பொதுவுடைமை தத்துவத்தின் பிதாமகர்களில் ஒருவரான எங்கெல்ஸ்தான் இப்படிக் குறிப்பிடுவார். தனது, “குடும்பம், தனிச்சொத்து, அரசு இவற்றின் தோற்றம்” நூலில் (பக் 176) “புணர்ச்சி சட்டப்பூர்வமானதா இல்லையா என்பது மட்டுமல்ல கேள்வி, பரஸ்பரக் காதலிலே விளைந்ததா அல்லவா என்றும் கேட்கப்படுகிறது.” கடைசியாக, புணர்ச்சியை மதிப்பிடுவதற்கு ஒரு புதிய தார்மீக அளவுகோல் கிடைக்கிறது.

இன்று அவர் இருந்திருந்தால் கூடுதலாக, “கருத்தரிப்பு (நிகழ்வுமுறை -(Mode) சட்டப் பூர்வமானதா இல்லையா என்பது மட்டுமல்ல கேள்வி, பரஸ்பரச் சம்மதத்துடன், காதலுடன் நிகழ்ந்ததா இல்லையா என்றும் சேர்த்திருப்பார்

1. நன்றாக கவனிக்க வேண்டும் “கருகலைப்பல்ல”! கருத்தரிப்பே சட்டப்பூர்வமானதா இல்லையா என்று சேர்த்திருப்பார் எனத் தான் கூற வருகிறேன். மேலை நாடுகளில், இதுவரை கருக்கலைப்பு உரிமையை சட்டப்பூர்வமாக்கு என்று கோரி தான் இதுவரை கொடி பிடித்து கோஷம் போட்டதைப் பார்த்திருக்கிறோம். கூடவே இனி, முதன் முதலாக கருத்தரிப்பு (நிகழ்வு முறை) பற்றியும் விரைவில் பெரும் சர்ச்சையை எதிர்பார்க்கலாம் என்றும் தோன்றுகிறது. ஆம் நிலைமைகள் அப்படிதான் காட்டுகின்றன.

2. “இருக்கின்ற உறவுகள் ஒரு நிகழ்வை அவசியப்படுத்துகின்றன என்பதை நிரூபித்து விட்டால், எத்தகைய வெளிப்புறச் சந்தர்ப்பங்கள் அதை மெய்யாகவே தயாரிக்கின்றன என்பதையும், ஏற்கனவே அது தேவையானதாக இருந்தாலும், அதைத் தயாரிக்க முடியாதிருக்கின்ற சந்தர்ப்பங்களையும் கண்டறிவது இனியும் கடினமான காரியம் அல்ல “என்ற மார்க்ஸின் புகழ்பெற்ற வாக்கியத்தை பொன்மொழியை சமூகவியல் சூத்திரத்தை தான் நினைவுபடுத்துகிறது. ஆனால் எது எப்படியோ, ஆக எங்கெல்ஸே கூட இன்று உயிருடன் இருந்திருப்பாரேயானால் அவரும் கூட, இன்று இப்படி இந்தளவுக்கு நிலைமை (கலவியே நிகழாது கருத்தரிப்பு நிகழ முடியும் என்றளவுக்கு) ஆகுமென்று நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார் என்றே நம்புகிறேன்.

*******நல்ல வேளை இப்போதாவது மெல்ல இங்கும் அங்குமிங்குமாக இதைப் பற்றிய ஒரு விவாதம் தெடங்கியுள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்களுக்குச் சங்கம் என்பது வரை ஒரு மாற்றம் எற்பட்டுள்ளது.

சந்நியாசத்தில் இருந்து கொண்டே சம்சார சாகரத்திலும்;

முட்டையிலிருந்து கோழியா ?! கோழியிலிருந்து முட்டையா ?! “கொடி அசைந்ததும் காற்று வந்ததா ?! காற்று வந்ததும் கொடி அசைந்ததா ?! திரை இசைப்பாடல் போல கலவியின் அனுபந்தம் சந்ததி உற்பத்தியா ?” சந்ததி உற்பத்தி நடை பெறுவதற்கான அனுபந்தமாக கலவி இன்பத்தை இயற்கை படைத்துள்ளதா ?! இதற்காக அதுவா ?! அதற்காக இதுவா ?!” எது எப்படியோ கடவுளோ அல்லது அந்த இயற்கையோ இவற்றைப் (கலவியையும் அதன் விளைவான கருத்தரிப்பையும்) பிரிக்க இயலாத ஈரணு மூலக்கூறைப் போல படைத்திருந்தாலும் இறுதியில் மனிதன் அதைப் பிரித்தே காட்டி விட்டான். இனி போலி ஒழுக்கம் பேசும் பிற்போக்கு மதவாதிக