(‘Vistor’s & view’s strength

  1. எனதினிய உலகத் தமிழ் நெஞ்சங்களே, இது வரை கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக ஆகியும் இது வரை எனதிந்த இவ்வலைப் பூவிற்கு வருகை தந்தவர்களின் (Visitors) மொத்த எண்ணிக்கையே-857 தான். மொத்த பார்வைகளின் எண்ணிக்கை (view’s strength) ஆயிரத்து நானூற்று எழுபத்து சொச்சமுமே-(1471). என்பதை நினைத்தால் மனதிற்கு மிகவும் வேதனையாய் தான் உள்ளது. இவையும் இந்தியா, அமெரிக்கா உட்பட உலகம் முழுவதுமுள்ள 21 நாடுகளிலிருந்து பெற்ற வருகையாளர்களின் மொத்த எண்ணிக்கை. வெளிப்படையாக இதைப் போட்டுடைப்பதில் எனக்கு எந்த வித வெட்கமும் இல்லை.வெட்கப்பட வேண்டியது உலகம் முழுவதுமுள்ள நமது தமிழ் சமூகமேத் தவிர நானல்ல.

இதே வலைப்பூ இந்நேரம் ஏதேனும் ஒரு பிரபல நடிக, நடிகையருடையதாய் /குறைந்த பட்சம் அழகிய பெண் ஒருவரின் வலைப் பூவாய் இருந்திருந்தால், தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் மட்டும் அல்ல, இந்தக் கோளம்/கிரகம் முழுவதுமே கூட இந்நேரத்திற்கு இவை ஒரு வைரல் ஆகியிருந்தாலும் ஆகியிருக்கக் கூடுமோ என்னவோ?! ஆனால் நானோ அப்படியெல்லாம் பிரபலமான நடிக நடிகையராகவோ, அழகியப் பெண்ணாகவோ இல்லையே.
ஆக, வருகையாளர் எண்ணிக்கையை கணிசமான அளவில் இன்னும் கொஞ்சம் அதிகரிக்கச் செய்வது என்பது பழைய வருகையாளர்களான உங்களைப் போன்றவர்களின் ஆதரவிலேயே உள்ளது.

உங்களுக்குத் தெரிந்த இன்னும் பலரைச் சென்றடைந்து இதன் பரவு தளம் அதிகரிப்பது என்பதும் உங்களைப் போன்ற பழைய வருகையாளர்களின் பரப்புரையையேக் கணிசமாக சார்ந்துள்ளது. ஆதலால் ஒத்தக் கருத்துள்ளவர்கள் இதை தங்களுக்குத் தெரிந்த மேலும் சிலத் தொடர்பு வட்டங்களுக்கு அறிமுகம் செய்யுமாறும் பேரன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

முகநூலில் என்னைப் பின் தொடர, இனங்காண, Valar pirai எனத் தேடவும். முகநூலில் வளர்பிறை என்ற பெயரில் பலர் உள்ளதால் எனை அடையாளம் காண ப்ரொஃபைல் பிக்சராக நான் வரைந்த ஒரு ஆயில் பெயிண்டிங் (ஒரு சிறு குழந்தையின் முகம்) ஒன்று இருக்கும். (அதை எப்பொழுதும் மாற்ற மாட்டேன் என்பதால் அதுவே எனது மாறாத அடையாளம்). ட்விட்டரில் Valarpirai@valarpirai5. என்ற பெயரிலும் எனது பதிவுகளைப் பார்க்கலாம்.

நான் ஒரு தொழில் முறை வலை தள வடிவமைப்பாளன் அல்லன் என்பதாலும், மேலும் இதற்காகக் கூடுதல் செலவிடும் நிலையில் (தற்சமயம்) இல்லாததாலும், சரியான உகந்த புரவலர்களைத் தேடி எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருப்பதாலும் இப்போதைக்கு இவ்வலைப் பூவைத் தொழில் முறை வலை தள வடிவமைப்பாளர் கொண்டு மேலும் மெருகேற்றம் செய்ய இயலாத நிலையிலேயே உள்ளேன்.

ஆதலால் தான் அக் குறையை ஓரளவேனும் ஈடு செய்யும் விதமாய் இந்த மொத்த வலைப் பூ சாராம்சத்தின் Pdf Format ஐயும் பதிவேற்றம் செய்துள்ளேன். அதில் கொஞ்சம் புகைப்படங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. வண்ண எழுத்துருக்கள் கொண்டு மெருகேற்றமும் செய்யப்பட்டுள்ளன. வலைப் பூவிலுள்ள வறண்ட டெக்ஸ்ட் மட்டுமே கொண்ட வலைப் பூப் பக்கத்தைக் காட்டிலும், அந்த Pdf வடிவம் அலுப்பூட்டாத வடிவத்தில், வண்ண எழுத்துரு புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதால், அப் பி.டி.எஃப் வடிவத்தில் படிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். எனது இந்த வலைப் பூ வருகையாளர்களில் யாரேனும் தகவல் தொ.நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள் யாரேனும் இருந்தால், இவ் வலைப் பூ வடிவமைப்புக்கு, மெருகேற்றத்திற்கு உதவுமாறும் கோருகிறேன். அல்லது ஏதேனும் புரவலர் நிதியாக அளித்தாலும் உவப்பே.

  • அதிகக் கூடுதலான பார்வையாளர்களை ஈர்த்தெடுப்பதற்காக மட்டுமல்ல, ஒரு பார்வையாளர் மேலும் சில, மற்ற பார்வையாளர்களுக்கு இவ்வலைப் பூவை அறிமுகப்படுத்துவதற்கும் கூட, அதற்கேற்ற வகையில் இது ஒரு குறைந்த பட்ச மெருகேற்றமும் (பார்வைக்கு வறண்ட டெக்ஸ்ட் மட்டுமே கொண்டுள்ள இவ்வலைப் பூக் குறைந்த பட்சம் புகைப்படம் கொண்டு) கூட இது வரை இவ்வலைப் பூ மெருகேற்றம் செய்யப்பட்டிருக்கவில்லை என்பதையும் ஒத்துக் கொள்ளவே செய்கிறேன். அனைத்தையும் சரி செய்ய என்னால் இயன்றளவு முயன்று கொண்டும் உள்ளேன்.

வலைப் பூ சாராம்சம் குறித்த ஒத்தக் கருத்துள்ளவர்கள் இதுகுறித்தத் தங்களின் மேலான ஆலோசனைகள் ஏதுமிருப்பின் பின் வரும் எனது (இந்தியத்) தமிழக வாட்ஸ் ஆப் எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன். +919952456889, +919585025889, +918807045889, +918760304889. இந்த 4 எண்களில் ஏதேனும் ஒரு எண்ணில் கட்டாயம் கிடைப்பேன்.

கடந்த 2016 வருட மொத்தப் பார்வையாளர்கள் மற்றும் பார்வைகளின் எண்ணிக்கை விபரம். (நாடு வாரியாக)

Edit

2017 – ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31- வரையிலான வருகையாளர்கள் மற்றும் பார்வைகளின் எண்ணிக்கை விபரம் நாடு வாரியாக.

2018-ம் ஆண்டு ஜனவரி 15 (பொங்கல்) வரை வருகையாளர்கள் மற்றும் பார்வைகள் நாடு வாரியாக

2016………..245, 2017………497 ஆக 2018 ஜனவரி முதல் மார்ச் 8 வரையிலான, இதுவரையிலான இரண்டே கால் வருட காலத்தில் 27 நாடுகளிலிருந்து (இந்தியா உட்பட) மொத்தப் பார்வையாளர்களின் எண்ணிக்கை…. 860

Advertisements