வைரல் ஆக்க உதவுங்கள்.

நண்பர்களே, உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் கூறும் நல்லுலகைச் சேர்ந்த தமிழர்களே உலகமுழுவதுமுள்ள முகநூல் அன்பர்களே, வாட்ஸ் ஆப் தோழர்களே மேற்கண்ட / கீழ்கண்ட. ஸ்கிரீன் ஷாட்கள் எனது வலைப் பூவைப் பார்வையிட்டவர்களின் நேற்றைய, இன்றைய கடந்த மாத, கடந்த ஆண்டுப் பார்வைப் பட்டியல் (நாடு வாரியாக) இது. கடந்த ஆண்டு முழுவதும் என்ன முயற்சித்தும் மொத்தப் பார்வையாளர்களின் எண்ணிக்கையை 245 க்கு மேல் உயர்த்தவே இயலவில்லை. ஆனால் இந்த ஆண்டு அப்படி அமையாது என்றே நம்புகிறேன்.
கடந்த 2016 -ம் ஆண்டுப் பார்வையாளர்களின் மொத்த எண்ணிக்கை (நாடு வாரியாக)

இந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31 வரையிலான மொத்தப் பார்வையாளர்களின் எண்ணிக்கை (நாடு வாரியாக)

2018-ம் ஆண்டு பொங்கல் வரையிலான பார்வையாளர்கள் மற்றும் பார்வைகள் எண்ணிக்கை விபரம்.


இப்போது நான் உங்களிடம் கோருவதெல்லாம், எனது இந்த அபாயகரமான, பயணத்தில் நீங்களும் என்னோடு இணைந்து கொள்ளுங்கள் என்ற கோரிக்கையை கூட அல்ல. பதிலாக இந்த அபாய நுனியின் கூர் நுனியை நோக்கி என்னை உந்தித் தள்ளும் ஒரு ஸ்கிராம் ஜெட் என்ஜினைப் போல உதவுங்கள் என்பதே. அதற்கு விவேகானந்தர் தேடிய இளைஞர்ளைப் போலவே எனக்கும் ஒரு டஜன் தமிழ் இளைஞர்களாவது தேவைப்படும் போல் உள்ளது. உலகையே மாற்ற விரும்பிய அவருக்கு தியாகமும் வலிமையும் பொருந்திய ஒரு சதம் இளைஞர்களாவது தேவைப்பட்டது. அவரது அந்த ஆசை தேவை எந்தளவு நிறைவேறியது என்று தெரியாது. அதே போல ஒட்டு மொத்தத் தமிழ் சமூகத்தையே புரட்சிகரமான புத்துயிர்ப்புச் சமூகமாக அதன் அடிப்படைக் கட்டமைப்பையே மாற்றிப் பார்க்க வேண்டும் என்ற எனது ஆசையும் எந்தளவுக்கு நிறைவேறும் என்பதை இறுதியாகக் காலமும் சூழலும் தான் முடிவு செய்ய முடியும். விவேகானந்தர் தேடியதைப் போலவே அப்படிப்பட்ட ஒரு டஜன் இளைஞர்களாவது எனக்கும் தேவைப்படுவர் போலுள்ளது.

நெருப்பைப் போன்ற ரஜோ குணமிக்க விவேகானந்தருக்கே அவரது தேடலுக்கேற்ற, ஆசைக்கேற்றபடி அமைந்த இளைஞர்கள் கிடைத்தார்களா என்பது சந்தேகம் தான். அப்படியிருக்க எனக்கு மட்டும் எப்படி என்கிறீர்களா?! எல்லாம் சரி தியாகமும் வலிமையும் கொண்ட ரஜோ குணமிக்க இளைஞர்களைத் தேடுமளவுக்கு அவருக்கு, அவருக்கென்றே ஒரு பிரத்யோகத் தகுதி இருந்தது. அந்தத் தகுதி அத்தகைய தகுதி உங்களிடம் என்ன இருக்கிறது?! உங்களில் அநேகருக்கு இத்தகையக் கேள்விகள் எழலாம். வாஸ்தவம் தான். விவேகானந்தர் அளவுக்கு என்னிடம் தகுதிகள் இல்லாமல் போகலாம். அவர் ஒரு சன்யாசி. நானோ சம்சாரி. ஆனாலும் அவரைப் போன்ற ரஜோ குணமிக்க ஆன்மிகத் துறவிகள் கிடைத்தால், அத்தகையவர்களிடம் அப்படியே முழுமையாக என்னை ஒப்படைக்கக் கூடிய அளவுக்கு ஒரு அர்ப்பணிப்புணர்வு மட்டும் உண்டு. அவரைப் போன்றவர்களின் தியாகம் வீண் போய் விடக் கூடாது என்று நினைக்கக் கூடிய உண்மையான அவரது (மானசீக) சிஷ்ய பரம்ரையைச் சேர்ந்தவன். கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனினுக்கு முன்னமேயே என் வாழ்க்கையில் தியாகம் என்ற வார்த்தைக்கான இலக்கணத்தை என்னுள் விதைத்த மாமனிதர் அவர். அவர் அளவுக்கு எனக்கு ஒரு தகுதி இல்லாது போயினும் அவரின் அடியொற்றிப் பின்தொடரும் யோக்யதைக்குப் பங்கமில்லாதவனாகவே என்னைக் கருதுகிறேன்.

ஒரு பத்து பேர் அல்லது டஜன் பேர் கொண்ட ஒரு டீம் மட்டும் இதே போல எனக்கிருக்கும் அதேயளவு ஆர்வ நெருப்புடன் ஒரு தன்னார்வலர்களாய் செயல்பட (ஒரே ஒரு டஜன் பேர் கொண்ட ஒரு குழு) முன்வருவார்களேயானால் தலைக்கு நாள் ஒன்றுக்கு 3 ஏ 3 பேருக்கு எனது வலைப்பூவைப் பரப்பினால் கூட ஒரே வருடத்துக்குள் பத்தாயிரம் பேருக்குக் குறைவில்லாமல் (ஒரு வருடம் முழுவதற்குமான ஒரு குறைந்த பட்ச டார்கெட்டாக இலக்கு நிர்ணயம் செய்து இதை ஒரு வைரல் ஆக்கும் முயற்சியில் ஈடுபடுவார்களேயானால்) பரப்ப முடியும், ஒரு வைரலும் ஆக்க முடியும். ஒரே வருடத்துக்குள் ஒரு பத்தாயிரம் பேரை அயல் நாடு வாழ் தமிழர்களிடம் எட்ட முடிந்தால் விரைவில் அது உள்ளூர் உலகத் தமிழர்கள் என எப்படியும் லட்சம் பேரை எட்டி விடும் என நம்புகிறேன். ஒரு பெரும் (சமூக) நெருப்பை உருவாக்கத் தேவையான ஒரு சிறு நெருப்புப் பொறியைப் போன்றது தான் எனது இப்பணியும். அச் சிறு நெருப்புக்குத் தேவையான முதல் ஆகுதியாக (ஆகுதி – வேள்வித் தீயை மூட்ட உதவும் நெய், விறகு, சுள்ளி, உமி போன்ற பொருட்கள்) எனையே எனது உடல், உயிர், ஆன்மா என அனைத்தையுமேக் கூட அர்ப்பணிக்கக் தயார் தான்..

ஆனால் அது ஒரு சிறு நெருப்போ, பெரு நெருப்போ எந்த ஒரு நெருப்பும் (நிறையீர்ப்பு விசையின் ராட்சச நசுக்கத்தால் எழும் சுயம்பு நட்சத்திர நெருப்புகள் தவிர்த்து மற்ற எந்த ஒரு சிறு, பெரு நெருப்பும்) மிக அபூர்வமான இயற்கைத் தருணங்கள் தவிர்த்து தானே தன்னை ஊதிப் பெருக்கிக் கொள்ள இயலாது. ஊதுலை நெருப்பின் நெருப்புக் கங்கை அவ்வப்போது உலைத் துருத்தி கொண்டு ஊதி அணையவிடாமல் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு பொற்கொல்லனின் (துருத்தல்-ஊதல்) முயற்சியைப் போன்றது தான் நான் அவ்வப்போது உங்களோடு வாட்ஸ் அப், முகநூல் வாயிலாகத் தொடர்பிலிருப்பது என்பது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளர்ந்து விட்ட ஒரு வயற்காட்டு நெருப்பிற்கு (அல்லது ஒரு காட்டுத் தீக்கு) எப்படிப் புறத்திலிருந்து ஏதும் அதிக உதவிகள் தேவைப்படாதோ அப்படியே எனது வலைப்பூவை வைரல் ஆக்க நினைக்கும் எனதிந்த முயற்சிக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு பார்வையாளர்களின் எண்ணிக்கை கட்டாயம் தேவையே.

ஓரளவு அவ்வெண்ணிக்கையை எட்டியதும் அதற்குப் பின், பெருத்த அர்ப்பணிப்பு முயற்சிகள் என (dedicated co-operation, activities) எதுவும் தேவைப்படாது. வளர்ந்த மரத்திற்குப் பராமரிப்பு எதுவும் தேவைப்படாது. இளஞ்செடிக்குத் தான் வேலியிட்ட பராமரிப்புத் தேவை.
அதற்காக எனது வலைப் பூ சாராம்சத்தை ஒரு நெறிப்படுத்தப்படாத நெருப்பாகவும் நினைத்திட வேண்டியதில்லை. அது ஏற்கனவேயே காட்மியம் கழிகளால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு அணு உலை நெருப்பைப் போன்றது தான்.

அது ஒரு முழு வீச்சில் இயக்கத்துக்கு வருகையில் நம் தமிழ் சமூகத்தின் அனைத்து அழுக்குகளையும் சுட்டெரித்து இச்சமூகத்தைப் புடம் போடும் ஒரு பொற்கொல்ல நெருப்பாக அமையுமே ஒழிய, தமிழ் சமூகத்தின் நலனுக்கெதிரான கூடங்குள அணு உலைக் கழிவாய் அமையாது. அனைத்தும் எனக்கு வெளியே உள்ள மனசாட்சியுள்ள, சமூகக் கடமையும், பொறுப்புணர்வும் உள்ள மெத்தப் படித்த, சிந்திக்கும் வர்க்கங்களிடையே இருந்து எழக் கூடிய ஆதரவையும் ஒத்துழைப்பையும் பொறுத்து இருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக எனது வலைப்பூவைக் கூட விடுங்கள் முகநூல் பக்கத்துக்கு (அவ்வப்போது எழும் பிரச்னைகளை ஒட்டிய பதிவுகளுக்கே) ஒரு லைக் கொடுக்கவே அஞ்சும் அளவுக்குத் தான் உள்ளது நம் நடுத்தர அறிவு ஜீவி வர்க்கத்தின் துணிச்சல் குணம் என்பது.

எனது வலைப் பூவின் சாராம்சத்தில், ஏதேனும் சுயநலத்தின் கூறுகள் உண்டா?! என்பதற்கான பதிலை நானே நேரடியாகக் கூறுவதை விட, எனது வலைப்பூவையே நேரடியாகப் பார்வையிட்டு படித்துப் பார்த்து விடுவது தான் இதற்கு சிறந்த ஒரு பதிலாய் அமையும். என்னுடைய இந்தப் பணிக்காக என்னுடைய சமூகவியல் மதிப்புகளனைத்தையும் அழித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் என்னுடைய சர்வைவல் தகுதிறனைக் கூடத் (ஒரு கட்டுமானப் பொறியாளர் – Civil engr என்ற அடையாளத்தைக் கூட) தியாகம் செய்துவிட்டேன் என்பது தான் அப்பட்டமான ஒரு அசல் நிர்வாண உண்மை. இதை நானே ஒரு சுயதம்பட்டம் போலக் கூறிக் கொள்ளக் கூடாது தான் என்ற போதிலும் எனக்கு வேறு வழியில்லை.

ஏனெனில் தியாகம் என்ற வார்த்தையை உச்சரிக்கவே ஒரு தகுதி வேண்டும் என்ற நிலைபாடு கொண்டவன். உண்மையான தியாகம் என்பது, அதாவது தியாகப் படிநிலையின் உச்சாணியில் உள்ள முதல் தரத் தியாகம் என்பது நான் தியாகம் விட்டேன் என்று கூட, ஒரு முகக் குறிப்பால் கூடப் பீற்றிக் கொள்ளாது. அதை நெருங்க அல்ல, தியாகம் என்ற அந்த சொல்லை உச்சரிக்கவே ஒரு தகுதி வேண்டும். சுவாமி விவேகானந்தரின் வாழ்வை அத்தகைய ஒரு உயர்ந்த பட்ச தியாகத்திற்கானக் குறியீடாகவே பார்க்கிறேன். ஆக பார்வையாளர்களான உங்களை எல்லாம் அப்படி ஒரு உயர்ந்த பட்ச தியாகக் குறியீடாக இருக்கவோ அல்லது சர்வைவல் தியாகங்களையோ கூட மேற்கொள்ளச் சொல்லவில்லை.

வெட்டியான மொக்கை அரட்டைகளில் ஈடுபடும் நேரங்களில், அப்படியே போகிற போக்கில் சாத்தியப்படும் போதெல்லாம் ஒரு பத்து பேருக்கு எனது வலைப் பூ பற்றிய அறிமுகத்தை அறிமுகப் படுத்தி வையுங்கள் என்பதே எனது கோரிக்கை. வேறென்ன வேலைச் சிறையில் மாட்டி விட்டதால் முன்பு போல அதிகம் பதிவுகள் இட முடிவதில்லை.

https://sathukkapootham.blogspot.com.

ஆனால் எனது எண்ணம் திண்ணம் பெறுவது அவ்வளவு எளிதல்ல என்பதை இவ்வாண்டின் அமெரிக்கப் பார்வையாளர்களின் எண்ணிக்கைப் புள்ளி விபரம் மிகக் கேவலகரமான எண்ணிக்கையில் சுருங்கியிருப்பதன் வாயிலாகவேப் புரிந்து கொள்ள முடிகிறது. அதுவும் இந்த வீழ்ச்சி ட்ரம்பின் பதவிக் காலத்திலிருந்து தான் தொடங்கியுள்ளது என்பதிலிருந்தே நம் அமெரிக்க வாழ் சகோதர்களின் மனநிலை எத்தகைய ஸ்திதியில் உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

கடக்க வேண்டிய எதிர்காலப் பயணம் எவ்வளவு இடர் மிகுந்தது என்பதையும் துலக்கமாகப் புரிய வைத்துள்ளது. எப்படியும் அதற்காக எடுத்த முயற்சியையும் கைவிட்டு விடப் போவதில்லை. எனை அச்சமூட்டிக் கொல்லும் கூர் வாளாய் எனை சிதைத்துக் கொன்று கொண்டிருப்பதுஇப்போதைக்கு எனது வறுமை தானே ஒழிய, அமெரிக்காவோ அதன் அச்சுறுத்தல்களோ அல்ல. அமெரிக்க வாழ்த் தமிழ் பார்வையாளர்கள் இதை ஒருப் பரப்புரை செய்யவே தயங்குவார்களேயானால், அழிந்து கொண்டிருக்கும் தங்களது வேர்கள் பற்றியே அக்கறை கொள்ளாதவர்கள் என்று தான் அர்த்தம். பார்வையிடவே தயங்குவார்களேயானால், எனது இத்தளத்திற்கு ஒரு வருகைப் பதிவை அளிக்கவே தயங்குவார்களேயானால் அது நஷ்டம் அவர்களுக்கேயன்றி எனக்கல்ல. குறிப்பாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள அமெரிக்க வாழ்த் தமிழர்கள் அதிலும் குறிப்பாக மைக்ரோ ஸாஃப்ட்டில் முதலீடு செய்துள்ள அமெரிக்க வாழ்த் தமிழர்களாவது அவசியம் எனது வலைப் பூவை பார்வையிடுவது மிக மிக அவசியம். காலத்தின் கட்டாயம். அவ்வாறு பார்வையிடுவதன் வாயிலாகத் தவிர்க்கக் கூடாத ஒரு எச்சரிக்கைப் பலனை அடையப் போவதோ அல்லது இழக்கப் போவதோ முற்றிலும் அவர்கள் தானே ஒழிய, நானல்ல.

எனது உயிரையே ஒரு பணயமாய் வைத்து விடும் எச்சரிக்கை இது. உண்மை நிலை இப்படியிருக்க இவ்வலைப் பூத் தளத்திற்கு ஒரு வருகை தரவே ஏன் இத்தனை பயம் கொள்கிறார்கள்? என்பதுவும் எனக்குப் புரியவில்லை. ஒரு வலைப் பூவைப் பார்வையிட்டதெற்கெல்லாம் உலகின் எந்த ஒரு அரசாங்கமும் உடனே தண்டித்து விடப் போவதில்லை. அப்படியே தண்டிக்கப்பட்டாலும் முதலில் தண்டிக்கப்படுபவன் நானாகத் தான் இருக்க முடியும். மேலும் இந்த ஆட்டம் முற்றிலும் அமெரிக்க வாழ்த் தமிழ்ப்பார்வையாளர்களால் மட்டுமே நிகழ்த்தி விடக் கூடிய ஒரு ஆட்டமுமல்ல, உலகம் முழுவதுமுள்ள அனைத்துத் தமிழர்களும் கருத்தொற்றுமையுடன் சேர்ந்து சேர்ந்திசைக்க வேண்டிய ஒரு தேர்ந்த சேர்ந்திசைப் பண்ணை(பாடலை அல்லது ஒரு சிம்பொனியை)ப் போன்றது இந்த ஆட்டம். இந்த இசையின் அல்லது ஆட்டத்தின் முதல் பல்லவியும், அனுபல்லவியும் அல்லது துவக்கத் திருப்பு முனை நகர்வுகள் அங்கிருந்து (அமெரிக்காவிலிருந்து) தான் துவங்க முடியும். அதற்கான சகல வாய்ப்புகளையும் அங்குள்ள அமெரிக்க வாழ்த் தமிழர்கள் பார்த்து நினைத்தால்,(பாதுகாப்பு மட்டத்தில் அமைந்த ஒரு ரிஸ்க்கையும் கூடவே எடுக்கத் துணிந்தால்) ஏற்படுத்தித் தர முடியும். ஒரு பிரளயத்தையே ஏற்படுத்த முடியும். சற்றுத் தொலைநோக்குடன் சிந்தித்துப் பார்த்தால் நாடற்ற ஏதிலி நிலை வாழ்விலிருந்து நம் தமிழினம், (நமது சந்ததிகள்) தப்பிக்கவே கூட இதற்குள் ஒரு வழி(லி)யிருப்பதையும் உணர முடியும். அந்த அர்த்தத்திலேயே அங்குள்ள அமெரிக்க வாழ்த் தமிழர்களுக்கு இதில் ஒரு மாபெரும் ரோல் ப்ளே உண்டு என்று கூற வருகிறேன்.

அதே நேரத்தில் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளையும் அங்கு வாழும் (போய் செட்டில் ஆகியிருக்க வேண்டும் என்ற அவசியம் கூடக் கிடையாது படிப்பு, வியாபார, வேலை நிமித்தம் போன்ற ஏதேனும் ஒரு காரணம் பொருட்டு அங்கே அவர்களின் இருப்பு… இருப்பு…..! நிகழ்ந்திருந்தால் கூடப் போதும் என்கிறேன்.)

.

அங்குள்ள ரஷ்ய, சீன வாழ்த் தமிழ் பார்வையாளர்களும் (இது விஷயத்தில் அவர்களும்) மிகப் பெரிய ஒரு ரோல் ப்ளே செய்ய முடியும். நான் எதிர்பார்க்கும் சில நிகழ்வுகளுக்கு, எந்த சில நிகழ்வுகள் நடந்தால் அது உலக மானுட குல நன்மைகளுக்கு ஒரு வித்திடுமோ அந்த சில நிகழ்வுகளுக்கு மேற்குறிப்பிட்ட நாடுகளிலுள்ள தமிழ் வாழ் பார்வையாளர்களின் இருப்பும் பங்களிப்பும் கூட மிக மிக அவசியமே.

அத்திப் பூத்ததைப் போல் அத்தகைய பார்வையாளர்களே எங்கே ஒருவரைக் கூடக் காணோமே என்ற ஏக்கத்துடன் இருந்த என் எண்ண வாட்ட( மேக)ம் கலையும் விதத்தில், இதோ இன்று ரஷ்யாவிலிருந்தும் ஒருத் தமிழ் பார்வையாளர் முகிழ்த்துள்ளார். மனதிற்கு இது மிகவும் ஆறுதலாய் இருப்பினும் இது போன்ற கானல் ஆறுதல்களைக் கொண்டே கரையேறி விட முடியாது. உலகம் முழுவதும் 6,7 லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் கொண்ட பல முன்னணிப் புரட்சிகர தமிழ் சமூக ஊடகங்களே, பத்திரிக்கைகளே சாதிக்க முடியாததை வெறுமனே வெறும் சில ஆயிரம் பார்வையாளர்களைக் கூடக் கொண்டிராத எனது வலைப் பூ சாதித்து விடுமா என்ன?! என்றால் …. யார் கண்டது?! சில நேரங்களில் எல்லாம் இருந்தும் தோற்பவரும் உண்டு. எதுவுமே இல்லாதவன் ஜெயிப்பதும் இங்கு உண்டு.

வெறுமனே வெறும் பார்வையாளர்களே இந்த ஆட்டத்தை நிகழ்த்தி விட முடியுமா என்றால், அதுவும் இயலாது தான். ஆனால் அவர்களுக்கும் இந்த ஆட்டத்தில் அவர்களுக்கேயுரிய ஒரு ரோல் ப்ளே உண்டு. ஜட அசத்துப் பொருளான அணுவுக்குள்ளேயே இந்தப் பார்வையாளர் பாத்திரம் வகிக்கும் முக்கிய பங்கு புறக்கணிக்க முடியாதது எனில் உயர் சித்துப் பொருளாகிய உயிர்களில், மனிதர்களாகிய நம் போன்றவர்களில் பார்வையாளர் நிலை பற்றிக் கூறிடவும் வேண்டுமா என்ன?! ஒரு உயிர்ப்புள்ள பார்வையாளர் எந்த நேரமும் வெறுமனே ஒரு பார்வையாளராகவே இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எந்த நேரமும் ஒரு பங்கேற்பாளராகவும் மாற முடியும் என்பதே இங்கு ஆட்ட விதி.

உண்மையில் இந்த ஆட்டத்தின் உண்மையான முதல் துவக்க ஆட்டக்காரர்கள், துவக்க பங்கேற்பாளர்கள் (Opening bats mans) மைக்ரோ சாஃப்ட் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் சர்வ தேச முதலீட்டாளர்கள் தான். அவர்கள் பார்த்து எடுக்கும் எந்த ஒரு முன்முடிவும், முன்நகர்வும் இன்று அமெரிக்காவையே கூடக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு சர்வ வல்லமையைப் பெற்ற ஒன்று என்றால் அது மிகையாகாததே.
ஆனால் ட்ரம்ப் வருகைக்குப் பிந்தைய காலமான இந்த 2017-ல் அமெரிக்கப் பார்வையாளர்கள் நிலவரம் மனதிற்கு மிகவும் கவலையளித்திருந்த நிலையில் பொதுவுடமைத் தேசத்திலிருந்து பூத்த அந்த ஒரே ஒரு அத்தி மலர் பார்வையாளர் மனதிற்கு ஒரு இதம் சேர்க்கும் ஒரு மகிழ்ச்சிப் பார்வையாளராய் காட்சியளிக்கிறார். அவர் போன்றவர்கள் மூலம் எதிர் காலத்தில் மேலும் சிலப் பல ரஷ்ய வாழ்த் தமிழர்களுக்குப் பரவ வேண்டும். இறுதியாய் அங்குள்ள சிலப் பல முக்கிய நாட்டுப் பற்றுள்ள ரஷ்யக் குடிமகன்களையும் எட்ட வேண்டும். அப்படி எட்டினாலே போதும். நான் எதிர் பார்க்கும் அந்த ஒரு சில நல்ல நிகழ்வுகள் அந்த ரஷ்யத் திருநாட்டிலிருந்தே துவங்கினாலும் துவங்கும். அப்படி நிகழ்ந்தால் அதுவும் சம்மதமே, சந்தோஷமே. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவனே போற்றி எனும் எம் சிவம் யாரைக் கொண்டு என்ன நிகழ்த்தத் திருவுளம் கொண்டுள்ளதோ அது நிகழட்டும்.

Advertisements