ஆளுக்கொரு டூத் பிரஸ் செலவு! எனக்கோ அது அஸான்ஜேவைச் சந்திப்பதற்கானதொருப் பயணச் செலவு

இந்தப் பணியில் தேவையேற்படின் அதற்காக எனதின்னுயிரையும் பணயம் வைக்கக் கூட நான் தயார். ஆனால் எனது பயணச் செலவுகளுக்கு மற்றும் இந்தக் காரியங்களையெல்லாம் செய்வதற்கான செலவுகளுக்கு மட்டும் ஒரு சிறு நிதியை உலகத் தமிழர்களாகிய நீங்களனைவரும் சேர்ந்து ஸ்பான்ஸர் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன். ஆளுக்கொரு டாலர், பவுண்ட், யூரோ ஸ்பான்ஸர் செய்தீர்கள் என்றால் கூடப் போதும், அஸான்ஜேவின் காதுகளுக்கு இந்த விஷயத்தை (அதாவது எனது வலைப் பூச் சாரத்தைக்) கொண்டு போய்ச் சேர்த்து விடுவது என்பது அது எனது பொறுப்பு. ஆனால் எப்படியும் இலவசமாக அல்ல. 8,9 கோடித் தமிழர்களுக்கு இலவசமாக இதைப் பொது வெளியில் வெளியிட்டு விட்ட நான் இதை அஸான்ஜேவுக்கு மட்டும் இலவசமாகக் கொடுத்து விடக் கூடாது என எண்ணுவது எனது தனிப்பட்ட சுயநலன் கருதியல்ல. பதிலுக்குத் தமிழ் சமூகத்திற்கேப் பயன்படக் கூடிய ஒரு விஷயத்தை, ஏன் இந்த நம் ஹிந்தியத் துணைக் கண்டத்திற்கேப் பயன்படக் கூடிய சில விஷயங்களை முதலில் அவரிடமிருந்து நாமும் கறந்து கொள்ள வேண்டுமென்று எண்ணிணால் அது எப்படித் தவறாக முடியும்.?! நாம் காசு பணம் அஸான்ஜேவைக் கேட்கப் போவதில்லை. நாம் அவருக்குப் பயன்படக் கூடும் எனக் கருதும் ஒரு தகவலை அவருக்கு அளிக்கிறோம். பதிலுக்குப் பதில் உபகாரமாக நாம் அவரிடம் கைவசம் உள்ள சிலத் தகவல்களைக் கேட்கப் போகிறோம் அவ்வளவே. மேலும் அது என்னால் மட்டுமல்ல இலண்டனில் உள்ள கூடவே சற்றுத் தைரியமும் உள்ள எந்தத் தமிழன் முயன்றாலும் அது அவர்களால் முடியக் கூடிய, இயலக் கூடிய ஒரு செயல் தான் இது என்றும் நம்புகிறேன். வேறு யார் இம் முயற்சியில் ஈடுபட்டாலும் அவர்களும் தாராளமாக ஈடுபடலாம். முயற்சிக்கலாம். தடையொன்றுமில்லை, ஆனால் வேறு யார் இந்த முயற்சியில் ஈடுபட்டாலும் சரி அவர்களுக்கு அத்தகைய தமிழர்களுக்கு எல்லாம் நான் சொல்லிக் கொள்ள விரும்பும் செய்தியெல்லாம் ஒன்றே ஒன்று தான். இந்தக் காரியத்தில் ஈடுபடுபவர்கள் இதன் மதிப்புத் தெரிந்தவர்களாய் இருக்க வேண்டும். இதன் மதிப்புத் தெரிந்திருந்தால் மட்டும் போதாது, நன்கு சரியாகத் திட்டமிடாமல் எதையும் அவசரப்பட்டு சொதப்பி விடாதவர்களாகவும் கூடவே இருக்க வேண்டும்.………
( எப்போது இதைப் பொதுவெளியில் பிரசுரித்துவிட்டேனோ அப்போதே இதன் மீதான எனது 100% சதவீதக் கட்டுபாட்டையும் நான் இழந்து விட்டேன் என்று தான் அர்த்தம். எனது தனிப்பட்ட நலன் மட்டுமே பிரதானம் என எண்ணுபவனாய் இருந்திருந்தால் இதை நான் பொது வெளிக்கு இப்போதும் கொண்டு வந்திருக்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது.)
……… சற்று ஏமாந்தாலும் நமது தகவல்களின் மதிப்பு தெரியாமல் ஏமாந்தவர்களாய் கூட நாம் ஆகி விட வாய்ப்புகள் உண்டு. நம்மைப் பொறுத்த வரை இது நமக்கு ஒரு அற்பத் தகவலாய் கூடக் காட்சியளிக்கக் கூடிய இந்த அற்பத் தகவல் தான் ஒருவேளை அஸான்ஜேவைப் பொறுத்தவரை அவருக்கு ஒரு அற்புதத்தையே நிகழ்த்த காத்துக் கொண்டிருந்தாலும் காத்துக் கொண்டிருக்கக் கூடும். அவரது சகல நெருக்கடிகளிலிருந்தும் காப்பாற்றக் கூடிய ஒரு சர்வரோக நிவாரணித் தகவலாய் எடுத்த எடுப்பில் முதல் பார்வையிலேயே விளங்காது போனாலும் ஒரு இறுதி அலசலில் நிச்சயம் கட்டாயம் அப்படி விளங்க, காட்சியளிக்க ஒரு வாய்ப்பு இல்லாமல் இல்லை. ஆக இதை ஒரு மதிப்பு வாய்ந்த தகவலாய் உருமாற்றுவதோ அல்லது இதன் மதிபு தெரியாமல் இதைச் சீரழிப்பது என்பதோ இதைக் கையாள்பவரின் லாவகத்தை, அவரது தனித் திறத்தைப் பொறுத்தது என்பதால் தான் மிகக் கவன ஒழுங்குடன் ஆட வேண்டிய ஒரு ஆட்டம் என்கிறேன். அஸான்ஜேவிற்கு மட்டுல்ல நம் தமிழ் தேசத்திற்கும் (ஏன் இந்த ஹிந்தியத் துணைக் கண்டத்திற்கேப் பயன்படக் கூடிய மதிப்பு வாய்ந்த சிலத் தகவல்ளையும் இதன் மூலம் நாம் திறனிருந்தால் நாசூக்காக அடைய முடியும். ஆதலால் தான் இந்த ஆட்டத்தை சொதப்பல் சற்றுமில்லாத ஒரு நேர்த்தியுடன் ஆடத் திராணியுள்ளவர்கள் மட்டுமே இந்த ஆட்டத்தில் இறங்குமாறு வலியுறுத்த விரும்புகிறேன். ஒரு அலோக அணுவைப் போல முதலில் பேராசையுடன் ஏதேனும் பிடுங்குது தான் முதல் பிரதான நோக்கம் என்பதாகவும் காட்டிக் கொள்ள வேண்டியதில்லை. அல்லது ஒரு உலோக அணுவைப் போலத் தாராளக் கொடை வள்ளலைப் போலவும் ஏமாற வேண்டாம் என்கிறேன். கொடுக்கவும் வேண்டும் அதே நேரம் கொடுத்து வாங்கவும் தெரிந்திருக்க வேண்டும். போட்டு வாங்கிட்டாரு என்போமே அதைப் போல ஒரு இலாவகத்துடன் கையாள வேண்டிய ஒரு விஷயம். வாங்கிக் கொண்டு தான் நமது தரப்பு தகவல் உதவியை அவருக்கும் வழங்க வேண்டும். அதே நேரம் இதை மிகக் கறாரான ஒரு வியாபார ஒப்பந்தத்தைப் போலவும் நடத்தி விட மிடியாது. அங்குள்ள சூழலுக்கேற்ற ஏதேனும் ஒரு (பொருந்திப் போகிற) நடைமுறை உத்தியைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். எல்லாவற்றையும் இங்கிருந்து கொண்டேயும் முடிவு செய்து விட முடியாது. இல்லையெனில் நாம் ஏமாந்தவர்களாய் முடியவும் ஒரு வாய்ப்பு இல்லாமல் இல்லை.

மேலும் அவரும் இப்போது ஒரு நெருக்கடியில் உள்ள மனிதரே. நிச்சயம் அவருக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை எனது இந்த வலைப் பூச் சாராம்சத்தை மட்டும் அவர் சரியாகப் பயன்படுத்தும் பட்சத்தில், கட்டாயம் எனது வலைப் பூச் சாராம்சம் முற்ற முழுக்க, அவருக்கொருப் பூரண விடுதலையையே ஏற்படுத்திக் கொடுக்கக் கூடியது என்றும் நான் நம்புகிறேன். ஒன்றும் பெரிய நுட்ப திட்பமெல்லாம் தேவையில்லை. பார்த்த மாத்திரத்தில் அல்லது இந்த வலைப் பூச் சாராம்சத்தின் ஒரு ஒன் லைன் Knot (ஒரு வரிக் கதைச் சுருக்கத்தைக்) கேட்ட மாத்திரத்திலேயே விஷயம் வெளிப்படையாகப் புலப்பட்டு விடுகிற ரீதியிலே தான் இதை வெளிப்படுத்தியுள்ளேன். இதை இன்னமும் புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமானால் நான் ஏதும் பாரம்பர்ய, தூய சாஸ்திரிய அறிவியலில் (Physics, chemistry, biology, மற்றும் Material science -லிலும் கூட) எந்த வித கண்டுபிடிப்புகளையும் செய்து விடவில்லை தான். ஆனால் சமூக அறிவியலில் நிச்சயம் இதற்கொரு காத்திரமான மதிப்புள்ளது என்பதை நிச்சயம் காலம் ஒருநாள் உணர்த்தும் என்று நம்புகிறேன்! ஆனால் அந்தக் காலம் என்பது நாட்கள் எண்ணப்பட்டு விட்ட எனது வாழ்நாட்களுக்குள்ளாக இருக்க வேண்டுமே என்று தான் சற்றுக் கூடுதலாக ஆசைப்படுகிறேன்.

ஆசையிருக்கலாம் தான். ஆனால் கூடவே அம்சமும் இருக்க வேண்டுமல்லவா?!, தனிப்பட்ட மனிதனின் ஆசைக்காகவெல்லாம் காலமும் வளைந்து கொடுக்க வேண்டும் என்ற ஒரு அவசியமும் கிடையாதே. சில Individual will எல்லாம் நிறைவேற, சில நேரங்களில் சில Social will ம் அதனுடன் ஒரு Synchronize ஆக வேண்டுமில்லையா?!…….

(எனது சேமிப்புச் சீட்டே திட்டமிட்டிருந்த படி எல்லாம் நல்லபடியாகத் திரும்பக் கிட்டியிருந்தால் நான் ஏனிதைப் பொதுவெளிக்கு எடுத்து வரப் போகிறேன்.)

……… கணித மேதை இராமானுஜம் ஆகட்டும் அல்லது நியூட்டன் தொடங்கி மைக்கேல் பாரடே, ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் வரை தான் ஆகட்டும், இல்லை மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் தான் ஆகட்டும், அதுவும் இல்லை பாபரும், இராபர்ட் க்ளைவும் நெப்போலியன்களும் தான் ஆகட்டும் மேற்கண்ட எவருமேயே கூட சரித்திரத்தை வென்றெடுத்தது தங்கள் தங்களின் தனித் தனிப்பட்ட தங்களின் ஒற்றை விருப்பத்தால் (Individual Will ஸ்களினால்) மட்டும் தான் என்று (அவர்களை இன்று கூப்பிட்டுக் கேட்டாலும்) திட்டமாக 100% கேரண்டியுடன் எப்படி அவர்களே சொல்லி விட மாட்டார்களோ அப்படிப்பட்டது தான் கிட்டத் தட்ட எனதிந்த இக்சித் துஸ்பிரயோகம் சம்பந்த பட்ட இந்தக் கின்னஸ் மறுதலிப்புத் திட்டம் என்பதுவும் கூட. சில நேரங்களில் சிலத் தனி விருப்பங்கள் நிறைவேறுவதற்கு கூட அதற்கேற்ற விதத்தில் சமூக விருப்பங்களும் நன்கு வளர்ச்சியடைந்த நிலையில் இருக்க வேண்டும்.

பில்கேட்ஸும், வாரன்பஃபெட்டும் சில நூற்றாண்டுகளுக்கு முன் பிறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?! அவர்களே கூறியபடி, ஏதாவது ஒரு மிருகத்தின் மதிய உணவுக்கு விருந்தாய் பலியாகியிருப்பார்களோ என்னவோ?! அவர்களே கூறியபடி அப்படி ஏதேனும் ஒரு மிருகத்தின் மதிய உணவு மெனுப்பட்டியலில், ஒன்றாய் உருமாறிப் போயிருப்பார்களோ என்னவோ?! அப்படியெல்லாம் வேளை தப்பிய வேளையிலே, பிறக்கக் கூடாத இடத்தில் பிறக்காமல் நம்மோடு நம் காலத்தில் பிறந்தது என்பது அது நமக்கெல்லாம் வரமா?! சாபமா?! என்பதையும் அதையும் கூட இப்போதே அவசரப்பட்டு முந்திரிக் கொட்டைத் தனமான பதிலாயும் சொல்லி விட முடியாது. காரணம் Artificial Intelligence எனப்படும் (AI) செயற்கை நுண்ணறிவு துறை போய்க் கொண்டிருக்கும் வேகம் அப்படி. போயும் போயும் அது ஒரு சினிமா தானே?! என ஒரு அஸால்ட்டான அசிரத்தை மனநிலை சமுதாயத்தில் பெருகி வளர உண்மையையே ஒரு சினிமா வடிவில் எடுத்து வெளியிட்டு விட்டால் போயிற்று! அப்புறம் யாரும் அது குறித்து அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.

(ஏற்கனவேயே இதற்கெல்லாம் முன் உதாரணங்கள் நம் தமிழ் சமூகத்தில் இல்லாமலும் இல்லை. இருக்கவே செய்கிறது. ஹிந்தியத் தமிழர்களாகிய நாம் ஈழ அழிவு நம் கண் முன்னே நடந்தும் அதை அப்படியே அசால்ட்டாகக் கடந்தவர்கள் தானே நாம்!?)

புலி வருது, புலி வருது கதையாக நாளை நிஜமாகவே ஒரு நிஜப் புலி வந்தால் கூட இது வழக்கமாகக் கேட்கும் பல்லவி தானே என அசால்ட்டாக எதையுமே அசால்ட்டாகக் கடந்து செல்லக் கூடிய ஒரு மனநிலைக்கு, அப்படிப்பட்ட ஒரு மனத் தயாரிப்பு நோக்கி தான் ஒட்டு மனித குலத்தை இட்டுச் சென்று கொண்டிருக்கிறது இன்றைய அமெரிக்க முதலாளித்துவம். தத்ரூபமான கிராபிக்ஸ் காட்சிகளால் நாளை ஸீரியஸாகவே மனித குலத்தைப் பாதிக்கக் கூடிய விஷயங்களின் பால் கூட மனித குலம் அக்கறை காட்டாத அளவுக்கு அதன் விழிப்புணர்வை, கூருணர்வை அமெரிக்க முதலாளித்துவம் (தனது ஹாலிவுட் படங்களாலேயே) மழுங்கடிக்கிறதோ என்றும் கூட அச்சப்பட வேண்டியதாய் இருக்கிறது.

வாழ்வில் இப்படியொரு இரத்தல் நிலைக்கு வருவேன் எனச் சற்றும் எதிர்பார்த்திராதவன் தாம் என்ற போதிலும், சூழல் அப்படியாகி விட்டது. இதெற்கெனவே பிரத்யோகமாக ஒரு பல்க் அமௌண்ட் உள்ளூரிலேயே ஒரு நீண்ட காலச் சீட்டாக ஒரே இடத்தில் போட்டு வந்திருந்தேன். ஆனால் அது (அந்தச் சீட்டு) துரதிஷ்டவசமாக மோசடியால் நின்று விட்டது. அச்சீட்டு மோசடியில், எனது மொத்தச் சேமிப்பையுமே இழந்து விட்டேன். எல்லாம் எனது தவறே. நம்பிக்கை மோசடி மட்டுமல்ல இதில் ஒரு மெகா சதித் திட்டமும் கூட எனது வலைப்பூச் சாராம்சத்தின் அடிப்படையிலேயே கூட இருந்திருக்குமோ என்னவோ ?! …… சரி…… அந்தக் கதையையெல்லாம் இங்கே சொல்லி பிரச்னையை மேலும் சிக்கல் நிறைந்ததாயும் ஆக்க வேண்டாம், உங்கள் நேரத்தையும் வீணடிப்பானேன். அதிலேயே (சீட்டு மோசடி விஷயத்திற்குள்ளேயே) புதைந்து மக்கி மன உளைச்சலைப் பெருக்கிக் கொள்வதைக் காட்டிலும், பொதுவெளிக்கு எனது வலைப் பூச் சாராம்சத்தைக் கொண்டு வந்தால் இதற்கு ……….

(எனது சொந்த விஷயமான சீட்டு மோசடிக்கு ஆளானது பற்றியதற்கல்ல, எனது வலைப் பூச் சாராம்சம் பற்றிய விஷயத்திற்கு)

………… ஏதேனும் ஒரு தீர்வு கிட்டக் கூடுமோ?! எனத் தான் இதை உலகம் முழுவதும் உள்ள ஒட்டு மொத்தத் தமிழ் சமூகத்தின் பொது வெளிக்கு எடுத்துக் கொண்டு வந்துள்ளேன். \”சூழ்நிலையைக் குற்றம் சாட்டும் ஏழை மனிதனைக் கண்டு ஆத்மா பரிகசிக்குமாம். எனது ஆத்மாவே என்னைப் பரிகசிக்க வேண்டாமென்று தான், இதோ இப்போது இதைப் பொதுவெளியில் உங்களோடு பகிர்ந்து தொள்கிறேன்.

அமெரிக்க ஐரோப்பியத் தமிழர்களே மற்றும் வெளிநாடு வாழ் அனைத்துத் தமிழர்களே முதலில் இதைப் பொதுவெளியில் இடும் எண்ணமெல்லாம் ஒரு சிறிதும் கடுகளவும்? எனக்கும் இருந்ததே கிடையாது என்பது தான் உண்மை. காரணம் விஷய சாரமும் அப்படிப் பட்டதே. அதிகம் விளக்க வேண்டியதே இல்லை. அது உங்களுக்கே புரியும், இவ் வலைப் பூவை மட்டும் முழுவதும் படித்தவராய் நீங்கள் இருந்தால். அந்தரங்கமாக இரகசிய முயற்சியாய் ஒற்றையர் ஆட்டமாய் ஆட எண்ணியிருந்த இந்த வலைப் பூச் சாராம்ச ஆட்டத்தை, பொத்துவிட்ட சீழ் நாற்றத்தைப் போல இதன் துர்கந்தம் இப்போது உலகமுழுவதுமுள்ள ஒட்டு மொத்தத் தமிழ் சமூகத்தின் பொது வெளியெங்கும் பரவி விட உண்மையான காரண கர்த்தாக்கள் எனது சீட்டுப் பணத்தைக் களவாடியவர்களே. உள்ளூர் அளவில் செயல்பட்டுக் கொண்டிருந்த அது தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக உலகு தழுவிய அளவில் ஒரு மெகா வலைப் பின்னலாக செயல்படவும் அதற்கொரு வாய்ப்புண்டு என்பதை எல்லாம் சரியாகக் கணித்துச் செயல்படாத, எனது முந்தைய அந்த செயல்பாட்டு அணுகு முறைகளில் தான் எனது முதல் தவறு நிகழ்ந்தது என்பதையும் இங்கு நான் ஒரு சிறிதாகிலேனும் ஒத்துக் கொண்டேயாக வேண்டும். அல்லது சாதியத்தின் உலகு தழுவிய வலைப்பின்னல் என்ற எனது அந்த கணிப்பில், பார்வைக் கோணத்தில் நான் முற்றிலும் எதிர்பாரா வண்ணம் சற்றுப் பிழைப் பார்வையோ, அல்லது சற்று மிகை மதிப்பீட்டு யூகமாகவோக் கூட இருக்கவும் வாய்ப்பில்லாமல் இல்லை. மேலும் சாதீயத்தின் கோர முகத்தைப் பற்றிப் பத்திரிக்கைகளில், ஊடகங்களில், படித்திருந்தேனே தவிர, அதன் கோர தரிசனத்தை நேரடியாகவே உள்ளூர் மட்டத்திலும் உலகு தழுவிய மட்டத்திலும் அதைத் தரிசித்துணரும் அந்தப் பெரும் பாக்கியமும் அதுவரை கிட்டியவனாய் இருந்ததில்லை. ஒரு வேளை அது இந்த இப் பிறவியில் தான், இவ்வளவு அருகாமையிலும், கிட்டத்திலும் மற்றும் இவ்வளவு துல்லியமானதொரு கனபரிமாணத்திலும் இதை உணரும் நல்(?!) பாக்கியம் கிடைத்ததோ என்னவோ! உள்ளூர் மட்டத்தில் பாதித்தென்னவோ உண்மை. ஆனால் அதற்கொரு உலகு தழுவியத்

தொடர்பும், பரிமாணமும் கூட கூடவே (எனது வலைப் பூச்

சாராசப் பாதிப்பின் காரணமாகவே) இருந்திருக்கிறதா?! என்பதைத் தான் இன்னமும் 100% உத்தரவாதத்துடன் உறுதிப்படுத்திக் கொள்ள இயலவில்லை.

எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புப் பாதிப்பைக் கூட விட்டுத் தள்ளுங்கள், அதையெல்லாம் தாண்டி எனது இவ்வலைப் பூச் சாராம்ச முயற்சியில் ஒரு பொது நன்மை மானுடந்தழுவிய அளவில் ஏதேனும் ஒரு பொது நன்மை என ஏதாவது ஒன்றிருக்கிறதா என்று மட்டும் பாருங்கள்!

இருக்கிறது என்று கருதுவீர்களேயானால் இதை ஒரு வைரலாக்க உதவுங்கள், அல்லது மீண்டும் இதை ஒரு பனிப் போர் ஆட்டமாகவே ஆடலாம். பொதுவெளி ஆட்டமாகவெல்லாம் ஆட வேண்டிய அவசியமேயில்லை, தனி ஆட்டமாகவே ஆடலாம், என்பீர்களேயானால் அதற்கானக் காரணங்களையும் எனக்குத் தெளிவு படுத்தவும். ஏனெனில் தமிழ் சமூகத்தின் ஒட்டு மொத்தப் பொதுவெளியும் இன்னமும் அந்தளவுக்கு இதை ஒரு திறந்தவெளி ஆட்டமாகவும், திறந்தவெளிக் கூட்டுக் குழு ஆட்டமாகவும் ஆடிவிடுமளவுக்கு அப்படி அந்தளவுக்கு இன்னமும் ஒரு பக்குவம் பெற்றிருக்கவில்லை என்று கருதுவீர்களேயானால், அப்போது இதற்கான நிதி ஆதாரத்திற்கான வழி வகையையும் சேர்த்துக் கூடவே கூறுங்கள்.

நானறிந்தவரை இது சம்பந்தமாக இது வரை பின்னூட்டமிடவே அஞ்சி ஓடிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகரித்துள்ளதேயன்றி தைரியமாக இது குறித்து என்னைத் தொடர்பு கொண்ட வெளிநாடு வாழ் மனிதர்களின் எண்ணிக்கை அற்பத்திலும் அற்பம். ஒட்டு மொத்தத் உலகத் தமிழ் சமூகத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் அத்தகையவர்களின் எண்ணிக்கை அற்பத்திலும் அற்பம். Almost negligible புறக்கணிக்கத் தக்கது என்று சொல்லத் தக்க விதத்தில் தான் உள்ளது.ஓரளவிற்கு மேல் என்னாலும் ஒரு திறந்த வலைப் பூவில் எல்லா உண்மைகளையும் மனந்திறந்து அனைத்தையும் பேசி விடவும் இயலாது. ஏற்கனவேயே உருட்டுக்கட்டைகளுடன் கூலிப்படையினரால் தாக்கப்பட்டவன் தான். அதற்கு முழு அர்த்தமுமே பயம் என்றும் ஆகி விடாது. இலக்கு சிதறிப் போகுமே என்ற “அஞ்சுவது அஞ்சாமைப் பேதாமை” ரகப் பயம். இலக்கை எட்டிய பின்னோ, அல்லது எட்டுவதற்கோக் கூட சமயங்களில் உயிரையே கூடப் பணயம் வைக்கலாமே ஒழிய இலக்கை எட்டுவதற்கு முன்னரே அல்ல.

கூலிப்படைத் தாக்குதலால் ………

இனியும் பணம் திரும்பக் கிடைக்கும் என்பதற்கான நம்பிக்கை, அறிகுறி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்ததாலேயே, இனியும் அதை நம்பியிராமல் வேறு மார்க்கங்களை நாடுவோம் எனத் தான் மொத்த சாரத்தின் 97, 98 % ஐ வலைப் பூவாகவும் வெளியிட்டு விட்டேன். ஒன்று அஸான்ஜேவை அணுகி அவரிடம் ஒரு பேச்சு வார்த்தை நடத்துவதற்கான ஒரு உரிமத்தை ……..

(அதாவது பயணச் செலவு உட்பட இது விஷயத்திற்காக ஆகக் கூடிய செலவுகளுக்கு ஒரு நிதி உதவியை)

…….. வழங்குங்கள் அல்லது வேறு யாராவது இலண்டனில் உள்ள உங்களனைவரின் பொது நம்பிக்கைக்குப் பாத்திரமான தமிழர்கள் யாராவது இருந்தால் அவர்கள் மூலம் நீங்களே இதை உங்களனைவரின் சொந்தப் பொறுப்பில் இதை முன் நின்று நடத்தினாலும் சரி. மொத்தத்தில் (முன்பொரு முறை நான் செய்து விட்டதைப் போல சொதப்பாமால்) இதைச் செய்து முடிக்கக் கூடிய துணிவும், நுட்பமும், செயல் திறனும் வாய்ந்தவர்களிடம் இதை ஒப்படைத்துச் செயலாற்ற வேண்டும். ஆனால் அப்படி நீங்கள் தேர்ந்தெடுக்கும் அந்த நபர், நன்கு தைரியமாக இந்த ஆட்டத்தைச் சொதப்பாமல் ஆடக் கூடியவராய் மட்டுமல்ல, குழுப்பணியான இந்த ஆட்டத்தின் மொத்தக் கிரெடிட்டையும் தானே அல்லது தனது சாதியே அறுவடை செய்து கொள்ள வேண்டும் என்ற தன்னல நோக்கமற்றவராயும், இருத்தல் வேண்டும். இதை ஆடுபவர் தனது சொந்தத் தனிப்பட்ட நலனுக்கோ, அல்லது தனது சொந்த சாதியின், வர்க்கத்தின் நலனுக்கு மட்டுமோ என இதை ஒரு மிஸ் யூஸ் செய்து விடாதவராயும், அத்தகையதொரு நம்பிக்கையை உத்தரவாதத்தை, அளிக்கத் தக்கவராயும் இருத்தல் வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சகாயம் அவர்களின் வழிகாட்டலில் இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள் பாதைக் குழுக்களின் மாநிலக் கூட்டம் ஏதாவது நடந்தால் கூட, அங்கும் ஏதேனும் ஒரு புரவலர் நிதி திரட்ட முடியுமா?! எனக் கூட கடந்த 2 ஆண்டுகளாகவே முயற்சித்துக் கொண்டுள்ளேன். ஆனால் அது போன வருடம் நவம்பர் 19 லேயே நடந்திருக்க வேண்டிய அவர்களின் அந்த மாநிலக் கூட்டமே மாநில ஆளும் அரசுகளால் நடத்தப்பட இயலாமல் தடுக்கப்பட்டு விட்டதால் அம்முயற்சியிலும் சற்று சுணக்கம் ஏற்பட்டு விட்டது. ஆதலால் தான் சாத்தியமான எல்லா வழிகளிலும் முயற்சிப்போமே என இந்த வலைப் பூவிலேயே எவ்வளவு வெளிப்படையாக முடியுமோ அவ்வளவு வெளிப்படையாக (பொதுவெளி அனுமதிக்கக் கூடிய வரம்பெல்லைகளுக்கு உட்பட்டு) இப்போது விவாதித்துள்ளேன்.

நமது முன்னால் காலம் அதிகமில்லை என்பதால், இப்போது பயணத்துக்கான நிதித் திரட்டலுக்கும் ஏன் வெளிநாடு வாழ் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்களாகிய உங்களிடமே இக் கோரிக்கையை முன் வைத்துப் பார்த்து விடக் கூடாது என்று, இதோ இப்போது அந்தக் கோரிக்கையையும் முன் வைத்து விட்டேன். இந்த ஆட்டத்தை யார் ஆடினாலும் சரி, அவர்கள் இலண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள விக்கி லீக்ஸின் ஜுலியன் அஸான்ஜேவுக்கு இந்த விஷயத்தை அப்படியே வெறுமனே கொடுப்பதால் நமது தமிழ் சமூகத்திற்கோ, ஒட்டு மொத்த உலக மானுட குல நன்மைக்கோ எந்த விதப் பயனும் அளித்து விடப் போவது இல்லை. இதில் அவருக்கும், நமது ஒட்டு மொத்தத் தமிழ் சமூகத்தின் நலனுக்குமான ஒரு பரஸ்பர ஆதாயம் கிட்டும் வகையில் நமது தமிழ் சமூகத்தின் நலனுக்கான சில விஷயங்களை ( அவர் அளிக்கும் பட்சத்தில் மட்டுமே) அவரிடமிருந்து கறந்து கொண்டு தான் (ஒரு அலோக அணுவைப் போல முதலில் நமது தரப்புக்கான ஆதாயங்களைப் பெற்றுக் கொண்ட பின்னரே கொடுக்க வேண்டும். இல்லையெனில் நாம் முட்டாளாக்கப் படவும் வாய்ப்புகள் அதிகம். L

எனது இந்த வலைப் பூச் சாரத்தை அவருக்கும் இந்த உலக மானுட சமுதாயத்துக்கும் பயனளிக்கும் விதமாக இதை எப்படி (அவரது விடுதலைக்கும், நமது தமிழ் சமூகத்தின் நலனுக்கும் ஏற்ற விதத்தில் இதை) எப்படிப் பக்குவமாகப் பயன்படுத்துவது என்பதில் விஷயத்தைக் கனகச்சிதமாக நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் சிறிது சொதப்பினாலும் அனைத்தும் பின் வீணாகியே போகும். நீங்கள் அனைவரும் இப்பயணச் செலவை இலவசமாக அளிக்க வேண்டுமென்பது கூடயில்லை. ஒருவேளை எல்லாம் வெற்றிகரமாக நடந்து அவருடனான வீடியோ பேட்டி ஒன்றே ஒன்றுடன் மட்டும் நான் (உயிருடன்) திரும்பி விட்டேன் எனில் அதை உரிய விதத்தில் பயன்படுத்துவதன் வாயிலாகவே, நீங்கள் எனக்கு ஸ்பான்ஸர் செய்யும் நிதியையுமே கூடப் பின்னால் திருப்பி அளித்து விடுவதற்கான வாய்ப்பும் இல்லாமல் இல்லை. விரைந்து யோசித்து ஒரு நல்ல முடிவெடுக்கவும். காலம் நமக்கு அதிகமில்லை. பில் கேட்சின் பிரபல வாசகமொன்றைப் போல, \”நம் முன் உள்ள நேரத்தை விட நாம் எதிர் கொள்ள வேண்டிய சவால்கள் மிக, மிக அதிகம்.

https://m.facebook.com/story.php?story_fbid=579983622354579&id=100010288384802

Advertisements

அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆங்கில மொழி வாழ் நாட்டுத் தமிழர்களுக்கு “Inception” எடுத்த ஹாலிவுட்டில், விந்தணுத் திருட்டை மையமாக வைத்தேதும் படமெடுக்கப்படாதது ஏன்?! என என்றாவது யோசித்திருப்பீர்களா?!

கனவு உட்பட எதையோ எதையோ திருடுறா மாதிரி படம் எடுத்துள்ள ஹாலிவுட், என் வலைப்பூ சந்தேகப்படும் ஒரு விஷயம் பற்றியும் இது வரை ஏதேனும் படம் எடுத்துள்ளதா முகநூல் தமிழர்களே?! இந்தக் கேள்வியை நான் நமது தமிழ் நாட்டுத் தமிழர்களை மட்டும் கேட்கவில்லை.

உலகம் முழுவதுமுள்ள தமிழர்களை நோக்கிக் குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஆங்கில மொழி நாடுகளிலெல்லாம் வசிக்கும் ஆங்கிலேய மொழி வாழ்த் தமிழர்கள் (பிரிட்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உட்பட) அனைத்து வெளிநாடு வாழ்த் தமிழர்களையுமே கேட்கிறேன்.

இங்கே நம் தமிழர்கள் வேல் முருகன், சீமான், திருமுருகன், பாரதிராஜா, சிம்பு, சத்யராஜ் என சினிமாவுலகிலும் உணர்வுள்ள இவர்களைப் போன்றோர் ஏதேதோ போராட்டம் பண்ணி ஆயிரக்கணக்கான அவங்க தொண்டர்களையும், ரசிகர்களையும் கூடச் சிரமப்படுத்திக் கொண்டு நமது தமிழகப் போலீஸ் காரங்ககிட்டேயே லத்தி சார்ஜையெல்லாம் சந்திச்சு ஏதேதோ செஞ்சுகிட்டிருக்காங்க.

ஆனா சிவகார்த்திகேயனின் “வேலைக்காரப்” படப் பன்ச் டயலாக் ஒன்றைப் போல ஸ்மார்ட் வர்க் செய்றாங்களான்னா?! இல்லைன்னு தான் சொல்லத் தோன்றுகிறது. என்ன கரடியாக் கத்தினாக் கூட டெல்லி இனி தமிழ் தேசத்தில் தொடங்கி விட்ட எந்த ஒரு நாசகார, அழிவுத் திட்டங்களையும் நிறுத்தப் போவதில்லை. ஏன்னா டெல்லியே ஒரு அமெரிக்க அடிமை தான்ங்கறது, உங்களுக்கெல்லாம் நான் சொல்லியாத் தெரியனும்?!

மேலோட்டமாகப் பார்த்தால் தமிழ் நாட்டின் ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், காவிரி விஷயத்திலிருந்து, நீட், சாகர் மாலா, வரை இதற்கெல்லாம் ஆணி வேரே டெல்லி என்றே இங்குள்ளத் தமிழன்ல பெரும்பாலும் நினைச்சுட்டுருக்கான். ஆனால் அமெரிக்க வாழ் தமிழர்களே உங்களுக்குக் கூடவா ஆங்கில அமெரிக்காவின் சதி புரிபடாது. டெல்லியை பின்னின்று இன்று இயக்கிக் கொண்டிருப்பதெல்லாம் அமெரிக்கா தான் காரணம் என்பது உங்களுக்கெல்லாம் தெரியாதா?! புரியாத?! உங்களது வேர்களை உங்கள் சொந்தக் கண் முன்பாகவே எல்லாமும் அழிப்பதற்கான எல்லா வேலைகளும் முழு வேகத்தில் முடுக்கி விடப்பட்டு விட்ட இந்த நேரத்திலும் கூட விழித்தெழவில்லை என்றால் இனி வேறெப்போது தான் விழிக்கப் போகிறீர்கள்?! அங்கு என்ன தான் இனிச் சீமான், வேல்முருகன், வினவு.காம் காரங்களும், ஆங்காங்கு பொதுமக்களும் போராடினால் கூட தனது காதுகளுக்கு இரும்பு உறையை மாட்டிக் கொண்டிருக்கிற ஹிந்திய அரசாங்கத்திற்கு இதெல்லாம் காதிலேயே விழப் போவதில்லை.

மேலும் ஹிந்தியத்தை நேரடியாக நாம் எதிர்க்கும் அளவுக்கு இன்னமும் நாம் வளர்ந்து விடவில்லை. இதெற்கெல்லாம் ஒரே தீர்வு வாஷிங்கடனுக்கே ஒரு நெருக்கடியை ஏற்படுத்துவதைத் தவிர்த்து வேறு வழியில்லை. அதற்கு மெல்ல டாலரின் ப்ளாடரை ஈகுவடார் தூதரகத்தில் வைத்து விக்கி லீக்ஸின் “ஜுலியன் அசாஞ்சே வாயிலாக (இவ்வலைப் பூவில் நான் குறிப்பிட்டிருக்கிற திட்டத்தை) நிறைவேற்ற முயற்சிப்பது தான் நம் முன் இப்போதுள்ள சாத்தியப்படக் கூடிய ஒரே வழி! மேலும் இந்த ஆட்டத்தில் விகடன்.காம், முதல் வினவு.காம் வரை அவர்களையும் கூட இணைத்துக் கொள்ள முடியுமா?! என்றும் கூட பார்க்க வேண்டும். விகடனையும்( தேவைப்படுமேயானால், சாத்தியப்படுமேயானால்) சுந்தர் பிச்சையைப் போன்றவர்களையும் கூட அமெரிக்க வாழ் தமிழர்களாகிய நீங்கள் மனம் வைத்தால் நமது முகாமுக்குக் கொண்டு வர முடியும். விகடன், சுந்தர் பிச்சை, போன்றோர்களின் ஒத்துழைப்பில்லாமல் பிராமண சமுதாயத்திலுள்ள ஏனைய மற்ற நல்ல நடுநிலைப் பிராமணர்களின் ஒத்துழைப்பைப் பெற முடியாது. ஒத்துழைப்பில்லை யென்றாலும் பரவாயில்லை, அவர்களைப் பகைத்துக் கொள்வதும் அவ்வளவு உசிதமாய் தென்படவில்லை. இது அத்தனையும் நடக்க வேண்டும் வேண்டுமானால் முதலில் அமெரிக்க வாழ் தமிழர்களாகிய நீங்கள் ஒவ்வொரும் எந்தெந்த சாதிப் பிரிவிலிருந்தாலும் சரி முதலில் அனைவரும் மொழி வழி என்ற ஒரு குடைக் கீழ் ஒருங்கிணைய வேண்டும்.

ஆளுக்கொரு டாலர் ஸ்பான்ஸ் செய்தீர்கள் என்றால் கூடப் போதும், அஸான்ஜேவின் காதுகளுக்கு இந்த விஷயத்தை (எனது வலைப் பூச் சாரத்தை) கொண்டு போய்ச் சேர்த்து விடுவது அது எனது பொறுப்பு. அதற்காக எனதுயிரைப் பணயம் வைக்கக் கூட நான் தயார். ஆனால் எனது பயணச் செலவுகளுக்கு மட்டும் ஒரு சிறு நிதியை நீங்களனைவரும் ஸ்பான்ஸர் செய்தால் போதும். அல்லது வேறு யாராவது இலண்டனில் உள்ளவர்கள் மூலம் நீங்களே உங்களது சொந்தப் பொறுப்பில் இதை முன் நின்று நடத்தினாலும் சரி. ஆனால் அப்படி நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர், இந்த ஆட்டத்தைச் சொதப்பாமல் ஆடக் கூடியவராய் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள சகாயம் அவர்களின் வழிகாட்டலில் இயங்கிக் கொண்டிருக்கும் மக்கள் பாதைக் குழுக்களின் மாநிலக் கூட்டம் ஏதாவது நடந்தால் கூட, அங்கும் ஏதேனும் ஒரு புரவலர் நிதி திரட்ட முடியுமா?! என முயற்சித்தேன். ஆனால் அது போன வருடம் நவம்பர் 19 லேயே நடந்திருக்க வேண்டிய அவர்களின் அந்தக் கூட்டமே மாநில ஆளும் அரசுகளால் நடத்தப்பட இயலாமல் தடுக்கப்பட்டு விட்டது. ஆதலால் தான் நமது முன்னால் காலம் அதிகமில்லை என்பதால், இப்போது பயணத்துக்கான நிதித் திரட்டலுக்கும் ஏன் அமெரிக்க வாழ் தமிழர்களாகிய உங்களிடமே இக் கோரிக்கையை முன் வைத்துப் பார்த்து விடக் கூடாது என்று, இதோ இப்போது அந்தக் கோரிக்கையையும் முன் வைத்து விட்டேன். இலண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள விக்கி லீக்ஸின் ஜுலியன் அஸான்ஜேவுக்கு இந்த விஷயத்தை நான் வெறுமனே கொடுப்பதாய் இல்லை. இதில் அவருக்கும், நமது ஒட்டு மொத்தத் தமிழ் சமூகத்தின் நலனுக்குமான ஒரு பரஸ்பர ஆதாயம் கிட்டு வகையில் நமது தமிழ் சமூகத்தின் நலனுக்கான சில விஷயங்களை (இந்திய அரசியல் வாதிகளின் கறுப்புப் பணப்பட்டியல் பற்றிய ஒரு செய்தி வீடியோவை அவர் அளிக்கும் பட்சத்தில், எனது வலைப் பூச் சாரத்தை அவருக்கும் இந்த உலக மானுட சமுதாயத்துக்குப் பயனளிக்கும் விதமாக இதை எப்படி அவரது விடுதலைக்கும், நமது தமிழ் சமூகத்தின் நலனுக்கும் ஏற்ற விதத்தில் இதைப் பக்குவமாகப் பயன்படுத்துவது என்ற விஷயத்தையும் கனகச்சிதமாக நிறைவேற்ற முயற்சிக்கிறேன். நீங்கள் இப்பயணச் செலவை இலவசமாகக் கூட அளிக்க வேண்டுமென்பதில்லை. ஒருவேளை எல்லாம் வெற்றிகரமாக நடந்து அவருடனான வீடியோ பேட்டி ஒன்றே ஒன்றுடன் மட்டும் நான் (உயிருடன்) திரும்பி விட்டேன் எனில் அதை உரிய விதத்தில் பயன்படுத்துவதன் வாயிலாக, நீங்கள் எனக்கு ஸ்பான்ஸர் செய்யும் நிதியையுமே கூடப் பின்னால் திருப்பியே அளித்து விடுகிறேன். விரைந்து யோசித்து ஒரு நல்ல முடிவெடுக்கவும். காலம் நமக்கு அதிகமில்லை.

பிராமணர்களின் துணையின்றி இந்த ஆட்டத்தை நிகழ்த்தி விட முடியும் என நான் நம்பவில்லை. ஆனால் தமிழ் சமூகம் தான் இன்று எந்த ஒரு சாதியும் …….

(உச்சாணிக் கிளையின் உயரத்தில் உள்ள உயர் ஜாதி முதல் அடித்தட்டிலுள்ள சாதிகள் வரை)

……….இன்னொன்றை பரஸ்பரம் ஒன்றை இன்னொன்று நம்பி விட இயலாதபடிக்கும், அதே நேரம் சாதி கடந்த பொதுவெளியையும் முழுதாக நம்பி, அவரவர் சுய சாதியைப் பகைத்துக் கொள்ள முடியாத கையறு நிலையிலும் செயல்பட வேண்டியிருப்பதால் கூடுமானவரை, இதையெல்லாம் சமாளித்து லாவகமாக இப் பிரச்சனையைக் கையாளக் கூடியத் திறன் படைத்தோர்களின் ஒரு பெரியக் கூட்டே ஒரு குழுமமே தேவைப்படுகிறது. சாதி, மதம், மொழி, இன நலன்கள் கடந்த உலகு தழுவிய மானுடந் தழுவிய ஒரு பரந்த நோக்கும், அதே நேரத்தில் அடித்தட்டிலும், சாதிய, பொருளியத் தளத்தில் நசுங்கி விழி பிதுங்கிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஆன கூடுமானவரை சுயநலம் தவிர்த்து பொது நலம் நாடுவோர்களின் ஒரு பெரிய புதிய குழுமமே தேவைப்படுகிறது. பிராமணர்களைக் கழித்து விட்டுப் பார்த்தாலும் தமிழர்களாகிய நீங்களனைவரும் ஒரு ஒரு இலட்சம் பேர் தேற மாட்டீர்களா?! தலைக்கு ஒரு டாலர் அளித்தால் கூடப் போதும், அல்லது உங்களில் யாரேனும்
தீவிர தமிழுணர்வாளர்கள் சிலர் முன் வந்தால் கூடப் போதும். ஆனால் என்ன சிக்கலென்றால் நல்லோர்கள் என்போர்களிடையே (அவர்கள் எச் சாதி,மொழியினம், நாடு, நிறம், மதம் பால் என எந்தப் பிரிவில் உள்ள இருந்தாலும்) எப்போதும் ஒற்றுமையென்பதே அணுவளவும் இருப்பதில்லை. அது தான் இந்தியத் துணைக்கண்டத்தையே பிடித்த சாபத் தீடு போலும்.

https://m.facebook.com/story.php?story_fbid=579983622354579&id=100010288384802

நான் ஏன் டாலர் கட்டுபடுத்த வேண்டும் என்று கூறுகிறேன்?!,

Vikatan.com

http://www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனிவரும் காலம் ரோபோ காலம்!

ரா.சீனிவாசன்

“கம்ப்யூட்டர் ஆபரேட் பண்ணத் தெரியுமா?”

1980களின் இறுதியில், இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா வேலைக்கான நேர்முகத் தேர்விலும் கேட்கப்பட்ட கேள்வி இதுவாகத்தான் இருக்கும். “கம்ப்யூட்டர் எதுக்கு? நான் வந்தது கணக்கர் வேலைக்குங்க. கால்குலேட்டர் தெரியும். மனக்கணக்கு நல்லா வரும்!” என்று பதில் அளித்தவர்கள் வெறுங்கையுடன் வீடு திரும்பினார்கள். முயன்று கணினி கற்றதினால் மட்டும் நல்ல வேலை கிடைத்து முன்னேறியவர்கள் நிறைய பேர். அப்போது கணினியால் உருவான புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை மட்டும் 1.85 கோடி. தொழில்நுட்பம் எப்போதும் அடுத்த கட்டத்திற்குச் செல்லத் தயாராகத்தான் இருக்கிறது. நாம் தயாராக இருக்கிறோமா என்பதுதான் இப்போதைய கேள்வி!

ஒரு புதிய விஷயத்தைக் கற்றுத் தேர்ந்துவிட்டு, அதைப் பரீட்சித்துப் பார்க்கலாம் என்று சட்டைக் கையை மடித்து உட்கார்ந்தால், “இதெல்லாம் இப்ப அவுட்டேடட் சார்!” என்று ஒரு குரல் கிண்டல் செய்யும். தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை, அளவு மாறாமல், 95 சதவிகிதத் துல்லியத்துடன் பத்துப் பொருள்களுக்கு வெல்டிங் வைத்து விட்டு நிமிர்ந்தால், 99.9 சதவிகிதத் துல்லியத்துடன் நூறு பொருள்களுக்கு வெல்டிங் வைத்துவிட்டு அடுத்து என்ன என்று கேள்வி கேட்கின்றன AI எனப்படும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இயந்திரங்கள். அது நம்மைப் போல சம்பளம் கேட்காது, போனஸ் கேட்காது. இயந்திரத்தை நிறுவுவதற்கான செலவைத் தவிர, மின்சாரம் மட்டுமே உணவாக, சன்மானமாகக் கேட்கும்.

செயற்கை நுண்ணறிவு ஏற்கெனவே நாம் பயன்படுத்தும் பல விஷயங்களில் நுழைந்து விட்டது. அமேஸான் நிறுவனம் தங்களின் தளத்தில் வாடிக்கையாளர்களுக்குப் பொருள்களைப் பரிந்துரைப்பதில் செயற்கை நுண்ணறிவை எப்போதோ பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. ஃபேஸ்புக் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனத்தின் SIRI மென்பொருளும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித்தான் இயங்கிவருகின்றன.

தொகுப்பு: ச.ஸ்ரீராம், இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிப் முகம்மது

மாற்றம் 2030

மெக்கென்சி (Mckinsey) என்ற உலகளாவிய மேலாண்மை ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்று அடுத்து வரப்போகும் மாபெரும் மாற்றமான செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் மற்றும் மென்பொருள் பற்றிச் சில அதிர்ச்சித் தகவல்களை முன்வைத்துள்ளது. இதன்படி, 2030-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும், 80 கோடி வேலை வாய்ப்புகளைச் செயற்கை நுண்ணறிவு கருணையே இல்லாமல் எடுத்துக்கொள்ளும் என்கிறார்கள். எப்படி நம் வாழ்க்கை முறை முன்னர் விவசாயத்துவத்தில் இருந்து இயந்திரத்தனம் ஆனதோ, அதேபோல் ஒரு பெரிய வாழ்வியல் மாற்றம் செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. அமெரிக்காவில் மட்டும் 3.9 கோடியில் இருந்து 7.3 கோடி வரை வேலைகள் இயந்திரமயமாக்கப்படும்.

“அப்போ, அடுத்து என்ன கத்துக்கணும்?” என்று நீங்கள் தயாராவதற்கு முன், இந்த நவீனத் தொழில்நுட்பத்தால் ஏற்படப்போகும் அனைத்து மாற்றங்களையும் தெரிந்துகொள்வது அவசியம். இறந்தகால வளர்ச்சிகளைப்போல ஒரு தொழில் மற்றும் அதைத் தெரிந்து வைத்திருந்த ஊழியர்களின் வாழ்க்கையைச் சிதைத்து வேறொன்றை உருவாக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு செயல்படப் போவதில்லை. மாறாக, இருக்கும் தொழில்முறையை பலப்படுத்துதல், வேலைப்பளுவைக் குறைத்தல், செயல்முறையையே மாற்றி அமைத்தல் போன்ற பணிகளைச் செய்யும். நீங்கள் தைரியமாக வேறொரு துறைக்கு மாறும் அளவுக்கு நம்பிக்கையை இது கொடுக்கலாம்.

சமீப காலத்தில் நடந்த ஒரு முழுமையான ஆய்வாகக் கருதப்படும் இதில், 800 தொழில்கள், 46 நாடுகள் உட்பட ஒட்டுமொத்த உலகத்தின் 90 சதவிகித உற்பத்தித் திறன் அலசப்பட்டுள்ளன. வெவ்வேறு பொருளாதாரச் சூழ்நிலைகள் மற்றும் வேறுபட்ட, அதே சமயம் ஒழுங்கமைக்கப்பட்ட பணியமைப்புகளைக் கொண்ட நாடுகளான அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா மற்றும் மெக்சிகோ முழுவதுமாக ஆராயப்பட்டுள்ளது. இந்தச் செயற்கை நுண்ணறிவின் வருகையால் ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் இதன் பாதிப்பு அதிகம் இருக்குமாம்.

செயற்கை நுண்ணறிவை நம்பி நம் கல்லாப்பெட்டியின் சாவியைக் கொடுக்கலாமா என்ற விவாதம் பல ஆண்டுகளாக உலக அரங்கில் நடந்துகொண்டுதான் வருகிறது. விண்வெளி ஆய்வு, வாகனத் தயாரிப்பு, பணப் பரிமாற்றம் எனப் பல்வேறு துறைகளில் புரட்சி செய்து வரும் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு குறித்து தனது அச்சத்தைப் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.

“ரோபோவைக் கட்டமைக்கும் தொழில்நுட்பத்தை நாம் ஏன் வரவேற்கிறோம் என்றே தெரியவில்லை. எந்த நாட்டு அரசும் இதைக் கண்டுக்கொள்வதாக இல்லை. மனிதனைவிட ரோபோக்கள் எல்லா வேலைகளையும் திருத்தமாகச் செய்யும். அதனாலே இது மனித இனத்திற்கு ஆபத்தானதுதான். செயற்கை நுண்ணறிவு தொடர்பாக நாம் செய்யும் ஆய்வுகள், அறிமுகப்படுத்தப்படும் கண்டுபிடிப்புகள் அனைத்துக்கும் தேசிய மற்றும் உலக அளவில் முறையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். நாம் முட்டாள்தனமாக எதுவும் செய்து விடக் கூடாது” என்று எச்சரித்துள்ளார் எலான்.

“செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தன்னைத்தானே செதுக்கிக்கொள்ளும் திறன் வாய்ந்தது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை வடிவமைத்துக்கொள்கிறது. அதன் பரிணாம வளர்ச்சியின் வேகம், மனிதனைவிட வேகமானது. அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். கூடிய விரைவில் அது நம்மைத் தாண்டி ஓடக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம்” என்கிறார் தத்துவார்த்த இயற்பியலாளர், அண்டவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்.

ஒருபுறம் செயற்கை நுண்ணறிவை எதிரியாகச் சித்திரித்துப் பல ஹாலிவுட் படங்களும் வெளிவந்துகொண்டிருந்தாலும், இத்தகைய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பெரும் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே மனித இனம் அழியாமல் பிழைக்க முடியும் என்ற வாதத்தையும் முன்வைக்கின்றனர். இறந்த பின்னும், மனித மூளையைச் செயற்கை நுண்ணறிவின் உதவியால் செயல்பாட்டிலேயே வைப்பது, ஒருவரின் நினைவுகளை இன்னொருவருக்குச் செலுத்தி… அட, இதெல்லாம் வெறும் அறிவியல் புனைவு என்று நினைத்தாலும், ஒரு காலத்தில் செயற்கை நுண்ணறிவே அறிவியல் புனைவாகத்தான் இருந்தது என்பதை மறந்துவிட வேண்டாம். அறிவியலில் எதுவும் நடக்கும்.

சிட்டி ரோபோ கூறியதுபோல், உங்க குழந்தையை ரோபோட்டிக்ஸ் படிக்க வைங்க, நல்ல ஸ்கோப் இருக்கு!


யாருக்கு பாதிப்பு?

புதிதாக வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களுக்குப் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இடைநிலை ஊழியர்கள், அதிலும் நாற்பதிலிருந்து ஐம்பது வயதுக்குள் இருக்கும் ஊழியர்களுக்கு இடைஞ்சல்கள் நேரலாம். அதுபோக, அதிகமாக உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளைச் செய்யும் கூலிப் பணியாளர்களுக்குப் பெருமளவில் பாதிப்பு ஏற்படும்.
யாருக்கு பாதிப்பில்லை?

படைப்பாற்றல் மற்றும் புலனுணர்வு சார்ந்த வேலைகளைச் செய்பவர்கள், திறனாய்வு மற்றும் மேலாண்மை அதிகம் தேவைப்படும் பணியில் இருப்பவர்கள் எவ்விதக் கவலையும் கொள்ளத் தேவையில்லை. சொல்லப்போனால், அவர்களுக்குக் கீழே இருக்கும் பணியிடங்கள் சிலவற்றைச் செயற்கை நுண்ணறிவுகள் எடுத்துக்கொள்வதால், அவர்களின் வேலைப்பளு மேலும் குறைய வாய்ப்புகள் உண்டு.

Watch “Real Illuminatis are exposed | Vikileaks | Black Sheep” on YouTube

இனிய அமெரிக்க வாழ் தமிழுறவுகளுக்கு இந்த வலைப் பூவில் முதலில் படிக்க வேண்டியவை பற்றி உங்களுடன் சில வார்த்தைகள்…………,

ஒரு கோயிலுக்குச் செல்லும் போது மூல உற்சவர் என ஒரு தெய்வம் அதற்கொரு சன்னதி, மற்றும் பிள்ளையார், நவக்கிரஹங்கள், மற்றும் பலத் துணைக் காவல் தெய்வங்கள் எனக் கடவுளர்களின் ஒரு பெரும் பட்டாளமே இருந்தாலும், கோவிலுக்குச் செல்லும் நமக்கனைவருக்கும் கோயிலின் மூல உற்சவர் யார் என்பது பற்றிய ஒரு தெரிதல், புரிதல் இருக்கும். இதற்கு அந்தக் கோயிலுக்கு அடிக்கடி ஏற்கனவேயே சென்றிருக்க வேண்டும் என்ற அவசியம் கூடக் கிடையாது. காரணம் புகழ் பெற்ற பெரிய ஆலயங்கள் நூற்றாண்டுக் கணக்கில் காலங்கள் பல கடந்து வாழ்ந்து வருவதால் அந்த சன்னதி எந்த அதிதெய்வத்துக்கான சன்னதி என்பது நம்மில் பலருக்கு (வெகு ஜனமக்களுக்கு) சொல்லாமலே, ஒரு முறை கூட நேரில் செல்லாமலே தெரிந்திருக்கக் கூடிய ஒரு விஷயம் தான். காரணமும் வெளிப்படை, அவைகளின் பிரசித்தி, புகழ் அப்படி.

உதாரணமாக மதுரை மீனாட்சியம்மன் என்றால் என்றால் அது பெண் தெய்வக் கோயில் சாக்த வழிபாட்டு ஸ்தலங்களுள் அதுவும் ஒன்று என்பதுவும், பழனி முருகன் முருகன் எனில், அது ஆண் தெய்வம், அதுவும் ஸ்தலம் பழனி என்றால் முருகன் கொட்டையும் காவியுமுடுத்தி ஆண்டிப்பண்டார கோலத்தில் நின்ற ஸ்தலம் என்றும், திருச்செந்தூர் என்றால் சூர சம்ஹாரத்திற்குப் பிறகு தம்பதி சமேதாரராய் கல்யாணக் கோலத்தில் காட்சியளிக்கும் ஸ்தலம் என்றும் சைவத்தோடு சம்பந்தட்ட ஸ்தலம் எனவும், அதுவே திருப்பதி என்றால் வெங்கடாஜலபதி என்ற வைணவத்தோடு தொடர்புடைய ஒரு வைஷ்ணவத் தலம் என்றும் எளிதில் புரிந்து கொள்கிறோம். இத்தனையையும் ஒரு முறை கூட நேரடியாகச் செல்லாமலே அறிந்து கொள்கிறோம்.

ஆனால் அதுவே திருப்பதி வெங்கடாஜலபதி என்ற அந்த மூல உற்சவர் ஒருகாலத்தில் மலைக் காளியாக வழிபடப்பட்டத் தெய்வம், பின்னாட்களில் பிராமணர்கள் அந்தக் கோவிலுக்குள் நுழைந்து அதைக் கைப்பற்றிக் கொண்ட பின்னரே அதை ஆண் கடவுளாக்கினார்கள் என்ற செய்தி எத்தனை பக்தர்களுக்குத் தெரியும்?! சற்று விளக்கமாக அது பற்றித் தெரிந்தவர்கள் சொன்னால் தான் தெரியும். அது போல எனதிந்த வலைப் பூவின் மூலப் பிரதான (மூல உற்சவர் என வைத்துக் கொள்ளுங்களேன்.) நோக்கம், வலைப் பூத் தொடங்கப்பட்டதற்கே பிரதானக் காரணம் “கின்னஸுக்கு ஒரு கடிதம்” மற்றும் “21-ம் நூற்றாண்டின் மிகப் பெரும் குற்றவியல் நிகழ்வாய் எது இருக்கக் கூடும்?! ஒரு பார்வை” மற்றும் விஜய் டி.வி.யின்
புதிரா?! புனிதமா?!
நிகழ்ச்சிக்கு, மாத்ருபூதத்துக்கு அனுப்பிய கடிதம் மற்றும் அர்த்தநாரி என்ற சேலத்துச் செல்வந்தர் (சேலம் கருங்கல்பட்டியைச் சேர்ந்தவர் – ஏ டெக்ஸோ, ஓ டெக்ஸோ, பெயர் சரியாக நினைவிலில்லை, அதன் உரிமையாளர் அவர் அப்போது. 1998 களில்) ஒருவருக்கு எழுதிய கடிதம் இவை தான் இந்த மொத்த வலைப்பூவின் ஜீவன், ஆன்மாவே. இதற்கொரு பன்முகப் பரிமணாமே (Multi dimension view) உண்டு.

ஆத்திகம், நாத்திகம், ஒரு சிக்கலான சமூகவியல் பிரச்னை, தீர்வுகளோ அறிவியல் உலகுக்குள் என்ற பன்முகப் பரிமாணம் கொண்ட ஒரு Proposal அது.

ஒரு அர்த்தத்தில் 189…. சொச்சங்களில் சுவாமி விவேகானந்தர் லண்டனில் ஆற்றிய “பகுத்தறிவும் மதமும்” என்ற தலைப்பிலாற்றிய சொற்பொழிவுப் பணியின் ஒரு பின் தொடர்ச்சி போல. (காண்க கின்னஸுக்கொரு கடைசிக் கடிதம் – அத்தியாயம் 12 உணர்ச்சி என்பதும் ஒருவகையில் ஆற்றல் பிழம்பே) மாறாக இன்னொரு அர்த்தத்திலோ மார்க்ஸியப் பிதாமகர்களில் ஒருவரான பிரடெரிக் எங்கெல்ஸ் விட்டுச் சென்ற பணியின் ஒரு பின் தொடர்ச்சியைப் போல. இன்னமும் தெள்ளத் தெளிவான வேறு வார்த்தைகளில் கூற வேண்டுமானால் மனித ஒழுக்கத்தின் படிநிலைகளை அளக்க உதவும் (அறிவியல் அடிப்படையில் அமைந்த) ஒரு அளவீட்டு முறையைக் கண்டு பிடிக்க அறிவியல் உலகைத் தூண்டும் ஒரு முயற்சி. தூங்கிக் கொண்டிருப்பது போல் நடித்துக் கொண்டிருக்கும் ஆனமீ்க உலகின் செயற்கைத் துயில் கலைக்கும் முன்னோடி முயற்சி. இந்த உலகின் முதல் ஆதி வர்க்க விரோதமான ஆண்பாலுக்கும் பெண்பாலுக்குமிடையே தோன்றிய அந்த முதல் ஆதி வர்க்க விரோதத்தை இரு பாலினத்தவருக்கும் பொதுவாக சமத்துவமான முறையில் தீர்த்துக் கொள்வதற்கு வழி வகை ஏற்படுத்தத் துடிக்கும் முயற்சி. அயற்ச்சி ஆயிரம் வருமெனினும் முயற்சி மூச்சுள்ளது வரை என எனதுயிர் மூச்சுடன் கலந்து விட்டதொரு பணி… ஆனால் இத்தனையும் நடக்க வேண்டுமானால் அதற்கு முன் இது உலக அரசியல், பொருளியல் தளத்தில் ஏற்படுத்த வேண்டிய சில அதிர்வலைகளை, பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியே தீர வேண்டும். அதனால் தான் ATMA (American tamill medical association) போன்ற அமைப்புகளே இது விஷயத்தில் எதிர் வினையாற்ற ஒரு பதில் பின்னூட்டமிடக் கூட அஞ்சியதோ என்னவோ?!

சர்வதேச அரசியல் சதுரங்கத்தில் இவ் வலைப் பூ ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், அதற்கு முதலில் அமெரிக்க வாழ் தமிழர்களாகிய உங்களிடம் முதலில் இது ஒரு தாக்கத்தை ஏற்படச் செய்ய வேண்டும். அதன் பின் அத்தாக்கத்தை டாலருக்கெதிராகவும் திருப்ப இயலுமா?! என்பது அதுவும் அமெரிக்க வாழ் தமிழர்களாகிய உங்களது முடிவைப் பொறுத்தே இருக்கிறது, அதிலும் கூடப் பிராமணத் தமிழரான சுந்தர் பிச்சை போன்றவர்களின் ஒத்துழைப்பு இருந்தால் இதில் இன்னமும் கூட, வலு கூடச் செய்யும். டாலருக்கு எதிராக இதை, இவ்வலைப் பூச் சாரத்தைப் பயன்படுத்த இயலுமா?! அப்படிப் பயன்படுத்த வேண்டியளவுக்கு இப்போது என்ன அவசியம் வந்து விட்டது?! என்றெல்லாம் கேட்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்! உலக மானுட குலத்தின் நன்மையை முன்னிட்டு மட்டுமல்ல, நமது சொந்தத் தமிழ் சமூகத்தின் நன்மையை முன்னிட்டும் கூட இன்று டாலர் கட்டுப்படுத்தப்பட்டே தீர வேண்டும் என்ற அவசியத்தை, அதற்கான நெருக்கடிகளை டாலர் நமக்குக் காலந்தோறும் கற்பித்துக் கொண்டே தான் இருக்கிறது.

ஜல்லிக் கட்டு போராட்டத்தின் போதே உலகத் தமிழ் சமூகம் அதை நன்குணர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். இருந்த போதிலும் அவையெல்லாம் பத்தாது என்பவர்களுக்கு இன்றைய காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் தொடங்கி நியூட்ரினோ, ஸ்டெர்லைட், கூடங்குளம், சாகர்மாலாவெல்லாம் யாரை நோக்கிக் குறி வைக்கப்பட்டு எதற்காக இவை நம்மீது திணிக்கப்படுகிறது என்று சற்று எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். ஆங்கிலம் இன்று ஒரு உலக மொழியாய் மொழிகளின் உச்சாணியில் உட்கார்ந்து கொண்டு உலக மேலாதிக்கம் செலுத்துவதற்குத் தெரிந்தோ தெரியாமலோ நம் தமிழினமும் இரத்தமும் வேர்வையும் சிந்திய இனம் தான். (எந் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு) நமக்கு முந்தைய தலைமுறைகளில் ஆழப் புரையோடிப் போயிருந்த சாதிய ஏற்ற தாழ்வுகளே ஆங்கிலம் அரியணை ஏறுவதற்குரிய காரணிகளில் ஒன்றாயிற்று.

5000, 6000, ஆண்டுகளுக்கு முன் வந்த அந்த முதல் ஆதி ஆரியர்களாகட்டும், 2300 ஆண்டுகளுக்கு முன் வந்த அலெக்சாண்டராகட்டும், 1300 ஆண்டுகளுக்கு முன் வந்த இஸ்லாமியர்களாகட்டும், மறுபடியும் நேற்று (275 ஆண்டுகளுக்கு முன்) வந்த இராபர்ட் க்ளைவ் ஆகட்டும் அனைவருமே நமது ஒற்றுமையின்மையை பயன்படுத்திக் கொண்டு தான் நம்மை அடக்கி ஆண்டனர். முழு இந்தியாவே, ஏன் இந்தத் துணைக்கண்டம் மட்டுமல்ல, இந்த மொத்த ரீஜியனுமே ஆப்பிரிக்காவின் தென் கோடி முனையிலிருந்து எகிப்து ஜெருசேலம் வரை, யூப்ரடீஸ் டைக்ரீஸ் நதி முதல் சிந்து கங்கை வரை என 23 1/2° கடக ரேகைக்கும் 23 1/2° மகர ரேகைக்கும் இடைப்பட்ட இந்த மொத்த ரீஜியனும் ஒரு காலத்தில் கறுப்பின மக்களின் ஒரு கிளையான நம் தமிழ் மூதாதைகளின் வாழ்விடங்களே என்பதையும் இன்று அது எவ்வாறு சிதைந்து தேய்ந்து அழிவுற்றுக் கொண்டு வருகிறது என்பதையும் சற்றுப் பகுத்தறிவு கொண்டு யோசித்தாலே போதும். தமிழ் என்றாலே கறுப்பு (நீக்ரோ) கறுப்பென்றாலே அது அடையாளமல்ல, அவமானம் என்றாகிப் போனது ஏனோ அது ஒரு சாபத்தீடைப் போல ஆகி விட்டது.

உண்மையில் கறுப்பு என்றாலோ, தமிழ் என்றாலோ அது அவமானமல்ல, அது நம் அடையாளம் தான், நம் அடையாளத்தை எத்தனை போர்வை கொண்டு போர்த்தி மூடப் பார்த்தாலும், அல்லது எத்தனை பெரிய இரப்பர் கொண்டும் அழிக்கப் பார்த்தாலும் அது அவ்வளவு எளிதல்ல மட்டுமல்ல இயலாததும் கூட என்பதை இன்றில்லாவிட்டாலும் நாளை, நாளையில்லா விட்டாலும் என்றேனும் ஒரு நாள் அதை நாம் புரிந்து கொள்ளத் தான் போகிறோம். நாடு, மொழி, ஒரு தேசிய இனம் என்ற அடையாளத்தை இழப்போமேயானால் அது நமக்குக் கொடுக்கும் பாடத்தைப் பற்றி வரலாற்றில் யூதர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஏதோ அமெரிக்காவில் க்ரீன் கார்டு கிடைத்து விட்டதால் நாம் அமெரிக்கக் குடிமகனாகவே ஆகி விட்டோம், இனித் தமிழ் நாடு நமக்குத் தேவையில்லை என்றும் எண்ணிவிடாதீர்கள்.

ஒரு பெரிய விருட்சத்தின் கீழ் இன்னொரு பெரிய விருட்சம் வளர முடியாது. உயிர்களை அலைக்கழித்துக் களைப்புறும் ஆன்மாக்களாய் உங்களை அலைக்கழிக்குமேயொழிய எப்போதும் ஆங்கிலம் உங்களது இளைப்பாரல் மொழியாக ஆக ஒரு போதும் முடியாது. உங்களை அலைக்கழித்து அழிக்கக் கூடிய மொழியாய் வேண்டுமானால் இன்னமும் மெஷின்களின் துணையோடு மூர்க்கங் கூடிய மொழியாய் பரிணமிக்க வழியிருக்கிறது, வாய்ப்பிருக்கிறது. ஆனால் காருண்ய மொழியாய் நிச்சயம் அது பரிணமிக்கப் போவதில்லை. இன்றைய அதன் நிலை, அடக்குவார் யாரும் இல்லாத பொலிகாளையைப் போல. பொட்டுக் கட்டிவிடப்பட்ட ஒரு தேவ தாசியைப் போல. வசீகரமிக்கது தான். ஆனால் வச்சு வாழ்க்கை நடத்த முடியாது என்பதைக் காலம் கடந்து தான் (Too late ஆகத் தான்) புரிய நேர்வீர்களோ என்னவோ?!

இப்பொழுது அதைக் கட்டுப்படுத்தத் தவறினால், இனி இந்த யுகமுழுக்க எப்பொழுதும் இல்லை, முடியாது என்று கூறத் தான் தோன்றுகிறது. அப்படி நம்மால் கட்டுப்படுத்த இயலவில்லை என்றாலும், அதை சர்வ தேச அரங்கத்தில் கட்டுப்படுத்தப் போராடிக் கொண்டிருக்கும் சக்திகளைப் பலவீனப்டுத்தாமல், அத்தகைய சக்திகளுடன் இணைந்து செயல்படலாம். இன்று டெல்லிக்குப் பின்னிருந்து கொண்டு இயக்கும் நமது உண்மை எஜமானனாக அதுவே ஆர்ப்பரிக்கிறது. நாமோ வால் முழுவதையும் (எறும்புகள், சிறுபூச்சிகள்) தின்று முடித்த பின்தான் செய்தியே மூளைக்குப் போய்ச் சேர்ந்த அந்தப் பழங்கால ரக (ஏதோ ஒரு டைனோசர் ரகம், பெயர் சட்டென வாயில் நுழையாத ஏதோ ஒரு பெயர்) டைனோசராக சிதைந்து கொண்டுள்ளோம். ஆங்கிலம் அது இப்போது ஒரு யுரேனிய ஐசோடோப் (U_235) போல. (U_234, – half life period 2.70 இலட்சம் ஆண்டுகள். U_235 Hlp அரை ஆயுட்காலம் 70 கோடி ஆண்டுகள், U_238 – Hlp அரை ஆயுட் காலம் 448 கோடி ஆண்டுகள்.) சுந்தர் பிச்சை போன்ற மதிப்பு மிக்க நியூட்ரான்களை தமிழுக்காக லாபி செய்ய நாம் ஒரு அழுத்தத்தைக் கொடுத்தேமேயானால் நிச்சயம் அதை ஆங்கிலம் மறுத்தொதுக்கி விட முடியாது. அப்படியும் மறுக்குமேயானால் அந்த மதிப்பு மிக்க ஒற்றை நியூட்ரானை முதலாளித்துவ யுரேனியத்திலிருந்தே வெளிநடப்பு செய்ய வைத்தாலே போதும், அதன் அரை ஆயுட்காலத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். அதற்கு முன் பிராமணரல்லாத அமெரிக்க வாழ் தமிழர்களாகிய நீங்கள் முதலில் விரைவில் ஒரு குடைக்கீழ் ஒரே சங்கமாய் உருத் திரள முயற்சிக்க வேண்டும். உலகத் தமிழ் சமுதாயத்திற்கே ஒரு முன்னோடி வழிகாட்டியாய் நீங்கள் முதலில் உங்களுக்குள் உள்ள இத்தனை பிரிவுகளைக் களைந்து மொழி வழிச் சமூகமாய் அனைவரும் ஒரே வார்ப்புருவாய் ஒருங்கிணைய வேண்டும்.

அமெரிக்காவிலுள்ள 1,37,000 அமெரிக்க வாழ் தமிழர்களில் பிராமணத் தமிழர்கள் எத்தனை பேர் என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் எப்படியும் எண்ணிக்கை அடிப்படையில் இப்போது இந்தியாவிலிருக்கும் அவர்கள் சமூகத்தினரின் எண்ணிக்கையே சற்றேறக்குறைய நம் தமிழ் சமூகத்தின் மக்கள் தொகைக்கு சரிநிகர் என்பதை சற்றும் நீங்கள் மறந்து விடக் கூடாது. (பி.ஜே.பி ஆட்சி கட்டிலில் உட்கார்ந்ததும் அவர்கள் செய்த முதல் வேலையே இது தான். ஆனால் நீங்களோ வேர்களையும் இழந்து விழுதுகளையும் இழந்தவர்களாகி விடுவீர்களோ என்ற அச்சமாகவுள்ளது. விழித்துக் கொள்ள வில்லையென்றால் தமிழ் U_235 ஸ்தானத்தையும் இழந்து U_234 ஸ்தானத்தைக் கூட அல்ல, காரீயமாய் கரிந்து, சிதைந்து, தேய்ந்து, அழிந்து விடுவோம் என்ற ஒரு கடும் எச்சரிக்கையாகவே இந்தப் பதிவை வெளியிட விரும்புகிறேன்.